என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Shipping"
- கப்பல் சோதனை ஓட்டம் துவங்கியது.
- 27 பிரீமியம் இருக்கைகளும் என இரு வகைகளாக இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்காக அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்ட 'சிவகங்கை' என்ற பெயரிடப்பட்ட கப்பல் சென்னை வழியாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு (6ம்தேதி) வந்தது.
இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை வரும் 15-ம் தேதிக்கு பின்னர் தொடங்கப்படவுள்ளது. சோதனை ஓட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பருவகால சூழ்நிலை காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இன்று காலை 8 மணி அளவில் சிவகங்கை பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் துவங்கியது. நண்பகல் 12 மணி அளவில் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றது. மீண்டும் 4 மணிக்கு நாகைக்கு வரும்.
கடந்தாண்டு தொடங்கிய கப்பல் சேவை, நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பது இரு நாட்டை சேர்ந்த வணிகர்கள், சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 'சிவகங்கை' கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமும், பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு ரூ 7,500 கட்டணமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்து செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்து செல்லவும் அனுதிக்கப்பட்டுள்ளது. sailindsri.com என்ற இணையதளத்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பயணிகள் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு மூன்று மணி நேரத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- இளநிலை உதவியாளராக பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் விபரம் குறித்து அனுப்பி வைக்க வேண்டும்.
- மேலும் ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்களையும் ஆண்டு வாரியாக குறிப்பிட்டு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சேலம்:
தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நரேஷ், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்பட அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பவதாவது-
பள்ளிக்கல்வித்துறையில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதிக்கு பின்னர் ஆய்வக உதவியாளர் பதவியில் இருந்து இளநிலை உதவியாளராக பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் விபரம் குறித்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்களையும் ஆண்டு வாரியாக குறிப்பிட்டு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இது தவிர பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அலுவல கங்கள், பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியாளர் விபரங்களையும் தனி அறிக்கையாக அனுப்ப வேண்டும் இநத பணி களின்போது உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி எவரின் விபர மும் விடுபடாதவாறு அறிக்கையை விரைவாக தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடல் அட்டை கடத்தலை தடுக்க முயன்ற வனத்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இதனை தடுக்கும் வகையில் வனத் துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மற்றும் வேதாளை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வனத் துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் மண்டபம் வனத்துறை வனவா் அருண்பிரகாஷ், வேட்டைத்தடுப்பு காவலா்கள் நேரு, கண்ணன், சிவசண்முகம், ராஜேஷ் ஆகியோர் மரைக்காயா்பட்டணம்- வேதாளை சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அந்த வாகனம் வேதாளையை சோ்ந்த முகமது அலி ஜின்னா (வயது47) என்பவருக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த முகமது அலி ஜின்னாவின் தம்பி சாதிக்அலியை வனத் துறையினா் கைது செய்ய முயன்றனா். அதற்கு அவர் ஒத்துழைப்பு அளிக்க வில்லை. மேலும் அவர் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு கும்பலை அங்கு வரவழைத்தாா். அங்கு வந்த 20 போ் கும்பல் வனத்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்து வாகனத்தை எடுத்துச் சென்றனா்.
இதுகுறித்து வனவர் அருண்பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் சாதிக்அலி, அவரது அண்ணன் முகமது அலி ஜின்னா மற்றும் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்