என் மலர்
நீங்கள் தேடியது "sickle"
- நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றம் பகுதியில் இன்று ஒரு நபர் சந்தேகப்படும்படியாக உள்ளே நுழைந்தார்.
- பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் பாளை-திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இங்கு உரிமையியல், குற்றவியல், நிரந்தர மக்கள் நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன.
முக்கியமான கொலை உள்ளிட்ட வழக்குகளின் போது இங்கு அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். மற்ற நேரங்களில் குறைந்த அளவு போலீசார் பாதுகாப்பில் இருப்பார்கள்.
அரிவாளுடன் நுழைந்த நபர்
இந்நிலையில் இன்று நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றம் பகுதியில் ஒரு நபர் சந்தேகப்படும்படியாக உள்ளே நுழைந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் அரிவாள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்ததில் அவர் நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவர் எதற்காக நீதிமன்றத்திற்குள் அரிவாள் கொண்டு வந்தார்? ஏதேனும் சதி திட்டத்துடன் கொண்டு வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே தம்பதியிடம் அரிவாளை காட்டி மிரட்டி 12 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளயைர்களை தேடிவருகின்றனர்.
திருமங்கலம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த ஏனாதியை சேர்ந்தவர் சேகர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா (வயது 42).
கணவன்-மனைவி இருவரும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சி.பி.நத்தம் கிராமத்திலுள்ள தங்களது குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு சாமிகும்பிட்டு மதியம் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி ராய பாளையம் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது 2 பேரும் அரிவாளை காட்டி சேகரை மிரட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் பிரியா அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசில் சேகர் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளயைர்களை தேடிவருகின்றனர்.
- வாகன சோதனையில் சிக்கியவர்கள் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
- பெட்ரோல் பங்கில் அவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் வண்ணார்பேட்டைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
நெல்லை:
பாளை வண்ணார் பேட்டை பகுதியில் நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிறுவர்கள் சிக்கினர்
அப்போது தெற்கு புறவழிச்சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் 5 சிறுவர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அவர்களை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வழிமறித்த போது மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர்.
அவர்களை 2 போலீசார் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.அதில் இருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
திருட்டு மோட்டார் சைக்கிள்
உடனே அவர்களை போலீசார் காலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையில் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சேரன்மகாதேவியிலிருந்து மோட்டார் சைக்கிளை திருடிச் கொண்டு நெல்லைக்கு வந்ததாக தெரிவித்தனர்.
கொள்ளையடிக்க திட்டம்
டவுன் நயினார் குளம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் வண்ணார்பேட்டைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், 2 அரிவாள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் பாளை இன்ஸ்பெக்டர் திருப்பதி விசாரணை நடத்தி வருகிறார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகேயுள்ள தெற்கு வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுதுரை. சம்பவத்தன்று பொன்னுதுரையும், அவரது மனைவியும் நெல்லை மார்க்கெட்டுக்கு வந்துவிட்டனர். வீட்டில் அவர்களது மகள் மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பொன்னுதுரையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி பொன்னுதுரையின் மகளை கடத்தி சென்று விட்டனர்.
வீட்டுக்கு வந்த பொன்னுதுரையும், அவரது மனைவியும் இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி சிறுமியை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.