என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School function"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோப்பனூர் கிராமத்தில் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • பள்ளியில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் 'மறுமலர்ச்சி' படத்தில் வரும் சாதியை குறிப்பிடும் பாடலுக்கு மாணவர்கள் பா.ம.க. துண்டுடன் நடனமாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் மறைந்த காடுவெட்டி குரு, வீரப்பன் படம் பொறித்த டி சர்ட் பயன்படுத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

    பா.ம.க. துண்டுடன் சாதி பாடலுக்கு நடனமாட செய்ததால் மாணவர்களின் பெற்றோர் ஆத்திரமடைந்துள்ளனர்.

    இந்த சம்பவத்தையடுத்து பள்ளியில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    • பொதுமுடக்கம் காலத்தில் நம்மில் பலர் பல புதிய திறமைகளை கண்டுபிடித்துள்ளனர். அதனை உரிய வகையில் பயன்படுத்துங்கள்.
    • வெற்றியின் வரையறை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. கடின உழைப்பையே நம்புங்கள்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியின் 25-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் கூறியதாவது:-

    பொதுமுடக்கம் காலத்தில் நம்மில் பலர் பல புதிய திறமைகளை கண்டுபிடித்துள்ளனர். அதனை உரிய வகையில் பயன்படுத்துங்கள். திரைப்படங்கள் மற்றும் சீரியல்களுக்கு நேரத்தை செலவிட்டு வாழ்க்கையின் சாரத்தை மறந்து விடாதீர்கள்.

    வெற்றி என்பது ஒரு நாளில் கிடைப்பது அல்ல. வெற்றியின் வரையறை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. கடின உழைப்பையே நம்புங்கள். பள்ளிகளில் நேரடியாக கற்பிக்கப்படும் கல்வி, வலைத்தளங்களில் கிடைக்காது. இணையதள ஆய்வுகள் பள்ளியின் நேரடி கல்விக்கு இணையாக வர இயலாது.

    கொரோனா தொற்றுக் காலத்தை நாம் கடந்து விட்டோம். அது ஒரு பின்னடைவு மட்டுமே, கொரோனா காலகட்டத்தில் மாணவர்களுக்கு நடைபெற்ற ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்றதன் மூலம் அறிவை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அத்தகைய இணையதள வழிகள் தற்போது நமது ஆளுமையை வளர்த்துக் கொள்வதில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×