search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seller arrested"

    • லாட்டரி விற்பனை செய்தற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 2 வெள்ளை துண்டு கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் வசிக்கும் வீரமணி என்பவர் பவானி போலீசாரிடம் தன்னிடம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருப்பதாக கூறி பெண் ஒருவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் நானும் அந்த லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தேன்.

    ஆனால் இதுவரை எந்த பரிசும் விழவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு ஒன்று வழங்கினார்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த பவானி போலீசார் பவானி வர்ணபுரம் பகுதியில் வசிக்கும் சகுந்தலா (47) என்ற பெண் அனுமதியின்றி வெள்ளை தாளில் எண்கள் எழுதி பரிசு விழும் என நம்ப வைத்து லாட்டரி விற்பனை செய்தற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரிடம் இருந்து 2 வெள்ளை துண்டு கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
    • புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் பஸ் நிலையம் அருகே, தனியார் மதுபான கடையை ஒட்டி, தள்ளு வண்டி பெட்டிக்கடை ஒன்றில்புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

    அதன்பேரில் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், கடையை சோதனை செய்த போது அங்கு புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 2 ஆயிரம் மதிப்புள்ள 40 புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் காரைக்கால் பெசன்ட் நகரைச் சேர்ந்த காதர் பாட்ஷாவை கைது செய்தனர்.

    • மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார்.

    ஈரோடு, 

    கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஈ.செட்டிபாளையம், தடப்பள்ளி வாய்க்கால் கரை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் நம்பியூர் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (58) என்பதும் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளியங்கிரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஒரு நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • 30 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    பவானி, 

    பவானி அருகிலுள்ள போத்த நாயக்கனூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் பவானி போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது சுடுகாடு மறைவாக உள்ள இடத்தில் சந்தேகத்திற்க்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த ஒரு நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்து இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பவானி, சின்னமோளபாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வரும் மணி (45) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 30 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    • சப்ளையராக வேலை பார்த்து வருபவர் செல்வராஜ் (50).
    • கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 4- ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம், பவானி புது பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை பார்த்து வருபவர் செல்வராஜ் (50). இவரிடம் பவானி, கல் தொழிலாளர் வீதியை சேர்ந்த குமார் (36) என்பவர் வெள்ளைத்தாளில் எண்களை எழுதி, கேரள மாநில லாட்டரிச் சீட்டு என கூறி செல்வராஜிடம் பல முறை விற்பனை செய்துள்ளார்.

    இதுகுறித்து, செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 4- ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மே தினம் முன்னிட்டு மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறைவிடப்பட்டுள்ளது.
    • மது பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது. தெரிய வந்தது.

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில்அந்தியூர் தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் மூலக்கடை பள்ளியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது

    இந்த நிலையில் இன்று மே தினம் முன்னிட்டு மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறைவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று கடைகளில் மது பாட்டிலை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருவதாக அந்தியூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது

    இதனை அடுத்து அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அப்போதுபள்ளிபாளையம் பகுதியில் சுப்பிரமணியம் (52) என்பவர் கைகளில் வைத்துக்கொண்டு மது பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது

    அவரை பிடித்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் வைத்திருந்த மது பாட்டலையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்

    • கண்டிக்காட்டு வலசு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பெரியமணியம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகே உள்ள கண்டிக்காட்டு வலசு பகுதியில் உள்ள முள்காடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக அறச்சலூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கு சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்பனை செய்து கொண்டிருந்த ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள பெரியமணியம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (72) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து ரூ. 2 ஆயிரத்து 210 மதிப்பிலான 17 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • கவின் கருங்கல்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்த சிவகுமாரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம், வினாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கவின் (33).

    இவர் கிருஷ்ணம்பாளையம், மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (52) என்பவர் வெள்ளைத் தாளில் எண்களை எழுதி தடை செய்யப்பட்டுள்ள கேரள லாட்டரி சீட்டு என கூறி ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.

    இது குறித்து கவின் கருங்கல்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்த சிவகுமாரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.400 மதிப்பிலான கேரள லாட்டரிகள் 10-ஐ பறிமுதல் செய்தனர்.

    • கடந்த சில நாட்களாக கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • பெட்டிக் கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா? என கடந்த சில நாட்களாக கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 58) என்பவர் பெட்டிக் கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • காவல் ஆய்வாளா் ரமாதேவி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா்.
    • லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய பேப்பா், பணம் ரூ.15,320 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

    வெள்ளகோவில் :

    முத்தூா் சாலை இந்திரா நகரில் வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ரமாதேவி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு கச்சேரிவலசைச் சோ்ந்த கோகுல் (வயது 21) என்பவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார்,அவரிடமிருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய பேப்பா், பணம் ரூ.15,320 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

    டி.என்.பாளையம் அருகே கம்ப்யூட்டரில் அச்சிட்ட போலி லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

    டிஎன்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி. புதூர் நால்ரோடு குள்ளநாய்க்கனூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் என்கிற பழனிச்சாமி (வயது 42).

    இவர் கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்ட போலி லாட்டரி சீட்டுகளை டி.என்.பாளையத்திற்குட்பட்ட பல பகுதிகளில் பரிசு விழும் என்று ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் சட்ட விரோதமாகவும், ரகசியமாகவும் விற்று வந்துள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கள்ளிப்பட்டி போஸ் வீதியை சேர்ந்த தவசியப்பன் (49), என்பவர் மகேந்திரனிடம் போலி லாட்டரி சீட்டு என்று அறியாமல் லாட்டரி வாங்கி வந்ததாக தெரிகிறது.

    நேற்று மாலை டி.ஜி. புதூரில், காளியூர் பிரிவு தம்பாக்கவுண்டர் ஓட்டல் அருகே தவசியப்பன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை, மகேந்திரன் போலி லாட்டரி சீட்டுகளை வாங்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.

    ஆனால் தவசியப்பன் லாட்டரி வாங்க மறுத்தார். மேலும் போலீசிடம் சொல்லி விடுவேன் என்று தவசியப்பன் சொன்னதாக தெரிகிறது.

    இதனால் மகேந்திரன் ஆத்திரம் அடைந்து தவசியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும் தவசியப்பன் வைத்திருந்த ரூ.200 பறித்துக் கொண்டு, 5 போலி லாட்டரி சீட்டுகளை கொடுத்து விட்டு சென்றதாக தெரிகிறது.

    இது குறித்து பங்களா புதூர் போலீஸ் நிலையத்தில் தவசியப்பன் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திரன் என்கிற பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர்.

    கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்ட போலி லாட்டரி சீட்டுகள் எங்கு அச்சிடப்பட்டு, எந்தெந்த பகுதிகளில் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது? யாரெல்லாம் இந்த போலி லாட்டரி மோசடி விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர்? என விசாரணைக்கு பின் தெரியவரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

    ×