search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Showroom"

    • கார் வாங்க வேண்டும் என்றால் மிட்டுசுபிஷி [Mitsubishi] ஷோரூமுக்கு செல்லுங்கள்
    • ரோல்ஸ் ராயல்ஸ் காரை வாங்க வேண்டும் என்று அன்றைய தினம் தீர்மானம் செய்ததாக தெரிவித்தார்.

    கேரள மாநிலம் திருச்சூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல தங்க நகை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சேர்மேன் ஜோய் ஆலுக்காஸ் ரோல்ஸ்  ராய்ஸ்  கார் ஷோரூமில் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து மனம் திறந்துள்ளார். தான் ஒரு சமயம் துபாயில் உள்ள ரோல்ஸ்  ராய்ஸ்  ஷோரூமில் கார் வாங்கலாம் என்று சென்றதாகவும் அப்போது அங்குள்ள ஊழியர்கள் தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர் என்று தெரிவித்தார்.

    நான் கார் பார்க்க வந்தேன் என்று ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அந்த ஊழியர்கள், நீங்கள் கார் வாங்க வேண்டும் என்றால் மிட்டுசுபிஷி [Mitsubishi] ஷோரூமுக்கு செல்லுங்கள் அங்கு [வேண்டுமானால்] நீங்கள் கார் வாங்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்த ஜோய் ஆலுக்காஸ் தான் அதே ரோல்ஸ்  ராய்ஸ்  காரை வாங்க வேண்டும் என்று அன்றைய தினம் தீர்மானம் செய்ததாக தெரிவித்தார்.

    அதன்படி விலையுயர்ந்த கார் கலெக்ஷன்களை தன்வசம் வைத்துள்ள ஜோய் ஆலுக்காஸ் கடந்த மார்ச் மாதம் ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ்  ராய்ஸ் கல்லினன் Rolls-Royce Cullinan காரை வாங்கியுள்ளார். அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்டும் (Rolls Royce Ghost) உள்ளது குறிபிடத்தக்கது. 67 வயதான ஆலுக்காஸ், 4.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் 50வது பணக்காரர் ஆக உள்ளார் . 

    • தள்ளுவண்டியில் அந்த மின்சார ஸ்கூட்டரை மாலை மரியாதையுடன் ஏற்றிக்கொண்டு நேராக ஓலா ஷோரூம் வந்துள்ளார்.
    • 'ஏங்கும் இந்த இதயத்திலிருந்து பெருமூச்சு வெளியேறுகிறது, நான் என்ன குற்றம் செய்தேன், ஓலா என்னை கொள்ளையடித்தது'

    ஷோரூமிற்கு வெளியே ஓலா [OLA] மின்சார ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓலா ஷோரூமில் சாகர் சிங் என்ற அந்த நபர் மின்சார ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். ஆனால் அடிக்கடி ஸ்கூட்டர் பழுதாகி பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஓலா நிறுவனத்தின் மீது அதிருப்தியிலிருந்த சாகர் சிங், தள்ளுவண்டியில் அந்த மின்சார ஸ்கூட்டரை மாலை மரியாதையுடன் ஏற்றிக்கொண்டு நேராக ஓலா ஷோரூம் வந்துள்ளார். ஷோரூமின் முன்னாள் நின்றுகொண்டு மைக்கில் சோகப் பாடல்களைப் பாடத்தொடங்கினார்.

    இதனால் அவரை சூழ்ந்து மக்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். சல்மான் கான் படத்தில் வரும் பிரபல சோகப் பாடலான Hum Dil De Chuke Sanam பாடலை சோகமான குரலில் ஓலா ஸ்கூட்டரை நோக்கி அவர் பாடியது அங்கிருந்தவர்களைச் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

    'ஏங்கும் இந்த இதயத்திலிருந்து பெருமூச்சு வெளியேறுகிறது, நான் என்ன குற்றம் செய்தேன், ஓலா என்னை தண்டித்தது, கொள்ளையடித்தது' என்று பொருள்படும்படி அவர் அந்த பாடலை பாடியதே மக்களின் சிரிப்பலைக்குக் காரணம் ஆகும். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்று தெரியாத நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மின்சார வானங்கள் பழுது பட்டும், திடீரென வெடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • ஊழியர்கள் பைக் வாங்க வந்தவரிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • பைக்கை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    புதிய பைக்கை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடப்படும் காட்சிகள் சினிமாக்களில் இடம் பெற்றுள்ளது. அதே போல திருவண்ணாமலையிலும் நூதன திருட்டு அரங்கேறி உள்ளது.

    திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி ரோட்டில் தனியார் பைக் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஷோரூமிற்கு நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து டிப்-டாப் உடையில் வாலிபர் ஒருவர் காரில் வந்து இறங்கினார். அங்கிருந்த ஊழியர்களிடம் பைக் வாங்க வந்துள்ளேன் என்று கூறினார்.

    இதனை நம்பிய ஊழியர்கள் அந்த நபருக்கு புது பைக்குகளை காட்டினர். இதில் ஒரு புது பைக் பிடித்துப் போகவே அதனை ஓட்டி பார்ப்பதாக அந்த நபர் கூறினார். இதனால் ஊழியர்கள் சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அவரிடம் கொடுத்தனர்.

    ஆனால் ஊழியர்கள் பைக் வாங்க வந்தவரிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த நபர் பைக்கை ஓட்டி ஒத்திகை பார்ப்பதற்காக பைக்கை வெளியே ஓட்டி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அந்த நபர் திரும்பி வரவில்லை . இதனால் ஷோரூம் ஊழியர்கள் பைக்கை எடுத்து சென்ற நபரை தேடிச் சென்றனர்.

    பின்னர் இது குறித்து காரில் இருந்த டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த வாடகை கார் என்றும், காரில் வந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற தகவல் தனக்கு தெரியாது என்று டிரைவர் கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என டிரைவரிடம் கேட்டனர்.

    அதற்கு அவர் நான் புதுச்சேரியில் இருந்து வருகிறேன் எனக்கு இந்த வாலிபர் யார் என தெரியாது அவரிடம் செல்போன் கூட இல்லை எனக்கு ஒரு ஆட்டோ டிரைவர் போன் செய்து திருவண்ணாமலைக்கு சவாரி உள்ளது என கூறி இவரை எனது காரில் அனுப்பி வைத்தார். எனக்கு அந்த நபர் கார் வாடகை கூட கொடுக்கவில்லை என கூறினார்.

    இதனால் செய்வதறியாமல் தவித்த ஊழியர்கள் இது குறித்து ஷோரூம் உரிமையாளரிடம் நடந்த விவரங்களை பற்றி தெரிவித்தார்.

    மேலும் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் வந்து பைக்கை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • திருப்பூர் குமரன் சாலையில் புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி ஷோரூம் திறப்பு விழா நடக்கிறது.
    • தங்கமயில் ஜுவல்லரி கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனியொரு அடையாளத்தை பதித்துள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் குமரன் சாலையில் புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி ஷோரூம் திறப்பு விழா நாளை 2-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10-30மணிக்கு நடக்கிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:-

    தங்கமயில் ஜுவல்லரி கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனியொரு அடையாளத்தை பதித்துள்ளது. இன்று 25 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழகம் முழுவதும் கிளைகளை பரப்பி இந்த மண்ணி ன் மனம் கவர்ந்த ஒரு ஜுவல்லரியாக மாறியிருக்கிறது.

    ஆடை உலகம்திருப்பூர் விரும்பும் ஆபரண உலகமாக திகழும் தங்கமயில் ஜுவல்லரி மிகச் சிறந்த நகைகளை மிகக்குறைந்த சேதாரத்தில் வழங்கி வருகிறது. இன்று திருப்பூரின் மிக முக்கிய ஜுவல்லரிகளின் தேர்வுகளில் முதலாவதாக தங்கமயில் மாறியிருக்கிறது. திருப்பூர் மக்கள் எங்களுக்கு நல் ஆதரவை என்றும் அளித்து வருவது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது. இந்த அன்பிற்கும், ஆதரவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக எங்களுடைய திருப்பூர் தங்கமயில் ஜுவல்லரி ஷோரூம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    புதுப்பிக்கப்பட்ட இந்த ஷோரூமின் திறப்பு விழா நாளை 2-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. திறப்பு விழாவின் மிக முக்கிய அம்சமாக தங்கமயில் ஜுவல்லரி ஷோரூமிற்குள்ளேயே தனது பிரத்தியேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் தங்க மாங்கல்யம்' என்னும் தனித்துவமான திருமண நகை கலெக்‌ஷன்களையும் அறிமுகப்படுத்துகிறது. மணமகளுக்கு ஏற்ற தங்க, வைர ஆபரணங்கள், இரத்தினக் கற்களில் அமைந்த நகைகள், வெள்ளி நகைகள் என்று அனைத்திலும் விதவிதமான திருமண நகைகளின் கலெக்‌ஷன்களையும், டிசைன்களையும் இங்கே ஒரே இடத்தில் வாங்கிடலாம்.

    இதுவரை இல்லாத அளவு எண்ணிலடங்கா திருமண நகை கலெக்‌ஷன்கள், டிசைன்கள், பிரைடல் செட் என்று தங்கமயில் ஜுவல்லரி தனித்துவமான மற்றும் மிக பிரம்மாண்ட தங்க மாங்கல்யம் கலெக்‌ஷன்களை வடிவமைத்திருப்பது மிகவும் கவனித்தக்க ஒன்று. இந்த கலெக்‌ஷன்கள் அனைத்தும் எங்கள் கை தேர்ந்த கைவினை கலைஞர்களின் விஷேச அனுபவத்தில் டிசைன் செய்யப்பட்டு தங்க மாங்கலயம் கலெக்‌ஷன்களுக்காகவே தனித்துவமாக பார்த்துப் பார்த்து உருவான பொக்கிஷமான படைப்பு.

    ஆண்டிக், நகாஸ்,ைலட்வெயிட், மார்டன், டிசைனர் என்று அனைத்திலும் அற்புதமான படைப்புகளை உருவாக்கியிருக்கிறோம். இனி திருப்பூரின் ஒவ்வொரு திருமணத்தின் தொடக்கமும் தங்கமயில் ஜுவல்லரியில் தான் ஆரம்பமாகும். அவரவர் வீட்டு முறைப்படி, அவரவர் பழக்கவழக்கங்களின்படி பண்பாடு மற்றும் கலாச்சாரம் இவற்றை பிரதிபலிக்கும் அற்புதமான திருமண நகைகளை அளிப்பதில் முன்னோடியான தங்கமயிலின் இந்த பிரம்மாண்ட தொடக்கத்தில் கலந்துகொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்.

    தரமான சேவை அளிக்க வேண்டும். ஒவ்வொரு தயாரிப்பையும் நியாயமான விலைக்கு வழங்க வேண்டும், குறுகிய கால வளர்ச்சியாக இல்லாமல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையோடு நீண்ட நெடிய காலம் பயணிக்க வேண்டும். இது தான் எங்கள் இலக்கு .அதற்கான சரியான திட்டமிடுதல், வழிகாட்டுதல்கள், சிறப்பான செயல்முறைகள் என அனைத்தையும் நாங்கள் உருவாக்கி அதன்படி நடந்துவருகிறோம். அதனால்தான் இன்று பங்குச்சந்தையிலும் நாங்கள் தடம்பதித்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறோம் . இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    ×