search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scythe cutting"

    • மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருமங்கலம் அருகே உள்ள மொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி(வயது44). இவரது உறவினர் சூரியா(33). கடந்த 2002-ம் ஆண்டு அந்த பகுதியில் கோவில் திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக மதுரைக்கு பாரபத்தி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    அங்குள்ள கியாஸ் கம்பெனி அருகே பின்னால் வேகமாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிளை முந்தி அவர்களை வழிமறித்து நின்றது. அதில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய 5 பேர் கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றது.

    இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கூடக்கோவில் போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலி பர்களை மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கோவில் திருவிழாவில் நடந்த மோதலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வருகிறது.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருதரப்பினர் பயங்கர மோதல்; 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மணவ ராயனேந்தல் கிராம பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகாரளித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் நடத்திய அரசு புறம்போக்கு இடங்களை சுற்றி அடை யாள கற்களை நட்டு வைத்தனர். ேமலும் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் இடங்களை விரைவில் அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்து சென்ற தாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு தரப்பினர் போட்டிருந்த முள்வேலி களும் எரிக்கப்பட்டது.

    இந்த பிரச்சினை தொடர்பாக சம்பவத்தன்று இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒருவரையொருவர் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக கடுமையாக மோதிக் கொண்டனர்.

    இந்த மோதலில் பிரபா கரன் (வயது 56), இஸ்ரவேல் (45), பாக்கியராஜ் (44), சந்தன மாதா (40), சாம் தேவ குமார் (24), ஜான் செல்லையா (33) ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாய மடைந்த அவர்கள் திருச்சுழி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுதொடர் பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இரு தரப்பினரி டையே ஏற்பட்ட மோதலால் மணவராய னேந்தல் பகுதி யில் பெரும் பதட்டம் நீடித்து வருவதால் மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மதுரை அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி, கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கோச்சடையை சேர்ந்தவர் குமார் தேவரகொண்டா (வயது43). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு, டோக் நகரில் நடந்து வந்தார். அப்போது குப்பைத்தொட்டி அருகே பதுங்கி இருந்த 2 பேர், சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்ன அனுப்பானடி, சிவஞானம் தெருவை சேர்ந்தவர் ராஜா ஸ்ரீதர். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த பப்லு என்ற பாலமுருகன் மற்றும் நந்தி உள்பட சிலர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் வாலிபருக்கு அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இதில் படுகாயமடைந்த அழகுராஜா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜரத்தினம், சிவா, சுந்தர். இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று சித்தன்கோவில் முன்புள்ள நகராட்சிக்கு சொந்தமான தெருக்குழாயை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனை பேட்டைக்கடை தெருவைச் சேர்ந்த விஜயகுமார் (32) என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நேற்று இரவு அங்குள்ள தனியார் மதுபான பார் அருகில் விஜயகுமாரை 3 பேரும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்.

    ராஜபாளையம் துரை ச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (48) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று இருவரும் மது குடித்தனர். அப்போது செல்வராஜ் மதுபாட்டிலால் அழகுராஜாவின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அழகுராஜா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து அவரது தாயார் ராக்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×