என் மலர்
நீங்கள் தேடியது "slug 101311"
ராயபுரம்:
கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகர் பகுதியில் ஆர்.கே.நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் 4 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். இதில் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பரத், விக்னேஷ், பாலாஜி என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. பொன்னேரியில் உள்ள மது பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை தீர்த்துக் கட்ட அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சென்னை:
நீலாங்கரை-கானாத்தூர் பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறி வைத்து ஒரு கும்பல் கடந்த சில நாட்களாக கை வரிசை காட்டியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க தென்சென்னை இணை ஆணையர் மகேஸ்வரி, அடையாறு துணை கமிஷனர் சசாங்சாய் ஆகியோர் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் விஸ்வேஸ்வ ரய்யா தலைமையில் இன்ஸ் பெக்டர்கள் சுந்தரம், ஆனந்தன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஈச்சாங்பாக்கம், வெட்டுவாங்கேணி, உத் தண்டி, கானாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காரில் வந்து டிப்-டாப் இளைஞர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்தது.
கேமராவில் பதிவான உருவங்களை வைத்தும், கார் நம்பரை வைத்தும் துப்பு துலக்கப்பட்டது. இதில் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களும், ராயபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் ஞானசேகர், சுரேஷ்குமார், சுரேஷ், பஷீர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 91 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளையர்களுக்கு வேறு ஏதேனும் வழக்கில் தொடர்புள்ளதா? என்பது பற்றி விசாரணை நடைபெறுகிறது.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூரில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு திருப்பூர் - மங்கலம் சாலையில் பாரப்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரி கோவிந்த பிரபாகர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 3 லட்சம் பணம் இருந்தது. இது தொடர்பாக காரில் வந்த திருப்பூர் சிவசக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த இளமணிமாறனிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் தனது கம்பெனியில் வசூலான பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் கூறி சென்றனர். திருப்பூரில் இதுவரை ரூ. 10 லட்சம் வரை அதிகாரிகள் சோதனையில் சிக்கி உள்ளது. #Parliamentelection #LSPolls
சென்னை:
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் கோட்டூர்புரம் பகுதிக்கு சென்றார். அங்கு மது குடித்துவிட்டு ரோட்டில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதுபற்றி அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றனர். அவர்களிடம் விஷ்ணு தகராறில் ஈடுபட்டார். திடீரென்று அவர் ஒரு போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே உள்ள கொளத்தாஞ்சேரியில் செங்கல் சூளை வைத்திருப்பவர் சதீஷ்.
இந்த செங்கல் சூளையில் 11 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. முத்துவடிவேலன் உத்தரவுப்படி தாசில்தார் பாக்ய லட்சுமி அந்த செங்கல் சூளைக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 11 பேர் அந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரிய வந்தது. இதில் 5 பேர் குழந்தைகள், அவர்கள் பள்ளிக் கூடம் போகாமல் இருந்தனர்.
இதையடுத்து, கொத்தடிமைகளாக இருந்த 11 பேரும் மீட்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அரிசி, துணி, பண உதவி ஆகியவை வழங்கப்பட்டது.
அனைவரும் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 5 சிறுவர்களையும் பள்ளியில் சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். செங்கல் சூளை உரிமையாளர் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வேலூரை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ராஜேஷ், கடந்த மாதம் 25-ந்தேதி, மறைமலை நகர் ரெயில் நிலையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ், அதற்கான காரணம் என்ன? என்பதை விவரித்து பேசி இருந்தார்.
அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த வீடியோவில் சென்னை போலீசே எனது சாவுக்கு காரணம் என்று கூறி இருந்தார்.
சென்னை திருமங்கலம் பகுதியில் சாலையோரமாக காரை நிறுத்தி இருந்த போது, போலீசார் வந்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு சென்னை இணை கமிஷனர் விஜயகுமாரிக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இதன்படி இணை கமிஷனர் விஜயகுமார் தீவிரமாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணை அறிக்கை இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் போலீசார், கால்டாக்சி டிரைவர் ராஜேசிடம், நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தக்கூடாது என்று மட்டுமே அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடியோவில் டிரைவர் ராஜேஷ் குறிப்பிட்டதை போல தகாத வார்த்தைகளால் பேசி அவரை துன்புறுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #tamilnews
கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி அன்று போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் பிரிவுகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்களது பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்து இருந்தார்.
அந்த சுற்றறிக்கையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சமீபத்தில் சட்டசபை கூட்டம் நடந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் செல்போனை பயன்படுத்தினார்கள்.
செல்போனை பயன்படுத்திய 6 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர், மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

செல்போனை பணி நேரங்களில் பயன்படுத்தும் போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து விளக்கம் கேட்டிருந்தார்.
இந்தநிலையில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் பிரிவுகளுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்தார்.
அந்த சுற்றறிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போனை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது என்றும், அதைமீறி செயல்படும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் போலீசாருக்கு இந்த விதிமுறை பொருந்தும். முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, போராட்ட சம்பவங்களில் பாதுகாப்பு, திருவிழா பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி ஆகியவற்றில் ஈடுபடும் போலீசார் கண்டிப்பாக செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DGP #Cellphone #Police
சேதராப்பட்டு:
விஜயவேணி எம்.எல்.ஏ. கார் டிரைவர் மீது தாக்குதல் நடத்தி கார் கண்ணாடிகளை உடைத்து, எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய காலம் கடத்தி வரும் போலீசாரை கண்டித்து கரையாம்புத்தூர் பஸ் நிலையம் அருகில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சக்திவேல் மற்றும் தற்போதைய தலைவர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
பொங்கல் பண்டிகையின் போது கோவிலுக்கு சென்ற எம்.எல்.ஏ.வின் காரை திட்டமிட்டு வழிமறித்து எம்.எல்.ஏ. கார் என்று தெரிந்தும் அதை சூறையாடிய நபர்கள் யார் என்று தெரிந்தும் அவர்களை கைது செய்யாமல் போலீசார் காலம் கடத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். எம்.எல்.ஏ.வுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தொகுதி பொதுச்செயலாளர்கள் பழனிவேல், சுகுமார், வினோத்,ஸ்ரீராம், ஸ்ரீதர், அப்பு மற்றும் மாநில இளைஞர் காங்கிரஸ் துணைதலைவர்கள் வேல்முருகன், காளிமுத்து, பொதுச்செயலாளர்கள் பரணிதரன், ஜோசப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரும், மாநில செயலாளருமான உதயகுமார் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இறுதியாக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் நன்றி கூறினார். #CongressMLA #CarAttack