என் மலர்
நீங்கள் தேடியது "ஜார்க்கண்ட்"
- ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார்.
கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இன்று ராஞ்சியில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து பேசினார்.
ஜார்க்கண்டில் முதலீடு செய்வது தொடர்பாக இருவரும் விவாதித்தனர் என்று கூறப்படுகிறது.\
- சில நாட்களுக்கு முன்பு பங்கு விலைகள் சரியத் தொடங்கியதால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்
- கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இருப்பதைக் கண்டனர்.
ஜார்க்கண்டில் பங்ச்சந்தையில் பணத்தை இழந்ததால் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சிட்கோரா காவல் பகுதியில் வசித்தவர் சஞ்சீவ் குமார் (25 வயது). இவருக்கு ஒரு மூத்த சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
குமார், ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் பங்குச் சந்தையில் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பங்கு விலைகள் சரியத் தொடங்கியதால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பங்குச் சந்தையில் தனது பணத்தை இழந்ததால் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில், பலமுறை கதவைத் தட்டியும் அவர் பதிலளிக்காததால், அவரது குடும்பத்தினர் அவரது அறைக்குள் நுழைந்து பார்த்தபோது கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இருப்பதைக் கண்டனர்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவிட்டனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வளர்கின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050
- ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
- ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
திருப்பூர்:
ஆலப்புழா, மங்களூரு ரெயில்கள் புறப்படும், சென்று சேரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தினமும் மாலை 4:05 மணிக்கு கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 5:50 மணிக்கு சென்னை சென்று சேரும். இன்று முதல் இந்த ரெயில் மாலை 3:40 க்கு ஆலப்புழாவில் இருந்து புறப்படும். 20 நிமிடம் முன்பாக காலை 5:30 மணிக்கு சென்று சேரும். இந்த ெரயில் திருப்பூருக்கு இரவு 11 மணிக்கு பதிலாக இரவு 10:33 க்கே வந்து விடும்.இதுவரை மதியம் 1:30 க்கு மங்களூருவில் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ெரயில் (12602) இனி மதியம் 1:55க்கு புறப்படும். சென்னைக்கு மறுநாள் காலை 5:35மணிக்கு பதில் மாலை 6:10மணிக்கு சென்று சேரும். இந்த ெரயில் திருப்பூருக்கு இரவு 10:30மணிக்கு பதிலாக10:45 மணிக்கு வரும்.
ெரயில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து எர்ணாகுளத்துக்கு நவம்பர் 14, 21, 28ந் தேதி சிறப்பு ெரயில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக நவம்பர் 17, 24, டிசம்பர் 1ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து ஹட்டியாவுக்கு ெரயில் இயக்கப்படும். இந்த ெரயில் அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பயணித்து ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை கடந்து ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியா சென்று சேர்கிறது. 5 ஏ.சி., 11 படுக்கை வசதி, 3 பொது பெட்டி உள்ளிட்ட 22 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும். ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
கேரள மாநிலம், கோழிக்கோடு - கண்ணனூர் வழித்தடத்தில், தலசேரி - எடக்கோடு இடையே மின்வழித்தடம் சிக்னல் பராமரிப்பு மேலாண்மை பணி நடக்கிறது. இதனால் சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு இயக்கப்படும் ெரயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது. நேற்றிரவு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட மங்களூரு எக்ஸ்பிரஸ் ெரயில் இன்று கோழிக்கோடு வரை மட்டும் இயக்கப்படும். வடகரா, தலச்சேரி, கண்Èர், கண்ணபுரம், பையனூர்,கொடிகுலம், காசர்கோடு வழியாக மங்களூரு செல்லாது. அதே நேரம், மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ெரயில் இயக்கத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திருட்டு கண்டுபிடிப்பு
- ஆயுதங்களுடன் நிலக்கரி திருடர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தான்பாத்:
ஜார்க்கண்ட் மாநிலம் தான்பத் மாவட்டத்தில் நிலக்கரி திருடும் கும்பலை தடுத்தபோது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்மரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெனிதிஹ் நிலக்கரி சேமிப்பு பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் நிலக்கரியை திருடுவதை பார்த்தனர். அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், நிலக்கரி திருட்டை தடுத்தனர். அப்போது நிலக்கரி திருடர்கள் திடீரென தாக்கத் தொடங்கினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 திருடர்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆயுதங்களுடன் நிலக்கரி திருடர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
- "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது"
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது.
இந்நிலையில், பீகார் மற்றும் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் சம்பாய் சோரன், "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கையை விரைந்து தயாரித்து மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்குமாறு பணியாளர் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாநில மக்கள்தொகையில் 63 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
- எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.
- பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் மோதியது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் ரெயில் மோதி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்தாரா- கர்மாதாண்ட் வழித்தடத்தில் கல்ஜாரியா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பாகல்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.
தீ விபத்தால் அச்சமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் பயணிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, ௧௨ பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
- கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைந்தார் கவுதம் கம்பீர்
- கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி. அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து விலகுவதாக டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்காக, எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகளில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைந்தார் கவுதம் கம்பீர். பாஜகவும் உடனடியாக அவருக்கு 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜக எம்.பி கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி. அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "பருவ நிலை மாற்றம் தொடர்பாக பணியாற்றவுள்ளதால், எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் நிச்சயமாக, பொருளாதாரம் மற்றும் ஆட்சி விவகாரங்களில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
I have requested Hon'ble Party President Shri @JPNadda ji to relieve me of my direct electoral duties so that I can focus my efforts on combating global climate change in Bharat and around the world. Of course, I will continue to work with the party on economic and governance…
— Jayant Sinha (@jayantsinha) March 2, 2024
- மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மேற்கு வங்க மாநில டிஜிபி ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்யும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதலாக, மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறையின் செயலாளர்களும் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஏற்கனவே 3 ஆண்டுகள் பணிபுரிந்த மாவட்டங்கள் மற்றும் சொந்த மாவட்டங்களில் இருந்து இடமாற்றம் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
- ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
- இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவே நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்
ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஜெய்பிரகாஷ் பாய் படேல், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் , ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கிர் ஆலம் ஆகியோர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் பாய் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எனக்கு எனது பதவியை பற்றி கவலையில்லை. ஜார்க்கண்டை பாதுகாக்க வேண்டும். அதனால் தான் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
வரும் மக்களவை தேர்தலில் ஹசாரிபாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் படேல் நிறுத்தப்படலாம் என்று செல்லப்படுகிறது.
- நிர்வாகம் சார்பில் தெற்கு கோபுர வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
திருச்சி:
ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பெருமாள் புகைப்படம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி பொறுப்பு ஆளுனருமான சி.பி.ராதாகிருஷ்ணன் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இன்று காலை வந்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தெற்கு கோபுர வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கோவிலில் இருக்கும் கருடாழ்வார், மூலவர், பெரிய பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், இராமானுஜர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு நடந்தே சென்று தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வருகை தந்த ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் அர்ச்சகர்கள் மரியாதை செய்யப்பட்டு பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
- ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்
- ஜெயந்த் சின்ஹா பாஜக அரசில் மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
பாஜக எம்.பி ஜெயந்த் சின்ஹாவின் மகன் ஆஷிர் சின்ஹா இன்று ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
பருவ நிலை மாற்றம் தொடர்பாக பணியாற்றவுள்ளதா கூறி, ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
ஜெயந்த் சின்ஹா பாஜக அரசில் மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், ஜெயந்த் சின்ஹா எம்.பி ஆக உள்ள ஹசாரிபாக் தொகுதியில் அவருக்கு பதிலாக ஹசாரிபாக் சதார் தொகுதி எம்.எல்.ஏ மனிஷ் ஜெய்ஸ்வாலை வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.
1998 ஆம் ஆண்டிலிருந்து ஜெயந்த் சின்ஹா குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிட்டு வந்த நிலையில், இந்த தேர்தலில் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது அமலாக்கத்துறை.
- இன்று 2-வது நாள் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. இக்கட்சியைச் சேர்ந்த ஆலம்கீர் ஆலம் ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரியாக உள்ளார்.
ஆலம்கீர் ஆலமின் தனிச்செயலாளர் சஞ்சீவ் லால் மற்றும் அவருடைய வீட்டு உதவியாளர் ஜஹாங்கீர் ஆலம் உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தினர். அப்போது ரூ. 37 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போதிலிருந்து ஆலம்கீர் ஆலம் மீது அமலாக்கத்துறை ஒரு கண் வைத்திருந்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) ஆலம்கீர் ஆலம் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று அவரிடம் விசாரணை மேற்கொண்டது. சுமார் 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, அவரது அறிக்கையை பதிவு செய்து கொண்டது.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அவரிடம் விசாரணை மேற்கொண்டது. சுமார் ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அமலாக்கத்துறை ஆலம்கீர் ஆலம்-ஐ கைது செய்துள்ளது.