search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sell"

    • வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 27.90 குவிண்டால் எடை கொண்ட 85-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.57-க்கும், சராசரி விலையாக ரூ.79.40-க்கும் என ரூ 2 லட்சத்து 18ஆயிரத்து 546-க்கு விற்பனையானது.

    • 1 கிலோ மீன்கள் ரூ.600 வரை விற்பனையாகிறது.
    • வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்து இருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி, கீழக்கரை, பெரியபட்டினம், மாயாகுளம், முத்துப் பேட்டை, மற்றும் திருப்பா லைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, காரங் காடு, வட்டாணம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்பட 20–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி தொழில் பெரிய அளவில் இல்லை. இதனால் மீன்மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக மீன்வரத்து வெகுவாக குறைந்து. மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் நகரை மீன், ஊடகம், விளைமீன், முரல் போன்ற ஒரு சில மீன் வகைகளை தவிர பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட் களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப் பட்டது.

    நகரை, செங்கனி, பாறை மீன்கள் 1 கிலோ ரூ.500–க்கும், முரல், கலிங்க முரல், நண்டு போன்றவை ரூ.500 முதல் ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கடற்கரைப் பகுதியில் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் வந்து செல்வதால் மீன்களை போட்டி போட்டு கொண்டு அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

    ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் போன்ற மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்து இருந்தது. இதனால் மீன் உணவு பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக பிப்ரவரியில் கணவாய், நண்டு அதிகமாக வலையில் சிக்கும். தற்போது வாடைக்காற்று இல்லாத நிலையிலும் மீன்கள் அதிகமாக கிடைக்காததால் நாள்தோறும் ஏமாற்றத்துடன் கரை திரும்பி வருகின்றனர். இதனால் நஷ்டமடைந்துள்ள மீனவர்கள் தங்கள் குடும்ப செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். டீசல் உட்பட படகில் வரும் சக ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    • 56 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின.
    • ரூ.76 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    காங்கயம் : 

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், பசு மாடுகள், இளங்கன்றுகள் என 117 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 56 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.76 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    ×