search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shop owners"

    • ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.
    • 9 கடை உரிமையாளர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கண்ணாரதெரு, திருவாரூர் சாலை ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பெயரில் சுகாதார அலுவலர் சுரேஷ் தலைமையில்சு காதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கர் ராஜ், பழனிச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

    அதன்படி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் (நெகிழி) பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட 9 கடை உரிமையாளர்களுக்கு என மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதத் தொகை விதிக்கப்பட்டது.

    மேலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவதை மீண்டும் கண்டறியப்பட்டால்கடைகளுக்கு சுகாதார அலுவலர்கள் மூலம் சீல் வைத்து, கடைகளின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என நகராட்சி அலுவலர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • நகை திருடிய வழக்கில் கைதான பெண் ஒருவரை அழைத்துக் கொண்டு, நேற்று ராசிபுரத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு வந்தனர்.
    • பிரபல நகைக் கடையை அடையாளம் காட்டி, அங்கு தான் நகையை விற்றதாக கூறினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீசார், நகை திருடிய வழக்கில் கைதான பெண் ஒருவரை அழைத்துக் கொண்டு, நேற்று ராசிபுரத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு வந்தனர்.

    போலீசார் அழைத்து வந்த பெண், பிரபல நகைக் கடையை அடையாளம் காட்டி, அங்கு தான் நகையை விற்றதாக கூறினார்.

    இதை–யடுத்து அந்த நகைக் கடைக்கு சென்ற பரமத்தி வேலூர் போலீசார், உரிமை–யாளரிடம் விசாரணை நடத்திட, அவரை அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்த ராசிபுரத்தை சேர்ந்த மற்ற நகைக்கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் திரண்டு வந்தனர்.

    அவர்கள், நகைக்கடை உரிமையாளரை அழைத்து செல்வதற்கு மறுப்பு தெரிவித்து, பரமத்தி வேலூர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ராசிபுரம் போலீசாரின் அனுமதி இல்லாமல், எப்படி நீங்கள் விசாரணை நடத்தலாம்? என பரமத்திவேலூர் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்து ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு திரண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் பரமத்தி வேலூர் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து, திடீரென்று கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ராசிபுரம் போலீசாரின் அறிவுறுத்தலின்படி, நகைக்கடை உரிமையா–ளர்கள் பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று டி.எஸ்.பி.யிடம் விளக்கம் அளித்தனர்.

    ×