என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Seal the store"
- நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை
- நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வலியுறுத்தல்
வந்தவாசி:
வந்தவாசி நகராட்சி பகுதியில் வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில் வரி என ரூ.6 கோடிக்கு மேல் பாக்கி உள்ளதால் நகராட்சி ஆணையாளர் ராணி தலைமையில் அலுவலர்கள் வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று வரிகளை வசூலித்து வருகின்றனர்.
மேலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி அதிகமாக உள்ளது. அதன்படி நேற்று நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடைக்கு சென்று ஆணையாளர் ராணி ஆய்வு செய்தார். அப்போது ரூ.27 ஆயிரத்துக்கு மேல் வாடகை பாக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று ஒரே நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் வரி மற்றும் வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து வரி நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம் என்று ஆணையாளர் ராணி கூறினார்.
அப்போது நகராட்சி மேலாளர் ரவி, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், கணக்காளர் பிச்சாண்டி மற்றும் நகராட்சி அலு வலர்கள் உடன் இருந்தனர்.
- 25 கிலோ சிக்கியது
- ரூ.1900 அபராதம் விதித்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவின் படி ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி தலைமையில் ஜோலார்பேட்டை நகராட்சி பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் யாராவது பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்கிறார்களா என அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது புது ஓட்டல் தெருவில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சுமார் 25 கிலோ இருப்பது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு ரூ.1900 அபராதம் விதித்தனர்.
மீண்டும் பிளாஸ்டிக் விற்பனை செய்தது தெரியவந்ததால் அந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிள் எச்சரிக்கை விடுத்தனர்.
- உரிமையாளர் கைது
- போலீசார் சோதனையில் சிக்கினார்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் நேற்று பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை சந்தைக் கோடியூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 58) என்பவரது கடையில் போலீசார் சந் தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற் பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த னர். மேலும் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி துறை அலு வலர்களுக்கு தகவல்தெரிவிக் கப்பட்டு வருவாய் ஆய்வா ளர் ரவிமாராஜன் உள்ளிட்ட அலுவலர்களால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
- ஒரு கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
- வாலிபர் கைது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு தனிபிரிவு போலீசார் கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையில் இருந்து ஒரு கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இதனை ஒட்டி போலீசார் கடைக்கு சீல் வைத்து வியாபாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற பொருட்கள் யாராவது விற்பனை செய்வது குறித்து தெரிய வந்தால் உடனடியாக அவர்கள் பற்றி விவரத்தை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அல்லது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்போன் 944299296 வாட்ஸ் ஆப் மூலம் தெரியப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
- 30 போதை பாக்கெட்டுகள் பறிமுதல்
- வியாபாரி கைது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி ராஜவீதி பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனை செய்தபோது அரசு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் (ஹான்ஸ் பாக்கெட்டுகள்) விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து 30 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் குட்கா விற்ற மளிகை கடைக்கு தாசில்தார் பூங்கொடி முன்னிலையில் வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்