search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School principal"

    • இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • பிரேயரில் கிறிஸ்தவ பாடல் பாடும்படி கூறியதாக குற்றம்சாட்டி இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், தலேகான் தபாடே நகரில் பள்ளி முதல்வரை இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட், மாணவர்களை பிரேயரில் கிறிஸ்தவ பாடல் பாடும்படி கூறியதாக  குற்றம்சாட்டி இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். மேலும், பள்ளியில் மாணவிகள் மற்றும் மாணவிகளுக்கான கழிவறைகளுக்கு இடையே கேமரா பொருத்தப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பள்ளிக்குள் நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கிழிந்த சட்டையுடன் பள்ளி முதல்வர் படிக்கட்டில் ஏறுவதும், அவரை சிலர் துரத்துவதும் பதிவாகி உள்ளது. ஒரு நபர் முதல்வரை பின்னால் வந்து வேகமாக தாக்குகிறார். மற்றொரு நபர் அவரை தடுக்கிறார்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று அந்த கும்பலை தடுத்து நிறுத்தி நிலைமையை கட்டுப்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சாவந்த் கூறியதாவது:-

    ஒரு சில பெற்றோர்கள், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து பள்ளி முதல்வரை தாக்கி அவரது ஆடைகளைக் கிழித்துள்ளனர். மேலும், ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட கேமராவானது, கழிவறைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தினமும் காலையில் ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனை பாடலை பாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அந்த நபர்கள் கூறினர். ஆனால் "ஓ லார்ட்' என்று தொடங்கும் பொதுவான பிரார்த்தனை பாடல் இது. இது பைபிளில் உள்ள ஒரு வசனம் என்று பெற்றோர்கள் கூறினார்கள். ஆனால் ஜெபத்தில் மதமாற்றம் குறித்தோ அல்லது பைபிளில் இருந்து எந்த வாசகமோ குறிப்பிடப்படவில்லை.

    பெற்றோர்கள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் பள்ளி தரப்பில் புகார் கொடுக்கப்படவில்லை. பள்ளி முதல்வரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பள்ளி முதல்வர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பள்ளி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சந்தேகம் அடைந்த தாளாளர் செல்வராஜ், பள்ளி ஊழியர்களிடம் இத்தகவலை கூறினார்.
    • போலீசார் கனகசபையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராக செல்வராஜ் பணியாற்றி வருகிறார். விருந்தாசலம் கொட்டாரம் குருநாதன் மகன் கனகசபை (வயது 45) என்பவர் தன்னை வார பத்திரிகையின் மாவட்ட நிருபர் என்றும், மணி என்பவர் மனித உரிமை அமைப்பின் செயலாளர் எனவும், பூண்டியாங்குப்பம் நல்லி மகன் ராமலிங்கம் மாவட்ட விவசாய சங்கத்தவைவர் எனவும் கூறிக்கொண்டு செல்வராஜிடம் சென்று பள்ளியில் உள்ள சில ஆவணங்களை கேட்டுள்ளனர்.

    சந்தேகம் அடைந்த தாளாளர் செல்வராஜ், பள்ளி ஊழியர்களிடம் இத்தகவலை கூறினார்.இது குறித்து ஊழியர்கள் அவர்களிடம் விசாரித்த போது கார்த்திகேயன் என்பவரை 3 பேரும் கையால் அடித்து தாக்கியுள்ளனர். இது குறித்து வடலூர் போலிசில் பள்ளி நிர்வாகத்தால் புகார் அளிக்கப்பட்டது. இதன் மீது விசாரணை நடத்திய போலீசார் கனகசபையை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள ராமலிங்கம், மணி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரை அடையாளம் கண்ட போலீசார் பின்னர் கைது செய்து போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.
    • படுகாயமடைந்த பள்ளி முதல்வரை லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த மாணவர் குரிந்தர் சிங். 12-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், குரிந்தர் சிங் தான் படிக்கும் பள்ளியில் உடன் படிக்கும் மற்றொரு மாணவரிடையே கடந்த வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால், குரிந்தர் சிங்கை அப்பள்ளி முதல்வர் ராம் சிங்மா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் குரிந்தர் சிங்கை பழிவாங்கும் நோக்கத்தில் நேற்று ஆதர்ஷ் ராம்ஸ்வரூப் கல்லூரியில் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார். இதில் பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா படுகாயமடைந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்தனர். மேலும் கல்லூரியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரை அடையாளம் கண்ட போலீசார் பின்னர் கைது செய்து போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.

    மேலும், படுகாயமடைந்த பள்ளி முதல்வரை லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    • இணையதளத்தில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட நவீன எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதனை வாங்குவதற்கு தங்களிடம் அணுகலாம் எனவும் வந்த விளம்பரத்தை பார்த்தார்.
    • கடந்த வாரம் செல்பேனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் செல்வநாயகம் (வயது 74). இவர் ஓய்வு பெற்ற தனியார் பள்ளி முதல்வர் ஆவார்.

    இவர் இணையதளத்தில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட நவீன எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதனை வாங்குவதற்கு தங்களிடம் அணுகலாம் எனவும் வந்த விளம்பரத்தை பார்த்தார்.

    பின்னர் அதில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது, நவீன காரை வாங்குவதற்கு முதலில் பணம் கட்ட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

    அதன்பேரில் 7 தவணையாக ரூ.13 லட்சத்தை செல்வநாயகம் அனுப்பி உள்ளார். எனினும் அந்த நபர் காரை வாங்கி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும், பதில் இல்லை.

    கடந்த வாரம் செல்பேனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வ நாயகம் நெல்லை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்து, வருகிற திங்கட்கிழமை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #tamilnews
    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம், வந்தவாசியில் ஆர்.சி.எம். பள்ளிக்கூடத்தில் தாளாளருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி, பள்ளி தாளாளருக்கு கடந்த மாதம் ஐகோர்ட்டு சம்மன் அனுப்பியது.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.வி. முரளிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி தாளாளர் ஆஜராகவில்லை.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தார். மேலும், பள்ளிதாளாளரை வந்தவாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து, வருகிற திங்கட்கிழமை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். #tamilnews
    ×