என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "security guard killed"

    வானூர் அருகே மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி காவலாளி பலியானார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் சமரசம் பகுதியை சேர்ந்தவர் முகமது சுலைமான் (வயது 44) இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 28ஆம் தேதி வழக்கம்போல் பணி முடித்துவிட்டு சுலைமான் தனது மோட்டார் சைக்கிளில் கோட்டகுப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது சின்ன கோட்டகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் வந்த போது சாலையின் குறுக்கே மாடு ஒன்று சென்றது. எதிர்பாராத விதமாக சுலைமான் மோட்டார் சைக்கிளை மாடு மீது மோதி கீழே விழுந்தார்.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு புதுவை அரச ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுலைமான் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு கார் முருகன் வந்த மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 54). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் முருகன் சிறுவலூர்- பெருந்துறை ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் வந்த மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரி தாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜெகதீஸ்வரன் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத காைர தேடி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி,

    ஈரோடு மாவட்டம் நந்தவனம்புதூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 31). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் நந்தனார் காலனி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்த ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ஜெகதீஸ்வரனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெகதீஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆரான் (68). காவலாளி. சம்பவத்தன்று இவர் வடக்கிப் பாளையம் பிரிவு ரோட் டில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக சென்ற அடை யாளம் தெரியாத கார் ஆரான் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆரான் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத காைர தேடி வருகிறார்கள். 

    ×