search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Running race"

    • தொடர் ஓட்டப்பந்தயத்தை கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
    • போலீசாருக்கு மனஅழுத்தம் குறைந்து, உடல் நலமும் மேம்படும்

    கோவை,

    கோவை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான 48 நாள்- 2 கி.மீ. தொடர் ஓட்டப்பந்தயத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், காலை, மாலை என்று பாராமல் நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு ஆரோக்கியம் தரும். இவ்வாறு 21 அல்லது 48 நாட்கள் தொடர்ச்சியாக ஓட்டப்பயிற்சி செய்து வந்தால் இது அவர்களின் தினசரி வாழ்வில் ஒரு பழக்கமாகவே மாறி விடும்.

    இதனால் போலீசாருக்கு மனஅழுத்தம் குறைந்து, உடல் நலமும் மேம்படும் என்று கூறினார். கோவை ஆயுதப்படை மைதானத்தில் ஓட்டப்பந்தயப் போட்டியில் முதற்கட்டமாக 1000 போலீசார் பங்கேற்க முன்வந்து உள்ளனர்.

    • இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்ட பந்தய போட்டியில் தமிழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • சென்னையில் உள்ள சென்ஜோசப் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம் - தீபா தம்பதியரின் மகள் சீதளாதேவி. இவர் சென்னையில் உள்ள சென்ஜோசப் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்ட பந்தய போட்டியில் தமிழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்து தமிழகத்திற்கு பேருமை சேர்த்த மாணவி சீதளாதேவியை வடக்குமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    ×