search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rural youth"

    • சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • சீருடைகளை தனது சொந்த செலவில் வழங்கி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.

    புதுச்சேரி:

    இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களில் ஈடுபடாமல் விளையாட்டில் ஈடுபடுத்து வதற்கான பிரச்சாரம் இயக்கத்தினை சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து கிராமப்புற இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகர ணங்களை வழங்கினார்.

    தமிழகத்தை போன்று புதுவை மாநிலத்தில் விளையாட்டுகென்று தனி துறை கிடையாது. இதனால் இளைஞர்கள் பலர் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. புதுவை மாநிலத்தில் விளையாட்டு கென தனி துறையை ஏற்படுத்த வேண்டுமென தி.மு.க. சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் புதுவை மாநிலத்தில் இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களில் ஈடுபடாமல் விளையாட்டில் ஈடுபடுத்துவதற்கான பிரச்சார இயக்கத்தை முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கியுள்ளார்.

    அதன்படி இன்று திருபுவனை தொகுதி குட்பட்ட செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புபட்டு, விநாயகம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்ற சம்பத் எம்.எல்.ஏ. இளைஞர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை தூண்டவும், அவர்கள் போதைப்பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள், வாலிபால், கேரம் போர்டு, செஸ் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை தனது சொந்த செலவில் வழங்கி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.

    மேலும் விளையாட்டு மைதானம் இல்லாத பகுதிகளில் புதிதாக மைதானம் ஏற்படுத்தும் பணியையும் அவர் மேற்கொ ண்டார். இதேபோல் வருகிற வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையில் உள்ள 23 தொகுதிகளிலும் இந்த பிரசார இயக்கம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    • மத்திய மாநில அரசின் 60.40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில் ”தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்” என்ற திட்டமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது.
    • வருகிற 4-ந் தேதி கொடிக்குறிச்சி ஸ்ரீ நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஊரக வாழ்வாதார இயக்கம், மத்திய மாநில அரசின் 60.40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில் "தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்" என்ற திட்டமாக செயல் படுத்தப்பட்டுவருகிறது.

    இத்திட்டத்தின் மூலம், கிராமபுற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பி னர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்துடன் "ஊரக இளைஞர் களுக்கு திறன் பயிற்சி வழங்குவதற்கான திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், 18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப்படும். சென்னை நீங்கலாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்க ளிலும் இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டுவருகிறது.

    இதன் மற்றொரு அங்கமாக ஊரக மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் வட்டார மற்றும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதன் மூலம் வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது.

    தற்போது தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம்) சார்பில் வருகிற 4-ந் தேதி கொடிக்குறிச்சி ஸ்ரீ நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் சுமார் 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 3000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு இளை ஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஊரக மற்றும் நகர்புற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • அரசு சான்றிதழ் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உடனடி வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.
    • டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் பயிற்சி அளிக்கும் மையங்கள் பல உள்ளன.

    திருப்பூர்:

    திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்- டீ கல்லூரி தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (டி.டி.யு.ஜி.கே.ஒய்.,) திட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி அளித்துவருகிறது. 2019 முதல் 2023 வரை 1,250 பேருக்கு பயிற்சி அளிக்க நிப்ட் -டீ கல்லூரிக்கு அரசு அனுமதி அளித்தது. இதுவரை 900 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    கிராமப்புற இளைஞர்களுக்கு தையல், அப்பேரல் பேஷன் டிசைன், மெர்ச்சன்டைசிங் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. உணவு சீருடை, தங்குமிடம், கல்வி உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி முடிப்போருக்கு அரசு சான்றிதழ் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உடனடி வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.

    திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற இளைஞர்கள், நிப்ட் டீ பயிற்சி மையத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி பெற்றுவருகின்றனர்.இந்நிலையில்திருப்பூர், அவிநாசி, தாராபுரம், ஊத்துக்குளி, மூலனூர்ஆகிய 5 ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாவட்ட மகளிர் திட்ட அதிகாரிகள் நிப்ட்-டீ கல்லூரியை அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து நிப்ட்- டீ கல்லூரி திறன் பயிற்சி மைய தலைவர் கண்ணன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் பயிற்சி அளிக்கும் மையங்கள் பல உள்ளன. ஒவ்வொரு மையத்துக்கும் பயிற்சி அளிக்க குறிப்பிட்ட ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நிப்ட் - டீ கல்லூரிமையத்தில் மேலும் 300 முதல் 350 பேருக்கு பயிற்சி அளிக்க முடியும்.அதனாலேயே அதிகபட்சமாக நிப்ட் -டீ கல்லுாரிக்கு ஐந்து ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அப்பகுதிகளுக்கு சென்று ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த இலவச பயிற்சிகள்,பயிற்சிக்குப்பின் கிடைக்கும் வேலைவாய்ப்பு,சுய தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். ஐந்து ஒன்றிய பகுதிகளை சேர்ந்த கிராமப்புற இளைஞர்கள் 80563 23111 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு இலவச ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சிகளில் இணையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×