search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sasi Tharoor"

    • அது ஒரு குழந்தையாகவோ, கல்லூரி மாணவியாகவோ, நடுத்தர வயது பெண்மணியாகவோ இருக்கலாம்.
    • 2012 நிர்பயா விவகாரம் தொடங்கி 2024 இல் கொல்கத்தா மருத்துவர் கொலை வரை இதுதான் நடந்துள்ளது.

    கேரள திரைத்துறை பாலியல் புகார்கள், கல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை, தினந்தோறும் நாடு முழுவதும் நடந்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் என அனைத்தையும் முன்னிறுத்தி காங்கிரஸ் எம்.பி சசி தரூர் காட்டமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ஒவ்வொரு நாளும் நான் செய்தித்தாளை எடுத்துப் பார்த்தால், பெண்கள் மீது அரங்கேறிய குற்றங்களே அதில் இருக்கிறது. அது ஒரு குழந்தையாகவோ, கல்லூரி மாணவியாகவோ, நடுத்தர வயது பெண்மணியாகவோ இருக்கலாம்.

    இந்த விஷயத்தை நம்மால் நிறுத்தமுடிவில்லை என்றால் இந்திய ஆண்களிடம் கண்டிப்பாக எதோ பிரச்சனை உள்ளதாகவே தெரிகிறது. இதுபோன்ற சம்பவங்களில் முதலில் பெரிய அளவிலான கோபம் வெளிப்படுகிறது ஆனால் அதன்பின் அடுத்த கொடூரம் நடக்கத்தான் செய்கிறது. 2012 நிர்பயா விவகாரம் தொடங்கி 2024 இல் கொல்கத்தா மருத்துவர் கொலை வரை இதுதான் நடந்துள்ளது. பல வருடங்களாக எதுவும் மாறவில்லை.

    இதற்கு நிச்சயம் தீர்வு தேவை. அது அடிப்படையிலிருந்தே நடந்தாக வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் கேரள திரைத்துறையில் ஹேமா ஆணையத்துக்குப் பின் வெளி வரத் தொடங்கியுள்ள பாலியல் புகார்கள் குறித்துப் பேசிய சசி தரூர், திரைத்துறையில் நடக்கும் தவறுகளை வெளிக்கொண்டு வருவதில் கேரளா முன்னோடியாக இருப்பதில் எனக்குப் பெருமையே, குறைந்த பட்சம் கேரளாவிலாவது துணிந்து உண்மைகளைக் கூறத் தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    • வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளையும் கோவில்களையும் முஸ்லிம்கள் சிலர் பாதுகாக்கின்றனர்.
    • சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனையடுத்து, வங்கதேசத்தில் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.

    வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பேட்டியளித்தார்.

    அதில், "முகமது யூனுஸ் குறித்து எனக்கு தெரியும். அவர் பாகிஸ்தானை விட அமெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பவர். தற்போது வங்கதேசத்தில் பதவியேற்றுள்ள இடைக்கால அரசை பார்க்கையில், நமக்கு விரோதமான நாடுகளை (பாகிஸ்தான் , சீனா) குறித்து இந்தியா கவலை கொள்வதற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

    ஷேக் ஹசீனா இந்தியாவின் நண்பர். உங்களின் நண்பர் ஒருவர் ஆபத்தில் இருக்கும் போது அவருக்கு உதவ வேண்டும். இந்தியாவும் அதை தான் செய்தது. இந்த விஷயத்தில் நான் இந்திய அரசை பாராட்டுகிறேன். இன்னும் எவ்வளவு நாட்கள் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பார் என்று சொல்லமுடியாது. உங்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளியை நீங்கள் எப்போது கிளம்புகிறீர்கள் என்று நாம் கேட்கக்கூடாது.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் சில இடங்களில் தாக்கப்படுகிறார்கள் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு இந்துக்களின் வீடுகளையும் கோவில்களையும் முஸ்லிம்கள் சிலர் பாதுகாக்கின்றனர் என்பதும் தான்.

    வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்" என்று சசி தரூர் தெரிவித்தார்.

    • கேரளாவை தனி நாடாக மாற்ற முயல்கிறாரா முதலவர் பினராயி விஜயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
    • னியாக ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒருவரை நியமித்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது.

    இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை மத்திய அரசின் வெளியுறவுத் துறை கவனித்து வரும் நிலையில் கேரள அரசு தங்களின் மாநிலத்துக்கான வெளியுறவுத் துறைச் செயலாளரை நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி கே.வாசுகி வெளியுறவு விவகாரங்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று கடந்த 15-ம் தேதி கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்த விவகாரங்களில் வாசுகிக்கு பொது நிர்வாக [அரசியல்] துறை உதவும் என்றும்  மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் வாசுகி தொடர்பு கொள்ள ஏதுவாக டெல்லியில் உள்ள கேரள இல்லத்தின் ஆணையர் உதவ வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கேரள அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சையாகியுள்ள நிலையில் கேரள பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் தனது எக்ஸ் பதிவில், 'இந்த செயல் அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது. கேரள இடதுசாரி கூட்டணி அரசுக்கு வெளியுறவு விவகாரங்களை கவனிக்க எந்த அதிகாரமும் இல்லை. அரசியல் சாசனத்துக்கு முரணான இந்த நடவைடிகை ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லும். கேரளாவை தனி நாடாக மாற்ற முயல்கிறாரா முதலவர் பினராயி விஜயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், 'வெளியுறவுத்துறை மத்திய அரசில் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுகள் தன்னிச்சையாக வெளியுறவு விவகாரங்களில் செயல்பட அதிகாரம் இல்லை.ஆனால் வெளிநாடுகளில் உள்ள தங்கள் மாநிலத்தின் மக்கள் தொடர்பான விவகாரங்களில் மாநில அரசு கவனம் செலுத்துவது இயல்பானதுதான். ஆனால் அதற்காக தனியாக ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒரு தனி நபரை நியமித்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது என்று கூறியுள்ளார். 

    • 2ம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது.
    • திருவனந்தபுர தொகுதியில் சசி தரூர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான சசி தரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். அங்கு மும்முனைப்போட்டி நிலவுகிறது.

    2ம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதில், கேரளா உள்பட 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில ஈடுபட்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், தான் போட்டியிடும் திருவனந்தபுர தொகுதியில் சசி தரூர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது, சசி தரூர் ஜெய் ஹோ பாடலுக்கு தனது ஆதரவாளர்களுடன் நடனமாடினார். அவரை சுற்றி சிறுவர், சிறுமிகள் வெள்ளை உடையில் காங்கிரஸ் கட்சியின் சின்னம் பொருந்திய தொப்பி ஷால் அணிந்து நடனமாடியனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர்.
    • தேர்தலில் யாரை போட்டியிட செய்வது? என்பதை ரகசியமாக ஆலோசித்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் 16-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அதற்குள் பதினெட்டாவது மக்களவை தேர்தலை நடத்த வேண்டும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுத்தேர்தலை எப்போது நடத்தலாம்? என்று தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. இருந்த போதிலும் மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் வேகமாக தயாராகி வருகின்றன.

    கேரள மாநிலத்தில் தற்போதைய ஆளுங் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. முக்கிய அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி? தேர்தலில் யாரை போட்டியிட செய்வது? என்பதை ரகசியமாக ஆலோசித்து வருகிறது.

    கேரள மாநிலத்தில் ஆலப்புழா, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, திருவனந்தபுரம், பொன்னானி, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, கோழிக்கோடு, கொல்லம், மலப்புரம், வயநாடு, காசர்கோடு, ஆலந்தூர், திருச்சூர், கோட்டயம் பாலக்காடு ஆகிய 20 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன.

    வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர். அந்த தொகுதிகள் உள்ளிட்ட பல தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் இஸ்ரோ தலைவர் சோமநாத்தை நிறுத்த பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சந்திரயானை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது உள்ளிட்ட விண்வெளி தொடர்பான பல்வேறு முயற்சிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சோம்நாத்.

    இது நாடு முழுவதும் மட்டுமின்றி, சொந்த ஊரான திருவனந்தபுரத்திலும் அவரது செல்வாக்கு உயர வழிவகுத்தது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள திருவனந்தபுரத்தில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்த சோமநாத் தான் சரியான வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கருதுகிறது.

    அது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு விவாதித்திருக்கிறது. திருவனந்தபுரம் தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள சசிதரூர் 4-வது முறையாக தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்.

    2009 மற்றும் 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா வேட்பாளர் ராஜ கோபால், சசிதரூரிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தார். இதனால் தற்போது சோம்நாத்தை வேட்பாளராக நிறுத்தினால் சசி தரூர் சோதனையை சந்திக்கக் கூடும் என்று பாரதிய ஜனதா கருதுகிறது.

    இதனால் திருவனந்தபுரம் தொகுதியில் சோமநாத்தை நிறுத்தும் முடிவில் பாரதிய ஜனதா உறுதியாக இருக்கிறது.

    • இன்று வேட்புமனுக்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
    • மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப் போட்டி.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கேஎன் திரிபாதி ஆகியோர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். 


    இந்த நிலையில், வேட்புமனுக்கள் குறித்து ஆய்வு இன்று நடைபெற்றதாக கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார். இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

    வேட்புமனுவை விதிமுறைகளின் படி பூர்த்தி செய்யாததால் கே.என் திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக மதுசூதன் மிஸ்த்ரி கூறினார். அவரது வேட்புமனுத் தாக்கலின் போது மொத்தம் 20 படிவங்கள் பெறப்பட்டன. அவற்றில் நான்கு கையொப்பங்கள் மீண்டும் மீண்டும் போடப்பட்டிருந்ததால் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

    வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அக்டோபர் 8ந் தேதி கடைசி நாள். அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப் போட்டி உறுதியாகி உள்ள நிலையில், 8ந் தேதிக்குள் யாரும் வாபஸ் பெறா விட்டால், 17ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் மதுசூதன் மிஸ்த்ரி கூறியுள்ளார். 

    ×