என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sankarankoil"
- 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அங்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- இக்கோவிலில் குடமுழுக்குத் திருவிழா இன்று காலை நடைபெற்றது.
சங்கரன்கோவில்:
தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் புகழ்பெற்றது சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில்.
இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பின் 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அப்போது நடைபெறவில்லை.
இதைத்தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அங்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவில் குடமுழுக்குத் திருவிழாவை யொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதில் தினமும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் குடமுழுக்குத் திருவிழா இன்று காலை நடைபெற்றது.
இதற்காக கோவில் உள் பிரகாரத்தில் 66 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பூர்வாங்க பூஜைகள் கடந்த 16-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் மங்கள வாத்தியம், வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. மேலும் ஆச்சார்ய விஷேச சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் ஆகிய வற்றுடன் 2-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
பின்னர் மூல மூர்த்திகள் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், மாலையில் ஆச்சார்ய விஷேத சந்தி விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் பூஜைகளுடன் 3-ம் மற்றும் 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை பரிவார யாகசாலையில் மகாபூர்ணா குதி, தீபாராதனை முடிந்ததும் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதான யாக சாலையில் மஹாபூர்ணாகுதி, உபச்சாரங்கள் நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 5 மணிக்கு மேல் மங்கள வாத்தியம், 5.30 மணிக்கு வேத பாராயணம், காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், 6:30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
காலை 8 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9 மணிக்கு கோமதி அம்பிகை, சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணசாமி விமானம் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகமும், 9.20 மணிக்கு கோமதி அம்பிகை, சமேத சங்கரலிங்க சுவாமி மற்றும் சங்கரநாராயணசாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் மூர்த்தி, தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், ராணிஸ்ரீ குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, அ.தி.மு.க. மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், அல்லி ராணி அய்யாத்துரை பாண்டியன், அறங்காவல குழு தலைவர் சண்முகையா அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், முப்பிடாதி, வெள்ளைச்சாமி, முத்துலட்சுமி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயிலுக்கு தென் மாவட்ட மக்களிடையே சிறப்பான வரவேற்பு உள்ளது.
தற்போது இந்த ரெயிலை நிரந்தரமாக ஆண்டு முழுவதும் இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே இந்த வாராந்திர ரெயிலுக்கு சங்கரன்கோவிலில் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சங்கரன்கோவில் வளர்ந்து வரும் நகராட்சி என்பதால் அங்கு இந்த சிறப்பு வாராந்திர ரெயிலை நிறுத்தி செல்ல வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு ரெயில் பயணிகள் சங்கத்தினரும், எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் நின்று செல்லும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 2-ம் தேதி நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் மேட்டுபாளையம் சிறப்பு ரெயில் இரவு 9.13 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில் நிலையத்திற்கு சென்றடையும். அங்கு இருந்து 9.15 மணிக்கு புறப்பட்டு 9.43 மணிக்கு ராஜபாளையம் சென்றடையும். மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுபாளையம் சென்றடையும்.
இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகிற 3-ம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 4.18 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தடையும். அங்கிருந்து 4.20 மணிக்கு புறப்பட்டு 7:45 மணிக்கு சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சங்கரன்கோவில் கண் சிகிச்சை முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சாம்பவி தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப்பள்ளியில் கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை சங்கரசுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கிராம உதயம் இலவச மருத்துவத் துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்றார்.
சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார். மகாத்மா காந்தி சேவா தலைவர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன், பசியில்லா அறக்கட்டளை நிறுவனர் பசுமை சங்கர், சமூக ஆர்வலர்கள் பரமசிவன் பாட்டத்தூர் பால்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் சாம்பவி தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் 60 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முடிவில் கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார்.
- சங்கரன்கோவிலில் உள்ள தனியார் விடுதியில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- சங்கரன்கோவிலில் பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக பஸ் நிலையம் கட்ட தீர்மானம்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் உள்ள தனியார் விடுதியில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் பால் நேரு, மாநிலத் துணைத் தலைவர் சேது ஹரிஹரன், குருவிகுளம் ஒன்றிய செயலாளர் சுவாமி தாஸ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கரன்கோவில் நகர தலைவர் கருப்பசாமி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து பேசினார்.
சங்கரன்கோவிலில் பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக பஸ் நிலையம் கட்ட வேண்டும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய பஸ் நிலையத்தை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த காய்கறி கடைகள் அனைத்தும் ஊருக்குள்ளே இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் குருவிகுளம் ஒன்றிய தலைவர் நடராஜன், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மதி ராஜ் மற்றும் தனியார் மில் தொழிலாளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று.
- இந்த கோவிலில் திருவாதிரை திருநாள் கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சங்கரன்கோவில்:
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருநாள் கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 6-ம் திருநாளான இன்று காலை 9.20 மணிக்கு பெருமாள் சயன கோலத்தில் பரமபத வாசல் வழியாக வந்து பெரிய ஆழ்வார் மற்றும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய திரு விழாவான வருகிற 6-ந் தேதி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.
- விவசாயிகளின் பெயரில் கடன் பெற்று அதனையும் ஏமாற்றி வருகிறார். என்று மனுவில் கூறியுள்ளனர்.
- கலெக்டர் ஆய்வு செய்து மோசடிகளில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா ரெட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் தலைமையில் அந்தப் பகுதியை சார்ந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் தொடர்ந்து செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் இந்தக் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாய பயிர் கடன் மற்றும் நகை கடன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
மேலும் விவசாய பயிர் கடன் என்ற பெயரில் எங்கள் பகுதியில் வாழை பயிர் செய்துள்ளதாக கூறி சுமார் 98 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பெயரில் கடன் பெற்று அதனையும் ஏமாற்றி வருகிறார்.
ரெட்டியபட்டி கிராமம் வானம் பார்த்த பூமியாகும். இங்கு பெய்து வரும் மழையை மட்டுமே நம்பி இங்குள்ள விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இது வரை இந்தப் பகுதியில் எந்த விவசாயியும் வாழை பயிரிட்டது கிடையாது. அந்த அளவுக்கு இந்தப் பகுதியில் தண்ணீர் கிடையாது.
ஆனால் எங்கள் பகுதியில் 98 விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளதாக போலியான ஆவணங்களை தயார் செய்து அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் பெயரில் பல கோடி ரூபாய் கடன் பெற்று பிறகு அந்தக் கடனையும் அரசு தள்ளுபடி செய்து விட்டதாக கூறி எடுத்துக்கொண்ட சம்பவமும் இந்த பகுதியில் நடந்து உள்ளது.
இதுபற்றி பலமுறை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முதல் கூட்டுறவு துறை அமைச்சர், தமிழக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு வரை பல்வேறு புகார்களை பல்வேறு தரப்பினர் வழங்கியும் இன்றுவரை சம்பந்தப்பட்டவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.
எனவே தென்காசி மாவட்ட கலெக்டர் உடனடியாக இந்தப் பிரச்சனையில் தலையிட்டு மோசடிகளை ஆய்வு செய்து அதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில், செப்.18-
சங்கரன்கோவில் தாலுகா வன்னிக்கோனேந்தல் அருகே கீழ நரிக்குடி, மேல நரிக்குடி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாகவும், முறைகேடு நடப்பதாகவும் கூறி அப்பகுதி கிராம மக்கள் சங்கரன்கோவில் தி.மு.க. செயலாளர் ராஜதுரை தலைமையில் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதில் நகர இளைஞரணி அமைப்பாளர் சரவணன், தகவல் தொழிற்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் டைட்டஸ், இளங்கோ மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முற்றுகையிட்ட கிராம மக்களுடன் சிவில் சப்ளை தாசில்தார் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின்பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்