என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Samosa"
- சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார்.
- மருந்துகளை பார்த்ததால் மருத்துவம் படிக்க ஆர்வம் ஏற்பட்டது.
நொய்டா:
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் சன்னிகுமார் (வயது 18). 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் பள்ளி நேரம் முடிந்ததும் சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார்.
டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்ட சன்னிகுமார் நீட் தேர்வு எழுதினார். அவர் 664 மதிப்பெண் எடுத்துள்ளார். தனது சமோசா கடையில் 5 மணி நேரம் வேலை செய்து கொண்டே அவர் இந்த மதிப்பெண் எடுத்துள்ளார்.
அவர் நீட் தேர்வு குறிப்புகளை பேப்பரில் எழுதி வைத்து அதனை சுவரில் ஓட்டிவைத்து படித்து வந்தார். நீட் தேர்வுக்காக அவர் இரவு முழுவதும் கண்விழித்து படித்துள்ளார்.
இதனால் அவரது கண்களில் வலி ஏற்பட்டுள்ளது. அதனையும் பொருட்படுத்தாமல் சன்னிகுமார் திறம்பட படித்து இந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.
மருந்துகளை பார்த்ததால் எனக்கு மருத்துவம் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. மக்களை நோய்களில் இருந்து காக்க வேண்டும் என்று டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டேன். சமோசா விற்பது எனது எதிர்காலத்தை பாதிக்காது தொடர்ந்து இந்த தொழிலை செய்து கொண்டே டாக்டருக்கு படிப்பேன் என்று கூறியுள்ளார்.
சன்னிகுமாரின் வாழ்க்கை போராட்டத்தை கவனித்து வந்த அலேக் பாண்டே என்பவர் மருத்துவ கல்லூரி கட்டணமான ரூ.6 லட்சம் நிதியை அவருக்கு வழங்கியுள்ளார்.
- டீக்கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் இந்த சமோசா விற்கப்பட்டு வருகிறது.
- உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கெட்டுப் போன நிலையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேகம்பூர், அரண்மனைக்குளம் ரோடு, தெற்கு ரத வீதி, பாறைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சமோசா தயாரிக்கும் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து திண்டுக்கல் மற்றும் இதனை சுற்றியுள்ள 20 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராம பகுதிகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதிகாலை முதல் இருசக்கர வாகனத்தில் கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். டீக்கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் இந்த சமோசா விற்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் விற்கப்பட்டு வருகிறது. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுகாதாரமற்ற முறையில் சமோசாக்கள் தயாரிக்கப்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்படி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் நகர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று காலை 27 வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு ரதவீதி, நாராயணபிள்ளை தெருவில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். தங்கவேல், பரமசிவம் என்ற 2 நபர்களின் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் சமோசா தயாரித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கெட்டுப் போன நிலையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி சாக்கடையின் அருகே காய்கறிகள் வைத்து சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்தி வந்தனர். இதனை அடுத்து 2 கடைகளுக்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு திண்பண்டங்களை சுகாதார மற்ற முறையில் தயாரித்து வினியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
- சமீப காலமாக இணையத்தில் சமோசா தயாரிப்பு தொடர்பாக மட்டுமே புதுபுது வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.
- வீடியோ இணையத்தில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை குவித்துள்ளது.
இந்தியாவில் தெருவோரங்கள் மற்றும் தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டி வகைகள் மற்றும் தின்பண்டங்களில் சமோசாவுக்கு தனி இடம் உண்டு. காரமான மசாலா கலவைகள் தொடங்கி பல்வேறு ரகங்களில் சமோசாக்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக இணையத்தில் சமோசா தயாரிப்பு தொடர்பாக மட்டுமே புதுபுது வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள புதிய 'பிந்தி சமோசா' மோகம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக மசாலா உருளைக்கிழங்கால் சமோசாக்கள் தயாரிக்கப்படும் நிலையில் இந்த புதிய வகை பிந்தி சமோசாவில் பச்சை நிறத்தில் சட்னி உள்ளிட்ட கலவை நிரப்பி தயாரிக்கப்படும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை குவித்துள்ளது. வீடியோவை பார்த்த உணவு ஆர்வலர்கள் பலரும் இந்த சமோசா தயாரிப்பு குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர் சமோசாவை அப்படியே விட்டு விடுங்கள் எனவும், மற்றொரு பயனர், சமோசா சாப்பிடும் மனநிலையை அழித்து விட்டீர்கள் எனவும் பதிவிட்டு உள்ளார்.
- இந்த ஸ்நாக்ஸ் சத்தானது சுவையானது.
- இந்த ரெசிபி செய்ய அதிக நேரம் ஆகாது.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 200 கிராம்,
ஏதாவது ஒரு கீரை - ஒரு கைப்பிடி அளவு,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 3
கோஸ் துருவல் - 4 டீஸ்பூன்,
கேரட் துருவல் - 2 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 2,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
கரம் மசாலாத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், கீரை, கோஸ் துருவல், கேரட் துருவல் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வதக்கிய கீரை மற்றும் காய்களுடன், மசித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
மைதா மாவை, சின்ன உருண்டைகளாக உருட்டி, சிறிய வடிவில் இட்டு உள்ளே கீரை - வெஜிடபிள் உருண்டைகளை வைத்து சமோசா வடிவில் மூடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான கீரை வெஜிடபிள் சமோசா ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த சமோசா 12 கிலோ எடையுள்ளது.
- ஒரு ‘பாகுபலி’ சமோசாவை தயாரிப்பதற்கு 6 மணி நேரம் பிடிக்கிறது.
மீரட்
நீங்கள் பல பிரமாண்ட வடிவங்களை பார்த்திருக்கலாம். ஆனால் 12 கிலோ எடையுள்ள பிரமாண்ட சமோசாவை பார்த்ததுண்டா?
அதை பார்க்கவும், ருசிக்கவும் வேண்டும் என்றால், உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள 'கவுஷல் சுவீட்ஸ்' கடைக்குத்தான் போக வேண்டும்.
இங்குதான், 12 கிலோ எடை கொண்ட 'பாகுபலி' சமோசா தயாரிக்கப்படுகிறது, விற்கப்படுகிறது.
கவுஷல் சுவீட்ஸ் கடையை 3-வது தலைமுறையாக நடத்தி வருபவர் சுபம் கவுஷல். இவருக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து வாடிக்கையாளர்களை கவர ஆசை.
அப்போதுதான், பிரமாண்ட 'பாகுபலி' சமோசாவை தயாரிக்கும் யோசனை பிறந்திருக்கிறது.
முதலில் 4 கிலோ சமோசாக்களையும், அடுத்து 8 கிலோ சமோசாக்களையும் தயாரித்தவர், தற்போது 12 கிலோ சமோசாவில் வந்து நிற்கிறார். இதன் உள்ளே இடப்படும், உருளைக்கிழங்கு, பட்டாணி, வாசனைப்பொருட்கள், பன்னீர் மற்றும் உலர்பழங்கள் அடங்கிய மசாலாவின் எடை மட்டும் 7 கிலோ.
ஒரு 'பாகுபலி' சமோசாவை தயாரிப்பதற்கு சமையல் கலைஞர்களுக்கு 6 மணி நேரம் பிடிக்கிறது. அதில், இந்த பிரமாண்ட முக்கோண வடிவத்தை எண்ணெயில் பொரிப்பதற்கு மட்டும் ஆகும் ஒன்றரை மணி நேரமும் அடக்கம்.
இந்த பாகுபலி சமோசா அறிமுகம் செய்யப்பட்டதுமே 'ஹிட்' ஆகிவிட்டது. பலரும் தங்கள் பிறந்தநாளின்போது 'கேக்'குக்கு பதில் இந்த சமோசாவை வாங்கி வெட்டி பகிர்ந்து உண்டு மகிழ்கிறார்களாம்.
இதுவரை சுமார் 50 'பாகுபலி' சமோசாக்கள் ஆர்டரின் பேரில் தயாரித்து வழங்கப்பட்டிருக்கின்றனவாம். வெளிமாநிலங்களில் இருந்துகூட, இதை தயாரித்து கொடுக்க முடியுமா என்று விசாரிக்கிறார்களாம். சமூக வலைதளங்களிலும் இது சரமாரியாய் 'லைக்'குகளை அள்ளுகிறது.
இப்படி 'பாகுபலி'யின் பலே பிரபலத்தால் உற்சாகம் அடைந்திருக்கும் கடைக்காரர் கவுஷல், ஒரு அதிரடி போட்டியையும் அறிவித்திருக்கிறார். அதாவது, தனிநபராய் அரை மணி நேரத்தில் இந்த சமோசாவை சாப்பிட்டு முடித்து ஏப்பம் விடுபவர்களுக்கு ரூ.71 ஆயிரம் பரிசு.
கவுஷலின் கடையில் கம்பீரமாய் 'அமர்ந்திருக்கும்' பாகுபலி சமோசா, 'என்னை சாப்பிட்டு பார்' என்று மீரட் நகர மக்களை செல்லமாய் மிரட்டிக் கொண்டிருக்கிறது.
எல்லாம் சரி, ஒரு பாகுபலி சமோசாவின் விலை என்ன என்று கேட்கிறீர்களா? ரூ.1500.
ஆனால் சமோசா பிரியர்களுக்கு இந்த விலை ஒரு விஷயமே இல்லை என்பதற்கு, 'பாகுபலி'க்கு வந்துகொண்டே இருக்கும் ஆர்டர்களே சாட்சி.
- சமோசாவில் காரமான, வறுத்த பிந்தி நிரப்பப்பட்டு ஆலு-சோல் கறி, நறுக்கிய வெங்காயம், சட்னியுடன் பரிமாறபடுகிறது.
- வீடியோவிற்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.
உணவு பிரியர்களை கவரும் வகையில் வித விதமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பிட்ட சில உணவு பொருட்கள் வைரலாகி விடும். அந்த வகையில் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் தெருவோர வியாபாரி ஒருவர் தயாரித்து விற்பனை செய்யும் பிந்தி சமோசா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பேஸ்புக்கில் 'புட்லவர்' என்ற பக்கம் பகிர்ந்துள்ளது.
அந்த சமோசாவில் காரமான, வறுத்த பிந்தி நிரப்பப்பட்டு ஆலு-சோல் கறி, நறுக்கிய வெங்காயம், சட்னியுடன் பரிமாற படுகிறது. இந்த வீடியோ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.
- இந்த ஸ்நாக்ஸ் செய்ய 20 நிமிடங்களே போதுமானது.
- இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா கொரகொரப்பாக பொடித்தது - 1 டீஸ்பூன்
சீரகத்தூள், கரம் மசாலா தூள், சிக்கன் டிக்கா மசாலா -தலா அரை டீஸ்பூன்
முட்டை - 1 (பாதி)
பிரெட் - 2 ஸ்லைஸ்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 3 பெரியது
சோளா மாவு - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சி ஜாரில் சிக்கனை போட்டு அதனுடன், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, உப்பு, தனி மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், சிக்கன் டிக்கா மசாலா, கொரகொரப்பாக பொடித்த தனியா, பாதி முட்டை, பிரெட் துண்டுகள், எலுமிச்சை சாறு, சோயா சாஸ் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த மசாலா திக்கான பதத்தில் இருக்கும். கட்டியாக இருக்க வேண்டும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு 1 1/2 இஞ்ச் அளவில் தடிமனாக வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்(படத்தில் உள்ளபடி). வெட்டிய உருளைக்கிழங்கின் நடுவில் பாதி அளவு வெட்டவும். இரண்டாக வெட்டி விடக்கூடாது. பாதிஅளவு மட்டுமே வெட்ட வேண்டும்.
உருளைக்கிழங்கின் மேல் சோளா மாவை போட்டு நன்றாக பிரட்டி விடவும்.
இப்போது அரைத்த மசாலவை சிறிது எடுத்து உருளைக்கிழங்கில் நடுவில் வைக்கவும். ஒரங்களில் வெளியில் வரக்கூடாது. இவ்வாறு அனைத்து உருளைக்கிழங்கிலும் வைக்கவும்.
அடுத்து கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த உருளைக்கிழங்கை போட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
இப்போது சூப்பரான சிக்கன் ஸ்டப்ஃடு உருளைக்கிழங்கு ரெடி.
- பார்க்க கஷ்டமாக தெரிந்தாலும் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுபலம்.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
மைதா - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
சீரகம் - அரை டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 4
துருவிய கேரட் - 2 டீஸ்பூன்
குடைமிளகாய் -2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
ப.மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, நெய், உப்பு, சீரகம் போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் துருவிய கேரட், குடைமிளகாய், கொத்தமல்லி தழை, ப.மிளகாய், உப்பு, சீரகத்தூள், மிளகாய் தூள்,தனியா தூள், மஞ்சள் தூள், சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிசைத்து வைத்த மைதா மாவை மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.
தேய்த்த மாவில் நடுவில் மசாலாவை வைத்து மாவு முழுவதும் பரப்பி விடவும். அதன் மேல் மற்றொரு சப்பாதியால் மூடி ஓரங்களில் நன்றாக ஒட்டி விடவும்.
இப்போது சப்பாத்தியின் 4 ஓரங்களையும் வெட்டி (சதுர வடிவில்) விடவும். அடுத்து கத்தியால் கைவிரல் அகலத்தில் துண்டுகளாக வெட்டவும்.
வெட்டிய ஒரு துண்டின் நடுவில் நீளமான குச்சியால் நடுவில் அழுத்தினால் இருபக்க ஒரங்களிலும் விரிந்து வரும்.
இப்போது அதை இருபக்க முனைகளையும் பிடித்து வெவ்வோறு கோணத்தில் முறுக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்ததை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான ஆலு டிவிஸ்டர் சமோசா ரெடி.
- இந்த சமோசா செய்வது மிகவும் சுலபம்.
- குழந்தைகள் இந்த சமோசாவை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
மைதா - 1 கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 3 கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை- 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு சாப்பாத்தி மாவு போல் பிசைந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
சிறிதளவு மைதாவை தண்ணீர் சேர்த்து பசை போல் கரைத்து வைத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெங்காயம், மிளகாய் தூள், சீரக பொடி, பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து பிசரி கொள்ளவும்.
பிசைந்து வைத்த மாவை சாப்பாதி போல் மெல்லியதாக திரட்டி அதை முக்கோணமாக மடித்து கொண்டு செய்து வைத்திருந்த வெங்காய கலவையை நிரப்பி ஓரங்களில் மைதா பசையை தடவி மூடிவிடவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான சுவையான வெங்காய சமோசா ரெடி.
- சூடான டீயுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
சமோசா - 3
அப்பளம் - 4
தயிர் - 3 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா சட்னி - 2 தேக்கரண்டி
புளி சட்னி - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
ஓமப் பொடி - 1 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.
அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும்.
தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
துண்டுகளாக உடைத்த சமோசாவை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் நன்றாக கலந்த தயிரை ஊற்றவும்.
அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும்.
மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும்.
அடுத்து அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.
கடைசியாக அதன் மேல் ஓமப் பொடியை தூவி பரிமாறவும்.
இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.
- உருளைக்கிழங்கில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று உருளைக்கிழங்கு சமோசா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவிற்கு பிசைவது போல் பிசைந்து 30 நிமிடங்கள் தனியாக மூடி வைக்கவும்.
உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.
பிசைந்து வைத்த மாவை சப்பாத்திக்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் தண்ணீர் தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும்.
அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மசாலா சிறிது வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும்.
இதே போல் மீதமுள்ள மாவிலும் மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும்.
ஒரு அடிகனமாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு சமோசா தயார்.
- சமோசாக்களில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
- இன்று மாட்டு இறைச்சி வைத்து சமோசா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மாட்டு இறைச்சி - அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா)
உருளைக்கிழங்கு - 4
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2
கறிமசாலா - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி - தேவையான அளவு
நச்சீரகம், பெருஞ்சீரகம் பொடி - தலா 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
கருவாப்பட்டை - 2
இஞ்சி பூண்டு, விழுது - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - பொரிக்கவும், தாளிக்கவும்
மைதா மாவு - 1 கப்
செய்முறை:
ப.மிளகாய், வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இறைச்சியை நன்றாக கழுவி சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
மைதா மாவில் உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணிநேரம் ஊற வைக்கவும்.
உருளை கிழங்கை கழுவி விட்டு நன்றாக அவித்து தோலுரித்து, அதை மசித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் 3 மேசைக்கரண்டி விட்டு சூடானதும் ஏலக்காய், கருவாப்பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு விழுதை போட்டு கிளறவும்.
அடுத்து அதில் வேக வைத்த இறைச்சியை போட்டு நன்றாக கிளற வேண்டும்
அடுத்து மஞ்சள் தூள், உப்பு, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.
அத்துடன் பச்சை மிளகாய், கறிமசாலா பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி, நச்சீரகம், பெருஞ்சீரகம் பொடி போட்டு கிளறி விடவும்.
கடைசியாக வெங்காயம் போட்டு நன்றாக வதங்கி நீர் வற்றியதும் இறக்கி தனியாக வைக்கவும்
மாலை சப்பாத்தி போல் திரட்டி இரண்டாக வெட்டி கோன் வடிவில் செய்து அதன் உள்ளே சிறிது பீப் மசாலாவை வைத்து ஓரங்களில் நன்றா ஒட்டி விடவும்.
இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான பீப் சமோசா ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்