என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் ஆணையம்"

    • இறந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இனி முறையாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
    • பூத் சிலிப்பின் வடிவமைப்பை திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

    வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை மேம்படுத்தவும், சேவைகளை சீரமைக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    கடந்த மார்ச் மாதம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன

    இறந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இனி முறையாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

    இறந்த வாக்காளர்களின் விவரங்களை இந்திய பதிவாளர் ஜெனரலிடம் ஆன்லைன் மூலம் பெற இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    இதன்மூலம், இறந்தவர்களின் விவரங்கள் பதிவாளர் ஜெனரலிடம் இருந்து உடனுக்குடன் பெறப்படும். அந்த விவரங்கள், வாக்குச்சாவடி மட்ட அதிகாரிகள் மூலம் நேரில் களஆய்வு செய்து உறுதி செய்யப்படும். இதன்பின் அந்த வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும்.

    மேலும் பூத் சிலிப்பின் வடிவமைப்பை திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் வரிசை எண்கள் பெரிய எழுத்துக்களில் காட்டப்படும். இது வாக்குச் சாவடிகளை அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது மற்றும் அதிகாரிகள் பட்டியலில் உள்ள பெயர்களை எளிதாகக் கண்டறிய உதவுகிறது.

    அத்துடன், வீடு வீடாக செல்லும் வாக்குச்சாவடி மட்ட அதிகாரிகளுக்கு நிலையான புகைப்பட அடையாள அட்டை வழங்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதன்மூலம் அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு, அவர்களுடன் வாக்காளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. 

    • காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார்.
    • இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டினார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் பாஸ்டன் நகரில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பில் ஏதோ பிரச்சனை உள்ளது என குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நளின் கோலி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் தலைமை யங் இந்தியன்ஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து முற்றிலும் மௌனம் காக்கிறது. ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆதரவாக அறிக்கைகளை வெளியிடுவது காங்கிரஸ் பீதியில் இருப்பதைக் காட்டுகிறது.

    தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் நடத்துதல் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கள் காங்கிரஸ் நேஷனல் ஹெரால்டு வழக்கிலிருந்து விலகிச் செல்கிறது என்பதையும், அவர்கள் வழக்கிலிருந்து மக்களின் கவனத்தை நிறுவனங்களைத் தாக்கும் வகையில் திசைதிருப்ப முயல்கிறார்கள் என்பதையும் நிரூபிக்கிறது.

    தேர்தல் ஆணையம் சிறந்த சாதனைப் பதிவைக் கொண்டிருப்பதால் இது ஒரு தீவிரமான விஷயம். தேர்தல்களில் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன. பல மாநிலங்களில் காங்கிரஸ் அரசாங்கத்தை அமைத்துள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் இதுபோன்ற பல தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று இப்போது எம்.பி.க்களாக உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தையை நீங்கள் எவ்வாறு கேள்வி கேட்கிறீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    • தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது
    • நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம்

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது,  இந்த அமைப்பில் ஏதோ தவறு இருப்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. நான் இதை பலமுறை கூறியுள்ளேன். மகாராஷ்டிராவில் வயது வந்தர்வர்கள் எண்ணிக்கையை விட மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் அதிகமானோர் வாக்களித்தனர்.

    மாலை 5:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கியது. மாலை 5:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை, 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இது நடக்க இயலாது.

    ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும், நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம், ஆனால் இது நடக்கவில்லை.

    நாங்கள் அவர்களிடம் வீடியோ பதிவுகளை கேட்டபோது, அவர்கள் மறுத்தது மட்டுமல்லாமல், சட்டத்தையும் மாற்றினர். அதனால் இப்போது வீடியோ பதிவுகளை கேட்க எங்களுக்கு அனுமதி இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலி பதவியிடங்கள் உள்பட 133 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடுகளை விரைந்து முடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் ஆகிய பிரச்சனைகள் குறித்து பேசினார்.
    • இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

     தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற மற்றும் தோல்வியுற்ற நிறுவனம் என்று மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை  எம்பியுமான கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

    இன்று டெல்லியில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கபில் சிபல் பல்வேறு விசுஷயங்கள் குறித்து பேசினார்.

    அப்போது வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி  காட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறித்த கேள்விக்கு கபில் சிபல் பதில் கூறினார்.

    அவர் பேசியதாவது, தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற அமைப்பு. தேர்தல் ஆணையம் அதன் கடமைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் ஆணையம் இன்று ஒரு தோல்வியடைந்த நிறுவனமாக உள்ளது. இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இந்தப் பிரச்சினையை நாம் எவ்வளவு விரைவில் கையாள்கிறோமோ, அவ்வளவுக்கு ஜனநாயகம் உயிர்வாழும் வாய்ப்பு அதிகரிக்கும்.

     

    இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் ஒருபுறம் இருக்க , தேர்தல் செயல்முறை ஊழல் நிறைந்தது என்பதைக் காட்டும் சில கடுமையான பிரச்சினைகள் இருக்கின்றன. நாம் ஒன்றாக இணைந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் 

    இதற்கிடையே தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் நிலுவையில் உள்ள பூத் அளவிலான பிரச்சினைகளைத் தீர்க்க 4,000க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஏப்ரல் 30-ந் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்.
    • கட்சிகளின் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் அழைப்பு.

    புதுடெல்லி:

    போலி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் பிரச்சனை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது.

    இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பிய எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இதுதொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.

    இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கோரிக்கை எழுப்பினார்.

    கடந்த சில ஆண்டுகளாக சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தவறி விட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் வாக்காளர் பட்டியல் இந்திய பதிவு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நிலையில் ஏதாவது தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருந்தால் அது குறித்து அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்கு வரும் ஏப்ரல் 30-ந் தேதிக்குகள் ஆலோசனை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அரசியல் கட்சிகளுக்கு தனித்தனியாக தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், சட்டப்படி தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க வருமாறு கட்சிகளின் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

    தேர்தல் ஆணையம் கடந்த வாரம் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அரசியல் கட்சிகளுடன் அவ்வப்போது சந்திப்புகளை நடத்துமாறும் சட்டத்துக்கு உட்பட்டு பெறப்படும் ஆலோசனைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

    • ஒடிசா உள்பட 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும்.

    புதுடெல்லி:

    ஐந்து மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தஉள்ளது.

    ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும்.

    இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நவம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 21-ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • சட்டசபைத் தேர்தலையொட்டி இரு மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.
    • மது, போதை பொருட்கள், பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்தமுறை மிக அதிகமான அளவில் கணக்கில் வராத பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 10.11.2022 வரை குஜராத்தில் மட்டும் 71 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலின் போது ஒட்டுமொத்த காலத்தில் ரூ. 27.21 கோடி அளவில் அங்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் 50 கோடியே 28 லட்சம் ரூபாய் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கடந்த தேர்தலின் போது இந்த மாநிலத்தில் ரூ. 9.03 கோடி கைப்பற்றப்பட்டது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள தொகை இதைவிட ஐந்து மடங்கு அதிகம்.மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது, போதைப் பொருட்கள், விலை மதிப்புள்ள உலோகங்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    வேட்பாளர்கள் பணம் கொடுப்பதை தடுக்க சி விஜில் என்ற செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றும், அதன் மூலம் பணம் விநியோகிக்கப்படுவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    • மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சக செயலாளராக பதவி வகித்து வந்தார்.
    • அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில் தேர்தல் ஆணையராக நியமனம்.

    குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலை தொடர்ந்து கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. அவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். மேலும் மற்றொரு தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய தேர்தல்ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆன, கோயல், மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சக செயலாளராக பதவி வகித்து வந்தார். விருப்ப ஓய்வின் கீழ் அண்மையில் அவர் ஓய்வு பெற்றார்.

    • இமாசலபிரதேசத்தில் நகர்புற வாக்காளர்களில் பலர் ஓட்டுப் போடவில்லை.
    • சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் காந்திதாம் தொகுதிகளில் வாக்குப் பதிவு குறைந்துள்ளது.

    இமாச்சல் பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12ந் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. குஜராத் சட்டசபைக்கு முதல் கட்ட தேர்தல் ஒன்றாம் தேதி நடைபெற்றது. 2ம் கட்ட தேர்தல் 5ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    இமாசலபிரதேசத்தில் நகர்ப்புற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் பலரும் வாக்களிக்கவில்லை. சிம்லாவில் 62.53 சதவீத வாக்குகளே பதிவாகின. கடந்த தேர்தலைக் காட்டிலும் இது 13 சதவீதம் குறைவு. குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் நகரங்களில் நடந்த வாக்குப்பதிவு, அங்குள்ள வாக்காளர்கள் அக்கறையின்றி இருப்பதையே காட்டுகிறது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.

    சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக காணப்படுகிறது. காந்திதாம் தொகுதியில் மிகக்குறைந்த அளவாக 47.8 சதவீத வாக்குகளே பதிவாகி இருக்கிறது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 6.34 சதவீதம் குறைவு. அடுத்தபடியாக சூரத்தில் உள்ள கரஞ்ச் தொகுதியில் கடந்த தேர்தலில் 55.91 சதவீத வாக்குகள் பதிவாகின. இப்போது அதைவிட 5.37 சதவீதம் குறைவாகவே மக்கள் வாக்களித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாஜக சின்னத்துடன் உள்ள பிரசார வாகனங்களில் மது வினியோகம் செய்யப்பட்டது.
    • காங்கிரஸின் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் இதில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி வாகன ஊர்வலம் நடத்தியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது:

    நமது ஜனநாயகத்தின் கண்காணிப்பு அமைப்பான தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மை நடந்து முடிந்துள்ள தேர்தல்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. தேர்தலில் பிரதமரின் வாக்கு மதிப்பும், சாமானியரின் வாக்கு மதிப்பும் ஒன்றுதான். ஆனால், பிரதமர் வாக்களிக்கச் செல்லும்போது இரண்டரைமணி நேரம் ரோட்ஷோ நடத்துவது எப்படி?

    பிரதமரின் எந்த அத்து மீறலையும் கண்டு கொள்ளாத தேர்தல் ஆணையத்திற்கு என்ன நிர்பந்தங்கள் உள்ளன?. பிரதமர் மோடி அகமதாபாத்தில் வாக்களிக்கும் போதும், இரண்டரை மணி நேர ரோட்ஷோ நடத்தும் போதும் அனைத்து சேனல்களிலும் இலவசமாக ஒளிபரப்ப முடிவு செய்தார். இது விளம்பரம் இல்லையா? இதற்காக பா.ஜ.க.விடம் கட்டணம் ஏன் வசூலிக்கக் கூடாது. கட்சியின் தேர்தல் செலவினத்தின் கீழ் இதை கொண்டுவர நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

    மது விற்பனை தடை உள்ள மாநிலத்தில் பாஜகவினர் வெளிப்படையாக, வெட்கமின்றி, பாஜக சின்னத்துடன் தங்கள் வாகனங்களில்  மது வினியோகம் செய்யும் காட்சிகளையும் நாங்கள் மீண்டும் மீண்டும் பகிர்ந்து வருகிறோம். அத்தகைய விதி மீறல்கள் குறித்து தேர்தல் ஆணையம் மௌனம் சாதிப்பது ஏன்.

    பாஜக தொடர்ந்து நடத்தி விதிகளை மீறுகிறது, ஆனால் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அமைதியாக உள்ளது. நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பயப்படுவதாக தெரிகிறது. காங்கிரஸின் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
    • 6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    சென்னை:

    ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் இந்த பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த வாக்காளர்களின் ஆதார் எண்ணை முழுமையாக இணைக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன், தனியார் 'நெட்சென்டர்' இ-சேவை மையங்கள் மூலமாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதால் ஆதார் எண்ணை இணைக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    இந்த பணியை வேகப்படுத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இன்று ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக அந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு பேர் இதுவரை ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்தார்.

    இதுபற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி இந்த பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்குமாறு சத்யபிரதாசாகு கேட்டுக் கொண்டார்.

    ×