என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sale of National Flag"
- ஈரோடு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய கொடி விற்பனைக்கு வருகிறது.
- 25 ரூபாய் என்ற விலையில் விற்கப்படும்.
ஈரோடு:
சுதந்திரத்தின் அமுத பெருவிழாவை அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடியை பறக்கவிட்டு கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய கொடி எளிதில் கிடைக்கும் பொருட்டு ஈரோடு கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களிலும் தேசிய கொடி ஓரிரு நாளில் விற்பனைக்கு வருகிறது. 25 ரூபாய் என்ற விலையில் விற்கப்படும். இதற்கு ஜி.எஸ்.டி. இல்லை.
தவிர https://www.epostoffice.gov.in என்ற இணைய தள முகவரியை பயன்படுத்தி தபால்காரர் மூலம் தங்கள் வீடுகளுக்கே பட்டுவாடா செய்ய முன்பதிவு செய்யலாம்.
அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மொத்தமாக தேசிய கொடியை வாங்க விரும்பினால் ஈரோடு, கோபி, பவானி தலைமை அஞ்சலகங்களில் பெறலாம்.
இத்தகவலை ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (கூடுதல் பொறுப்பு) விஜயதனசேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- ஒரு கொடியின் விலை, 25 ரூபாய் ஆகும்.
- தேசியக்கொடி வாங்கும் மக்கள், செல்பி போர்டு முன் நின்று படம் எடுத்து இணையதளத்தில் பகிரலாம்.
கோவை:
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மூவர்ணக்கொடி என்ற பிரசாரம் அடிப்படையில் நாட்டில் உள்ள, 1.6 லட்சம் தபால் நிலையங்களில் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், தேசியக்கொடியை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய தேசிய கொடிகள், காகிதப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் வாயிலாகவும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.மற்றும் இந்திய தேசிய கொடிகள், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எட்டு சிறு, குறு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மக்களுக்கு வசதியாக, கோவை டிவிஷனுக்கு உட்பட்ட, 81 தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நேற்று தொடங்கியது. ஒரு கொடியின் விலை, 25 ரூபாய் ஆகும். மேலும் அஞ்சலகங்களில் செல்பி போர்டு வைக்கப்பட்டுள்ளது.
தேசியக்கொடி வாங்கும் மக்கள், செல்பி போர்டு முன் நின்று படம் எடுத்து, இணையதளத்தில் பகிரலாம். இ-போஸ்ட் அலுவலகம் மூலமாக https://www.indiapost.gov.in, https://www.epostoffice.gov.in/ ஆகிய இணையதளங்களில் தேசியக்கொடிகளை வாங்கலாம்.
இதுகுறித்து கோவை மாவட்ட தபால்துறை அலுவலர்கள் கூறியதாவது:-
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றுவதால், மக்களிடையே தேசபக்தி உணர்வை ஏற்படுத்தப்படும். தேசத்திற்காக உழைத்தவர்களின் பங்களிப்பை நினைவுபடுத்தும்.
ஒவ்வொரு தபால் அலுவலகம், தலைமை அலுவலகங்கள், துணை அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களில் ஆகஸ்டு 15-ந் தேதி தேசிய கொடி ஏற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்