search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Holidays"

    • பலத்த காற்றினால் பல பகுதிகளில் குடிசைகளும், கூரைகளும் பறந்தன.
    • அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மணிப்பூரின் பல பகுதிகளில் கனமழை, ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால், வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

    இம்பாலின் மேற்கில் உள்ள காஞ்சிப்பூர் மற்றும் தேரா ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்தன. பலத்த காற்றினால் பல பகுதிகளில் குடிசைகளும், கூரைகளும் பறந்தன.

    இந்நிலையில், மணிப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (மே 6) மற்றும் நாளை (மே 7) விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் பிரேன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தில் நிலவும் வானிலை காரணமாக 2024 மே 6 மற்றும் மே 7ம் தேதிகள் அன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும். தற்போதைய வானிலையால் ஏற்படும் அபாயங்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும்,"அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். மாநில அரசு உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது," என்றார்.

    • வெயிலுக்கு இதமாக என்ன செய்வதென்று தாய்மார்களின் மிக பெரிய கவலையாகவும் உள்ளது.
    • செலவில்லாமலும் மிகவும் எளிமையாக செய்யக் கூடியது இந்த ஐஸ்கிரீம்.

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றில் இருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதுகாப்பது வீட்டில் உள்ளவர்களுக்கு சவாலாக இருக்கிறது. பள்ளிகள் விடுமுறை என்பதால் பிள்ளைகளுக்கு வெயிலுக்கு இதமாக என்ன செய்வதென்று தாய்மார்களின் மிக பெரிய கவலையாகவும் உள்ளது. வீட்டிலேயே குறைந்த செலவில் ஐஸ்கிரீம் கிடைந்ததால் எப்படி இருக்கும். அதைதான் நான் இப்போது சொல்ல போகிறேன். வாங்க அனைவரும் ஜில் என்று ஆகலாம்.

    தேவையான பொருட்கள்:

    தர்பூசணி - 1

    கிரீம் மில்க் - 750 ml

    சர்க்கரை - தேவையான அளவு

    செய்முறை:

    * ஒரு முழு தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    * நறுக்கிய தர்பூசணி துண்டுகளை கரண்டி கொண்டு நன்கு நசுக்கி சாறு எடுக்க வேண்டும். (குறிப்பாக மிக்ஸியில் அரைக்கக் கூடாது)

    * பின்னர் அந்த சாரை ஒரு அடி கனமான பாத்திரத்தில் மாற்றில் அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடு செய்ய வேண்டும்.

    * அந்த சாரானது ஒரு திக்கான கலவையாக வந்த உடன் அடுப்பை அனைத்து விட வேண்டும். (குறிப்பாக 1 டம்ளர் சாறு அரை டம்ளர் வந்தவுடன்)


    * அடுத்ததாக கிரீம் மில்க்கை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஹாண்டு மிக்சரை வைத்து அதை நன்கு மிக்ஸ் செய்து ஒரு திக்காக கிரீம் பதத்திற்கு கொண்டு வரவேண்டும். அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு மிக்ஸ் செய்யவேண்டும்.

    * சர்க்கரையும், மில்க் கிரீமும் நன்கு ஒன்று சேர்ந்தவுடன் தயாரித்து வைத்துள்ள தர்பூசணி திரவத்தை அதனுடன் சேர்த்து, பின்னர் அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து ஒரு நல்ல கிரீம் பதத்திற்கு கொண்டு வரவேண்டும்.

    * பின்னர் இதை ஒரு கண்ணாடி பவுல் அல்லது வேறு ஏதாவது ஒரு பாத்திரத்தில் மாற்றி, ஃப்ரிசரில் 4 முதல் 5 மணி நேரம் வைக்க வேண்டும்.

    5 மணிநேரம் கழித்து எடுத்து பரிமாறினால் சுவையான ஐஸ்கிரிம் ரெடி. இந்த வெயிலுக்கு குடும்பமாக செலவில்லாமலும் மிகவும் எளிமையாக செய்யக் கூடியது இந்த ஐஸ்கிரீம்.

    • மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்
    • சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

    இதனை தொடர்ந்து நாகை மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் மேற்பார்வையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்காக ஏற்கனவே 10 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 14 அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதனையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது. மசினகுடியில் டி23 புலியைப் பிடித்தது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

    இந்நிலையில் சிறுத்தையை பற்றி தவறான தகவல்களை பொதுமக்கள் அச்சப்படும் வகையில் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய பொய் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்வதுடன் வதந்தி பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்
    • இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சிறுத்தையை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது.

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

    இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக நாகை மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் மேற்பார்வையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறை ரெயிலடி ஆரோக்கியநாதபுரம் பகுதியில் 7 பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களாக விடுமுறை அறிவித்து கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் பலத்த பாதுகாப்புடன் எழுதி சென்றனர்.

    இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சிறுத்தையை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது. இதற்காக ஏற்கனவே 10 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 14 அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதையடுத்து ஆட்டை மீட்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை கடித்து ஆடு இறந்ததா ? என்று பரிசோதனை செய்து வருகின்றனர். அதன் முடிவில் தான் ஆடு இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியவரும். இருந்தாலும் இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். பெரும்பாலன பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். 3 நாட்களாகவே இரவில் சரியாக தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    சிறுத்தை பிடிப்படாததால் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நேற்று 7 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மயிலாடுதுறையில் குடியிருப்பு பகுதிகளில் 3 நாட்களாக சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது. மசினகுடியில் டி23 புலியைப் பிடித்தது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
    • கோடை விடுமுறையை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவைப் பகுதியில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது, தமிழக அரசு 7-ம் தேதி பள்ளிகளை தொடங்கும் என்று அறிவித்த காரணத்தால், புதுவை அரசும் எந்த ஒரு மருத்துவக் குழுவின் ஆலோசனைகளை கேட்காமல் 7-ந் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவித்த அறிவிப்பு, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மிகுந்த சிரமத்தை மற்றும் உடல் பாதிப்புகளை இந்த அதிகபட்ச வெயிலின் தாக்கத்தால் ஏற்படுத்தும்.

    எனவே புதுவை அரசு மாணவர்க ளின் நலனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு சேர வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை கடந்த காலங்களைப் போல் இல்லாமல் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை.
    • விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

    வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    தொடர்ந்து, தேனி மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால், சரத்குமாரும், சிவக்குமாரும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
    • சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஆற்கவாடி பகுதியை சேர்ந்தவர் அய்யனார் மகன்கள் சரத்குமார் (வயது15), சிவக்குமார் (13). இதில் சரத்குமார், மூங்கில்துறைப்பட்டில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், சிவக்குமார் ஆற்கவாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் படித்து வருகின்றனர். நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால், சரத்குமாரும், சிவக்குமாரும் அதே பகுதியில் உள்ள அவர்களது விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர். இருவரும் கிணற்றில் இறங்கி குளித்து க்கொண்டிருந்தபோது திடீரென சிவக்குமார் தண்ணீரில் மூழ்கினான்.

    அதிர்ச்சியடைந்த சரத்குமார், வெளியே வந்து சிவக்குமார் தண்ணீரில் மூழ்கியது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தான். உடனே அவர்கள் கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனைதேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவனை மீட்க முடிய வில்லை. இதுபற்றி அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் மோட்டார் மூலம்கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றனர். அப்போது சிவக்குமார் கிணற்றில் பிணமா கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கதண்டுகள் பறந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது
    • 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளிக்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தில் கடந்த சில நாட்களாக கதண்டு கூடு கட்டி இருந்துள்ளது. இந்நிலையில் அக்கிராமத்தில் நடைபெற்ற பால்குட திருவிழாவின் போது வெடி வெடித்ததில் கதண்டுகள் பறந்துள்ளது. அவை நேற்று காலையிலும் பள்ளி வளாகத்தில் பறந்து கொண்டு இருந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கதண்டுகளை தீயிட்டு அழித்தனர். 

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க உள்ள நிலையில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
    சென்னை:

    தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

    இந்நிலையில் தீவிரமடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தீவிர மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து கனமழை காரணமாக சென்னை, தருமபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    சென்னை மழை

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    மேலும் ரெட் அலர்ட்டை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார். 

    நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் கனமழை நீடிப்பதால் இரண்டு தாலுகாக்களிலும் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில், தொடர்ந்து வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது.  இதனை அடுத்து வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பில்லூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. #NilgirisRain #HolidayForNilgirisSchool
    கோடை வெயிலின் தாக்கம் காரணமாக முன் கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. #TNschoolOpen
    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு முன் கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டன.

    இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தகவல் வெளியானது.



    இந்த தகவலை மறுத்த பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந்தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புதிய பாடத்திட்டம் காரணமாக கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையனும் கூறினார்.

    இதையடுத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாளையுடன் முடிகிறது. நாளை மறுநாள் (1-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.#TNschoolOpen
    ×