என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Siege struggle"
- கோவிந்தநாட்டடுசேரி ஊராட்சி தமிழக அரசு விதிப்படி மணல் அள்ளப்பட்டு வருகிறது.
- கிராமங்களுக்கு மணல் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டடுசேரி ஊராட்சி, புத்தூர், குடிகாடு கிராமத்தில் தமிழக அரசு விதிப்படி மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இந்த மணல் தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைன் மூலமாக புதுப்பிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இருந்தும் பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு மணல் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் நடப்பு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை டிராக்டர் எளிமையாக கிடைக்கப்பெற்றது. தற்போது டிராக்டர் மணல் கிடைப்பதில்லை.
ஆகவே மீண்டும் டிராக்டரில் மணல் வேண்டி கனிம வள அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட டிராக்டர் உரிமையாளர்கள் சென்று முறையிட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
எனவே மணல் குவாரியில் டிராக்டரில் மணல் அள்ள அனுமதிக்க கோரி வருகின்ற 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மணல் குவாரி முன்பு மறியல், முற்றுகை போராட்டம் நடத்துவதென கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு குறு கட்டுமான பணியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
- வசூல் செய்யும் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் கட்டவில்லை என புகார்
- போலீசார் சமரசம் செய்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தில் கிளை அஞ்சலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மாபாளையம் கிராமத்தில் வசிக்கும் ராகினி என்பவர், சேமிப்பு கணக்கில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார்.
ராகினி, அம்மாபாளையம் கிராமத்தில் வசூல் செய்து வரும் பணத்தை சம்பந்த ப்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கில் கட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் ராகினிக்கு செங்கம் அருகே வசிக்கும் நபருடன் திருமணமானது.திருமணமான பின்னர் தபால் சேமிப்பு கணக்கில் பணம் வசூல் செய்யும் பணியை, அம்மாபாளையம் கிராமத்திலேயே செய்து வந்தார்.
ஆனால் வசூல் செய்யும் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் கட்டாமல் இருந்து வந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் தபால் அலுவலக அலுவலர்களிடம் புகார் செய்ததன் பேரில், விசாரணை நடத்தினர்.
இதனால் தற்போது தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ராகினியிடம் நேரில் விசாரணை நடத்த தபால் அலுவலக அலுவலர்களிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒண்ணுபுரம் அஞ்சலகத்திற்கு வந்திருந்தனர்.
இந்த விசாரணைக்கு செங்கம் பகுதியில் தனது கணவர் வீட்டில் வசிக்கும் ராகினி நேரில், விளக்கம் அளிக்க வந்தார்.
அம்மாவின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ஒண்ணுபுரம் அஞ்சலகத்தில் வந்து ராகினியிடம் தாங்கள் கட்டிய பணத்தை வழங்கவேண்டும் என முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் செய்தனர். தபால் அலுவலர்கள் முறைப்படி ராகினியிடம் பணம் வசூலித்து வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைப்பதாக தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
- பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.
- இதனை கண்டித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.
பரமக்குடி
மதுரைக்கு அடுத்த படியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். பரமக்குடி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு ஜே.சி.பி. மூலம் லாரிகளில் மணல் திருடியுள்ளனர்.
கிராமப்புறங்களில் நடந்த மணல் திருட்டு தற்போது நகர்புறங்களிலும் தொடங்கிவிட்டது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி மறத்தமிழர் சேனை நிறுவனர் பிரபாகர் மற்றும் பா.ஜ.க.வினர் மணல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஓட்டப்பா லத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வரை கோசமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் தாசில்தார் பார்த்தசாரதி, போலீசார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது கூடிய விரைவில் மணல் திருடியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- ஓய்வு கால பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
சி.ஐ.டி.யு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் இன்று நடந்தது.
மாவட்ட செயலாளர் பரசுராமன், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினா்.
ஒப்பந்த நிலுவைத் தொகை, கொரோனா நிதி வழங்க வேண்டும்.அடிப்படை சம்பளத்தை சரி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஒப்பந்த பலனை வழங்கி, ஓய்வூதிய உயர்வு, பணி ஓய்வு பெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களின் ஓய்வு கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட தலைவர் இளங்கோ, துணை பொது செயலாளர் சுரேஷ், பொருளாளர் சிரஞ்சீவி, துணைத்தலைவர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முற்றுகை போராட்டத்தையொட்டி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
- போலீசார் பேச்சுவார்த்தை
ஆற்காடு:
ஆற்காட்டை அடுத்த லாடவரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. விளைநிலங்களுக்கு அருகே இந்த கடை இருப்பதால் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை விலை நிலங்களில் வீசி செல்வதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.
மேலும் பெண்கள் அந்த வழியாக செல்லவும் அச்சப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் 12 மணி அளவில் கடையை திறக்க வந்த டாஸ்மாக் ஊழியர்களை கடை திறக்க விடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர்.
- பட்டியந்தல் கிராமத்தில் மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்
- தாசில்தார் சமரசம்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட பட்டியந்தல் கிராமத்தில் உள்ள ஏரி கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 30-க்கு மேற்பட்ட வீடுகளை வருவாய்த் துறையினர் கடந்த வாரம் அகற்றினர்.
மேலும் அவர்களுக்கு மாக அருகே உள்ள மட்டவெட்டு கிராமத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.
ஆனால் இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பட்டியந்தல் கிராமத்தில் அல்லது அருகில் உள்ள வீரளூர் கிராமத்திலோ வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கலசபாக்கம் தாசில்தார் அவர்களிடம் சமரசம் செய்து தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தால்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று கூறினார். அதன் பிறகு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்துவிட்டு சென்றனர்.
திருச்செந்தூர் ஜீவாநகரில் உள்ள அன்னை தெரசா மக்கள் மன்றத்தில் நேற்று நெல்லைதூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், இடிந்தகரை, தோமையார்புரம், ஊத்தக்குழி, உவரி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தலை, அமலிநகர், வீரபாண்டியன்பட்டினம், சிங்கித்துறை, கொம்புத்துறை, புன்னக்காயல் உள்ளிட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தூத்துக்குடி திரேஸ் புரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அத்துமீறி நுழைந்து ஜான்சி என்ற பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததை கொலை வழக்காக பதிவு செய்து, உடனே அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு கடற்கரை பகுதியில் அரசு முயற்சி செய்து வரும் சாஹர் மாலா திட்டத்தை கைவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது. இதையும் மீறி அந்த ஆலையை திறந்தால் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
துப்பாக்கி சூட்டின் போது படுகாயம் அடைந்த மக்களுக்கு தலா ரூ.50 லட்சமும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடியும் கொடுக்க வேண்டும். அதேபோல் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய அனைத்து போலீசார் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பணியில் உள்ள நீதிபதியை கொண்டு நீதி விசாராணை நடத்தப்பட வேண்டும்.
கடற்கரை கிராமங்களில் கதிரியக்கத்தை அளவீடு செய்யும் கருவியை அரசாங்கம் நிறுவ வேண்டும். தடை செய்யப்பட்ட போக்குவரத்து சேவையை அனைத்து ஊர்களுக்கும் வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் இடத்தில் அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.