என் மலர்
நீங்கள் தேடியது "Skull"
- முதல் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
- சாமானிய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மருத்துவ உதவியாகும்.
சென்னை:
மண்டையை உடைத்து விடுவேன் என்று சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால் ஒரு மனிதனின் மண்டை ஓடு என்பது பாதுகாப்பு பெட்டகம் போன்றது. மூளை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை மண்டை ஓடுதான் பாதுகாக்கிறது.
இந்த மண்டை ஓடு உடைந்தால் ஆபத்து. விபத்து, தலையில் அடிபடுதல் போன்றவற்றால் சில நேரங்களில் மண்டை ஓடு உடைவதுண்டு. அவ்வாறு மண்டை ஓடு உடைந்து தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடும்.
இந்த மாதிரி மண்டை ஓட்டு சிகிச்சைக்கு ஆபரேசன் செய்து 'பீக்' எனப்படும் பிளாஸ்டிக்கை அதிக வெப்ப நிலையில் உருக்கி தயாரிக்கப்படும் ஒரு விதமான மெட்டீரியலை பொருத்தி வந்தனர். இது இலகுவாக இருப்பதால் அந்த இடத்தில் தெரியாமல் ஏதாவது அடிபட்டால் உள்ளே அமுங்கிவிடும்.
இந்நிலையில் அதற்கு பதிலாக 'டைட்டானியம்' உலோகத்தால் புதிய மெட்டீரியல் தயாரித்து பயன்படுத்தப்படுகிறது. இதை பொருத்த சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. அதிலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது.
இந்நிலையில் முதல் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கொளத்தூரை சேர்த்த செல்வமணி, பாடியை சேர்ந்த ரவி, கோயம்பேட்டை சேர்ந்த கிஷோர் ஆகியோர் தனித்தனி விபத்துகளில் சிக்கி மண்டை உடைந்தவர்கள். இவர்களுக்கு டைட்டானியம் உலோகத்திலான மண்டை ஓடு பொருத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி மருத்துவமனை டீன் நாராயணசாமி கூறியதாவது:-
இந்த நவீன சிகிச்சை முறை செலவு அதிகம். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரது சீரிய முயற்சியால் இந்த சிகிச்சை அரசு ஆஸ்பத்திரியிலும் சாத்தியமாகி உள்ளது.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சையும் செய்யப்படுகிறது. இந்த மண்டை ஓடு மாற்று அறுவை சிகிச்சையை அளித்த டாக்டர்கள் கோடீஸ்வரன், சந்திரசேகர் ஆகியோர், இது சாமானிய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மருத்துவ உதவியாகும்' என்றனர்.
- கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார்.
பல்லடம் :
பல்லடத்தைச் சேர்ந்தவர் குமார்( 60) பனியன் தொழிலாளி. இவரது மனைவி வசந்தா(55) இவர்களது மகளும், பல்லடம் காரணம்பேட்டையை சேர்ந்த பால்ராஜ் மகன் அருணாச்சலம் (48) என்பவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் சமீபகாலமாக அருணாச்சலத்துக்கு அதிகமான குடி பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவத்தன்று மது போதையில் இருந்த அருணாச்சலம் வசந்தாவின் வீட்டுக்கு சென்று, தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வற்புறுத்தி, தகராறில் ஈடுபட்டதுடன், வசந்தாவின் தலையில் மதுபான பாட்டிலால் தாக்கி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த வசந்தா, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அருணாச்ச லத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
- வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் பெருமாள் சாமி( வயது 48), வியாபாரி. இந்த நிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது. இது குறித்து மின்வாரியத்தில் தகவல் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,கடந்த 11 ந் தேதியன்று வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற போது மின் கம்பத்தின் காரை திடீரென பெயர்ந்து பெருமாள் சாமி தலை மீது விழுந்தது. இதனால் அவரது மண்டை உடைந்தது. அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெருமாள் சாமி குடும்பத்தினர் கூறியதாவது:- வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்தது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்கம்பத்தின் காரைகள் பெயர்ந்து விழுந்ததில், அவருக்கு மண்டை உடைந்து 7 தையல்கள் போட்டு, ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவானது. இதனால் வீண் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
- சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார்.
- ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் (40). இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார்.
தகராறு
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஓசியில் மது கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அரிதாஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.
வழக்கு
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன.
- எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்தினர்.
ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள ஒரு குகையில் கடந்த 2018-ம் ஆண்டு பழமையான உடைந்த மண்டை ஓட்டை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த மண்டை ஓடு 75 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் என்றும் தெரிவித்தனர். அந்தப் பெண்ணுக்கு ஷானிதர் இசட் (மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட குகையின் பெயர்) என்று பெயரிடப்பட்டது.
இந்த நிலையில் நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் உயிருடன் இருந்தபோது எப்படி இருந்திருப்பார் என்பதை விஞ்ஞானிகள் உருவகப்படுத்தி உள்ளனர். மண்டை ஓட்டின் தட்டையான, உடைந்த எச்சங்களை அடிப்படையாக வைத்து அப்பெண்ணின் முகம் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன.
அந்த எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்தினர். பின்னர் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் பேலியோ-ஆர்ட் நிபுணர்கள்நியாண்டர்தால் பெண்ணின் 3டி மாதிரியை உருவாக்கினர்.
- நாகா இனத்தைச் சேர்ந்த 19 ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் இன்று ஏலம் விடப்பட உள்ளது.
- ஏலத்தில் வரும் இந்த மண்டை ஓடானது 3500 முதல் 4000 பவுண்டுகள் வரை மதிப்புடையது
நாகா இனத்தைச் சேர்ந்த 19 ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் இன்று ஏலம் விடப்பட உள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ [Neiphiu Rio] மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இறந்தவரின் உடல் மீதிகள் நாகா இனத்தவருக்கே சொந்தம் என்றும் இது தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவரின் மண்டை ஓட்டை ஏலம் விடும் இந்த மனிதத்தன்மை அற்ற செயல் மன ரீதியாக நாகா இனத்தவரின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாக உள்ளது என்று நாகாலாந்து முதல்வர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின்போது நாகா இனத்தவர் சந்தித்த கொடுமைகளை இந்த ஏலம் பிரதி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இன்று ஏலத்தில் வரும் இந்த மண்டை ஓடானது பிரிட்டன் நாணயம் மதிப்பில் 3500 முதல் 4000 பவுண்டுகள் [சுமார் 4 லட்சம் ரூபாய்] வரை மதிப்புடையது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலம் தொடர்பாக நாகா மக்கள் நல்லிணக்க அமைப்பான [FNR] தெரியப்படுத்தியதை அடுத்து நாகாலாந்து முதல்வர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மாநில கட்சியான NDPP ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- எருவேலி அரண்மனை சதுக்கத்திற்கு அருகில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் ஆளில்லாத வீடு அமைந்துள்ளது.
- முதுகெலும்பு உள்ளிட்ட எலும்புகள் அப்படியே காணப்பட்டன.
கேரளாவில் 20 ஆண்டுகளாக பூட்டியிருந்த வீட்டில் குளிர்சாதனப் பெட்டிக்குள் கவரில் சுற்றப்பட்ட நிலையில் மண்டை ஓடு உள்ளிட்ட மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொச்சியின் சோட்டானிக்கரையில் எருவேலி அரண்மனை சதுக்கத்திற்கு அருகில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் ஆளில்லாத வீடு அமைந்துள்ளது. கொச்சியில் வசிக்கும் மருத்துவரான மங்களசேரி பிலிப் ஜானுக்குச் சொந்தமான சொத்து இது.

பூட்டிய வீட்டில் சமூக விரோதிகளால் இடையூறு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் அளித்ததையடுத்து, பஞ்சாயத்து உறுப்பினர் கோரிக்கையின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, குளிர்சாதன பெட்டியில் எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எச்சங்களின் வயது இன்னும் காவல்துறையால் தீர்மானிக்கப்படவில்லை.
முதுகெலும்பு உள்ளிட்ட எலும்புகள் அப்படியே காணப்பட்டன. அந்த மண்டை ஓடு மனிதனுடையது என்பது பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மண்டை ஓடு பல ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது.

சம்பவ இடத்தில் சோட்டாணிக்கரை எஸ்.எச்.ஓ., தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மண்டை ஓட்டை கொண்டு வந்து வீட்டுக்குள் குளிர்சாதன பெட்டியில் வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வளாகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்த உள்ளனர். மேலும் வீட்டின் உரிமையாளரான மருத்துவரையும் போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.