என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivagiri"

    • சிவகிரி அருகே உள்ளார் தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி வெள்ளத்தாய்
    • தகவலறிந்த சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி இறந்து போன வெள்ளத்தாய் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ளார் தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி வெள்ளத்தாய் (வயது 45). இவர் ராயகிரி சாலையில் உள்ளார் தளவாய்புரத்திற்கு நடந்து செல்லும் போது வீராச்சாமி மடம் அருகே அடையாளம் தெரியாத அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி இறந்து போன வெள்ளத்தாய் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். சிவகிரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, செண்பகவிநாயகம், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
    • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சிவகிரி தேரடி முனியாண்டி கோவில் அருகே மக்களைத் தேடி மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்திசரவணபாய் தலைமை தாங்கினார். சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு காசநோய் கண்டறிதல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தனர்.


    முகாமில் மக்களைத் தேடி மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு இலவசமாக எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை சுமார் 50 பேருக்கு எடுக்கப்பட்டது.

    இதில் டாக்டர் சதீஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, காசநோய் மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார பார்வையாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜாராம், விஷ்ணு குமார், பகுதி சுகாதார செவிலியர் பஞ்சம்மாள்தேவி, கிராம சுகாதார செவிலியர் கண்ணகி, தங்கேஸ்வரி, செவிலியர் உமாமகேஸ்வரி மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ராஜாராம் செய்திருந்தார்.

    • விஸ்வநாதப்பேரியில் காசநோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கலந்து கொண்ட மக்களுக்கு இலவசமாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலகம், தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மக்களை தேடி மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட துணை இயக்குனர் (காசநோய்) வெள்ளைச்சாமி, வாசு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்திசரவணபாய் ஆகியோர் தலைமை தாங்கினர். விஸ்வநாதப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், ஊராட்சி துணைத் தலைவர் காளீஸ்வரி, சிவகிரி பேரூர் செயலாளர் செண்பகவிநாயகம் ஆகியோர் காசநோய் கண்டறிதல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தனர்.

    முகாமில் மக்களைத் தேடி மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு இலவசமாக எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை சுமார் 60 பேருக்கு எடுக்கப்பட்டது.

    இம்முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, காசநோய் மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார பார்வையாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர் விஷ்ணு குமார், பகுதி சுகாதார செவிலியர் அமுதா, கிராம சுகாதார செவிலியர் முத்துப்பாண்டியம்மாள், செவிலியர் உமாமகேஸ்வரி, விஸ்வை ஊராட்சி மன்ற செயலாளர் உமாமகேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் ‘உலக மாற்றுத்திறனாளிகள் தினம்' கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் தாளாளர் தவமணி, தலைமைஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்தி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் 'உலக மாற்றுத்திறனாளிகள் தினம்' கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

    விழாவிற்கு பி.எஸ்.என்.எல். சாமுவேல் சுந்தர்சிங் தலைமை தாங்கி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் தாளாளர் தவமணி, தலைமைஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக மாணவர்கள் வரவேற்பு நடனம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், உதவி ஆசிரியர் செல்வி மகேஸ்வரி, கவிதா, இயன்முறை மருத்துவர் புனிதா மற்றும் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • தென்காசி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    • வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., ராயகிரி பேரூர் செயலாளர் குருசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் மருதப்பன், யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவர் சரவண குமார், தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், துணைத் தலைவர் மாடசாமி, செயலாளர் பொன் செந்தில்குமார், கவுன்சிலர்கள், பெரி யாண்டவர், பாலமுருகன், தங்க ரத்தினராஜ், நெல் கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி யராஜா, கவுன்சிலர்கள், உள்ளார் தளவாய்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா கணேசன், துணைத் தலைவர் ரமேஷ், செயலாளர் பொறுப்பு சண்முகையா, கவுன்சிலர்கள், வாசுதேவநல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத் தலைவர் லைலா பானு, செயல் அலுவலர் மோகனா மாரியம்மாள் மற்றும் வார்டு உறுப்பி னர்கள், விஸ்வை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிமணிகண்டன், செயலர் உமாமகேஸ்வரி, கவுன்சிலர்கள், சிவகிரி ஆயில் ராஜா பாண்டியன், மருதுபாண்டியன், மாரித்துரை, சி.எஸ்.மணி, வார்டு உறுப்பினர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், விக்னேஷ், முத்துலட்சுமி தங்கராஜ், பாலகுரு, அவைத்தலைவர் துரைராஜ், புல்லட் கணேசன், ராமச்சந்திரன், இளையராஜா, உரக்கடை சக்திவேல், முத்துராஜ், மணிகண்டன், விக்கி, முனியராஜ், மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள், தென்காசி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த திருவேங்கடம், குருவிகுளம், சங்கரன்கோவில் வடக்கு தெற்கு அனைத்து பகுதியி லிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி நீதிமன்றம் அருகே மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் மருதப்பன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் முத்துவேலன், வேலாயுதம், வன்னிராஜா, பேட்ரிக்பாபு, சின்னத்துரை, மாலாதேவி, முருகேசன், குமஸ்தாக்கள் கருப்பையா, ராமராஜ், செல்வகுமார், தங்கப்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே எஸ்.டி.குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் தலைமையில், சேர்மன் எஸ்.டி.முருகேசன் முன்னிலையில் முதல்-அமைச்சருக்கு மலர்க்கொத்து அளித்து வரவேற்பு அளிக்க ப்பட்டது. இதில் ஒருங்கி ணைப்பாளர் அகஸ்டின், ஆசிரி யர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகிரி 11-ம் நம்பர் ரோட்டில் குருசாமி என்பவர் வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை செய்தனர்

    நெல்லை:

    சிவகிரி 11-ம் நம்பர் ரோட்டில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் செயல்படும் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது தலைமையில் தனிப்பிரிவு ஏட்டுக்கள் புகழேந்தி, கருப்பசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை செய்தனர். அப்போது சுமார் 9 பேர் அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.

    உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், கோவிந்தராஜ், மற்றொரு கோவிந்தராஜ், சங்கர், செம்புலிங்கம் மற்றும் சிவகிரியை சேர்ந்த குருசாமி ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.63,320-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சிவகிரி ஊராட்சி ஒன்றிய ஜவஹர் நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
    • சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா முன்னிலை வகித்தார்

    சிவகிரி:

    சிவகிரி ஊராட்சி ஒன்றிய ஜவஹர் நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பா ளரும் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம் தலைமை தாங்கினார். சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா, பேரூராட்சி மன்ற நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகா அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்புரை வழங்கினார்.

    வானவில் மன்றம் ஒருங்கிணைப்பாளர் செல்வி பிரியதர்ஷினி அறிவியல் மற்றும் கணித பரிசோதனை விளக்கங்கள் தந்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர் பரமசிவன், ஆசிரியை ஆரோக்கியமேரி மற்றும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும், குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் கருப்பசாமி வெண்கலம் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

    சிவகிரி:

    மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும், குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் சிலம்பம் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட கம்பு சண்டை, 35 கிலோ பிரிவு போட்டியில் கலந்து கொண்ட சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் கருப்பசாமி வெண்கலம் பதக்கம் பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவனுக்கு பள்ளி செயலாளர், தலைமை ஆசிரியர், ஆசிரிய - ஆசிரியைகள், பெற்றோர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ- மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • சிவகிரி, தேவிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சிவகிரி:

    கடையநல்லூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை 17 -ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    இதனால் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. மேலும் மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    • சந்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
    • போலீசை கண்டவுடன் தப்பி ஓட முயன்ற அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் தலைமையில் போலீசார் சிவகிரி பஸ் நிலையம், மெயின் பஜார், செக்கடி தெரு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 59) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    போலீசை கண்டவுடன் தப்பி ஓட முயன்ற அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 131 லாட்டரி சீட்டுகளை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதேபோன்று சிவகிரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கடற்கரை (70) என்பவர் அனுமதியின்றி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தபோது போலீசார் இவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து 105 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இருவரிடமும் மொத்தம் 236 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • சிவகிரி மற்றும் புளியங்குடி வனச்சரக கிராமங்களின் அனைத்து நஞ்சை- புஞ்சை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது.
    • வருகிற 10 -ந்தேதி சிவகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்திட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி மற்றும் புளியங்குடி வனச்சரக கிராமங்களின் அனைத்து நஞ்சை- புஞ்சை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் சிவகிரி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தில் நடைபெற்றது. ராஜசிங்கப்பேரி கண்மாய் நீர்ப்பாசன சங்க தலைவரும், ராயகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான பிச்சாண்டி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடவடிக்கை குழு (நிர்வாகக் குழு தேர்வு) உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.

    ஒருங்கிணைப்பாளராக விநாயகர், கடித தொடர்பாளராக உலகநாதன், நிதி காப்பாளராக ராயகிரி பிச்சாண்டி, செயற்குழு உறுப்பி னர்களாக பகுதிவாரியாக தேவிபட்டணத்தைச் சேர்ந்த தலைமலை, அந்தோணி, சிவகிரி வெங்கடேஷ், பாலசுப்பிரமணியன், மேட்டுப்பட்டி சரவணக்குமார், அருளாட்சி பாண்டி, ஆத்துவழி சமுத்திர பாண்டியன், வாசுதேவநல்லூர் குருசாமி, மாரியப்பன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் விநாய கர் தலைமையில் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் வனவிலங்குகள் (யானை, பன்றி கூட்டங்கள்) விவசாய மகசூல்களை தொடர்ந்து நாசம் செய்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாயம், விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க வனத்துறை மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி வருகிற 10 -ந்தேதி சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்பாளர் உலகநாதன் நன்றி கூறினார்.

    • கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார்.
    • போலீஸ் சோதனைச்சாவடி இடம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள போலீஸ் சோதனைச்சாவடி பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் ஊருக்கு வடபுறம் பாலம் அருகே இடமாற்றம் செய்யவும், பேரூராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும், சிவகிரி பேரூராட்சி பகுதியில் அங்கீகாரம் பெறாத அனைத்து மண் சாலைகளையும், சாலை பதிவேடுகளில் பதிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி அனைத்து சாலைகளிலும் தார்சாலை, வாருகால் வசதி, மின்வசதி செய்வது மற்றும் பகுதி சபா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மன்றத்தில் உள்ள அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×