என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "SivaPadmanathan"
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள எஸ்.கே.டி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் சண்முகையா தலைமை தாங்கினார். இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞரின் 99-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சி பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு செய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில் மாவட்ட கலை இலக்கிய அணி பேரவை ஆலடி எழில்வாணன்,திமுக ஒன்றிய கவுன்சிலர்களான சீனிதுரை, சிவன்பாண்டியன், செல்லத்துரை, அன்பழகன், அழகு சுந்தரம், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், யூனியன் தலைவர்கள் காவேரி, திவ்யா மணிகண்டன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சங்கை சரவணன்,
தொண்டர் அணி துணை அமைப்பாளர் மேல பட்டமுடையார்புரம் ராமராஜ் மற்றும் தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தி.மு.க. இலக்கிய அணி தொண்டர் அணி என தி.மு.க.வில் உள்ள பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும்.
- திருச்சிற்றம்பலத்தில் உள்ள பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டரை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சந்தித்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோரிக்கை சம்பந்த மான மனுக்களை வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-
இலஞ்சி பேரூராட்சியில் மண்பாண்ட தொழில் மிகப் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்கி வருகிறது.
பானைகள் தயார் செய்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிற குடோன் கடந்த வாரம் காற்றில் சேதம் அடைந்து உள்ளது.
எனவே மீண்டும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, தவணை மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழு வார்டுகளில் சாலை பணிகள் அமைக்கப்பட வேண்டும், குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட வேண்டும், என்ற கோரிக்கையை வைத்துள்ளார். எனவே அதனையும் நிறைவேற்ற வேண்டும்.
தொடர்ந்து தென்காசி ஒன்றிய துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன் திருச்சிற்றம்பலத்தில் செயல்பட்டு வருகிற பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை யையும் வைத்துள்ளார்.
மாவட்ட கழகம் சார்பில் ஏற்கனவே மாவட்ட தலைமை நீதிமன்றம் அமைப்பதற்கும் நீதிபதிகள் தங்குவதற்கான குடியிருப்புகள் கட்டுவதற்கும் 2ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முறையாக பாதை வசதி இல்லை. ஏற்கனவே இருந்த மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்ததன் பேரில் அறநிலை துறை ஆணையர் மற்றும் அறநிலை துறை அமைச்சர், அதன்பிறகு இணை ஆணையர் ஆகியோ ரை சந்தித்து பிள்ளையன் கட்டளைக்கு பாத்தியப்பட்ட இடம் சுமார் 40 சென்ட் நீதிமன்றம் கட்டப்பட இருக்கிற இடத்திற்கு வழி பாதைக்கு தேவைப்படுகிறது.
ஆணையரிடமிருந்து கடிதம் வந்ததன் அடிப்படை யில் மாவட்ட கலெக்டர் தாங்களே பாதைக்கு தேவையான இடங்களை அதற்குரிய கட்டணத்தை அறநிலையத்துறைக்கு செலுத்தி விட்டு நில ஆர்ஜிதம் செய்யலாம் என்று சட்டத்தில் விதி இருக்கிறது. அதன் அடிப்படையில் நீதிமன்ற கட்டிடம் அமையும் இடத்திற்க்கு செல்வதற்கு பாதை அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், மாவட்ட துணை செயலாளர் கென்னடி, சொக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி பாண்டியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தென்காசி ஒன்றிய துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய உதயநிதி நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன், சந்தோஷ், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த திட்டம் சம்பந்தமாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
- வனத்துறை துணை இயக்குனருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
ராமநதி- ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணி சம்பந்தமாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறை துணை இயக்குனர் செண்பகப்பிரியாவை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் நேரில் சந்தித்து திட்டம் குறித்து விவாதித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவ பத்மநாதன் கூறியதாவது:-
கடந்த ஆட்சி காலத்தில் முறையாக வனத்துறையிடம் அனுமதி பெறாமல் திட்டத்தை தொடங்கியதால் ஏற்பட்ட குழப்பங்கள் சம்பந்தமாக கடந்த ஒரு வருட காலமாக நானும்(சிவ பத்மநாதன்), ராமநதி- ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் செயல்பாட்டு குழு தலைவர் உதயசூரியனும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும், அதிகாரி களையும் சந்தித்து வலியுறுத்தி கேட்டுக்கொண்டதன் பேரில் கடந்த டிசம்பர் மாதம் 8-ந் தேதி தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மத்தியஅரசு அனுமதி பெற்ற உடன் திட்டம் நிறைவேறும் என்று அறிவித்தார்.
ஏற்கனவே இந்த திட்டம் சம்பந்தமாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வனத்துறை அமைச்சரையும் சந்தித்து கோரிக்கையை வைத்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அதன் பிறகு தமிழக அரசால் கால்வாய் வெட்டுவதற்கு வனத்துறை அனுமதி வழங்கப்பட்டு மத்திய அரசு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற வனத்துறை அலுவலகத்தில் இருந்து சில கூடுதல் தகவல்கள் கேட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கோப்பு வனத்துறை துணை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
அந்த கோப்பை விரைந்து மத்திய அரசுக்கு அனுப்ப வலியுறுத்தி துணை இயக்குனர் செல்வ பிரியாவை வலியுறுத்தி பேசினோம். இந்த வார இறுதிக்குள் மத்திய அரசிற்கு பரிந்துரைக்கப் பட வேண்டிய கோப்புகளை அனுப்பி விடுவோம் என்று துணை இயக்குனர் கூறினார்.
அதனை தொடர்ந்து மத்திய அரசு வன குழுவில் நடைபெறுகிற வனக் குழு ஆய்வு கூட்டத்தில் இந்த திட்டம் சம்பந்தமாக விவா தித்து அனுமதிக்கப்பட்ட பின்னர் பணி தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
அப்போது நாகல்குளம் கூட்டுறவு வங்கி துணை தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் மாரியப்பன், தொண்டரணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய உதயநிதி நற்பணி மன்ற ஒன்றிய தலைவர் அருணா பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சென்னையில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
- அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசையும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலக அடிக்கல் நாட்டு விழா மற்றும் பொற்கிழி வழங்கும் விழா, முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 100 அடி கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தர வேண்டும் என கூறி இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சென்னையில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசையும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
- நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- ஈட்டி எறிதல் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி மனோ ஸ்ரீக்கு ரொக்கப்பரிசுவழங்கினார்.
ஆலங்குளம்:
தமிழ்நாடு அரசின் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு, மாநில அளவில் முதலிடம் பிடித்த நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, ஆலங்குளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், நெட்டூர் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்துகொண்டு, கலைத் திருவிழாவில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளித்து, வாழ்த்திப் பேசினார். மேலும், ஈட்டி எறிதல் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி மனோ ஸ்ரீக்கு ரொக்கப் பரிசும் வழங்கினார்.
விழாவின் சிறப்பு அம்சமாக, மாநில அளவிலான கலைத் திருவிழாவில் முதலிடம் பெற்ற இளங்குமரன் தலைமையிலான மாணவர்கள் அசோக்குமார், மகராஜா, சமேஷ் ஸ்ரீராம், ஞானபிரகாஷ் ஆகியோரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், தொழிலதிபர்கள் இசக்கிதுரை, மணிகண்டன், தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சேக்முகமது, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுப்பையாபுரம் முத்துலெட்சுமி, அய்யனார்குளம் நீதிராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன், நெட்டூர் ஊராட்சி துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், பேச்சித்துரை, கிளைச் செயலாளர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்தையா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அருணாசலம், மேலாண்மைக் குழு கல்வி ஆர்வலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிகளை முதுகலை ஆசிரியர் ஷேக் அப்துல்காதர் தொகுத்து வழங்கினார். முதுகலை ஆசிரியர் பொன்னுச்செல்வி நன்றி கூறினார்.
- ஆலடிப்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
- சிவபத்மநாதன் வரகுணராமபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி பேசினார்.
சுரண்டை:
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுரண்டை ஆலடிப்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா மற்றும் சுரண்டை வரகுணராமபுரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், தி.மு.க .நகர செயலாளர் ஜெயபாலன், சுரண்டை நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன், நகர் மன்ற உறுப்பினர் சாந்தி தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய அங்கன்வாடி கட்டிடத்தை பழனி நாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதேபோல் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வரகுணராமபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஆறுமுகசாமி,பூல் பாண்டியன், சுப்பிரமணியன், ஜெயராஜ்,ஆலடிப்பட்டி எஸ்.கே.ராமசாமி, சங்கர நயினார், கூட்டுறவு கணேசன், இளைஞர் அணி முல்லை கண்ணன்,டான் கணேசன்,மெடிக்கல் கார்த்திக்,சசிகுமார், ஜேம்ஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகர்,தேவேந்திரன், பால் துரை, நகராட்சி உறுப்பினர்கள் ஜெயராணி வள்ளி முருகன்,அமுதா சந்திரன்,வேல்முத்து, ரமேஷ்,ராஜ் குமார் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறிவாலயம் அமைக்கப்பட உள்ளது.
- பணிகளை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே கே.டி.சி. நகர் பகுதியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறிவாலயம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் 100 அடி உயர திமுக கொடி கம்பம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை ஏற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, ஆறுமுக சாமி,சேக் தாவூது, மாவட்ட துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன்,கென்னடி கனிமொழி,பொருளாளர் ஷெரீப், பொதுக்குழு உறுப்பி னர்கள் ரஹீம்,சாமிதுரை, ரவிச்சந்திரன் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை அனைவரையும் வரவேற்றார்.ஒன்றிய செயலாளர்கள் சிவன் பாண்டியன் அழகுசுந்தரம் ரவிசங்கர் சுந்தர பாண்டியபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் பண்டாரம், செல்வகுமார், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், கீழ போர் ஒன்றிய குழு தலைவர் காவேரி, அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்கு சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
- தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றினார்.
சுரண்டை:
சுரண்டை நகர தி.மு.க. சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டு துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
மாநில விவசாய அணி அப்துல் காதர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுரண்டை நகராட்சி பகுதியில் 5 இடங்களில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.தொடர்ந்து மரக்கன்றுகள் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- சுரண்டை நகராட்சியில் அடிப்படை வசதிகள் வேண்டி தமிழக நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் நேருவிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மனு கொடுத்தார்.
- சுரண்டைக்கு புதிய பஸ் நிலையம், சுரண்டை நகராட்சியின் வளர்ச்சியின் அடிப்படையில் அமைத்திட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சுரண்டை:
சுரண்டை நகராட்சியில் அடிப்படை வசதிகள் வேண்டி தமிழக நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் நேருவிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வியாபார தலம்
சுரண்டை மிகப்பெரிய வியாபார ஸ்தலமாகும். சுற்றுப்புற விவசாயிகள், விவசாய பொருட்களை கொண்டு வந்து போகும் பகுதியாகும். மேலும் மதுரை, நெல்லை போன்ற பெரிய நகரங்களில் இருக்கிற அளவிற்கு சுரண்டையில் மருத்துவ வசதி மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. இதனால் சுரண்டைக்கு வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏற்கனவே பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பஸ் நிலையத்தில் கழிவறை வசதிகள் இல்லாமல் இருந்தது.இதைத்தொடர்ந்து கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 35 லட்ச செலவில் கழிவறை கட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிரமம்
பஸ்கள் வந்து நிற்பதற்கு இடமில்லாமல், பொதுமக்கள் பஸ் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பஸ் நிலையம் அமைந்துள்ள சாலை கடைகள் அதிகமாக உள்ள பகுதி. அதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே இந்தக் காரணங்களை ஆய்வு செய்து சுரண்டைக்கு புதிய பஸ் நிலையம், சுரண்டை நகராட்சியின் வளர்ச்சியின் அடிப்படையில் அமைத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது மாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் காசி தர்மதுரை, முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஹசன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, ஓணம்பீடி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதி ஸ்டீபன் சத்யராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், தொழிலதிபர் சண்முகவேல், மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற துணைச் செயலாளர் சிவ அருணன் பரமசிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக சிவபத்பநாதன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- கடையம் பஸ் நிலையம் பகுதியில் தி.மு.க. சார்பாக பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
கடையம்:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக சிவபத்பநாதன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கடையம் பஸ் நிலையம் பகுதியில் தி.மு.க. சார்பாக பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
செல்லப்பிள்ளையார் குளம் தி.மு.க. நிர்வாகி பழக்கடை நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சங்கர் முன்னிலை வகித்தார். இதில் தெற்கு கடையம் மதன்ஸ், சுரேஷ், ராஜாங்கபுரம் சிங்ககுட்டி, புங்கம்பட்டி ராஜபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை தாங்கி 290 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.
தொடர்ந்து அவர் 290 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லதுரை, நகர செயலாளர் நெல்சன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், தொழிலதிபர் மணிகண்டன், மோகன்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் மேரி வரவேற்றார். மாணவி ஜென்ஸி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செந்தாமரை செல்வி நன்றி கூறினார்.
- கலைஞர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளது.
- பேரணியில் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ளுமாறு சிவபத்மநாதன் அறிக்கையில் கூறியுள்ள்ளார்.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணியும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது.
அதன்படி நாளை மறுநாள் (7-ந் தேதி) காலை 8 மணிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் யூனியன் அலுவலகத்தில் இருந்து பாவூர்சத்திரம் பஸ் நிலையம் வரை கலைஞரின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் உடன் அமைதி பேரணி நடைபெற இருக்கிறது.
இப்பேரணியில் மாநில நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், நகர, பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பொறுப்புகளில் இருக்கிற கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு கலைஞரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்