என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sewage canal"
- குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் இந்த கழிவுநீா் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது.
- கால்வாய் முறையாக தூா்வாரப்படாததால் கழிவுநீா் சாலைகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் நகராட்சியில் கழிவுநீா் கால்வாயைத் தூா்வார வலியுறுத்தி பொதுமக்கள் நகரமன்றத்தலைவா் பாப்புக்கண்ணனிடம் மனு அளித்தனா்.
இதுகுறித்து தாராபுரம் நகராட்சி நேதாஜி வீதி ஏபிஜே.அப்துல் கலாம் சமூக நல்லிணக்க நற்பணி மன்றத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தாராபுரம் நகராட்சி 5 மற்றும் 14 வது வாா்டுகளுக்குள்பட்ட நேரு நகா், நேதாஜி வீதி, சங்கா் மில் சாலை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீா் கால்வாய் தற்போது ஆக்கிரமிப்புகளால் குறுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் இந்த கழிவுநீா் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது.
கழிவுநீா் கால்வாய் குறுக்கப்பட்டுள்ளதால் அவ்வப்போது கழிவுநீா் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. மேலும், கழிவுநீா் கால்வாய் முறையாக தூா்வாரப்படாததால் கழிவுகள் தேங்கி கழிவுநீா் சாலைகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறும் நிலை காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று அபாயமும் காணப்படுகிறது.
எனவே கழிவுநீா் கால்வாயை சீரமைக்கவும், அடிக்கடி கழிவுநீா் கால்வாயை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
- ராம் நகர் பகுதியில், முறையாக கழிவுநீர் கால்வாய் கழிவுகள் அகற்றப்படுவதில்லை.
- மனுவாக தயாரித்து மீண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்படும்.
பல்லடம் :
பல்லடம் நகராட்சி 14 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஈஸ்வரி அங்குள்ள ராம்நகர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது:- 14வது வார்டு ராம் நகர் பகுதியில், முறையாக கழிவுநீர் கால்வாய் கழிவுகள் அகற்றப்படுவதில்லை. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அதனால் தற்போது பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது.இதனை மனுவாக தயாரித்து மீண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்படும்.
இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதில் பாஜக., நகர தலைவர் வடிவேல், 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சசிரேகா மற்றும் பாஜக., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கடலூர் தானம் நகரை சேர்ந்தவர் ஜோதி. பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார்.
- தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மீட்டனர்.
கடலூர்:
கடலூர் தானம் நகரை சேர்ந்தவர் ஜோதி. பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பசுமாடு, அதே பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோதி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த பசுமாட்டை கழிவுநீர் கால்வாய்க்குள் இருந்து மீட்க முயன்றார். ஆனால் பசுமாட்டை மீட்க முடியவில்லை. இது குறித்து கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
- நீரோடை, தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது.
- குடிநீர் குழாய்கள் மீதும் கழிவுநீர் செல்வதாக அப்பகுதிபொதுமக்கள் கூறியிருந்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி சாய் குரு கார்டன் பகுதியில் இருந்த நீரோடை, தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. கழிவு நீர் கால்வாய் அருகே குடிநீர் குழாய் இணை ப்புகளும் செல்கின்றன.
இந்த நிலையில் கழிவுநீர் கால்வாயில் அதிகப்படியான சேறு, மற்றும் சகதிகள் சேர்ந்து விட்டன. இதனால் அதன் அருகில் செல்லும் குடிநீர் குழாய்கள் மீதும் கழிவுநீர் செல்வதாக அப்பகுதிபொதுமக்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் கழிவு நீர் கால்வாயை, சுத்தம் செய்யுமாறு ஆறுமுத்தாம் பாளையம்ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க ப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்தப் பகுதியில் திரண்ட பொது மக்கள் கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யாவிட்டால் ஊராட்சி மன்றஅலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வார்டு உறுப்பினர் முத்துக்கு மாரசாமி, பொது மக்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தி அவ ர்களை சமாதா னப்படுத்தி, இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பனுக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்வத ற்காக பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. பொதும க்களின் போராட்ட அறிவி ப்பால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ரெயில்வே நுழைவு பாலத்தில் கழிவு நீர் கால்வாய் அமைத்தல் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.
- ரூ.20 லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்றுதல் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
ஊத்துக்குளி :
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ஊத்துக்குளி சென்னிமலை சாலை அரசன்காடு 2-வது வீதி மற்றும் 1வது குறுக்கு வீதி மற்றும் கடைசி வீதியில் விடுபட்ட பகுதிகளில் உள்ள மண் சாலைகளை ரூ.20 லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்றுதல்,நமக்கு நாமே திட்டத்தில் சென்னிமலை சாலை, ரெயில்வே நுழைவு பாலத்தில் ரூ.4.50 லட்சத்தில் கழிவு நீர் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுக்குட்டி, முன்னாள் ஊத்துக்குளி பேரூராட்சி துணைத்தலைவர் ராசுகுட்டி மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி குமார், பேரூராட்சி தொகுதி இளநிலை பொறியாளர், வேலை ஒப்பந்ததாரர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செங்கோடம்பள்ளம் பாலத்தின் மேற்புற பகுதியில் மது போதையில் ரமேஷ் படுத்து தூங்கினார்.
- திடீரென ரமேஷ் குடிபோதையில் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.
ஈரோடு:
ஈரோடு செங்கோடம் பள்ளம் அரச மர விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாகாளி. இவரது மகன் ரமேஷ் (30). இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. ரமேசுக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. ரமேஷ் வீட்டுக்கு சரியாக செல்லாமல் மது போதை யில் ரோட்டோர ங்களில் படுத்து தூங்குவது வழக்கம்.
நேற்று இரவு வழக்கம் போல் செங்கோடம்பள்ளம் பாலத்தின் மேற்புற பகுதியில் மது போதையில் ரமேஷ் படுத்து தூங்கினார். நள்ளிரவில் திடீரென ரமேஷ் குடிபோதையில் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.
இதில் அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் வந்தவர்கள் ரமேஷ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறங்கி ரமேஷ் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோத னைக்காக அவரது உடல் ஈரோடு அரச ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்:
தவுட்டுப்பாளையம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகர் பகுதியில் மேம்பாலம் உள்ளது. மேற்கு வள்ளுவர் நகரிலிருந்து வரும் கழிவுநீர் சாக்கடை தண்ணீர் செல்வதற்காக மேம்பாலத்தின் அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு தெற்கு வள்ளுவர் நகர் பகுதியில் சிறிது தூரம் மட்டும் சாக்கடை கழிவுநீர் செல்லும் அளவுக்கு குழாய் அமைத்து விட்டு தண்ணீர்வெளியேறும் வகையில் சாக்கடை அமைக்கப்பட வில்லை.
இதனால் தெற்கு வள்ளுவர் நகர் பகுதியில் சாக்கடை நீர் வெளியேற முடியாமல் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இந்த சாக்கடை நீரில் பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட ஏராளமானபிளாஸ் டிக் பொருட்கள் மிதக்கிறது. சாக்கடை நீர் தேங்கிநிற்பதால் தொடர்ந்து துர்நாற்றம் ஏற்படுகிறது. அருகாமையில் குடியிருப்புகளில் உள்ளவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர். சாக்கடை நீர் ஏராளமானகொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்புகளில் உள்ளவர்களை கடித்து வருகிறது.
இதனால், மர்ம காய்ச்சல்கள் மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அகற்றி மர்ம காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் தடுக்க வேண்டு மென தெற்கு வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்