என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "shopkeeper"
- பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் பிரவீன்குமார் (35) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
- கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் பிரவீன்குமார் (35) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர்.
நெல்லை பழைய பேட்டை புதுகிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜரத்தினம்(வயது 40). இவர் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் கடை வைத்துள்ளார்.
நேற்று அவரது கடைக்கு பழையபேட்டை அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த நரேஷ்குமார்(27) என்பவர் வந்தார். மதுபோதையில் கடைக்கு வந்த அவர் சிகரெட் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் ராஜரத்தினம், தனது கடையில் சிகரெட் இல்லை என்று கூறி உள்ளார். அதனை கேட்காத நரேஷ்குமார், கடையில் அமர்ந்திருந்த ராஜரத்தினத்தை தாக்கி உள்ளார். பின்னர் அங்கிருந்த பேனாவை எடுத்து ராஜரத்தினம் மீது குத்தி உள்ளார்.
உடனே பஜார் பகுதியில் நின்றிருந்தவர்கள் ஓடி வந்து நரேஷ்குமாரை தள்ளிவிட்டனர். இதுதொடர்பாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் நரேஷ்குமாரை கைது செய்தனர்.
- கந்துவட்டி கும்பலால் டீக்கடைக்காரர் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவேக ம்புத்தூர் அருகே உள்ள ஆந்தகுடியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது45). இவர் அதேபகுதியில் உள்ள ஒத்தக்கடையில் டீக்கடை நடந்தி வந்தார். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.
தொழில் நிமர்த்தம் காரணமாக திருநாவுக்கரசு வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை சரியாக செலுத்தா ததால் கந்து வட்டிக்காரர்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் திருநா வுக்கரசு விளங்காட்டூர் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது.
இது குறித்து திருநா வுக்கரசின் தந்தை அழகர் திருவேகம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எனது வீட்டுக்கு 3 பேர் காரில் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருநாவுக்கரசை அழைத்துச் சென்றனர். அவர்கள் தான் எனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள் என்று புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரவு கடன் வாங்கிய நபர்களிடம் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போன் தர மறுத்த வியாபாரியை கத்தியால் குத்தினர்
- பணத்தையும் பறித்து சென்றனர்
கரூர்:
கரூர் டி. செல்லாண்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 50) வியாபாரியான இவர், சம்பவத்தன்று காமராஜ் மார்க்கெட்டில், காய்கறிகளை வாங்கிக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் மக்கள் பாதை ரவுண்டானா வழியாக வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார்.அப்போது, மோகன்ராஜ் (22), உதயபிரகாஷ் (21), ஹேமல் (20), சஞ்சய்குமார் (20), ஆகிய நான்கு பேர், செந்தில் குமாரை வழிமறித்து மொபைல் போனை கேட்டுள்ளனர். அவர் மொபைல் போனை தர மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த நான்கு பேரும், செந்தில் குமாரை கத்தியால் குத்தினர். பின், செந்தில் குமாரிடமிருந்து மொபைல் போன் மற்றும் 1,200 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர். காயம்டைந்த செந்தில்குமார், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, கரூர் டவுன் போலீசார் மூன்று பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்தவர் பல்விந்தர் சிங் (வயது 59). இந்தியர். இவர் அங்கு கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் வோல்வர்ஹாம்ப்டன் என்ற இடத்தில் அவர் தனது வேனை ஓட்டிச்சென்றார்.
அப்போது அந்த வேன் மீது ஒரு கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பல்வீந்தர் படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் மீது காரை ஓட்டிச்சென்று மோதி விபத்து ஏற்படுத்திய ஜேசன் பேனிஸ்டர் என்பவர் சிக்கினார். அவர் ஸ்டாப்போர்டுஷயர் போலீஸ் அதிகாரி ஆவார். அவர் மீது விபத்தை ஏற்படுத்தி பல்விந்தர் சிங்கை கொன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு அங்குள்ள பர்மிங்ஹாம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜேசன் பேனிஸ்டர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என நீதிபதி முடிவு செய்து, அவருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் அவர் 3 ஆண்டு காலம் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்-தாராபுரம் ரோடு கோவில்வழி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). இவர் நேற்று காலை அந்தபகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று புகையிலை பொருள் கேட்டுள்ளார். ஆனால் அங்கு இல்லை என்று திரும்பினார். அப்போது அவரை பார்த்த ஒரு வியாபாரி தன்னிடம் புகையிலை பொருள் உள்ளது. கடையைவிட குறைந்த விலைக்கு தருகிறேன் என்று கூறி அவருக்கு புகையிலை பொருள் வழங்கினார். இதை சாப்பிட்ட சதீசுக்கு சிறிது நேரத்தில் வாய் எரிச்சல் ஏற்பட்டதுடன் வாந்தி எடுத்தார். இதனால் அவரை அருகில் இருந்த ஒருவர் பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டார்.
பின்னர் இது குறித்து திருப்பூர் ஊரக போலீசில் சதீஷ் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும் போலீசார் சதீசை அழைத்துக்கொண்டு கோவில் வழி பகுதியில் அந்த வியாபாரியை தேடினர். பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தேனி அல்லிநகரை சேர்ந்த தங்கராஜ் (39) என்பதும், அவர் திருப்பூர் வீரபாண்டி வள்ளலார் நகரில் தங்கியிருந்து கடந்த 2 ஆண்டுகளாக கடைகளுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த புகையிலை பொருட்கள் போலியானதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்