search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School opening"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் நாளே பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு.
    • மாணவர்கள் கட்டணமின்றி அரசு பஸ்களில் சீருடையுடன் பயணிக்கலாம்.

    சென்னை:

    கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாடப் புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் வந்ததால், இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

    அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ந் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ந் தேதி வரையும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

    வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியாக இருந்ததால், 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.

    இதனிடையே கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுமாறு எழுந்த கோரிக்கைகளை அடுத்து, 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன.

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இன்றே வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் 70 லட்சத்து 67 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதோடு, 60 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகளும், 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்பட உள்ளன.

    கல்வியாண்டை உற்சாகமாக தொடங்க உதவும் வகையில், கல்வியாண்டின் முதல் நாளிலேயே இவை வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இவை தவிர்த்து, தமிழக அரசின் சார்பில் புத்தகப்பை, காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில் மற்றும் கிரையான்கள், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவையும், அவை அவசியப்படும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

    மேலும், புதிய இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் கட்டணமின்றி அரசு பஸ்களில் சீருடையுடன் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

    • 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ந் தேதி பள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

    மீண்டும் திறப்பு

    விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ந்தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறை யாததால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

    இந்த கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ந் தேதியும், 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 14-ந்தேதியும் பள்ளி திறக்கப்படும் என்று அறிவி க்கப்பட்டது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    தூய்மைப்பணி

    நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பையொட்டி அனைத்து பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வகுப்பறைகளை சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட மற்றும் மாநக ராட்சி நிர்வாகங்கள் மூலமாக செய்யப்பட்டுள்ளது.

    பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது. சேதமடைந்த மேற் கூரைகள், சுவர் பூச்சுகள் சரிசெய்யப்பட்டு உள்ளது.

    அறிவுறுத்தல்

    முதல் நாளில் பள்ளிக்கு வரும் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க வேண்டும். பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, காலணி போன்ற இலவச நலத்திட்ட பொருட்களை மாண வர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

    தொடக்க நாளிலேயே பாடங்களை நடத்தாமல், மாணவர்களின் விடுமுறை நிகழ்வுகள் பற்றி கேட்டறிதல் போன்ற உளவியல் சார்ந்த செயல் பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து அதிகரிப்பு

    இதற்கிடையே நாளை பள்ளிகள் திறப்பையொட்டி மாநகர் மற்றும் மாவட்டங்களில் ஸ்டேஷனரி கடைகளில் நோட்டு, புத்தகங்கள், கையேடுகள், பென்சில், பேனா, காலனி, சீருடை உள்ளிட்டவைகள் பல்வேறு வண்ணங்கள் மற்றும் மாடல்களில் விற்பனைக்கு குவிந்துள்ளன. இதுதவிர பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு செல்ல புதிதாக பேக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

    மாநகர பகுதியில் பெரும்பாலான கடைகளில் பேக்குகள் பல்வேறு மாடல்களில் குழந்தைகளை கவரும் வகையில் தொங்கவிடப் பட்டிருந்தன. அவற்றை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சென்று ஆர்வமுடன் தேர்வு செய்கின்றனர். டவுனில் பெற்றோர்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு சென்றதால் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகள் திறக்கப்படுவது 2-வது முறையாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
    • 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ந்தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

    ஆனால் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் மே மாதத்தில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மாறாக அதற்கு பிறகுதான் வெயில் அதிகமாக கொளுத்த தொடங்கியது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. சென்னையில் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது.

    எனவே பள்ளிகள் திறப்பை ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளி வைப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். ஆனாலும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தது. எனவே பள்ளிகள் திறக்கப்படுவதை மேலும் தள்ளி வைக்குமாறு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகள் திறக்கப்படுவது 2-வது முறையாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் 2023-2024-ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளையும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (12-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    இதற்காக அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாண வர்களுக்கு பாடநூல்கள், நோட்டு - புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

    பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் ஒரு பாடத்துக்கு 4 மணி நேரம் வரை பற்றாக் குறை ஏற்படும் நிலை உள்ளது. எனவே பாடங் களை நடத்த வசதியாக சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க திட்ட மிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்றல் சுமை இல்லாதவாறும், ஆசிரியர்களின் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாதவாறும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • கோயம்பேடு பஸ் நிலைய அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கும், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    9, 10, 11 ஆகிய 3 நாட்களும் 1500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

    நேற்று முன்தினம் (9-ந் தேதி) சென்னையில் இருந்து சுமார் 8500 பேரும், நேற்று 5 ஆயிரம் பேரும் அரசு பஸ்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

    இதேபோன்று மற்ற பகுதிகளில் இருந்து சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கும் ஏராளமானோர் புறப்பட்டு சென்று உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் சிறப்பு பஸ்கள் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று மாலையில் சென்னை வருவதற்கு சுமார் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்று மாலைக்குள் மேலும் 4 ஆயிரம் கூடுதலாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி இன்று மாலையில் மட்டும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 26 ஆயிரம் பேர் பயணம் மேற் கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இவர்கள் நாளை காலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தை வந்தடைவார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமப்படக் கூடாது என் பதை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • ெதாகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி நகராட்சி முத்துக்கருப்பன்-விசாலாட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ -மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கழிப்பறை கட்டுவதற்கு ரூ.10 லட்சமும், கலையரங்கம் அமைப்பதற்கு ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவடைந்தது. இந்த நிலையில் அதனை சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ராம்குமார், மனோ கரன், ராதா பாண்டியராஜன், அஞ்சலிதேவி, ரத்தினம், அமுதா, காங்கிரஸ் நகர செயலாளர் குமரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×