என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "silver"
- தங்கம், வெள்ளி விலை.
- தங்கம் ரூ.240 குறைந்துள்ளது.
பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கு வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது. அதன் பின்னர் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் பவுன் ரூ. 50,640- ஆக குறைந்த தங்கத்தின் விலை நேற்று மீண்டும் அதிகரித்து பவுன் ரூ.50,800-க்கு விற்பனை ஆனது. இன்று தங்கத்தின் விலை கிராம் 75 ரூபாயும், பவுன் 600 ரூபாயும் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த விலை உயர்வால் இன்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 6,425-க்கும், பவுன் ரூ. 51,400-க்கும் விற்கப்படுகிறது. பவுன் மீண்டும் ரூ. 51 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
தங்கம் விலை மறுபடியும் அதிகரித்து வருவதால் நகை வாங்க இருந்தவர்கள் கவலை அடைந்துள்ளனர். வெள்ளி விலையும் இன்று அதிகரித்து இருக்கிறது.கிராம் ரூ. 1.50 உயர்ந்து ரூ. 88-க்கும், கிலோ ரூ.1,500 அதிகரித்து ரூ.88 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.
- வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.
- பார் கிலோ ரூ.87ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனையானது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
இன்று கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,400-க்கும் சவரனுக்கு ரூ.560- குறைந்து ஒரு சவரன் ரூ.51,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.87-க்கும் கிலோவுக்கு ரூ4 ஆயிரம் குறைந்து பார் கிலோ ரூ.87ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை வாங்கினார்.
- அதிர்ச்சி அடைந்த செரிஷ் உடனே இந்தியா புறப்பட்டு வந்தார்.
ராஜஸ்தானை சேர்ந்த நகை கடை உரிமையாளர் அமெரிக்க பெண்ணிடம் ரூ. 300 மதிப்புள்ள போலி நகையை ரூ. 6 கோடிக்கு விற்பனை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த செரிஷ் என்ற பெண் ஜெய்பூரில் உள்ள ஜோரி பஜாரில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை வாங்கியுள்ளார்.
ரூ. 6 கோடி கொடுத்து வாங்கிய நகைகளை அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில் செரிஷ் காட்சிப்படுத்த ஆயத்தமானார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது, செரிஷ் வாங்கிய விலை உயர்ந்த நகைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த செரிஷ், உடனே இந்தியா புறப்பட்டு வந்தார்.
இந்தியாவில் தரையிறங்கிய செரிஷ் நேரடியாக நகை வாங்கிய கடைக்கு விரைந்தார். அங்கு கடையின் உரிமையாளர் கௌரவ் சோனியை சந்தித்து போலி நகை குறித்து விளக்கம் கேட்டார். செரிஷ்-இன் குற்றச்சாட்டுகளை கௌரவ் சோனி மறுத்துள்ளார். இதையடுத்து காவல் நிலையம் விரைந்த செரிஷ் கௌரவ் சோனி மீது புகார் அளித்தார்.
மேலும், தனது புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி செரிஷ் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் உதவி கேட்டார். பிறகு, அமெரிக்க தூதரகம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் ஜெய்பூர் காவல் நிலையத்தில் கௌரவ் சோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து கௌரவ் சோனி மற்றும் அவரது தந்தை ராஜேந்திர சோனி ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான கௌரவ் சோனியிடம் செரிஷ் பலக்கட்டங்களாக ரூ. 6 கோடி மதிப்பிலான போலி நகைகளை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.
- தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
- தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவால் நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
சென்னை:
தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடிக்கிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. இதே போல் வெள்ளி விலையும் உயர்ந்துக்கொண்டே வந்தது.
இந்த நிலையில், வாரஇறுதி நாளான இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்குரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.6,650-க்கும் சவரன் ரூ.53,200-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 96 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவால் நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
- நீங்கள் வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் இருந்தால், எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.
- தினமும் வீட்டில் சாமி கும்பிடும் போது கற்பூரத்தை ஏற்றுவதால் வீட்டின் சுற்றுப்புறம் தூய்மையடைகிறது.
நாம் வாழும் வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி இருக்க வேண்டும். ஒருவேளை நாம் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால், அது ஒருவரது வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரி, வாஸ்து குறைபாடு உள்ள வீட்டை அறிவது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.
நீங்கள் வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் இருந்தால், எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது, வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும், பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் மற்றும் நிறைய பண பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால், வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் குடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்நிலையில் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள ஒருசில பரிகாரங்களை வீட்டில் செய்வதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். இப்போது அந்த பரிகாரங்கள் என்னவென்பதைக் கண்போம்.
நீங்கள் செடி பிரியர் என்றால், வீட்டில் துளசி செடியை வாங்கி வளர்த்து வாருங்கள். குடியிருக்கும் வீட்டில் துளசி செடியை வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த செடியில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி குடியிருக்கிறார். அதுவும் இந்த துளசி செடியை வீட்டில் பிரதான வாசலில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம், வீட்டின் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும்.
பணப்பையை காலியாக வைத்திருக்காதீர் ஜோதிட சாஸ்திரத்தின் படி, நீங்கள் உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பை அல்லது பெட்டியை எப்போதும் காலியாக வைத்திருக்காதீர்கள். அப்படி வைத்தால், அது வீட்டில் பணம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் பணம் வைக்கும் பையானது லட்சுமி தேவி இருக்கும் இடம். இந்த இடத்தை காலியாக வைத்தால் லட்சுமி தேவி கோபப்படுவாள். எனவே பணப்பையை காலியாக வைத்திருக்காதீர்கள்.
ஜோதிடத்தின் படி, தினமும் வீட்டில் சாமி கும்பிடும் போது கற்பூரத்தை ஏற்றுவதால் வீட்டின் சுற்றுப்புறம் தூய்மையடைகிறது. அதாவது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்பட்டு, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். நேர்மறை ஆற்றல் நிரம்பிய வீட்டில் வாஸ்து தோஷம் எதுவும் இருக்காது. இதன் விளைவாக எவ்வித பணப் பற்றாக்குறையும் ஏற்படாது. எனவே வீட்டில் பணப் பிரச்சனை வரக்கூடாதெனில், தினமும் கற்பூரத்துடன், 1 கிராம்பை வைத்து ஏற்றி வீடு முழுவதும் அதன் புகையை காட்டுங்கள்.
உங்கள் வீட்டில் பண பிரச்சனை அதிகமாக உள்ளதா? அப்படியானால் இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் ஒரு வெள்ளி நாணயத்தை வையுங்கள். இப்படி செய்வதன் மூலம், புதன் மற்றும் செவ்வாயினால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இவ்விரு கிரகங்களின் தோஷங்களானது ஒருவருக்கு நிறைய கஷ்டத்தை தரும். முக்கியமாக பணப் பிரச்சனையால் அவதிப்பட வைக்கும்.
- அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள்.
- அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம்.
இந்த ஆண்டு அட்சய திருதியை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. புதிய வணிகம், தொழில் தொடங்குவதற்கும், தங்கம், வெள்ளி பொருட்களை வாங்குவதற்கும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் மென்மேலும் வளரும், இந்த நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பண நெருக்கடி காரணமாக தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்களை வாங்க முடியாத நிலையில் அதற்கு மாற்றாக வாங்க வேண்டிய பொருட்கள் குறித்து பார்ப்போம்.
தானியங்கள்:
வெண் கடுகு, அதாவது மஞ்சள் நிற கடுகு, பார்லி போன்ற தானியங்கள் அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியை வழிபட பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த பொருட்களை அன்றைய தினம் வாங்குவது நல்லது. அரிசி போன்ற தானியங்கள், வளத்தின் அடையாளமாக விளங்கும் பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான காய்கறிகள், புனிதப்பொருளான நெய் போன்றவற்றையும் வாங்கலாம்.
சோழி:
அட்சய திருதியை அன்று சோழி வாங்கலாம். லட்சுமி தேவியின் பாதங்களில் சோழிகளை காணிக்கை செலுத்தி வழிபடலாம். மறுநாள் அந்த சோழிகளை சிவப்பு துணியில் பொதிந்து பாதுகாப்பாக வைக்கவும். இது பொருளாதார வளர்ச்சி அடைய உறுதி செய்யும் என நம்பப்படுகிறது.
மண்பானை:
அட்சய திருதியை நாளில் வீட்டில் மண்பானை இருப்பது லட்சுமி தேவியை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அன்றைய தினம் மண்பானை வாங்கி வைப்பது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
சங்கு:
அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் விஷ்ணுவும், லட்சுமி தேவியும் மகிழ்ச்சி அடைவார்கள், வீட்டில் மகிழ்ச்சி தங்குவதும் உறுதி செய்யப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.
ஸ்ரீசக்கரம்:
அட்சய திருதியை அன்று ஸ்ரீசக்கரம் வரைபடமும் வாங்கலாம். அதனை வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். இதன் மூலம் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் தெய்வீக இருப்பிடம் உங்கள் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.
- கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு சம்மந்தமூர்த்தி தெருவில் சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான நகை மற்றும் நகை அடகு கடை உள்ளது.
நேற்று இரவு வழக்கம் போல சிவசுப்பிரமணியன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அவர் தனது செல்போனில் சி.சி.டி.வி. கேமிரா காட்சி பதிவுகளை பார்வையிட்டுள்ளார்.
அதில் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் எதுவும் காட்டப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த சிவசுப்பி ரமணியன், உடனடியாக கடைக்கு புறப்பட்டு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நேற்று இரவில் அவர் கடையை பூட்டி விட்டு சென்றபின் திட்டமிட்டு காத்திருந்த மர்ம நபர்கள் நகை கடையை உடைத்து கடையில் இருந்த வெள்ளி பாத்திரங்கள், கொலுசுகள், என மொத்தம் 1½ கிலோ வெள்ளி பொருட்களும், 8 பவுன் தங்கம், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.காமிராக்களையும் உடைத்து சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெள்ளி விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப தொழில் இருக்கும்.
- உக்ரைன் போரால் ரஷியாவில் இருந்து வெள்ளி விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு. இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுகள், அரைஞான் கொடி உள்பட வெள்ளி பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சேலம் செவ்வாய்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் உள்ளன. இதனை நம்பி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர்.
வெள்ளி விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப தொழில் இருக்கும். தற்போது போதிய ஆர்டர் கிடைக்காமல் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளி விலை ஒரே நாளில் 1800 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் வெள்ளி ஆபரணம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலத்தில் நேற்று முன்தினம் வெள்ளி கிராம் 79.30 ரூபாய், பார் வெள்ளி கிலோ 79 ஆயிரத்து 300-க்கு விற்பனையானது. நேற்று வெள்ளி கிராமுக்கு 1.80 குறைந்து 77.50 ரூபாய், பார் வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு 1800 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.
சர்வதேச அளவில் பங்கு சந்தையில் ஏற்பட்ட இறக்கம் மற்றும் டாலர் மதிப்பு குறைவு உள்பட காரணங்களால் வெள்ளி விலை குறைந்துள்ளது. விலை குறையும்போது இன்னும் விலை குறையும் என கருதி மக்கள் வெள்ளி வாங்குவதை தவிர்த்து விடுகிறார்கள். இதனால் தொழில் மேலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை சங்க தலைவர் ஆனந்த ராஜன் கூறியதாவது,
ரஷியா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து அதிக அளவில் வெள்ளி கிடைக்கப்பெற்று சர்வதேச மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. ரஷியாவில் இருந்து மட்டும் வெள்ளி வரத்து 40 சதவீதம் இருக்கும். உக்ரைன் போரால் ரஷியாவில் இருந்து வெள்ளி விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது. இது மட்டுமின்றி சர்வதேச நிலவரங்கள் அடிப்படையில் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே வெள்ளி பொருட்கள் ஆர்டர் கிடைக்கவில்லை. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கிடைத்த 25 சதவீத ஆர்டர்களுக்கு மட்டும் பட்டறைகள் இயங்குகின்றன. 75 சதவீதம் வரை ஆர்டர்கள் குறைவால் பட்டறைகள் பாதி நாட்கள் மூடப்படுகின்றன.
இந்த நிலையில் திடீரென பார் வெள்ளி விலை சரிந்துள்ளதால் மேலும் தொழில் வீழ்ச்சி அடையும் நிலை உள்ளதால் வெள்ளி பொருட்கள் விற்பனையாளர்கள், வெள்ளி நகை தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் இவர் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
- வெள்ளி பொருட்கள் செய்து தருவதாக கூறி சிவதாபுரம் அம்மன் கோவில் மொரம்புகாட்டைச் சேர்ந்த ஒருவர் 6 கிலோ எடையுள்ள ரூ.4.5 லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கட்டிகளை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் (47). இவர் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தராஜனிடம் இருந்து வெள்ளி பொருட்கள் செய்து தருவதாக கூறி சிவதாபுரம் அம்மன் கோவில் மொரம்புகாட்டைச் சேர்ந்த ஒருவர் 6 கிலோ எடையுள்ள ரூ.4.5 லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கட்டிகளை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.அதன்பிறகு நீண்ட நாட்கள் ஆகியும் வெள்ளிப் பொருட்களை தயார் செய்து ஆனந்தராஜிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து ஆனந்த ராஜன் கொண்டலாம்பட்டி போலீஸ் புகார் கொடுத்தார்.அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
- வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது.
பல்லடம் :
பல்லடம் -செட்டிபாளை யம் ரோடு, சி.டி.சி டெப்போ அருகில் சங்கரநாராயணன் என்பவரது மனைவி உஷாராணி (வயது 60) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அருகில் இருந்தவர்கள் அவரது வீடு திறந்து கிடப்பதாக அவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அவர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது. ஆனால் வீட்டில் பணம் மற்றும் நகைகள் இல்லாததால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதற்கிடையே அந்த வீட்டின் அருகில் முருகன் என்பவரது மகன் அழகுராஜா ( 38 ) என்பவர் குடியிருந்து வருகிறார். அவரும் நேற்று வெளியில் சென்று இருந்தார்.
இந்த நிலையில் அவரது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அங்கு போலீசார் சென்று பார்த்தபோது அவரது வீட்டில் இருந்த சுமார் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- தினமும் இரவில் பழனிச்சாமி இந்த வீட்டில் தங்குவது வழக்கம். மேலும் இந்த வீட்டில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
- இந்நிலையில், நேற்று இரவு காமநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றதால் கோவிந்தராஜின் வீட்டிற்கு பழனிச்சாமி செல்லவில்லை.
சேலம்:
சேலம் சூரமங்கலம் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 54).
என்ஜினீயர்
இவர் குடும்பத்துடன் பக்ரைன் நாட்டில் தங்கி, என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். ரெட்டிபட்டியில் உள்ள கோவிந்தராஜன் வீட்டை, அவரது மாமனாரான ஜாகீர்காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி பராமரித்து வருகிறார்.
இதையடுத்து தினமும் இரவில் பழனிச்சாமி இந்த வீட்டில் தங்குவது வழக்கம். மேலும் இந்த வீட்டில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது, அதன் பதிவுகளை பழனிச்சாமி தனது வீட்டில் இருந்தபடியே செல்போனில் பார்த்துக் கொள்வார்.
வெள்ளிப்பொருட்கள், நகை திருட்டு
இந்நிலையில், நேற்று இரவு காமநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றதால் கோவிந்தராஜின் வீட்டிற்கு பழனிச்சாமி செல்லவில்லை. இதையடுத்து இன்று அதிகாலை 4 மணி அளவில், பழனிச்சாமி செல்போனில் பார்த்தபோது, கோவிந்தராஜின் வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
அங்கு வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதிலிருந்த இருந்த 4 தங்க காசுகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. வீட்டிலிருந்த சொகுசு காரும் திருடுபோய் இருந்தது
இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ்(வடக்கு) துணை கமிஷனர் மாடசாமி, சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், கந்தவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
கொள்ளை சம்பவம் நடைபெற்ற அந்த வீடு மற்றும் தெருவில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சூப்பர் மார்க்கெட், டெய்லர் கடையில் கொள்ளை
சேலம் வீராணம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல்(48). இவர் மன்னார் பாளையம் அருகே உள்ள வாய்க்கால் பட்டறையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இரவு ரத்தினவேல் சூப்பர் மார்க்கெட்டை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சோப்பு மற்றும் பேஸ்ட், கல்லாவில் இருந்த ரூ.800, ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து ரத்தினவேல் உடனடியாக அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதே போல் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் அழகாபுரம் காட்டூர் மெயின் ரோடு பாறை வட்டம் அருகே உள்ள சிவாயநகர் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது வாடிக்கையாளர்களின் துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. கல்லாவில் ஏதும் பணம் வைக்காததால் திருட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இருப்பினும் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்