என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shahrukh Khan"

    • சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் 'பதான்'.
    • இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    பதான்

    சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


    பதான்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் அடுத்த பாடலான 'ஜூம் பூம் தூம்' பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஷாருக்கான் 'பார்ட்டி ஆரம்பிக்கலாமா?' என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    பதான்

    'பதான்' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
    • இப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    பதான்

    சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


    பதான்

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'பதான்' படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    'பதான்' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
    • இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    பதான்

    சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.


    பதான் போஸ்டர்

    இந்நிலையில், 'பதான்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ஷாருக்கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    'பதான்' திரைப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பதான்".
    • இப்படத்தின் டிரைலரை விஜய் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    பதான்

    சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் தனது இணையப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    பதான்

    அதில், "மிக்க நன்றி நண்பா! இதனால்தான் நீங்க தளபதி.. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • இந்த போட்டியை நடிகர் ஷாருக்கான் அவரது மகள் மற்றும் பாப் பாடகர் உஷா உதுப் ஆகியோர் நேரில் சென்று ரசித்தனர்.
    • இந்த போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான் மைதானத்துக்குள் சுற்றி கொல்கத்தா வீரர்களை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.

    ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 204 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியை நடிகர் ஷாருக்கான் அவரது மகள் மற்றும் பாப் பாடகர் உஷா உதுப் ஆகியோர் நேரில் சென்று ரசித்தனர்.


    இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான் மைதானத்துக்குள் சென்று கொல்கத்தா வீரர்களை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்தார். மேலும் பெங்களூர் அணி வீரரும் இந்திய வீரருமான விராட் கோலியையும் சந்தித்து பேசினார்.

    சந்தித்து பேசியது மட்டுமல்லாமல் நடனமாடியும் மகிழ்ந்தார். அதனையடுத்து விராட் கோலியின் கையில் ஷாருக்கான் முத்தமிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • நான் வெளிப்படையாக கூறினாலும் நம்ப மறுக்கின்றனர் என்றார் ஷாருக்
    • எனக்கு மேற்கத்திய திரைத்துறையில் நண்பர்கள் உள்ளனர் என்றார் ஷாருக்

    1992ல் "தீவானா" எனும் தனது முதல் திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் கால்பதித்தவர் ஷாருக் கான் (58).

    30 வருடங்களுக்கும் மேலாக இந்தி திரையுலகில் பல வெற்றிப்படங்களை வழங்கி, சக முன்னணி கதாநாயகர்களான சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோரில், "கிங் கான்" (King Khan) என அழைக்கப்படும் ஷாருக், சில தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த 2023ல், ஜவான், பதான், மற்றும் டன்கி என 3 தொடர் வெற்றிப்படங்களை அளித்தார்.

    இந்நிலையில், பிப்ரவரி 14 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) துபாய் நகரில், உலக அரசுகளின் உச்சி மாநாடு (World Governments Summit 2024) நடந்தது.

    இதில் கலந்து கொண்டு உரையாடிய ஷாருக் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அப்போது அவரிடம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்காதது ஏன் என கேட்கப்பட்டது. 


    அதற்கு ஷாருக் பதிலளித்ததாவது:

    நான் வெளிப்படையாக பலமுறை இதற்கு பதிலளித்து விட்டேன். ஆனால், என்னை எவரும் நம்ப மறுக்கின்றனர். இருந்தும் மீண்டும் சொல்கிறேன்.

    எனக்கு இந்தியாவிலிருந்து வெளியே ஹாலிவுட் உட்பட எந்த அன்னிய மொழி படங்களிலும் நடிக்க அழைப்பு வரவில்லை.

    மேற்கத்திய திரைப்பட துறையை சார்ந்த பலருடன் நான் பழகியுள்ளேன். எனக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க திரைத்துறையை சார்ந்த பல திறமையானவர்களுடன் நல்ல நட்பும் உண்டு.

    ஆனால், என்னை எவரும் ஒரு நல்ல வேடத்திற்காக இதுவரை அங்கிருந்து அழைத்ததில்லை.

    என்னை ஏற்று கொள்ள கூடிய பார்வையாளர்களுக்கு பிடித்தமான படங்கள் அளிக்க நான் இன்னும் கற்று கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஷாருக் கான் நேரடியாகச் சென்று கொல்கத்தா அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
    • ஹீட் ஸ்ட்ரோக்கால் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அகமதாபாத்:

    பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக் கான் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அகமதாபாத்தில் நடந்த குவாலிபையர் 1 சுற்றில் வெற்றிபெற்ற கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியை கொல்கத்தா அணி உரிமையாளரான ஷாருக் கான் நேற்று மைதானத்தில் நேரடியாகக் கண்டுகளித்து, தன் அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

    ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

    வெப்ப அலைகள் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள ஷாருக் கான், தற்போது அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அகமதாபாத் சென்ற ஷாருக் கான் கொல்கத்தா அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
    • அதன்பின் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அகமதாபாத்:

    பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக் கான் திடீர் உடல்நலக் குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அகமதாபாத்தில் நடந்த குவாலிபையர் 1 சுற்றில் வெற்றிபெற்ற கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியை கொல்கத்தா அணி உரிமையாளரான ஷாருக் கான் நேற்று முன்தினம் மைதானத்தில் நேரடியாகக் கண்டுகளித்து, தன் அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

    ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

    வெப்ப அலை காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள ஷாருக் கான் அகமதாபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் ஷாருக் கான் நலமுடன் உள்ளார் என அவரது மேனேஜர் பூஜா தத்லானி தெரிவித்துள்ளார். மேலும், ஷாருக் கான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    • திடீர் உடல்நலக் குறைவால் ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • நடிகர் ஷாருக் கான் நலமுடன் உள்ளார் என அவரது மேனேஜர் தெரிவித்தார்.

    அகமதாபாத்:

    குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த குவாலிபையர் 1 போட்டியைக் காண பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக் கான் சென்றார்.

    போட்டி முடிந்த நிலையில் திடீர் உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

    வெப்ப அலை காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட ஷாருக் கான் அகமதாபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

    இதற்கிடையே, நடிகர் ஷாருக் கான் நலமுடன் உள்ளார் என தெரிவித்த அவரது மேனேஜர் பூஜா தத்லானி, ஷாருக் கான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு நன்றி என்றார்.

    இந்நிலையில், அகமதாபாத் மருத்துவமனையில் இருந்து நடிகர் ஷாருக் கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

    • ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அணி வீரர்களை சந்தித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அணி வீரர்களை சந்தித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்சித் ராணாவை ஷாருக் கான் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    குறிப்பாக ராணா ஸ்டைலில் பிளையிங் கிஸ் கொடுத்தார் ஷாருக் கான். இதனை சற்றும் எதிர்பாராத ராணா உடனே ஷாருக் கானை கட்டியணைத்து மகிழ்ச்சியை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த தொடரின் லீக் போட்டியில் ஜதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹர்சித் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார். இது சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து ஷாருக் கான் அதனை செய்து காட்டியது ரசிகர்களிடையே மிகுந்து வரவேற்பை பெற்றுள்ளது.

    • ஷாருக் கான் ஏற்கனவே ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி படத்தில் நடித்துள்ளார்.
    • சமந்தா முதன்முறையாக ஷாருக்கான உடன் நடிக்க உள்ளார்.

    ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த டங்கி படம் வெற்றி பெற்றது. இந்த படம் விசா இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்பவர்களின் அவலை நிலையை காட்டுவதை கருவாக கொண்டதாகும். இந்த படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. இந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் புதுப்படம் மூலம் இணைய இருக்கிறது.

    இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஷாருக் கான் ஏற்கனவே ஜவான் படத்தில் தென்இந்திய நடிகையான நயன்தாராவுடன நடத்தியுள்ளார். தற்போது சமந்தா உடன் நடிக்க இருக்கிறார்.

    அதிரடியான தேசபக்தி கொண்ட படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா கடைசியாக 2023-ல் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முதலில் ஆடிய சேலம் அணி 171 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய கோவை 175 ரன்களை எடுத்து வென்றது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல்லில் நடந்து வருகின்றன. இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ராஜேந்திரன் விவேக் 43 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஹரிஷ்குமார் 19 பந்தில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுஜய் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாருக் கான் 18 பந்தில் அரை சதம் கடந்து அவுட்டானார்.

    கடைசி 11 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சேலம் அணி சிறப்பாக பந்து வீசியது. இதனால் கோவை அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் கோவை அணி பெற்ற 6வது வெற்றி இதுவாகும்.

    சேலம் சார்பில் பொய்யாமொழி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    ×