search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ross Taylor"

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் தனது 26-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
    • டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்தார்.

    வெலிங்டன்:

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 209 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனால் 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை நியூசிலாந்து விளையாடியது.

    வில்லியம்சனின் சதத்தால் நியூசிலாந்து 162.3 ஓவரில் 483 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 258 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5 விக்கெட் கைப்பற்றினார். தனது 26-வது சதத்தை (92 டெஸ்ட்) பூர்த்தி செய்தார். அவர் 132 ரன் எடுத்து (282 பந்து, 12 பவுண்டரி) அவுட் ஆனார்.

    2-வது இன்னிங்சில் வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். அவர் டெஸ்டில் 7,787 ரன் எடுத்துள்ளார். இதற்கு முன்பு ரோஸ் டெய்லர் 7,683 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

    • நியூசிலாந்து சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் இடையே பேசினார்.
    • அப்போது, எனக்கு பிடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் என குறிப்பிட்டார்.

    வெலிங்டன்:

    வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்தின் வெலிங்டனில் புதிய இந்தியத் தூதரக துணை அலுவலகத்தை மந்திரி ஜெய்சங்கர் திறந்துவைத்தார். அப்போது நியூசிலாந்து வாழ் இந்திய வம்சாவளியினர் இடையே பேசுகையில் அவர் கூறியதாவது:

    இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு எப்போதும் நாம் முக்கியத்துவம் அளித்துவருகிறோம். இந்தியா, நியூசிலாந்து இடையே வர்த்தகம் உள்பட பல துறைகளில் நம் உறவை மேம்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.

    கிரிக்கெட்டில் நம் இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. நியூசிலாந்து வீரர் ஜான் ரைட்டை இந்தியர் எவரும் மறக்க மாட்டர்கள். ஐ.பி.எல். போட்டியைப் பார்க்கும் எவரும் ஸ்டீபன் பிளெமிங்கை புறக்கணிக்க முடியாது.

    கிரிக்கெட்டில் நமது அணி வெற்றிபெற வேண்டும் என்றே விரும்புவோம். அதே நேரத்தில் மற்ற அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிப்போம்.

    எனக்கு பிடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர், ஆனால் அது வேறு விஷயம் என குறிப்பிட்டார்.

    • ராஸ் டெய்லர் தற்போது இந்தியாவில் நடந்து வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
    • விராட் கோலி வரும் ஆண்டுகளில் நிறைய சதங்கள் அடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்

    மும்பை:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர். இவர் தற்போது இந்தியாவில் நடந்து வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில், பெங்களூர் அணியில் விராட் கோலியுடன் விளையாடிய நேரத்தை மிகவும் ரசித்தேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சரியான நேரத்தில் விராட் கோலி பார்முக்கு திரும்பி உள்ளார். அவர் சிறந்த பார்மில் இருக்கிறார். வரும் ஆண்டுகளில் நிறைய சதங்கள் அடிப்பார் என்று நம்புகிறேன்.

    இந்த உலக கோப்பையில் இன்னும் நிறைய திறமைகள் வெளிப்படும் என்று நினைக்கிறேன். போட்டி ஆஸ்திரேலியாவில் நடப்பதாலும் நடப்பு சாம்பியனாக இருப்பதாலும் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்திய அணி சம பலத்துடன் இருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் சில ஆட்டங்களில் அவர்கள் விளையாடிய விதம், உலக கோப்பை போட்டிக்கு செல்வதற்கு அவர்களுக்கு நிறைய நம்பிக்கையை கொடுக்கும்.

    நியூசிலாந்து அரை இறுதிக்கு வருவது போல் தெரிகிறது. கடந்த சில ஐ.சி.சி. போட்டிகளில் கடைசி 4 இடத்துக்குள் நியூசிலாந்து அணி வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் ராஸ் டெய்லர் எழுதிய சுய சரிதை புத்தகம் வெளியானது. அதில் நியூசிலாந்து அணியில் சில வீரர்கள் இனவெறியுடன் நடந்து கொண்டனர் என்றும் தன்னை ஐ.பி.எல். அணி உரிமையாளர் கன்னத்தில் அறைந்தார் என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது வெள்ளையாக இருப்பவர்களுக்கான விளையாட்டாகும்.
    • பல தருணங்களில் எங்களது உடைமாற்றும் அறையில் அந்த நிகழ்வு அரகேறியுள்ளது.

    நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ராஸ் டைலர் கடந்த 2006 முதல் சர்வதேச அளவில் 3 வகையான கிரிக்கெட்டிலும் தனது அபார பேட்டிங் திறமையால் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரராக வரலாற்று சாதனை படைத்துள்ள இவர் கடந்த பிப்ரவரியில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சொந்த மண்ணில் ரசிகர்கள் முன் நிலையில் ஓய்வு பெற்றார்.

    பொதுவாக நிறைய நட்சத்திர விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பின் தங்களது வாழ்க்கையை பற்றிய சுய சரிதையை புத்தகமாக வெளியிடுவார்கள். அந்த வகையில் நியூசிலாந்தின் ஜாம்பவானான இவர் ப்ளாக் & வைட் என்ற தன்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளார்.

    இந்தப் புத்தகத்தை வெளியிட்ட நிகழ்வில் பேசிய அவர் நியூசிலாந்துக்காக விளையாடும் போது பெரும்பாலும் வெள்ளை வீரர்களைக் கொண்ட தனது அணியில் தாம் மட்டும் மாநிறத்தை கொண்டவராக விளையாடியதால் நிறைய தருணங்களில் கிண்டல்களுக்கு உள்ளானதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது வெள்ளையாக இருப்பவர்களுக்கான விளையாட்டாகும். எனது வாழ்நாளில் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் வெண்ணிலாவை போன்ற வெள்ளை நிற வரிசையில் ஒரு மாநிறம் நிறைந்த பழுப்புநிற முகமாக இருந்ததால் பல சவால்கள் இருந்தன.

    அவற்றில் பல உங்கள் அணி வீரர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரியாது. பல தருணங்களில் எங்களது உடைமாற்றும் அறையில் அந்த நிகழ்வு அரகேறியுள்ளது. ஒரு சக அணி வீரர் எப்போதும் என்னிடம் ராஸ் நீங்கள் பாதி நல்ல மனிதர் ஆனால் எந்த பாதி நல்லது? என்று கூறுவார். இங்கு நான் எதை குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கு தெரியாது. மற்ற வீரர்களும் தங்கள் இனத்தைப் பற்றிய கருத்துக்களை கூற வேண்டியிருந்தது.

    எல்லா நிகழ்வுகளிலும் வெள்ளை நியூசிலாந்து வீரர்களிடம் அந்த வகையான கருத்துக்களைக் கேட்கும் போது இது கொஞ்சம் கேலிக்குரியது போல என்று நினைத்துக் கொள்வேன். இருப்பினும் நிறைய தருணங்களில் இது நட்புரீதியான கருத்துக்கள் என அவ்வாறு கேலி செய்யும் நபர்கள் கூறுவதால் பொதுமக்களிடம் இதைப்பற்றி அந்த பாதிப்புக்குள்ளாகும் நியூசிலாந்து வீரர்கள் கூறுவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் தனது 18-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்ததன் மூலம் மார்டின் குரோவை முந்தினார். #RossTaylor #MartinCrowe


    நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் நேற்று தனது 18-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 92-வது போட்டியில் அவர் இதை எடுத்தார். இதன்மூலம் அவர் மார்டின் குரோவை முந்தி 2-வது இடத்தை பிடித்தார். குரோவ் 77 டெஸ்டில் 17 செஞ்சுரி அடித்துள்ளார்.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 20 சதம் அடித்து (72 போட்டி) முதல் இடத்தில் உள்ளார். #RossTaylor #MartinCrowe
    வங்காளதேசம் அணிக்கு எதிராக 2-வது டெஸ்ட் போட்டியில் ரோஸ் டெய்லரின் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 432 ரன்கள் குவித்தது. #BANvsNZ #RossTaylor

    வெலிங்டன்:

    நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

    முதல் 2 நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 211 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அவர் 212 பந்துகளில் 200 ரன் குவித்தார். அவரது 3-வது இரட்டை சதமாகும். நிக்கோலஸ் சதம் அடித்தார். அவர் 107 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 74 ரன்னும் எடுத்தனர்.

    221 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காள தேசம் அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 80 ரன்னில் 3 விக்கெட் இழந்தது. #BANvsNZ

    வங்காளதேச அணிக்கெதிரான கடைசி ஆட்டத்தில் ரோஸ் டெய்லர் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #NZvBAN #RossTaylor #StephenFleming
    டுனிடின்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி முதல் 2 ஆட்டத்தில் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.

    நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்தது.

    முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் 69 ரன்னும், நிக்கோலஸ் 64 ரன்னும், தற்காலிக கேப்டன் டாம்லாதம் 59 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வங்காளதேச அணி 242 ரன் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்தப் போட்டியிலும் நியூசிலாந்து வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றுகிறது.

    இந்த ஆட்டத்தில் டெய்லர் 43-வது ரன்னை எடுத்தபோது 8 ஆயிரம் ரன்னை தொட்டார். ஒருநாள் போட்டியில் 8 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    51-வது ரன்னை எடுத்த போது ஒருநாள் ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை டெய்லர் படைத்தார். அவர் ஸ்டீபன் பிளெமிங்கை முந்தி முதல் இடத்தை பிடித்தார்.



    34 வயதான டெய்லர் 218 ஒருநாள் போட்டி, 203 இன்னிங்சில் விளையாடி 8026 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.34 ஆகும். இதில் 20 சதமும், 47 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 181 ரன் குவித்துள்ளார்.

    பிளெமிங் 279 போட்டியில் 268 இன்னிங்சில் ஆடி 8007 ரன் எடுத்துள்ளார். சராசரி 32.41 ஆகும். 8 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 134 ரன் எடுத்துள்ளார். #NZvBAN #RossTaylor #StephenFleming
    ×