என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rs.1.50 crore"
- சீனாபுரத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கால்டைகள் சந்தை கூடுகிறது.
- மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை கால்டைகள் சந்தை கூடுகிறது. இதுபோல் நேற்று நடந்த சந்தைக்கு கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடைகளின் வரத்து அதிகமாக இருந்தது.
குறிப்பாக சிந்து கறவை மாடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. அதன் விலையும் சற்று உயர்ந்து விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்து நாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளைம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 விர்ஜின் கலப்பின கறவை மாடுகளும், 120 கிடாரி கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.
இதோபோல் சிந்து மற்றும் ஜெர்சி இனத்தை சேர்ந்த 110 கறவை மாடுகளும், 150 கிடாரி கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு வந்திருந்தன.
இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல், ரூ.50 ஆயிரம் வரையிலும் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்னையானது.
முதல் தர சிந்து கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.
சீனாபுரம் கால்நடை சந்தையில் கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுக் குட்டிகள் என மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கி சென்றனர்.
- கீரிபள்ளம் ஓடையில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணி.
- தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறை வேற்றும் வகையில் நீர்வளத்துறையின் சார்பில் பொதுநிதியில் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட,
வெள்ளாள பாளையம் ஊராட்சி, பாரியூர் கீரிபள்ளம் ஓடையில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணியினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில்,
அமைச்சர் முத்துசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பாலம் அமைக்கும் பணியினை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் இந்த உயர்மட்ட பாலம் சுமார் 16 மீட்டர் நீளத்திற்கு அமையவுள்ளது. ஓடையின் இருபுறமும் பக்க வாட்டு சுவர் அமைக்கப்படவுள்ளது.
முன்னதாக கோபிசெட்டி பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட, பொலவகாளிபாளையம் கால்நடை மருத்துவமனை அருகில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினை அமைச்சர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, கோபி செட்டி பாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், செயற்பொ றியாளர் (பவானிசாகர் அணைக்கோ ட்டம்) அருள் அழகன்,
உதவிசெய ற்பொறியாளர் சதீஷ்குமார், கோபிசெட்டி பாளையம் தாசில்தார் (பொறுப்பு) சிவசங்கர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- போடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் நலப்பிரிவினை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
- பெண்கள் நலப்பிரிவில் 15 படுக்கைகள், குழந்தைகள் நலப்பிரிவில் 10 படுக்கைகள், டாக்டர், நர்சு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது
தேனி:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அரசு கண் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், தேனி மாவட்டம், போடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் நலப்பிரிவினை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், போடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடி மதிப்பில் பெண்கள் நலப்பிரிவில் 15 படுக்கைகள், குழந்தைகள் நலப்பிரிவில் 10 படுக்கைகள், டாக்டர், நர்சு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் நலப்பிரிவு கட்டப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன், போடி நகர்மன்றத்தலைவர்ராஜராஜேஸ்வரி, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) பரிமளாசெல்வி, மருத்துவ அலுவலர் ரவீந்திரநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்