என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "skin disease"
- கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கழலை நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- பண்ணைகளை சுற்றி நீர் தேங்காமல் பராமரிக்கவும், கழிவுகளை அவ்வப்போது அப்புறப்படுத்தவும், கிருமி நாசினி நடைபாதையை பராமரிக்க வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் வடக்கு மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத் ஆகியவற்றில் தோல் கழலை நோய் பரவி அங்குள்ள கால்நடைகளை தாக்கி அதிகளவு இறப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நமது மாநிலத்தில் வடக்கு மாவட்டங்களில் இந்த நோய் கால்நடைகளை தாக்கியுள்ளது. இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோய் ஆகும்.
உண்ணிகள் மற்றும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரப்பப்படுகிறது. நோய் தாக்கப்பட்ட கால்நடை களுக்கு காய்ச்சல், தீவனம் உண்ணாமை, தோல்களில் தடிப்பு ஆகிய அறிகுறிகள் தென்படும். இந்த நோயானது சிறு கன்றுகள் முதல் கறவைமாடுகள் வரை அனைத்தையும் தாக்கக் கூடியது.
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்தவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். அனைத்து கால்நடை மருத்துவ நிலை யங்களிலும் போதிய அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப் புத்துறையினர் குழுக்கள் அமைத்து இந்த நோயின் நிலைமை குறித்தும், நோய் கிளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு லட்சம் தோல் கழலை நோய் தடுப்பூசி மருந்தை வழங்கியுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையினர் ஊராட்சி மன்ற தலைவருடன் இணைந்து முன் அறிவித்து விளம்பரம் செய்து குழுக்கள் மூலமாக இந்த நோய்க்கான தடுப்பூசி பணியை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கள் கிராமங்களுக்கு தடுப்பூசிப்பணி குழுவினர் வருகை தரும்போது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும், பிறருக்கு அறிவுறுத்தவும் விவசாயிகள் கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.
அரசு வழங்கும் இலவச தடுப்பூசியினை போட்டுக்கொண்டால் இந்த நோய் வராமல் தடுக்கலாம். தடுப்பூசி செலுத்திய பின்னர் 21 நாட்கள் கழிந்த பிறகே கால்நடைகளின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். அதற்குள் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது அவசியம் ஆகும்.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. நோய் தடுப்பூசி பணி தொடர்ந்து மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்போர் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தங்கள் பண்ணைகளை சுற்றி நீர் தேங்காமல் பராமரிக்கவும், கழிவுகளை அவ்வப்போது அப்புறப்படுத்தவும், கிருமி நாசினி நடைபாதையை பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
- மேலும் தோல் சம்பந்தமான நோய் பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அதனை த்தொடர்ந்து புத்தாண்டு பிறப்பு என கடந்த ஒரு வாரமாக களைகட்டியது. வெப்பநிலை 5டிகிரி செல்சியசாக பதிவானதால் கடும் உறைபனி ஏற்பட்டது.
மேலும் புத்தாண்டு கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் விடுமுறை முடிந்து நேற்று ஊர் திரும்பினர். பொது மக்களும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். கடும் குளிரை சமாளிக்க முடியாமல் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் சிர மமடைந்து வருகின்றனர். சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படு கிறது. கடும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க ப்பட்டுள்ளது.
உறைபனியை தாங்கமுடியாமல் பகலிலேயே தீமூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். மேலும் தோல் சம்பந்தமான நோய் பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது.
இதனால் ஆஸ்பத்திரி களுக்கு பொதுமக்கள் படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதத்தில் குளிர் காலமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அதிக அளவு பனிப்பொழிவு ஏற்பட்டு ள்ளதால் அனைத்து தரப்பினரும் அவதி அடைந்துள்ளனர்.
- உடலில் தோல் அடிக்கடி உரியும் வியாதி உள்ளது.
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கியும் பலனில்லை.
திருப்பூர் :
திருப்பூர் கருவம்பாளையத்தில் வசிப்பவர்கள் பிரேம்குமார் - ஜெயசித்ரா தம்பதி. இவர்களுக்கு பொன் குமரன் என்ற 8 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர். பொன் குமரனுக்கு பிறந்தது முதலே உடலில் தோல் அடிக்கடி உரியும் வியாதி உள்ளது.நேற்று முன்தினம் திருமுருகன்பூண்டியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு வழங்க அவர் செல்லும் வழியில் பிரேம்குமார் நின்றிருந்தார். முதல்-அமைச்சரின் பாதுகாவலர்கள் மனுவை வாங்கி, முதல்-அமைச்சரிடம் வழங்கினர்.
மனுவில், என் மகனுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளது.அரசு மற்றும் பல்வேறு அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கியும் பலனில்லை. அவனை நாள் முழுக்க கவனிக்க வேண்டியுள்ளதால், எங்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையுள்ளது. மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்து வரும் எங்களின் நிலை உணர்ந்து, எங்கள் பிள்ளைக்கு சரியான மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என கூறியிருந்தார்.
- பொன்குமரன் பிறக்கும்போதே தோல் நோய் பாதிப்புடன் பிறந்துள்ளான்.
- தமிழக அரசு உரிய உதவிகளை செய்து தர வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவர் அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டி ஆகும்.
இவர் தனது உறவுக்கார பெண்ணான ஜெயசித்ராவை திருமணம் செய்துகொண்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா தேவி (11) என்ற மகளும், பொன்குமரன் (8) என்ற மகனும் உள்ளனர்.
இதில் பொன்குமரன் பிறக்கும்போதே தோல் நோய் பாதிப்புடன் பிறந்துள்ளான்.தலை முதல் கால் வரை தோலானது தினமும் உதிர்ந்து கொண்டே இருக்கும். மேலும் இந்த நோய் காரணமாக உடல்சத்து குறைபாடு உள்ளதால் 8 வயதிலும் மூன்று வயது சிறுவன் போன்ற உடல் வளர்ச்சிதான் உள்ளது.
மேலும் தனியாக நடமாட முடியாமலும் உள்ளான். பொன்குமரனின் பெற்றோர்கள் பிறந்ததிலிருந்து, அவனது தோல் நோய் சரியாக வேண்டி தமிழகத்திலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டனர். மருத்துவர்களுக்கும் பொன்குமரனின் பாதிப்பு குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.
ஆயுர்வேதம், சித்தா என அனைத்து மருத்துவ முறைகளையும் முயன்று பார்த்தவர்கள், பொன்குமரன் குணமடைய கோயில்களுக்கும் சென்று வந்துள்ளனர். இருப்பினும் தோல்நோய் குணமாகவில்லை.
இதுகுறித்து பொன்குமரனின் தந்தை கூறுகையில், பொன்குமரன் பிறந்த போதே தோல் நோய் பாதிப்புள்ளதாகவும், தோலானது தொடர்ந்து உதிர்ந்து கொண்டே இருக்கும் காரணத்தால், தன் மனைவி உடனிருந்து கவனிக்க வேண்டிய காரணத்தால்,தான் மட்டும் வேலைக்கு செல்வதால் குடும்பத்தில் மிகவும் வறுமையான சூழல் உள்ளதாகவும், மருத்துவத்திற்கே பெரும்பகுதி செலவாகிவிடுவதாகவும், வட்டிக்கு கடன் வாங்கி மருத்து செலவுகள் செய்துள்ளதாகவும். தெரிவித்தார்.
மேலும் கோடை காலம் வந்து விட்டால் தோல் வறண்டு உதிர்வதால் அவனது உடல் முழுவதும் எரிச்சலாக இருப்பதால் இரவு முழுவதும் விழித்திருந்து உடலை தடவியும், எண்ணெய் தேய்த்தும் பார்த்து கொள்வோம் . நன்றாக படிக்கும் திறன் இருந்தும்,பள்ளி சென்றால் உடல் உபாதைகளுக்கு தனியாக செல்ல முடியாத காரணத்தால் வீட்டிலேயே வைத்து பார்த்து வருவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மேலும் அவர்,தனது மனைவி கர்ப்ப காலத்தில் பாம்பின் ஆன்மாவால் ஏற்பட்ட பாதிப்பில்தான் பொன்குமரனுக்கு இவ்வாறு நேர்ந்துள்ளதாகவும், இதனால் பல கோயில்களுக்கு சென்று வந்தும், அனைத்து வைத்திய முறைகளையும் லட்சகணக்கான செலவில் பார்த்தும் குணமடையவில்லை என வருத்தம் தெரிவித்த அவர், பொன்குமரனுக்கு சிறந்த மருத்துவமளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தங்களது மகன் என்னவென்று அறிந்து கொள்ள முடியாத தோல்நோயினால் பாதிக்கப்பட்டு,அவன் படும் ரண வேதனையை பார்க்க முடியாமல் ஏழை பெற்றோர் தமிழக அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் தங்கள் மகனுக்கு படிப்பு கிடைக்க வேண்டும் என அந்த ஏழை பெற்றோரின் ஆசையை இதற்கு முன்பு ஆட்சியராக இருந்த விஜய கார்த்திகேயன் நிறைவேற்றி தந்துள்ளார்.அருகில் உள்ள கருவம்பாளை யம் பள்ளியில் இருந்து பாட புத்தகங்களும் கொடுக்கப்படுகிறது.தங்கள் மகனின் நோய் சரியாகி மற்ற பிள்ளைகள் போல் பள்ளி செல்ல வேண்டும் என ஆசையில் உள்ள இவர்களுக்கு தமிழக அரசு உரிய உதவிகளை செய்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்