என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "SHAFALI VARMA"
- மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
- முதல் போட்டியில் பாகிஸ்தான் யுஏஇ-யை எளிதில் வீழ்த்தியது.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், பி பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து இடம்பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் யுஏஇ-யை எளிதில் வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ரன்களை குவித்துள்ளது. ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேமலதா 47 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 48 பந்தில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சஜனா 10 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களைக் குவித்துள்ளது.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்குகிறது.
- டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்தது.
- இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 236 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினர். ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர்.
ஸ்மிர்தி மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்னிலும் அவுட்டானார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்னும், ரிச்சா கோஷ் 43 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் (603) விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் சுனே லுஸ் மற்றும் மரிஜான் காப் அரை சதம் அடித்தனர்.
இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. மரிஜான் காப் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி 367 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா சார்பில் ஸ்னே ரானா 3 விக்கெட் வீழ்த்தினார்.
- ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார்.
- இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
சென்னை:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை திறம்பட சமாளித்தனர். பொறுப்பாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்த நிலையில், மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார்.
நிதானமாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெமிமா 55 ரன்னிலும் அவுட்டானார்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்தது. இதன்மூலம் மகளிர் டெஸ்ட் போட்டியில் 1 நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை இந்திய மகளிர் அணி படைத்தது.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் (603) விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதற்குமுன் 2024 பிப்ரவரியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி 575 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
அடுத்ததாக தனது முதல் இன்னிங்கில் களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்கா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் அடித்துள்ளது.
- டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 525 ரன்கள் குவித்தது.
- தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இரட்டை சதமடித்து, 205 ரன்னில் அவுட்டானார்.
சென்னை:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை திறம்பட சமாளித்தனர். பொறுப்பாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்த நிலையில், மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார்.
நிதானமாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெமிமா 55 ரன்னிலும் அவுட்டானார்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்னும், ரிச்சா கோஷ் 43 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
- டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இரட்டை சதமடித்தார்.
சென்னை:
இந்தியா- தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஆகியோம் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். இந்தியா 292 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிரிதி மந்தனா 161 பந்தில் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் மந்தனா-ஷபாலி வர்மா ஜோடி 90 வருட பெண்கள் கிரிக்கெட்டில் அரிய சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில், ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 205 ரன்னில் ரன் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 411 ஆக இருந்தது.
- ஸ்மிரி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய இருவரும் சதம் விளாசினர்.
- இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஆகியோம் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். இந்தியா 292 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிரிதி மந்தனா 161 பந்தில் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதற்கு முன்னதாக பெண்கள் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு 250 ரன்களுக்கு மேல் அடித்தது கிடையாது. தற்போது 292 ரன்கள் விளாசி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி சாதனைப் படைத்துள்ளது. இதன்மூலம் 90 வருட பெண்கள் கிரிக்கெட்டில் அரிய சாதனையை படைத்துள்ளது.
ஷபாலி வர்மா 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். 65 ஓவர் முடிந்த நிலையில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 365 ரன்கள் குவித்துள்ளது. ஷபாலி வர்மா 175 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்