search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100192"

    • மாணவிகளுக்கு 19 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.
    • விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் 23-ந்தேதியாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதற்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் 24.05.2023 அன்று காலை 8.00 மணிக்கு திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

    மாணவர்களுக்கான தேர்வுப்போட்டிகள் கீழ்க ண்ட விளையாட்டுக்களில் நடைபெறும் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 20 வகையான போட்டிகளும், மாணவியர்களுக்கு 19 வகையான போட்டிகளும் நடைபெற உள்ளது.

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி களில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை 16.05.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

    ஆன்லைன் விண்ணப்ப த்தினை பூர்த்தி செய்திடு வதற்கான கடைசி நாள் 23.04.2023 மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    ஆன்லைன் விண்ணப்ப ங்கள் மட்டுமே ஏற்றுக்கொ ள்ளப்படும்.

    மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணிலும்,

    மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-290620-லும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 15,819 பேர் எழுதுகிறார்கள். தேர்வு எழுதுவதற்கு வசதியாக 25 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    தூத்துக்குடி:

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2019-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தாள்-1 வருகிற 8-ந் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தாள்-2 வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரையும் நடக்கிறது. 

    தூத்துக்குடி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுக்கு 5 ஆயிரத்து 446 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 13 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுக்கு 10 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

    இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 25 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    பீகார் அரசு இணையதளத்தில் பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் ‘சன்னிலியோன்’ பெயர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #SunnyLeone #JuniorEngineer #MeritList
    பாட்னா:

    பீகார் மாநில அரசின் பொது சுகாதார பொறியாளர் துறையில் காலியாக உள்ள 200 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை அந்த துறை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. இதில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பெயரை பார்த்ததும் விண்ணப்பித்த மற்ற அனைவரும் திகைத்தனர். அது சன்னிலியோன் என்றும் அவரது தந்தை பெயர் லியோனா லியோன் என்றும் இருந்தது.

    பிரபல இந்தி நடிகை சன்னிலியோன். அவர் கனடாவில் பிறந்து அங்கு ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தி படத்தில் அறிமுகமாகி நடித்துவருகிறார். சிலர் இதுபற்றி துறை மந்திரி வினோத் நாராயண் ஜா கவனத்துக்கு கொண்டுசென்றனர். அவர், இது இறுதி பட்டியல் அல்ல, அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்றார்.

    துறை செயலாளர் கூறும்போது, “சன்னிலியோன் யார் என்றே எனக்கு தெரியாது. அதை யாராவது குறும்புத்தனமாக வெளியிட்டிருக்கலாம். விரைவில் இதை சரிசெய்வோம்” என்றார். அதேபோல அந்த பட்டியலில் 2-வது இடம் பிடித்த சக்கரவர்த்தி என்பவரின் தந்தை பெயர் ஓம்புரி என்று இருந்ததும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #SunnyLeone #JuniorEngineer #MeritList
    மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று பெண்கள் உள்பட ஏராளமான பட்டதாரிகள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆர்வமாக விண்ணப்பித்துள்ளனர். #JactoGeo #Temporaryteacher
    மதுரை:

    பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி இறுதி தேர்வு நடைபெற உள்ளதால் மாணவ-மாணவிகளின் கல்விக்கு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    அதன்படி மாநிலம் முழுவதும் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று பெண்கள் உள்பட ஏராளமான பட்டதாரிகள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆர்வமாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர். இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

    தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். #JactoGeo #Temporaryteacher

    வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். 

    கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி அன்று ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்குரிய விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் முற்பகலில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்று கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந் தேதிக்குள் அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடனும், நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விண்ணப்பித்துள்ளார். #MayilsamyAnnadurai #MaduraiKamarajUniversity
    சென்னை:

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் செல்லதுரை நியமிக்கப்பட்டார். அவர் நியமனத்தில் தவறு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரை நீக்கம் செய்து கடந்த ஜூன் மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன்பிறகு யாரும் துணைவேந்தராக நியமிக்கப்படவில்லை. அங்கு துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

    இதற்கான தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை விண்ணப்பம் அனுப்ப கடைசி நாளாகும். இதைத்தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களின் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 196 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    பிரபல விஞ்ஞானிகள், கல்வித்துறை வல்லுநர்கள் என பலரும் விண்ணப்பித்திருக்கிறார்கள். பிரபல இஸ்ரோ விஞ்ஞானியும் மங்கள்யான், சந்திராயன் விண்வெளி திட்டத்திற்கு இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரையும் இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

    மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

    இவர் தவிர நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பேராசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தியா வம்சாவழியை சேர்ந்த மலேசியா பேராசிரியர், திருவனந்தபுரம், ஐதராபாத், ஆந்திரா, புதுவை, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பலரும் விண்ணப்பித்திருக்கிறார்கள்.



    இவர்களை தேர்வு செய்வதற்காக தனியாக தேர்வு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன், இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நாகேஸ்வரராவ், காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.கே. ஓஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் 3 மாதத்திற்குள் விண்ணப்பதாரர்களை ஆய்வு செய்து இறுதி அறிக்கையை கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைப்பார்கள். அதன் பிறகு கவர்னர் துணைவேந்தரை தேர்வு செய்து முறைப்படி அறிவிப்பார்.  #MayilsamyAnnadurai #MaduraiKamarajUniversity


    இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #NEETExam
    கோபி:

    கோபியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு 723 மாணவ-மாணவிகளுக்கு ரூ.26¾ லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி பேசினார்.

    முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பள்ளி கல்வி துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    மேலும் பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவும் அதன் மூலம் மாணவ-மாணவிகளின் எதிர்காலம் பிரகாசமாக அமையவும் இந்த அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும்போதே அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிகணினி மற்றும் சைக்கிள்கள் வழங்கப்படும். மத்திய அரசுடன் இணைந்து ஜனவரி மாத இறுதிக்குள் 671 பள்ளிகளில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.



    இந்த ஆண்டில் நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு தேர்வு மையங்கள் மண்டல வாரியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் ஒரு வார காலத்துக்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முறைப்படி நிரப்பப்பட்டு உள்ளது. சிறப்பாசிரியர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

    அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #NEETExam
    தமிழகத்தில் நடத்தப்பட்ட 4 சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்காக 16 லட்சத்து 21 ஆயிரத்து 838 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். #VoterList
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கு 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் விண்ணப்பம் செய்தவர்கள் பற்றிய விவரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 1-ந்தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து வருகிற 31-ந்தேதி தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த மாதம் 9-ந்தேதி மற்றும் 23-ந்தேதி, கடந்த 7-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 4 நாட்களில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்டன. இது தவிர ஆன்லைன் மூலமும் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு முகாம்கள் மூலம் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அதன்படி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க (விண்ணப்பம்-6) 11 லட்சத்து 91 ஆயிரத்து 875 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 80 ஆயிரத்து 231 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 675 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.



    பெயர் நீக்கம் செய்ய (விண்ணப்பம்-7) 1 லட்சத்து 36 ஆயிரத்து 199 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள (விண்ணப்பம்-8) 1 லட்சத்து 80 ஆயிரத்து 708 பேரும், முகவரி மாற்றம் செய்ய (விண்ணப்பம்-8ஏ) 1 லட்சத்து 12 ஆயிரத்து 916 பேரும், வெளிநாடுகளில் வசிப்பவர்களில் 140 பேர் ஆன்-லைன் மூலமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர்.

    இவ்வாறு மொத்தம் 16 லட்சத்து 21 ஆயிரத்து 838 பேர் நேற்று (நேற்று முன்தினம்) வரை விண்ணப்பித்துள்ளனர்.

    தொடர்ந்து ஆன்-லைன் மற்றும் அலுவலகங்களுக்கு நேரில் சென்று வருகிற 31-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் உள்ளது. இதனை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 4-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #VoterList

    பத்ம விருதுகளுக்காக இந்த ஆண்டு 49 ஆயிரத்து 992 பேர் விண்ணப்பித்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகமாகும். #PadmaAwards
    புதுடெல்லி:

    பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கும், சமூக சேவை செய்பவர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    பத்மஸ்ரீ, பத்மபூ‌ஷன், பத்மவிபூ‌ஷன் ஆகிய பத்ம விருதுகளை பெறுவது கவுரவமிக்கதாக கருதப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருது பெறுபவர்களை மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்கிறது. இதற்காக பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்ற நடைமுறை உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு 1313 பேர் பத்ம விருதுக்காக விண் ணப்பித்திருந்தனர்.

    2016-ம் ஆண்டு பத்ம விருது பெற விரும்பி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 768 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு அது 35 ஆயிரத்து 595 பேராக அதிகரித்தது.

    2019-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. கடந்த மே 1-ந்தேதி விண்ணப்பம் பெறுவது தொடங்கியது. விண்ணப்பிக்க செப்டம்பர் 15-ந்தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று வரை விண்ணப்பித்தவர்கள் பற்றிய கணக்கீடு நடத்தப்பட்டது.

    அதன்படி இந்த ஆண்டு 49 ஆயிரத்து 992 பேர் பத்ம விருதுகளுக்காக விண்ணப்பித்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகமாகும்.



    பத்ம விருதுகளுக்கு சாதனையாளர்களை பரிந்துரைக்கும் நடைமுறையும் அமலில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஆன்-லைன் மூலமாகவும் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்ற வசதி கொண்டு வரப்பட்டது. அதன் பிறகே பத்ம விருதுக்காக விண்ணப்பிக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    தற்போது விண்ணப்பித்துள்ள 49,992 பேரின் மனுக்கள் ஆய்வு செய்யப்படும். அதில் தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு 2019-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் விவரம் வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும். #PadmaAwards

    ‘இதுவரை நடந்த 3 சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம் செய்ய என தமிழகம் முழுவதும் 11¼ லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்’ என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். #VoterList
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கு 3 சிறப்பு முகாம்கள் இதுவரை நடந்து உள்ளன.

    இந்த முகாம்களில் விண்ணப்பம் செய்தவர்கள் பற்றிய விவரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 1-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து வரும் 31-ந் தேதி தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த மாதம் 9-ந் தேதி மற்றும் 23-ந் தேதி, கடந்த 7-ந் தேதி ஆகிய நாட்களில் 3 சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்டன.

    4-வது இறுதி சிறப்பு முகாம் வரும் 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட உள்ளது. இது தவிர ஆன்லைன் மூலமும் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 3 சிறப்பு முகாம்கள் மூலம் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அதன்படி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க (விண்ணப்பம்-6) 8 லட்சத்து 62 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 57 ஆயிரத்து 972 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 400 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

    பெயர் நீக்கம் செய்ய (விண்ணப்பம்-7) 77 ஆயிரத்து 879 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள (விண்ணப்பம்-8) 1 லட்சத்து 7 ஆயிரத்து 4 ஆயிரத்து 418 பேரும், முகவரி மாற்றம் செய்ய (விண்ணப்பம்-8) 77 ஆயிரத்து 40 பேர் என மொத்தம் 11 லட்சத்து 24 ஆயிரத்து 710 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர்.

    வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை.

    தொடர்ந்து வரும் 31-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் உள்ளது. மீண்டும் வரும் 14-ந் தேதி அன்று இறுதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.



    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் தற்போது நடத்த வேண்டாம் என்று தலைமைச்செயலாளர், தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதி உள்ளார். இதனை தொடர்ந்து இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. மழை மற்றும் வழக்கு விவரங்கள் மாநில அரசுக்கு தான் தெரியும். இருந்தாலும் மாநில அரசு கூறியப்படி இந்த தொகுதிகளில் அதற்கான நிலவரம் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #VoterList
    ஜெருசலேத்திற்கு புனித புனித பயணம் செல்பவர்கள் அரசின் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    விழுப்புரம்:

    ஜெருசலேத்திற்கு புனித புனித பயணம் செல்பவர்கள் அரசின் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்’ என்று குறிப்பிட்டு வருகிற 10-ந் தேதிக்குள் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807 அண்ணா சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் முத்திரைக் கொல்லர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
    சென்னை:

    சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய முத்திரை ஆய்வாளர் அலுவலகங்களில் காலியாக உள்ள 16 முத்திரைக் கொல்லர் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

    தகுதி வாய்ந்த சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் முத்திரைக் கொல்லர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை அடுத்த (செப்டம் பர்) 26-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

    உரிய சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பத்துடன் கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய கட்டிடம், 6-ம் தளம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பலாம், அல்லது நேரில் வந்து கொடுக்கலாம்.
    ×