என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sealing"

    • குடிநீர் வசதி, மின்வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியுள்ளது.
    • கடைகாரர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் அகற்றி கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையாளர் பார்த்த சாரதி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நெல்லிக்குப்பம் நகராட்சி க்குட்பட்ட 30 வார்டுகளுக்கும் சாலைவசதி, கால்வாய் வசதி, குடிநீர் வசதி, மின்வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியுள்ளது. மின்சார வாரியத்திற்கு மின் கட்டணம் 0.75 லட்சம் பாக்கி உள்ளது. இந்நிலையில் வரிவிதிப்புதாரர்கள் செலுத்த வேண்டியது. சொத்துவரி நிலுவை- ரூ. 206.34 லட்சம், குழாய் கட்டணம் நிலுவை-ரூ. 37.18 லட்சம், காலிமனை வரி நிலுவை-ரூ. 41.93 லட்சம், தொழில்வரி நிலுவை-ரூ. 13.53 லட்சம், கடை வாடகை நிலுவை- ரூ. 13.22 லட்சம், எஸ்.யூ.சி. கட்டணம்-ரூ. 21.61 லட்சம், மொத்தம்-ரூ. 333.81. எனவே, மேற்படி ரூ.333.81 லட்சம் வரி மற்றும் குழாய், வரியில்லா இனங்களை 15 தினங்களுக்குள் செலுத்த வேண்டும் தவறி னால் விதிகளின்படி ஜப்தி, குழாய் இணைப்பு துண்டிப்பு, கடையை பூட்டி சீல் வைப்பு நடவ டிக்கை மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்படும்.

    அனுமதியற்ற குழாய் இணைப்புகளுக்கு தாமாக முன்வந்து நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி ஒழுங்குபடுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், ஆலை ரோட்டில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் கடை காரர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் அகற்றி கொள்ள வேண்டும். தவறினால் நகராட்சி சார்பில் ஆக்கிரமி ப்புகளை அகற்ற நேரிடும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சொத்துவரி குறைக்க வேண்டுபவர்கள் நகராட்சி விதிகளின்படி 2022-2023 முதல் அரையாண்டுக்கான தொகை முழுவதும் செலுத்தி ஆணையருக்கு விண்ணப்பிக்கும் படியும் கோரப்படுகிறது. பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

    • வரி பாக்கி செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல் நகரசபை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • 30-ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்போவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

    சிவகங்கை

    மாவட்ட தலைநகராக இருக்கும் சிவகங்கை 27 வார்டுகளை கொண்ட நகராட்சியாக உள்ளது. இங்கு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று நகராட்சி தலைவராக சிவகங்கை தி.மு.க. செயலாளர் துரைஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    தற்போது சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.

    நகராட்சி நிர்வாகத்திற்கு தொழில், குடிநீர், பாதாள சாக்கடை மற்றும் வீட்டு வரி பாக்கி, குத்தகை பாக்கி மட்டும் ரூ.5 கோடி நிலுவையில் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.

    இந்த வரி பாக்கிகளை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்போவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

    மேலும் வரிப்பாக்கி உள்ளவர்களின் பெயர்களை நகராட்சி அலுவலக வாயிலில் பிளக்ஸ் பேனர்களாக வைக்க உள்ளதாகவும் நகரசபை தலைவர் தலைவர் துரைஆனந்த் தெரிவித்தார்.

    • விழுப்புரத்தில் அதிரடி: குட்கா விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல்வைத்தனர்.
    • அதிகாரி பாலசுப்பிரமணியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகர போலீஸ் நிலையம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குருசாமி பிள்ளை தெருவில் பங்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், ஆர்எம்.பி பாக்கு, விமல் பாக்கு வைத்து வியாபாரம் செய்த விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த திவாகர் (வயது 27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பங்க் கடையை விழுப்புரம் நகராட்சி அதிகாரி பாலசுப்பிரமணியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    திருப்பூரில் கைது செய்யப்பட்ட வங்காள தேசத்தினர் 19 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளது. இங்கு வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த தொழிலாளர்களோடு வங்காள தேசத்தை சேர்ந்தவர்களும் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி வேலை பார்த்து வருவதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமாருக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் உமா மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் ரமேஷ் கிருஷ்ணன், 15 வேலம்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் திருப்பூரில் உள்ள பல்வேறு பனியன் நிறுவனங்களுக்கு அவ்வப்போது சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் பெயர் பட்டியலை வாங்கி சரிபார்த்தனர்.

    அப்போது சிறுபூலுவம் பட்டி அத்திக்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வங்காள தேசத்தினர் தங்கி வேலை பார்ப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அங்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு பணியாற்றி வ ந்த வங்காள தேசத்தை சேர்ந்த அலாம்கிர் (27),சுமன்(21), மஞ்சுருல் ஹக் (24), அப்துல் கலாம்(31), கோகான் (30), டோலான் ஹூசைன் (21), ஜோஜிப்மியா (27), முக்தர் மியா(35), ஆஷிக் (25), லல்மியா(24), கபீர் ஹூசைன்(30), நூருல் (23),‌ ஷமின் (21), ஹபிபர் (25), குகான் (25), ரபிக்யுசிலிலேம் (50), ஜகான்கிர்லம் (40), பிஜாஸ் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 19 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் வைத்திருந்த ஆதார் அட்டையை ஆய்வு செய்தபோது அவை போலியானது என்பது தெரிய வந்தது. இந்த ஆதார் அட்டைகளை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அச்சடித்து உள்ளனர். ஒரு ஆதார் அட்டைக்கு ரூ. 1500 வரை கொடுத்துள்ளனர்.

    கைதானவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் அவர்கள் அனைவரும் திருப்பூர் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது வங்காள தேசத்தினர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர் மாநகர போலீசார் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அனுமதியின்றி தங்கி உள்ள வங்காள தேசத்தினர், நைஜீரியாவை சேர்ந்தவர்கள் பற்றி தகவல் கொடுக்குமாறும் கேட்டு கொண்டுள்ளனர்.



    மூலக்கடை பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய ஓட்டலுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    மாதவரம்:

    மூலக்கடை பகுதியில் இடத்தை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி அந்த கடை வாடகைக்கு விடப்பட்டது.

    இந்த இடம் அரசுக்கு சொந்தமான குளம் இருந்த பகுதி என கூறப்படுகிறது. இந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கொண்டதாகவும் இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதாக இந்த கட்டிடத்தை காலி செய்ய பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தனிநபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தில் ஓட்டலை மூடி சீல் வைக்க உத்தரவிட்டது.

    அதன் பேரில் மாநகராட்சி மாதவரம் 3-வது மண்டல அதிகாரி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் ராமமூர்த்தி, சதீஷ்குமார், பாபு போலீஸ் உதவி கமி‌ஷனர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ஆகியோர் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி இதில் இயங்கி வந்த ஓட்டலை மூடி சீல் வைத்தனர்.


    ×