search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sam Pitroda"

    • வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போன்றும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்றும் தோற்றமளிக்கிறார்கள்- சாம் பிட்ரோடா
    • தென் இந்தியர்களை ஆப்ரிக்கர் என்கிறார் சாம் பிட்ரோடா. தென் இந்தியர்களை நிறத்தை வைத்து காங்கிரஸ் விமர்சிக்கிறது- பிரதமர் மோடி

    இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக இந்திய மக்களின் நிறங்களை குறிப்பிட்டு சபாம் பிட்ரோடா பேசினார். இதனால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. சாம் பிட்ரோடாவிற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    பிரதமர் மோடி நிறவெறி என கடுமையாக சாடினார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார்.

    சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்" எனக் கூறியிருந்தார்.

    "தென் இந்தியர்களை ஆப்ரிக்கர் என்கிறார் சாம் பிட்ரோடா. தென் இந்தியர்களை நிறத்தை வைத்து காங்கிரஸ் விமர்சிக்கிறது. சாம்பிட்ரோடா, காங்கிரஸ் இளவரசரின் ஆலோசகராகவும், நண்பராகவும் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3வது நடுவராகவும் உள்ளார். பிட்ரோடாவின் கருத்துகள் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த இனவெறி கருத்து குறித்து காங்கிரஸ் இளவரசர் பதிலளிக்க வேண்டும். நாட்டு மக்களை நிறம் மூலமாக அவமதிப்பதை நாடு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. மோடி பொறுத்துக் கொள்ளமாட்டார்" என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாம் பிட்ரோடா தென்இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்று உள்ளனர் எனத் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • தமிழர்களின் பெருமையை பற்றி பேசும் திமுக தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்ளுமா?- மோடி

    காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம் பிட்ரோடா வட இந்தியர்கள் வெள்ளையர்கள் போன்றும், தென்இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்றும் உள்ளனர் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது "நாட்டு மக்களை அவர்களுடைய நிறங்களால் அவமதிப்பதை நாடு பொறுத்துக் கொள்ளாது. இதை மோடி ஏற்றுக் கொள்ளமாட்டார்" எனத் தெரிவித்திருந்தார்.

    ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது சாம் பிட்ரோடா, தென்இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்று உள்ளனர் என கூறியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் பேசும்போது கூறியதாவது:-

    தமிழர்களின் பெருமையை பற்றி பேசும் திமுக தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்ளுமா?. கூட்டணியை முறிப்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கிறதா?. பிரித்தாள்வதுதான் காங்கிரஸ் கட்சியின் மனநிலையாக மாறி வருகிறது. என் நாட்டு மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • ஜனாதிபதி தேர்தலின்போது திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தியபோது, காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆச்சர்யம் அடைந்தேன்.
    • அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தற்போது பழங்குடியினர் என்ற திரவுபதி முர்மு-வை ஏன் தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பது தெரிகிறது.

    சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    இளவரசர் (ராகுல் காந்தி), நீங்கள் சாம் பிட்ரோடா கருத்துக்கு பதில் அளிக்க வேண்டும். நமது நாட்டு மக்களவை நிறம் அடிப்படையில் அவமதிப்பதை நாட்டு ஏற்றுக் கொள்ளாது. மோடி இதை உண்மையிலேயே பொறுத்துக் கொள்ளமாட்டார்.

    ஜனாதிபதி தேர்தலின்போது திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தியபோது, காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆச்சர்யம் அடைந்தேன். அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தற்போது பழங்குடியினர் என்ற திரவுபதி முர்மு-வை ஏன் தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பது தெரிகிறது.

    இளவரசரின் (ராகுல் காந்தி) மாமா அமெரிக்காவில் உள்ளார். அவர்தான் இளவரசருக்கு வழிகாட்டி. கருப்பாக உள்ளவர்கள் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் எனக் கூறுகிறார். தற்போது, அவர்கள் திரவுபதி முர்முவை ஆப்பிரிக்கர் என நினைத்தார்கள் என்பது தற்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய தோல் கருமையாக இருப்பதால் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள்- சாம் பிட்ரோடா
    • நான் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவன். நான் இந்தியன் போன்று தோற்றமளிக்கிறேன்- ஹிமாந்தா பிஸ்வா சர்மா

    காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்" எனக் கூறியிருந்தார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் "சாம் பாய், நான் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவன். நான் இந்தியன் போன்று தோற்றமளிக்கிறேன். நாம் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் உள்ளோம். நாம் மாறுபட்டதாக தோன்றுகிறோம். ஆனால் எல்லோரும் ஒன்றுதான்" என பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்கள் போல உள்ளனர்.
    • மேற்கில் உள்ள மக்கள் அரேபியர்களை போல உள்ளனர்.

    தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போல உள்ளனர் என காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார்.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களை நிறத்தின் அடிப்படையில் பல்வேறு நாட்டு மக்களோடு ஒப்பிட்டு, சாம் பிட்ரோடா பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    மேலும்," இந்தியாவின் வடக்கில் உள்ள மக்கள் வெள்ளையர்கள் போலவும், கிழக்கில் உள்ள மக்கள் சீனர்கள் போலவும், மேற்கில் உள்ள மக்கள் அரேபியர்களை போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போலவும் உள்ளனர். இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.

    நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்" என காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, அமெரிக்காவின் மரபு வழி சொத்துவரி பற்றி இந்தியாவிலும் விவாதிக்க வேண்டும் என சாம் பிட்ரோடா ஏற்கனவே பேசி சர்ச்சையில் சிக்கினார்.

    இந்நிலையில், சாம் பிட்ரோடா மக்களை நிறத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு பேசி மீண்டும் சர்ச்சையாக்கியுள்ளார்.

    சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை ‘நடந்தது, நடந்து விட்டது’ என்று கூறியதற்காக நாட்டு மக்களிடம் சாம் பிட்ரோடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
    சண்டிகர்:

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    அந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 3,325 சீக்கியர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு சொந்தமான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் சூறையாடி, சேதப்படுத்தப்பட்டன.

    தற்போது பாராளுமன்ற தேர்தலின்போது இந்த பிரச்சனையை மையப்படுத்தி பாஜகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா ‘அது 1984-ம் ஆண்டில் நடந்து முடிந்துப்போன கதை. நீங்கள் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன சாதித்திருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    ‘ஆனது ஆகிப்போனது, முடிந்துப்போன கதை’ என சீக்கிய மக்களின் உயிரிழப்பை துச்சப்படுத்தும் வகையில் சாம் பிட்ரோடா தெரிவித்த இந்த கருத்துக்கு பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் சில சீக்கிய அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரத்தை மையப்படுத்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி வீட்டின் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    இந்நிலையில், இதுதொடர்பாக இன்று கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை ‘நடந்தது, நடந்து விட்டது’ என்று கூறியதற்காக  சாம் பிட்ரோடா நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம், பத்தேகர் சாஹிப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘1984-ம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது. இதற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இதை நான் அவருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறேன். இப்படிப்பட்ட கருத்தை கூறுவதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நான் தெரிவித்திருக்கிறேன்’ என குறிப்பிட்டார்.
    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா, சீக்கியர்கள் படுகொலை பற்றிய கேள்விக்கு “அது 1984-ல் நடந்தது. அதற்கு என்ன?” என்று கேட்டதை, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் விமர்சித்தனர்.  

    சாம் பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.



    அவர் தனது பதிவில், “சாம் பிட்ரோடாவின் கருத்து ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை அவரிடம் நான் நேரடியாகவும் தெரிவிப்பேன். தனது கருத்துகளுக்காக பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அந்த கலவரத்துக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், என் தாய் சோனியா காந்தி, நான் உட்பட அனைவரும் விளக்கம் அளித்துவிட்டோம். 1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரம் என்பது மிக மோசமான நிகழ்வு. அது நடந்திருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார். 
    ×