search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sangadahara Chaturthi Festival"

    • சங்கடஹரசதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்.
    • இதனை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்.

    இதனை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாட்டில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் மற்றும் போலீசார், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • பக்தர்களுக்கு அண்ணதானம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருமான் பிள்ளையார் கோவிலில் மாசி மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு கருமான் பிள்ளையாருக்கு திருநீறு ,சந்தனம்,பால், தயிர், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து அருகம்புல்,எருகம் பூமாலை, மாலை மலர் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் கடன் தொல்லை தீர்வும் , செல்வம் செழிக்கவும் தேங்காய் மாலை செலுத்தினார்கள்.

    இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள். ஏற்பாட்டை பாண்டியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஜெயா கோபி செய்திருந்தார்.

    • ராசிபுரம் கடைவீதியில் உள்ள இரட்டைப் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 15 வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • தொடர்ந்து இரட்டை பிள்ளையாருக்கு வெள்ளி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கடைவீதியில் உள்ள இரட்டைப் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு இரட்டைப் பிள்ளையாருக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், சீயக்காய், மஞ்சள், திருமஞ்சள், அரிசி மாவு, எலுமிச்சை, இளநீர், சந்தனம், பன்னீர், தேன், கரும்பு சாறு, ஆரஞ்சு சாறு உள்ளிட்ட 15 வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.

    தொடர்ந்து இரட்டை பிள்ளையாருக்கு வெள்ளி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பூஜையில் ராசிபுரம் மட்டுமல்லாமல் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டத்திலேயே இரட்டைப் பிள்ளையார் கோவில் ராசிபுரத்தில் மட்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×