என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sexually assaulted"

      குனியமுத்தூர்,

      கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 45). டிரைவர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

      சண்முகவேலின் வீட்டு அருகே 3 வயது சிறுமி உள்ளார். இந்த சிறுமி அடிக்கடி இவரது வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த சிறுமிக்கு சண்முகவேல் சாக்லேட், மிட்டாய் ஆகியவற்றை வாங்கி கொடுத்து வந்தார்.

      சம்பவத்தன்று வழக்கம்போல அந்த சிறுமி சண்முகவேலின் வீட்டிற்கு விளையாட சென்றது. அப்போது குடிபோதையில் இருந்த அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

      இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அழுது கொண்டே தனது வீட்டிற்கு சென்றது. சிறுமியிடம் அவரது பெற்றோர் என்ன நடந்தது என்று கேட்டனர். அப்போது சிறுமி, தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்தார்.

      இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து சண்முகவேலிடம் கேட்டனர்.

      அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

      புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்தனர். பின்னர் அவரை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

      அனைத்து மகளிர் போலீசார் சண்முகவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது
      • பணிநீக்கம் செய்யப்பட்ட அக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஸ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

      கொல்கத்தா பயங்கரம் 

      கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தினந்தோறும் வெளியாகும் தகவல்கள் இந்த சம்பவத்தில் உண்மையில் என்னதான் நடந்தது என்ற கேள்வியைப் பலமாக எழுப்புகிறது.

      கேள்விக்குறி? 

      இந்த குற்றத்தில் தொடர்புடைய மருத்துவமனை ஊழியர் சந்தீப் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தின் முதற்கட்ட போலீஸ் விசாரணைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

       

       விடை கிடைக்காத மர்மங்கள் 

      இதோடு, இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் பலர் உள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற அம்மாநிலத்தில் ஆளும் அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உயிரிழந்த பெண்ணின் பெற்றோரும், இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கக் கூடும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

      உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாகவும் அதன்பொருட்டே திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சக மாணவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பினார். பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

      அதிர்ச்சியூட்டும் பின்புலம்  

      இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் மர்மங்களும் பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. இந்த சம்பவத்துக்கு பிறகு பணிநீக்கம் செய்யப்பட்ட அக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஸ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. உரிமை கோரப்படாத உடல்களை உறுப்புகளுக்காக விற்று கமிஷன் பெற்றது, மருத்துவ கழிவுகளையும் சட்டவிரோதமான முறையில் விற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சக ஊழியர் ஒருவர் முன்வைத்துள்ளார். இதற்கிடையில் சந்தீப் கோஸ் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

       

      விசரணையும் போராட்டங்களும் 

      இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணை செய்ய கொல்கத்தா உயர்நதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் குழு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்தும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாடு முழுக்க பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கையை உறுதிப்படுத்த உடனடியாக மத்திய அரசு சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் நாடு முழுக்க மருத்துவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்துக்கு நிகரான பாதுகாப்பை மருத்துவமனைகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை இந்திய மருத்துவ சங்கம் முன்வைத்தது.

       

      உச்சநீதிமன்றத்தின் தலையீடு 

      போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் ஆங்காங்கே இன்னும் காலவரையின்றி நடந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இந்த  வழக்கின்  மீது நேற்று நடந்த விசாரணையில் மேற்கு வங்காள மாநில அரசு மற்றும் போலீசின் மெத்தனப் போக்கை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர்.

       

      வழக்கில் நடந்த குளறுபடிகள் குறித்து சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர். மேலும் நாடு இன்னொரு வன்கொடுமை நடக்கும் வரை காத்திருக்காது என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

      இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் பயிற்சி மருத்துவர்களின் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி உத்தரவிட்டனர்.

       

      அடுத்தது என்ன?

      மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதால் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் கோரிக்கை வைத்தனர். ஒட்டுமொத்தமாகப் பதில் கிடைக்காத கேள்விகளும், மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பும்  இந்த வழக்கின் போக்கை அடுத்து எந்த திசையில் கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது திண்ணம்.

      • 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
      • மாணவியை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.

      கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் மீது போலீசில் தாய் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      கிருஷ்ணகிரி அருகே சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை.

      உடனே இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்தார். அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியை தேடி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

      அப்போது தலைமை ஆசிரியர் அந்த மாணவியின் தாயாரிடம் எதற்காக சிறுமி பள்ளிக்கு ஒரு மாதமாக அனுப்பாமல் இருந்து வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த தாயார் எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கரு கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளோம் என்றார். இந்த தகவலை கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

      மேலும், சிறுமியின் தாயார் கூறிய தகவலை கேட்டு அவர் திடுக்கிட்டார்.

      இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான் காரணம். 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

      உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார்.

      அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.

      இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      இதில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாரூரை சேர்ந்த சின்னசாமி (வயது57). மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (45), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன் காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது.

      இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் அனைத்து மகளிர் போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

      இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

      மேலும், 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

      இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை காண்பிக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

      மாணவியின் உறவினர்கள் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

      • ஆசிரியர்கள் 3 பேரும் பணி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
      • போலீசார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

      போச்சம்பள்ளி:

      கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய மாணவி பள்ளி ஆசிரியர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.


      இது தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் ஆறுமுகம் (வயது48), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

      பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்களை போலீசார் கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் தனி அறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஆசிரியர்கள் 3 பேரும் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர்.

      தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரும், பள்ளி கல்வி துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக பள்ளிக்கு நேற்று முன்தினம் விடுமுறை விடப்பட்டது.

      இதற்கிடையே அரசு தொடக்கப்பள்ளி இணை இயக்குனர் சாந்தி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை, மற்றும் ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து நேற்று 2-வது நாளாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

      நேற்று 2-வது நாளாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகிருஷ்ணன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள மற்ற மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி பள்ளியை திறக்க அதிகாரிகள் முடிவு செய்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது.

      அப்போது மாணவர் களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு இன்று காலை திரண்டு வந்து இனி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி திடீரென்று ஆசிரியர்களு டனும், அதிகாரிகளுடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

      தொடர்ந்து பள்ளி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கைதான ஆசிரியர்கள், வேறு மாணவிகள் யாரிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

      கைதான 3 பேருக்கு ஆதரவாக நீதிமன்ற வழக்கு களில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக போவ தில்லை என்று கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

      இதேபோல் மாணவி கூட்டு பலாத்காரத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரியில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

      • இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு தொடங்கியது.
      • பள்ளி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா கொண்டு கண்காணிக்க வேண்டும்.

      போச்சம்பள்ளி:

      கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமி 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

      இதுதொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி 3 ஆசிரியர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

      இந்த சம்பவத்தில் காரணமாக பள்ளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு தொடங்கியது.

      முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் மாவட்ட கலெக்டரை நேற்று முன்தினம் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

      இதில் அந்தப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களும் மாற்றம் செய்து புதிய ஆசிரியர்களை நியமிக்கப்பட வேண்டும்.

      அதேபோல பள்ளி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா கொண்டு தொடர் கண்காணிப்பில் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.

      கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உறுதி அளித்ததன் பேரில் இன்று மீண்டும் பள்ளி தொடங்கியுள்ளது. இதில் பலத்த போலீஸ் பாது காப்புடன் இன்று பள்ளி தொடங்கியது.

      புதுடெல்லியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பள்ளி வாகன ஓட்டுனர் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். #NewDelhi
      புதுடெல்லி:

      இந்தியாவில் சமீப காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசும், பல்வேறு சமூக அமைப்புகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

      இந்த சட்டம் இயற்றப்பட்டதற்கு பிறகு, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றங்கள் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதாகவே தெரிகிறது.

      இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பளாம் கிராமத்தில் இயங்கும் தனியார் பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமியை, பள்ளி வாகன ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக நேற்று காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவாளி மீது போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

      இதையடுத்து, வாகன ஓட்டுனரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. #NewDelhi
      ×