என் மலர்
நீங்கள் தேடியது "Shani Peyarchi"
- சனிபிடித்தவன் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது என்பார்கள்.
- சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட மக்களிடம் பிரபலமானவர்.
சனிபிடித்தவன் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது என்பார்கள். இப்படி சனியை பலகோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர்.
குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73 ஆயிரம் மைல். குமரிமாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையர் கோவிலில் கல்சிலையாக தூணில் பெண்உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்தில் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார்.

மனித உடலில் தொடைகளுக்கு உடையவர், குடல் வாதநோய் இவரால் ஏற்படும்,
மேலும் ஹிரண்யா, முதுகு வலி, விரைவீக்கம், முடக்கு வாதம் யானைக்கால், பேய்தொல்லை, மூலநோய்.
மனதளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பிடித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்.
சனி ஜாதகத்தில் 3,6,10,11-ல் இருந்தால் நிலபுலம் வாங்குதல், வீட்டு வசதி, விவசாயத்தில் ஈடுபாடு, உத்யோகம், வருவாய் பெரியோர் ஆதரவு தலைமை தாங்கும் பொறுப்பு இவையாவும் சுலபத்தில் வந்து விடும்.
8-ம் இடத்து சனி, தொல்லைகள் அளித்தாலும் ஆயுளை அதிகரிக்கச்செய்வார். ரேகை சாஸ்திரத்தில் நடுவிரலுக்கு நேர் கீழ்பாகம் உள்ள சனி மேட்டில் அதிக ரேகைகள் செங்குத்தாக காணப்பட்டால் ஒன்றல்ல பல வீடுகள் சுலபமாக அவர்களை நாடிவரும்.
12-ல் சனி இருக்க பிறந்தோர் வாழ்க்கைத் துணைக்கு வேட்டு வைக்கும் சுபாவம் நிலைக்கும்.
ஊதாரித்தனம் வந்த வருமானம் நாலாவிதமாக தீய வழியில் செல விடுதல் போன்றவை நிகழும்.

பெருவிரலை அடுத்த சுக்கிரமேட்டில் பலவித குறுக்கு கோடுகள் அடியில் காணப்பட்டால் சனிபாடாய்படுத்தப் போவதற்கான அறிகுறி என உறுதியாக நம்பலாம்.
4-ல் சனி அன்னைக்கு அற்ப ஆயுள், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, வேண்டாத வம்பில் நம்மை இணைப்பது நிகழும்.
சனிபகவான் ஜாதகத்தில் சீராக அமைந்திந்தால் இரும்பு, மெஷினரி, இரும்பு தொழிற்சாலை, தோல், சிமென்ட் ஏஜென்ட்., தயாரிப்பு, கரும்பலகை, ரோஸ்உட், நல்லெண்ணை மொத்த வியாபாரம் மற்றும் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டால் வெற்றிதரும்.
சனியன்று சந்திராஷ்டம தினமாக மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு அமையப்பெற்றால் அன்று கண் பார்வைக்காக அறுவை சிகிச்சை செய்தல் கூடாது.
- சனி திசையில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவத்தை எங்கும் பெற முடியாது.
- மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் பெற்று இருந்துவிட்டால் திரண்ட செல்வத்தை தந்து சமுதாயத்தில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் பாராட்டவைப்பார். சனி பகவானின் பலத்தைப்பொருத்துத்தான் ஒரு மனிதனின் நேர்மையை கூற முடியும்.
சனி கெட்டு நீசம் அடைந்துவிட்டால் காக்கை வலிப்பு மற்றும் நரம்புக் கோளாறுகள் வந்துவிடும். அவ்வாறு வரும்போது சனிக்குரிய பரிகாரங்களை செய்து மருத்துவரின் உதவியையும் நாடினால் வெற்றிகள் கண்டிப்பாக உண்டாகும். சனி திசையில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் இருக்கிறதே அந்த அனுபவத்தை எங்கும் பெற முடியாது.

ஒருவரது வாழ்க்கையில் 7 சனி வரும்போது அவர் கும்பராசியாகவோ அல்லது மகர ராசியாகவோ, அல்லது துலாம், ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளாகவோ இருந்தால் நல்வழிப்படுத்தி விடுவார்.
அதே சமயத்தில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசிகளாக இருந்தால் கடினமாக தண்டித்து பிறகு நல்வழிப்படுத்துவார்.
அதே சமயத்தில் மீனம், தனுசு ராசிக்காரர்களுக்கு தண்டனையை கொடுத்து முன்னேற்றப் பாதையை காட்டுவார். எனவே, நவ்வழிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே.

பூஜை முறை
சனிக்கிழமை காலை குளித்து சுத்தமான ஆடை உடுத்திக் கொள்ளவும். எள்ளுசாதம், எள்கலந்த பலகாரம், பட்சணங்கள், கசப்பு பதார்த்தகங்கள் படைத்து பழம், தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைக்கவும்.
சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கவும். எள்ளை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது போட்டு கட்டி, திரி போல் திரித்து விளக்கில் போட்டு எள்ளு எண்ணை விட்டு தீபம் ஏற்றவும்.
பூஜை முடிந்ததும், எள்ளு சாதம் முதலியவற்றில் சிறிது எடுத்து ஓர் இலையில் வைத்து காக்கைக்கு சாப்பிட வைக்கவும்.
பக்குவப்படுத்தும் சனி
ஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார். முடிவில் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார். இப்படி மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.
சனி பகவான் தியான சுலோகம்
நீலாம்பரோ நீலவடி
கீரீடிக்ருதர ஸ்தித சூராஸ்கர்தனுமான்
சதுர்புஜ, தகயசுத ப்ரகாந்தா
காதாஸ்து யஹ்யம் வரத, ப்ரசந்த
- மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
- பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சனி பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி உடுமலை திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.சித்தி புத்தி விநாயகர் கோவிலில் அதிகாலையில் கோ பூஜை மற்றும் ப்ரீதி யாகசாலை ஹோமமும் நடந்தது. தொடர்ந்து சனி பகவானுக்கு 108 பால்குடம் அபி ஷேகம், தீபாராதனை நடந்தது பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
பிரசன்ன விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பலவி தமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்ப ட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சனிபக வானை வழிபட்ட னர்.