என் மலர்
நீங்கள் தேடியது "Scholarships"
- ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், கல்வி உதவித்தொகை 31.10.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
- 31.10.2022 வரை மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
சிறுபான்மையினர் இன மாணவ- மாணவிகளுக்கு இந்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் இந்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022 -2023 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை (புதியது மற்றும் புதுப்பித்தல்) விண்ணப்பிக்க இந்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இைைணய தளத்தில் 31.10.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் / ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் புதியது மற்றும் புதப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கு தகுதியான மாணவ- மாணவிகள் அனைவரும் 31.10.2022 வரை மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண். 0421 - 2999130 மற்றும் மின்ன ஞ்சல் முகவரி dbcwotpr@gmail.com - ல் விவரம் பெற்றுக் கொள்ளலாம் எனவும், மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையின மாணவ மாணவிகள் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
- மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்
தேனி:
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
மேலும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச கல்வி திட்டத்தின்கீழ் நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை டிசம்பர் 6-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் புதிய இனங்களுக்கு இணையதளம் டிசம்பர் 15-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். ஜனவரி 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
- பொது–மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றார்.
- ரூ.94 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அம்மாபேட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அருந்தவபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்யாண–சுந்தரம் எம்.பி., அம்மா–பேட்டை ஒன்றியக்–குழு தலைவர் கே.வீ.கலைச் செல்வன், துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் குமார், அருந்தவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் தலைமை வகித்து பொது–மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, உள்பட 345 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முடிவில் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை ஊரக வளர்ச்சித்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் அருந்தவபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- ரூ. 2 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பங்களை பூா்த்தி செய்து 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
திருப்பூர் :
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டபடிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புப் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான மாணவா்கள் 2022-23 ம் ஆண்டு கல்வி உதவித் தொகை பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகலாம்.
இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் பின்னா் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை, ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5, போன் நம்பா்:044-29515942 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இலவச தொழிற்பயிற்சியில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பூதலூர்:
செங்கிப்பட்டி-பூதலூர் சாலை புதுப்பட்டியில் இயங்கி வரும் ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் இளைஞர்ளுக்கான உதவித் தொகையுடன் லேத் ஆபரேட்டர், சிஎன்சி ஆபரேட்டர், டர்னிங் ஆகிய இலவச தொழிற்பயிற்சிகள் 3 மாத காலம் நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு, பயிற்சியில் தேர்ச்சிப் பெற்ற 51 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
முதல் கட்ட பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை கல்லூரியின் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், கல்லூரியின் செயலர் ஜெனட் ரம்யா, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் குமரன், பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் மோகன், திறன் மேம்பாட்டுக் கழக பயிற்சியாளர் பேராசிரியர் சக்திவேல் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த இலவச தொழிற்பயிற்சியில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 8-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் லேத் ஆபரேட்டர் பயிற்சியிலும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்சின்சி ஆபரேட்டர் டர்னிங் பயிற்சியிலும் சேரலாம்.
இதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் அவர்களுக்குரிய உதவித்தொகை வரவு வைக்கப்படும்.
பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் வேலைவாய்ப்புப் பெற்றுத் தர வழிவகை செய்யப்படும் என்று கல்லூரி தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தெரிவித்தார்.
- ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
- உஸ்வத்துல் ஹசனா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவில் அமைந்திருக்கும் கிழக்கு நண்பர்கள் தர்ம அறக்கட்டளை கடந்த 2001-ம் ஆண்டு 25 இளைஞர்களால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, ஏழைகளுக்கு மருத்துவ உதவி போன்றவற்றை செய்து வருகிறது. மேலும் நோன்பு காலங்களில் வறுமையில் உள்ளவர்களுக்கு "ஜகாத் உதவி",கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளையும் இந்த அமைப்பு செய்தது.
இந்த நிலையில் இந்த அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, கீழக்கரை கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் மாணவர்களுக்கான கல்வித்தொகை மற்றும் மருத்துவ நிதி உதவிகள் 50 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உஸ்வத்துல் ஹசனா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 507 மனுக்கள் பெறப்பட்டது.
- மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு ஆணை.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டாமாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 507 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவர், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓரத்தநாடு வட்டத்தை சேர்ந்த 1 மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆணையினையும், தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த 1 பயனாளிக்கு இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு ஆணையினையும், பெருமகளூர் இரண்டாம் நிலை பேரூராட்சி கருணை அடிப்படையில் 1 பயனாளிக்கு தூய்மை பணியாளருக்கான பணி நியமன ஆணையினையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் (வருவாய்) சுகபுத்ரா, (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் கல்வி உதவித்தொகை மூலம் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.
- மாணவர்கள் நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் விளிம்புநிலை குடும்பத்தை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொ கை வழங்கம் நிகழ்ச்சி நாஞ்சிக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கி னார். பின்னர் அவர் பேசுகயைில்:-
மாணவர்கள் வாழ்வில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாக தான் மாறுவீர்கள்.
எனவே, நேர்மையான எண்ணத்துடன் கடுமையாக உழைக்க வேண்டும்.
மாணவர்கள் கல்வி உதவித்தொகை மூலம் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.
மேலும், நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.
கல்வி உதவித்தொகை பெற்றுக்கொண்ட மாணவ- மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜோதி அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முடிவில் ஜோதி அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர் நாராயணவடிவு நன்றி கூறினார்.
- புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார்.
- ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிரா விடர் நலம் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை சார்பில், ரூ.2.80 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் சிறப்பாக நடைபெற்றது. காரைக்காலை அடுத்த கோட்டிச்சேரி சிங்காரவேலர் திருமண மண்டபத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி, மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், ஆதிதிராவிட நலத் துறையின் உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் பயனாளிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியுதவி, பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி, நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு மாதம் ரூ.3000 வீதம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளை, அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், கலெக்டர் முகம்மது மன்சூர் பேசுகையில், இந்த ஆண்டு காரைக்கால் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பட்ஜெட்டில் இத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏழை களுக்கான உதவித்தொகை அவர்களுக்கு சரியாக சென்று சேர வேண்டும். கல்விக்காக செலவு செய்வதை யாரும் குறை கூற மாட்டார்கள். சுய உதவி குழுக்கள் மூலம் நிறைய திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
- ஜனவரி 1ந் தேதி, 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
- மாதந்தோறும் 3,500 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவ படி வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 2022 - 23ம் ஆண்டுக்கான உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.கடந்த ஜனவரி 1ந் தேதி, 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.தாலுகா அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமான சான்று, தமிழ் பணி செய்ததற்கான ஆதாரம் மற்றும் தகுதி நிலை சான்று, தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.
இதற்காக, www.tamilvalarchithurai.tn.gov.in என்கிற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படுவோருக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் 3,500 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவ படி வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட தமிழ் அறிஞர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண் 608 ல் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வரும் 31ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
- தொழில் நலிவடைந்ததால் ஜிம்ப்ளா மேள கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.
- தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அபிராமம்
தமிழகம் முழுவதும் ஜிம்ப்ளா மேளத் தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் மேளம் என்றாலே ஜிம்ப்ளா மேளம்தான் என்ற பெயர் உண்டு. கோவில் திருவிழாக்கள், எருதுவிடும் திருவிழா, இல்ல வைபவங்கள், துக்க நிகழ்ச்சிகள், கலை இரவு போன்றவற்றில் இந்த வகை மேளம் பயன்படுத்தப்பட்டது.
காலப்போக்கில் இந்த மேளத்துக்கு மவுசு குறைந்துவிட்டது. இந்த தொழில் செய்து வந்த மேள கலைஞர்கள் தற்போது கஷ்டப்பட்டு வருகின்றனர். குடும்பத்தின் அத்தியாவசிய செலவுக்கு கூட சிரமப்படுகின்றனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்படும் ஜிம்ப்ளா மேள கலைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து ஜிம்ப்ளா மேளக்கலைஞர் ராசு கூறியதாவது:-
எங்களது பூர்வீக தொழில் ஜிம்ப்ளா மேளம் அடிப்பதாகும். தமிழகம் முழுவதும் நாங்கள் பரவலாக இருந்து வருகிறோம். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் கீரனூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருந்து ஜிம்ப்ளா மேளத்தொழில் செய்து வருகிறோம். ஆரம்பகால கட்டத்தில் தென்மாவட்டங்களில் எல்லா விழாக்களுக்கும் ஜிம்ப்ளா மேளம்தான் தேவைப்பட்டது. காலப்போக்கில் அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் டிரம் செட், பேண்டு வாத்தியம், செண்டை மேளம் என நவீன கருவிகளுக்கு மக்கள் மாறிவிட்டனர். இதனால் பாரம்பரிய ஜிம்ப்ளா மேளத்திற்கு தற்போது மவுசு குறைந்து வருகிறது. இதனை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான மேள கலைஞர்கள் வேலையிழந்து வாடும் நிலை உள்ளது.
இளமை காலங்களில் எப்படியும் பிழைத்துக்கொள்ளும் நாங்கள், வயதானவுடன் வாழ வழியின்றி தவித்து வருகிறோம். அழிந்துவரும் இந்த ஆதிகாலத்து கலையை மீட்டெடுத்து ஜிம்ப்ளா மேள கலைஞர்களுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள்.
- புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம், தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்களில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் சேர்ந்து உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
மேற்காணும் 3 திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கனவே உள்ள தங்களுடைய பதிவெண் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.