search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "self defense"

    • நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பயிற்சி பள்ளிக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
    • திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் டச்சுக்கோட்டை அருகே உள்ள கடற்கரையில் தற்காப்பு கலையின் "வேல்டு ரெக்கார்ட்" சான்றிதழ் தேர்விற்காக ஆசான் மார்ஷியல் அரிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடெமி இன்டர்நேஷனல் சார்பில், குலோபல் வேல்டு ரெக்கார்ட் அமைப்பின் அதிகாரி ராஜேஸ்குமார் முன்னிலையில் 30 நிமிடத்தில், 3 வயது முதல் 20 வயது வரையான 102 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் சுருள் வாள் வீச்சு, வேல்கம்பு, வாட்டர் பேலன்ஸ், பைட்டிங் ஸ்டிக், சிலம்பம் ஒற்றை சுற்று, இரட்டை சுற்று ஆகிய தற்காப்பு கலைகளை தொடர்ந்து செய்து காண்பித்தனர்.


    நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பயிற்சி பள்ளிக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. மாமல்லன் தெக்கன்களரி ஆசான் அசோக்குமார், ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா, திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி
    • பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சியானது சங்ககிரி ஆர்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமை வகித்தார்.

    இதில் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை ஆகியவற்றை குறித்து எடுத்துக்கூறி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு சிலம்பு போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் ஆனந்தன் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க ஆரம்பிக்கும்.
    தவறு செய்பவர்கள் யார் மீது கோபப்பட்டாலும் அதனால் கோபப்படுபவரின் உள்ளம் வெந்து, கண்கள் சிவந்து, வயிறு எரிய கோபம் கொள்ளும் போது ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்தால் கோபப்படுபவரின் உடல் நலன் தான் கெட்டுப்போகும். ஆகவே கோபம் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பதை இங்கு பார்க்கலாம்.

    பெண்களே உங்களுக்கு கோபம் வரும் போது தயவு செய்து ஒரு முறை உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்று உங்கள் உருவத்தை பாருங்கள். முகம் அஷ்ட கோணலாகி, கண்கள் சிவந்து நீர் வழிய, மூக்கு விடைக்க, நரம்பு வெளியே தெரிய நீங்களே விரும்பாத உங்கள் முகத்தை உங்களை சுற்றி உள்ளவர்கள் எப்படி சகித்துக்கொள்வார்கள் என்று ஒரு கணம் சிந்தித்து இருக்கிறீர்களா?

    ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு கோபம் வருவது குறைவாக இருக்கலாம். ஏனென்றால், அவர் தன் மீது எப்போதும் இறைவன் பார்வை விழுந்து கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறார். அதனால் கோபம் குறைகிறது. கோபங்களை குறைத்துக்கொள்ள ஆன்மிகம், யோகா, தியானம் போன்ற ஞான மார்க்கத்தில் ஈடுபட்டால் கோபம் வருவது குறையும். ஆனால் இதிலும் மனதை அடக்க தெரிந்தவர்களுக்கே சாத்தியம். அதே போல் மறதி பல உறவுகளுக்கு பாதையை அமைக்கும்.



    இதனால் தான் நமது பெரியவர்கள் சொன்னார்கள். “குற்றம் பார்க்கின் சுற்றும் இல்லை“ என்று? மாமியாரின் குத்தல் பேச்சுகளை மருமகள் மறந்தால் தான் வீட்டில் அமைதி நிலைக்கும். கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க ஆரம்பிக்கும்.

    இப்படி ஒருவர் மேல் ஒருவர் வரும் கோபத்தை மறப்பதுடன் அவரை மன்னித்தால் அவரும் திருந்துவார். அங்கே அன்பும், சமாதானமும் நிலைக்கும். இதனால் ஏட்டிக்கு போட்டி நான் தான் பெரியவன், எனக்கு தான் எல்லாம் தெரியும், இது என்னால் மட்டும் தான் முடியும் என்ற சுயநலம் பறந்தோடி உறவுக்கு உயிர்கொடுக்கும். ஒருவரை ஒருவர் மன்னிப்பதால் அங்கே அமைதி நிலைத்து நிற்கும்.

    அராஜகமும், தீவிரவாதமும் விரட்டி அடிக்கப்படும். இதைத்தான் கவிஞன் ஒருவன் கூறுகிறான். மண்ணில் மன்னிக்க தெரிந்தவன் மகாத்மா ஆகிறான் என்று. இதே கருத்தைத்தான் அனைத்து மதங்களும் எடுத்துரைக்கின்றன. அறிவியல் விந்தைகள் நிகழ்ந்து வரும் இந்த காலத்தில் மன்னிப்பு என்ற கேடயத்தை நாம் கையில் வைத்திருந்தால், கோபம், துன்பம் என்ற அரக்கர்கள் நம்மை அணுகமாட்டார்கள்.
    ×