என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 111960"
- சி.ஜி.எல் பணியிடங்களுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- நிகழ்ச்சியில் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் பாடக் குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு கள் நடக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
மத்திய அரசு தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டப்படி ப்பு தரத்திற்கான (சி.ஜி.எல்) பணியிடங்களுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்விற்கான வயது வரம்பு 18 வயது முதல் 32 வரை ஆகும். பணியிடத்திற்கு ஏற்றவாறு வயதுவரம்பு மாறும்.
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இந்த தேர்வுக்கான விழிப்புணர் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை ) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் பாடக் குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு கள் நடக்கிறது.
இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்- அப் எண்ணிற்கு அனுப்பி தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் 1 பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிக்களும், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் வேட்பாளர்கள் அ.தி.மு.க.- தி.மு.க. இரு கட்சிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் உள்ள கூட்டணி கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டிருந்தார். இதில் 24 எம்.பி. தொகுதிக்கான வேட்பாளர்களும், 9 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
அடுத்த பட்டியலை இன்னும் 2 நாளில் டி.டி.வி. தினகரன் வெளியிட உள்ளார். இதில் 16 எம்.பி. தொகுதிக்கான வேட்பாளர்களும், 9 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட உள்ளனர்.
இந்த பட்டியலில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச் செல்வன் பெயர் இடம் பெற்றுள்ளது. #ThangaTamilSelvan #AndipattiConstituency
மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான போபால், பா.ஜனதா கட்சியின் நீண்டநாள் கோட்டையாக உள்ளது.
கடந்த பல எம்.பி. தேர்தல்களில் இந்த தொகுதியை பா.ஜனதாவிடம் இருந்து தட்டிப் பறிக்க காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் போபால் தொகுதியில் எதிர்பார்த்த வாக்குகளையும் வெற்றியையும் பெற இயலவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போபால் தொகுதியை பா.ஜனதாவிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற வியூகத்தை வகுத்து வருகிறது. இதற்காக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ்வர் நிக்ரா தீவிர ஆலோசனை நடத்தினார்.
அவரை சமீபத்தில் போபால் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் யோகேந்திர சிங் சவுகான் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் போபால் தொகுதியில் பிரபலமான ஒருவரை காங்கிரஸ் சார்பில் களம் இறக்கினால் நிச்சயமாக பா.ஜனதாவை வீழ்த்தி வெற்றி பெற முடியும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து போபால் தொகுதியில் பிரபல இந்தி நடிகை கரீனாகபூரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட வைக்கலாமா? என்ற திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்தி பேசும் மாநில மக்களிடம் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை கரீனா கபூர் போட்டியிட்டால் மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற கருத்து காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக நடிகை கரீனா கபூர் மறைந்த கிரிக்கெட் வீரர் மன்சூர்அலிகான் பட்டோடியின் மருமகளாக இருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மன்சூர் அலிகான் பட்டோடி- நடிகை சர்மிளா தாகூர் தம்பதியரின் மகனான சைப்அலிகானை, நடிகை கரீனா கபூர் திருமணம் செய்துள்ளார். எனவே பட்டோடி குடும்பத்தின் போபால் வாரிசுகளில் ஒருவராக கரீனா கபூர் கருதப்படுகிறார். இந்த அந்தஸ்துடன் இருப்பதால் போபால் நகர மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போபால் நகரில் பிறந்த மன்சூர்அலிகான் பட்டோடி, போபால் நகரின் நவாப் என்ற கவுரவத்துடன் வாழ்ந்தார். போபால் மக்கள் இவரை செல்லமாக “டைகர் பட்டோடி” என்றழைத்தனர். 21 வயதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பட்டோடி “உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் பீல்டர்” என்ற சிறப்பை பெற்றார்.
இந்தியாவுக்காக 46 டெஸ்ட் ஆட்டங்களில் முத்திரைப் பதித்த பட்டோடி 137 முதல் தர டெஸ்டுகளிலும் ஆடியுள்ளார். கிரிக்கெட்டில் பல சாதனை படைத்து ஓய்வு பெற்ற அவரை 1991-ம் ஆண்டு தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி போபால் எம்.பி. தொகுதியில் களம் இறக்கியது.
அதன் பிறகு பட்டோடி குடும்பத்தினர் யாரும் போபால் தொகுதியில் போட்டியிடவில்லை. இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பட்டோடி மருமகளான நடிகை கரீனா கபூரை களம் இறக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.
தற்போது மத்திய பிரதேசத்தில் அரசியல் சூழ்நிலைகள் மாறி உள்ளதால் கரீனா கபூரை வெற்றி பெற செய்ய முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள். #KareenaKapoor #Bhopal #Congress
இந்நிலையில், ஷா பைசல் நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இப்போதைக்கு சேர மாட்டேன் என்றும் அவர் கூறினார். பிரிவினைவாத ஹூரியத் மாநாடு இயக்கத்தில் தனது ஆட்சிப்பணி அனுபவம் பயன்படாது என்பதால், அதில் சேர மாட்டேன் என்றும் ஷா பைசல் தெரிவித்தார். #ParliamentElection #ShahFaesalIAS
200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.
காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 184 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட இரு பட்டியல்களாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், சர்தார்பூர் தொகுதியிலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இதேபோல், பா.ஜ.க.வும் மூன்று பட்டியல்களின் மூலம் தங்கள் கட்சியை சேர்ந்த 170 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
தற்போது பார்மர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துவரும் மன்வேந்திரா சிங்குக்கு மீண்டும் சீட் வழங்கப்படாததால் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில், வசுந்தரா ராஜே சிந்தியாவை எதிர்த்து ஜல்ராபட்டான் தொகுதியில் மோதும் வாய்ப்பு இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #JaswantSingh #VasundharaRaje #ManvendraSingh #Rajasthanpolls
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஆண், பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை உதவி கலெக்டர் (பயிற்சி) அனு தொடங்கி வைத்தார்.
ஆண்களுக்கான போட்டி பீச்ரோடு ரெயில்வே கேட் அருகில் இருந்தும், பெண்களுக்கான போட்டி ரோச் பூங்காவில் இருந்தும் தொடங்கி, காமராஜ் கல்லூரியில் முடிவடைந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆண்கள், பெண்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கான மினிமாரத்தான் போட்டியில் ஊட்டியை சேர்ந்த நிகில்குமார் முதல் இடத்தையும், திண்டுக்கல்லை சேர்ந்த கற்குவேல் என்ற பிரதீப் 2-வது இடத்தையும், பிரசாத் 3-வது இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன் பட்டியை சேர்ந்த மாரிசெல்வி முதல் இடத்தையும், முத்துசெல்வி 2-வது இடத்தையும், ராதிகா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2 கிராம் தங்க நாணயமும், 2-வது பரிசாக 1 கிராம் தங்க நாணயமும், 3-வது பரிசாக ½ கிராம் தங்க நாணயமும் மற்றும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை உதவி கலெக்டர் (பயிற்சி) அனு வழங்கினார்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட 300 ஆண்கள் மற்றும் 110 பெண்கள் அனைவருக்கும் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த பரிசளிப்பு விழாவில் காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், பழைய மாணவர்கள் சங்க பொறுப்பாளர்கள் ரமேஷ்குமார், செந்தில்நடராஜன், குருசாமி, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பல முக்கிய மாநிலங்களில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறது. இது தொடர்பாக கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் அண்மையில் அரியானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து தனது கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுபற்றி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி திட்டமிட்டு இருக்கிறது. இதில் 25 தொகுதிகளை கைப்பற்றுவதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த வெற்றி கிடைத்துவிட்டால் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மற்ற கட்சிகளுடன் எங்களால் பேரம் பேச முடியும்.
டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி வலிமையாக உள்ளது. உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் இன்னும் சில மாநிலங்களிலும் எங்கள் கட்சி போட்டியிடும். இதேபோல் விரைவில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியை சேர்ந்த 4 பேர் வெற்றி கண்டனர் என்பது நினைவு கூரத்தக்கது. #AAP #LokSabha #Election
இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமி மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இன்று (புதன்கிழமை) முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. முதல் 6 நாட்கள் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியும், இதனை தொடர்ந்து அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சவுதிஅரேபியா, சிங்கப்பூர், ஸ்காட்லாந்து உள்பட 28 நாடுகளை சேர்ந்த 170 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியை நடத்த தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க தலைவர் என்.ராமச்சந்திரனிடம் வழங்கினார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி பொறுப்பாளர் மருது கணேஷ் போட்டியிட்டார். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் தி.மு.க. டெபாசிட்டை பறிகொடுத்து பரிதாபமாக தோற்றது. தோல்வி குறித்து ஆராய தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட குழு கொடுத்த அறிக்கையின்படி, ஆர்.கே.நகர் பகுதி தி.மு.க. கூண்டோடு கலைக்கப்படுவதாக தி.மு.க. அறிவித்தது. சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆர்.கே.நகர் பகுதியில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வினரிடம் நேர்காணல் நடத்தி, பொறுப்பாளர்களை நியமித்தார். இந்தநிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களம் கண்ட மருது கணேசிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி தி.மு.க. பொறுப்பாளர் மருது கணேஷ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தண்டையார்பேட்டையை சேர்ந்த வெ.சுந்தர்ராஜன் நியமிக்கப்படுகிறார்.
ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளர் ஏ.டி.மணி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தண்டையார்பேட்டையை சேர்ந்த சா.ஜெபதாஸ் பாண்டியன் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த பகுதிகளின் பிற நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி தி.மு.க.வில் நிலவிய கருத்து வேறுபாடுகளே மருது கணேசின் கட்சி பதவி பறிபோக காரணம் என்று கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்