என் மலர்
நீங்கள் தேடியது "sea breeze"
- சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று இரவு 11.30 மணி வரை கடலில் 2.4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் வரை பேரலைகள் உயரமாக எழும்ப வாய்ப்பு இருப்ப தாலும், மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, இன்று கடற்கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் கடலின் அருகில் செல்லவோ, நடைபயிற்சி மேற்கொள்ளவோ வேண்டாம் எனவும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என கூறிஇருந்தார்.
அதன்படி, இன்று பெரியதாழை கடற்கரை முதல் வேம்பார் வரையிலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. திரேஸ்புரம், பெரியதாழையில் சுமார் 3,600 நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நேரடி யாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் இன்று வேலையில்லாமல் இருந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் கூடுதாழை முதல் கூட்டப்புளி வரையிலும் கடல் அலைகள் அதிக அளவில் எழும்பியதால் அந்த பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமுடன் சென்று வர கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். அந்த பகுதிகளில் மீனவர்கள் இன்று வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றனர்.
- வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் படாத பாடுபடுகிறார்கள்.
- கடல் காற்று வருகையை பொறுத்து வெப்பத்தின் தாக்கம் குறையும்.
சென்னை:
சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் அளவு 106 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் படாத பாடுபடுகிறார்கள்.
மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் கடல் காற்று உள்ளே வர தாமதமாவதால் மாலையிலும் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது.
நேற்று பகலில் 106 டிகிரி வெயிலை கடந்த நிலையில் பிற்பகலில் ஆந்திர கடலோரத்தில் இருந்து தெற்கு நோக்கி வீசிய கடல் காற்று சென்னையின் வெப்பத்தை ஓரளவு தணித்தது. அடுத்த சில நாட்களுக்கும் வெயில் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடல் காற்று வருகையை பொறுத்து வெப்பத்தின் தாக்கம் குறையும்.
நேற்று பகல் 11 மணிக்கு மேல் கடல் காற்று வந்ததால் வெப்பம் குறைந்தது. அதே போல் இன்றும் வருமா? என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
கொளுத்தும் இந்த வெயிலுக்கு இடையேயும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.