என் மலர்
நீங்கள் தேடியது "Ruby Manokaran MLA."
- சிங்கிகுளம் பகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- பச்சையாற்றின் குறுக்கே கட்டப்படுகின்ற மேல்மட்ட பாலப்பணிகளையும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., பாளை வட்டார விவசாயிகளின் கோரிக்கைகளான பச்சையாற்றின் பொன்னாக்குடியன் கால்வாயினை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று கால்வாயினை தூர்வாரும் பணியினை உடனடியாக செய்திட பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் நாங்குநேரி தொகுதி களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் பகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு நடைபெறும் களக்காடு பச்சையாற்றின் பொன்னாக்குடியன் கால்வாயை தூர்வாரும் பணிகளையும் மற்றும் பச்சையாற்றின் குறுக்கே கட்டப்படுகின்ற மேல்மட்ட பாலப்பணிகளையும் ஆய்வு செய்தார். இதில் பாளை யங்கோட்டை மேற்கு மற்றும் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கணேசன், நளன், சிங்கிக்குளம் கிராம காங்கிரஸ் தலைவர் பால்பாண்டி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்போர்டு,மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை மாவட்ட செயலாளர் வேலையா, தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், வட்டார காங்கிரஸ் நிர்வாகி சேசையா, விவசாய சங்க நிர்வாகிகள், ரெட்டியார்பட்டி கவுன்சிலர் சுடலைகுமார், தோட்டாக்குடி செல்வ முருகன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- குன்னத்தூரில் நியாயவிலை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
நெல்லை:
பாளையங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
பின்னர் நெல்லை டவுனை அடுத்துள்ள குன்னத்தூரில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நியாயவிலை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டுவிழா ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
இதேபோல் சீவலப்பேரி பஞ்சாயத்தில் புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி திறப்புவிழா விழாவில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் பள்ளி கல்வி அதிகாரி முருகன், தலைமையாசிரியர் மனோகர், மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, பாளையங்கோட்டை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கணேசன், பஞ்சாயத்து தலைவர்கள் வெங்கடேஷ் உமாமகேஷ்வரி, அனுசியா, குமரேசன், மின்சார வாரியத்தின் பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளர் ஜாண்பிரிட்டோ, முத்து குமார், முருகேசன் மற்றும் மின் வாரிய ஊழியர்கள், முன்னீர்ப்பள்ளம், குன்னத்தூர், பகுதி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தனபால் கோயில்பிச்சை, நந்தகோபால், ஜெயசேகர், பிச்சுமணி, இசக்கிபாண்டி, தசதாசிவம், தங்கவிநாயகம், மாரியப்பன், மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.
- முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினர்.
- பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
மருத்துவர் சமுதாயத்தின் டீம் என்ற அமைப்பின் 10-வது ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட ஐம்பெரும் விழா வண்ணார்பேட்டையில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர் ரமேஷ் பாபு, அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் நமச்சிவாயம், செயலாளர் செல்வ சூடாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அமைப்பின் முன்னாள் பொருளாளர் மாயாண்டி உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாயாண்டி உருவப்படத்தை திறந்து வைத்து பேசினர். இதனைத் தொடர்ந்து மருத்துவ சமுதாயத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளாக தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கும் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு, கல்வி வேலைவாய்ப்பில் மருத்துவ சமுதாய மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் சித்த மருத்துவ படிப்பில் அந்த சமுதாயத்திற்கு சிறப்பு ஒதுக்கீடு வேண்டும். தியாகி விஸ்வநாததாசுக்கு சென்னை மற்றும் நெல்லையில் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
- இந்த நடைபயணத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வது தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
நெல்லை:
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நடைபயணத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வது தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள காங்கிரஸ் அலு வலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-
ராகுல்காந்தி எம்.பி. வருகிற 8-ந் தேதி காலை, கன்னியாகுமரியில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை, 3 நாட்கள் தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து 150 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, சுமார் 3500 கி.மீ. தூரத்தை கடந்து காஷ்மீரை சென்றடை கிறார்.
இந்த நடை பயணத்தில் நெல்லை மாவட்டத்தில் இருந்து திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
பா.ஜனதா ஆட்சியில் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தபட வில்லை.
காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில விவசாய பிரிவு செயலாளர் விவேக் முருகன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் வக்கீல் காமராஜ், அம்பை முன்னாள் வட்டாரத் தலைவர் சங்கர நாராய ணன்,வள்ளியூர் வட்டார தலைவர் அல்போன்ஸ் ராஜா,மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ரமேஷ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் போத்திராஜ் வினோத், மாநில மகிளா காங்கிரஸ் பொது மற்றும் இணைச் செயலாளர்கள் குளோரிந்தால் கமலா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர்கள்,பஞ்சாயத்து தலைவர்கள் கிராம காங்கிரஸ் கமிட்டி தலை வர்கள்,வார்டு தலைவர்கள் மகளிரணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
- தொடர்ந்து 150 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து காஷ்மீரை சென்றடைகிறார்.
நெல்லை:
தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். வருகிற செப்டம்பர் 8-ந்தேதி காலை, கன்னியாகுமரியில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 8 முதல் 10-ந்தேதி வரை, 3 நாட்கள் தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து 150 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து காஷ்மீரை சென்றடைகிறார்.
தமிழகத்தில் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரசார் கலந்து கொள்வது பற்றிய ஆலோசனை கூட்டம், பாளை மகாராஜா நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
- நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்கள் மின்சார வசதி குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
- நொச்சிக்குளம் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து ரூபி மனோகரன் எம்.எல.ஏ. குறைகளை கேட்டறிந்தார்.
நெல்லை:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை ஊராட்சி ஒன்றியம் வடக்கு வட்டாரம் நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்கள் மின்சார வசதி குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையறிந்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அப்பகுதியில் புதிய மின் மாற்றி அமைத்து, பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அங்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து செல்வதால் நொச்சிக்குளம் குளம் மறுகால் வாய்கால் சாணான்குளம் செல்லும் வாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து செய்து தரும்படியாக கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அதன்பின்பு பாளை மகாத்மா காந்திஜீ நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் அலுவலகத்தில் பணியாளர்களை சந்தித்து பேசினார். அந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின்பு அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
நெசவாளர் மக்களை பெருமைபடுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தாள், பாளை வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கனகராஜ், மின்சார துறை பணியாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு தலைவர்கள், மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- காங்கிரஸ் நிர்வாகியான இவர், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
- நாங்குநேரி அருகே உள்ள சோமநாதபேரி கிராமத்தை சேர்ந்த சினேதா என்ற மாணவிக்கு இடது கைவிரலில் வீக்கம் ஏற்பட்டு சிரமப்பட்டு வந்தார்.
நெல்லை:
களக்காடு சிங்கிகுளம் அருகே உள்ள வடுவூர் பட்டியை சேர்ந்தவர் காமராஜ்.
காங்கிரஸ் நிர்வாகியான இவர், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனை யில் அவருக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஏற்பாடுகள் செய்தார்.
அதன்தொடர்ச்சியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமராஜூக்கு குடல் வால்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் அங்கே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
நாங்குநேரி அருகே உள்ள சோமநாதபேரி கிராமத்தை சேர்ந்த சினேதா என்ற மாணவிக்கு இடது கைவிரலில் வீக்கம் ஏற்பட்டு சிரமப்பட்டு வந்தார். இதையறிந்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மாணவி சினேதாவுக்கும் நெல்லை பன்னோக்கு மருத்துவமனை யில் உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகள் செய்தார்.
அதன்படி சினேதாவுக்கு இடது கைவிரலில் வீக்கம் ஏற்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது சினேதா, காமராஜ் இருவரும் நலமோடு உள்ளனர். அவர்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
- பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.
- 17-ந் தேதி திருக்குறுங்குடி பேரூராட்சி வட்டக்குளத்தில் கூட்டாஞ்சோறு நிகழ்ச்சி நடக்கிறது.
நெல்லை:
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.பாளை மகாராஜநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இணையவழியில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பி னர்கள் சேர்க்கும் பணியில் பணியாற்றி யோருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதையொட்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதும் இன்று முதல் 4 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி காமராஜர் பிறந்த நாளை கொண்டாட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி முதல்நாளான இன்று நாங்குநேரியில் உள்ள ஆர்.யூ.சி. மஹாலில் இலவச கண்சிகிச்சை முகாமை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு மன்னார்புரம் விலக்கில், விவேக் முருகன் ஏற்பாட்டில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் நாங்குநேரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
பாளை மகாராஜநகரில் உள்ள தனது இல்லத்தில் 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இணையவழியில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பி னர்கள் சேர்க்கும் பணியில் பணியாற்றி யோருக்கு பரிசுகள் வழங்குகிறார்.
காமராஜர் பிறந்த நாளான நாளை காலை 7 மணிக்கு ரெட்டியார்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தொடர்ந்து காலை 7.30 மணிக்கு சுருளை கிராமத்திலும், 7.45 மணிக்கு முனைஞ்சிப்பட்டியிலும், 8மணிக்கு விஜயஅச்சம்பாட்டி லும், 9.15 மணிக்கு இட்ட மொழியிலும், 10 மணிக்கு பரப்பாடியிலும், 11.30 மணிக்கு களக்காட்டிலும், மதியம் 12.45 மணிக்கு சிதம்பராபுரத்திலும், மதியம் 1 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்திலும் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மாலை 4 மணிக்கு ஓமநல்லூர் மாலை 5 மணிக்கு மருதகுளம், 6 மணிக்கு கண்ணநல்லூர், இரவு 7.15 மணிக்கு இளையநயினார்குளம் ஆகிய இடங்களில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொள்கிறார்.
16-ந் தேதி காலை 10 மணிக்கு குன்னத்தூர் கிராமத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
மதியம் 3 மணிக்கு நாகர்கோவிலில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பு கபடி போட்டியை தொடங்கி வைக்கிறார். இரவு 8 மணிக்கு ஆரைக்குளம் கிராமத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.
17-ந் தேதி காலை 10 மணிக்கு திருக்குறுங்குடி பேரூராட்சி வட்டக்குளத்தில் நடைபெறும் கூட்டாஞ்சோறு நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடி, உணவு அருந்துகிறார். மாலை 6.30 மணிக்கு கே.டி.சி. நகர் மாதா மாளிகையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார்.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் தம்பதியின் குடிசை வீடு இடிந்து விழுந்தது.
- இன்று ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டின் சாவியை முதிய தம்பதியினரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்மநேரி வி.கே. நகரைச சேர்ந்தவர்கள் வேலு -இசக்கியம்மாள் தம்பதியர். முதியவர்களான இவர்கள், மண் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் இவர்களது குடிசை வீடு இடிந்து விழுந்தது. பாதிக்கப்பட்ட அந்த தம்பதியினரை நேரில் சந்தித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக காங்கிரஸ் பொருளாளருமான ரூபி மனோகரன் ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதோடு, இடிந்து விழுந்த வீட்டை தனது சொந்த செலவில் புதுப்பித்து தருவதாக உறுதியளித்தார்.
அதன்பேரில் தம்பதியினருக்கு சொந்தமான இடத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் வீட்டை புதுப்பிக்கும் பணியை ஆரம்பித்தார்.
தற்போது அந்த வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இன்று அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யின் பிறந்தநாளை முன்னிட்டு, புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டின் சாவியை முதிய தம்பதியினரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இன்று அங்கு நடைபெற்ற கிரக பிரவேச நிகழ்ச்சியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுடன் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர். கன மழையில் வீட்டை இழந்த முதிய தம்பதியினருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. செய்துள்ள இந்த மனிதாபிமான உதவியை நாங்குநேரி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.