search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தர்"

    பாவ வினையால் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும்.
    மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

    வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

    மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

    சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

    அசுவினி: நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து

    பரணி: நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது.

    கிருத்திகை: நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து

    ரோகிணி: நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

    மிருகசீரிடம்: நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.

    திருவாதிரை : நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை.

    புனர்பூச: நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

    பூசம்: நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.

    ஆயில்யம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.

    மகம்: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.

    பூரம்: நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.

    உத்திரம்: நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.

    அஸ்தம்: நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.

    சித்திரை: நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.

    சுவாதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

    விசாகம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.

    அனுஷம்: நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

    கேட்டை: நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.

    மூலம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.

    பூராடம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.

    உத்திராடம்: நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

    திருவோணம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

    அவிட்டம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.

    சதயம்: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.

    பூராட்டாதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.

    உத்திரட்டாதி: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.

    ரேவதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது,

    மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள்.

    ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்
    ஒரு மனிதன் சித்த நிலை அடைவது, பல பிறவிகளாக அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மம் போன்றவையே அவனை இறைநிலையான சித்த நிலைக்கு அழைத்து செல்லும்.
    ஒரு மனிதன் சித்த நிலை அடைவது, ஒரே பிறவியில் கிடைக்கும் பொக்கிஷம் இல்லை. பல பிறவிகளாக அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மம் போன்றவையே அவனை இறைநிலையான சித்த நிலைக்கு அழைத்து செல்லும்.

    உதாரணமாக புத்தர் ஞானம் பெறுவதற்கு முன்பாக, அவர் அதற்கு முன்பு எடுத்த முன்னூறு பிறவிகள் அவருக்கு புலப்பட்டதாம்.

    அதேபோல தான் பல பிறவிகளில் பெற்ற ஞானம், தவவலிமை ஆகியவற்றுடன் தான் ஒருவன் பிறப்பான். ஆனால் அவை அனைத்தும் பல பூட்டுகளால், அவனுள்ளேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.

    உதாரணமாக பண ஆசை, பெண் ஆசை, பொருள் ஆசை போன்ற எல்லா ஆசைகளும் அவனுக்குள் எழும். அவையெல்லாம் அவன் அனுபவித்து வெறுத்து வர வேண்டும் என்பதற்காக தரப்படுபவையே.

    அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு முன்பாக, பெண் பித்தனாக இருந்தார். அவர் சகோதரி கூறிய ஒரு வார்த்தை, அவர் பெண் ஆசையை வெறுக்க காரணமாக அமைந்தது. பின் மகானாக மாறி பல சித்துகளையும் முருகப்பெருமானிடம் பெற்றார். அதனால் தான் ‘நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதே’ என்றார்கள். முன்கால கர்மவினையானது, நம்மை பக்குவ நிலைக்கு அழைத்துச் செல்வதற்காக கடுமையானதாகவும், மோசமானதாகவும் இருக்கலாம் அதை நாம் பார்ப்பதில் பலனில்லை. சமைத்த உணவே நாவிற்கு ருசியை கொடுக்கும். சமைக்கும் முன் அதன் ருசியை அறிய இயலாது.

    அதுபோல ஒவ்வொறு ஆசையையும் வெறுக்க வெறுக்க ஒவ்வொறு பூட்டாக உடைபடும். அனைத்து பூட்டுகளும் உடைபடும் போது, மனம் உடலோடு அலையும்.

    ஆமாம்.. அனைத்தையும் வெறுத்து, துறந்த மனிதன் ஏதோ ஒன்றைத் தேடி அலைந்து திரிவான். அவன் ஓடி, ஓடி ஒடுங்கும் நிலையில், குரு தன் கருணையால் அதை திறந்து விடுவார். அக்கணம் முதல் காற்றாட்டு வெள்ளம் போல் ஞானம் பெருக்கெடுத்து ஓடும். பலரின் ஆன்ம தாகங்களையும் கூட அவன் தீர்த்துவைப்பான். சிலரை தன்னோடு ஞான ஆற்றில் அடித்தும் செல்வான். அவனே சித்தன் என்று அழைக்கப்படுவான்.
    அளுந்தூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமையான வரகுணேஸ்வரர் கோவில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
    அளுந்தூர் சின்னஞ்சிறிய அழகிய கிராமம். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பச்சைப்பசேல் வயல் வெளிகள். ஊரில் நுழைந்து வெளியே வயல் வெளிகளுக்கு இடையே செல்லும் சாலையில் நடந்தால் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ஓர் ஆலயம் தெரியும். மிகப் பழமையான ஆலயம்.

    இந்த ஆலயத்திற்கு தென்மேற்கே ½ கி.மீ. தொலைவில் செங்குளம் என்ற குளம் இருந்த பகுதி. அந்தப் பகுதி தற்போது திடலாகக் காட்சி தருகிறது. இந்தத் திடலில் ஒரு நந்தியும் எதிரே பீடம் இல்லாத சிவலிங்கமும் காட்சி தருகிறது. இதன் தல வரலாறு என்ன?

    அந்த ஊரில் ஒரு விவசாயத் தம்பதியர் இருந்தனர். இருவரும் சிவ பக்தர்கள். அந்தப் பெண்ணுக்கு பால் பருகும் பருவத்தில் ஒரு குழந்தை. செங்குளத்தை ஒட்டி அவர்களுக்கு நிறைய நஞ்சை நிலங்கள். குழந்தையை திடலில் கிடத்தி உறங்க வைத்து விட்டு தம்பதிகள் இரண்டு காளைகளைப் பூட்டி வயலை உழத் தொடங்கினர். விவசாயி வயலை கலப்பையால் உழ, அந்தப் பெண் களைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

    விடிவதற்குள் எல்லா நிலத்தையும் உழுது முடித்து விட வேண்டும் என்ற ஆவலில் நேரம் நள்ளிரவைத் தாண்டியும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இறைவன் அருளால் வேலையை முடித்து விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. திடீரென்று குழந்தையின் அழுகுரல் கேட்டது. பசியால் குழந்தை அழுகிறது என்று புரிந்துகொண்ட அந்தப் பெண், குழந்தைக்கு பால் ஊட்டினாள்.

    ‘வேலை முடியவில்லையே’ என்ற கவலையில் அருகே இருந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வேண்டினாள். இறைவனின் அதீத கருணை இவர்கள் மேல் படிய, இவளும் குழந்தையும், காளைகளும், கணவனும் சிலையாக மாறி இறைவனுடன் ஐக்கியமாகினர். இது செவி வழி கதை.

    ஒரு காளையின் சிலையும் விவசாயியின் சிலையும் தற்போது திடலாக காட்சி தரும் செங்குளம் ஏரிப்பகுதியில் காட்சி தருகிறது. குழந்தை பால் பருகும் கோலத்தில் உள்ள அந்த இளம் பெண்ணின் சிலை திருச்சி அருங்காட்சியகத்தில் உள்ளது. இன்னொரு காளையின் சிலை அருகே உள்ள ஆலயத்தில் நந்தியம் பெருமானாக அருள்பாலிக்கிறது.

    இதுவே அளுந்தூரில் உள்ள வரகுணேஸ்வரர் ஆலயம். சுமார் 1100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. காலப்போக்கில் சற்றே சிதிலமடைந்த இக்கோவிலை முதலாம் குலோத்துங்கன் திருப்பணிகள் செய்து புதுப்பித்துள்ளான்.

    இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘வரகுண ஈசுவரமுடைய மகாதேவர்’ எனவும், ‘வரவுணீசுவரமுடைய நாயனார்’ எனவும் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த ஆலய இறைவன் ‘வரகுணேஸ்வரர்’ என்ற பெயரிலும், ‘காசி விசுவநாதர்’ என்ற பெயரிலும் தற்போது அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் காசி விசாலாட்சி.

    ஆலய முகப்பைத் தாண்டியதும் எதிரே நந்தியம் பெருமானும், பலிபீடமும் இருக்க, வலதுபுறம் அன்னை விசாலாட்சியின் சன்னிதி உள்ளது. இந்தச் சன்னிதியின் இரண்டாம் விமான தளம் முற்றிலும் அழிந்துவிட்டது. இறைவி நாற்கர நாயகியாய் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னை மேல் இருகரங்களில் அங்குசத்தையும் மலர்மொட்டையும் சுமந்து, கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

    அன்னையின் சன்னிதியை விட்டு கீழே இறங்கி, தென்புறம் சற்றே நடந்து உயர்ந்த படிகட்டுகளைக் கடந்து வடபுறம் திரும்பினால் மகாமண்டபத்தின் உள்ளே நுழையலாம். ஆலயத்தின் மையமாகத் திகழும் இறைவனின் கருவறைக்கு முன்பாக இருக்கிறது மகா மண்டபம். சிதிலமான இந்த மகாமண்டபத்தை நான்கு தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நான்கு தூண்களிலும் சோழர்கால சிற்ப வேலைப்பாடுகளே காணப்படுகின்றன. இரு தூண்களில் அடியவர்களின் வடிவங்களும், பூ வேலைப்பாடுகளும் உள்ளன. ஒரு தூணில் நந்தி, யானை முதலிய விலங்கு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் வடபுறம் ஒரு பெரிய சுரங்கம் செவ்வக வடிவில் காணப்படுகிறது. இப்பாதை ½ கி.மீ. தொலைவில் இருக்கும் பிடாரி தோப்பிற்கு செல்லும் பாதையாக இருந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். தற்போது சிமெண்டு பலகையைக் கொண்டு இந்த சுரங்க பாதையை மூடி வைத்துள்ளனர். அடுத்துள்ள கருவறையில் இறைவன் வரகுணேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் அனைத்து விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும், கார்த்திகை மாத அனைத்து சோமவாரங்களில் 108 சங்காபிஷேகமும் நடக்கிறது. மகா சிவராத்திரி திருநாள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அனைத்து விசேஷ நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மகாமண்டபத்தின் மேற்கில் முருகப்பெருமானின் திருமேனி உள்ளது. இறைவனின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும் சிவ துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். ஆலய தலவிருட்சமான வில்வம் ஆலய முகப்பிலேயே உள்ளது. மேற்கு பிரகாரத்தில் ஓர் அரசமரமும், அதன் அடியில் மன்னன் வரகுணபாண்டியன் சிலையும் உள்ளது. இந்த அரசமரம் பலநூறு ஆண்டுகளை கடந்தது.

    இந்த ஆலயம் சித்தர்கள் உலவும் இடமாக இன்றும் திகழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஆலயத்தின் தென்மேற்கு திசையில் ஒரு கற்கட்டிடம் இருந்த சுவடு தெரிகிறது. அதனிடையே பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆலமரம் ஒன்று உள்ளது. ஆலமரத்தின் அடியில் பீடம் ஒன்றும் உள்ளது. இது சித்தர்கள் தவம் செய்த இடம் என்று சொல்லப்படுகிறது.

    கால பைரவர்

    மகா மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் கால பைரவர் அருள்பாலிக்கிறார். பதினான்காம் நூற்றாண்டின் கலை முறையில் அமைந்துள்ள இந்த கால பைரவரின் தலைக்கோலம் சுடர் முடி அமைப்பில் உள்ளது. பைரவரின் நான்கு கைகளில் வலதுமுன் கையில் முத்தலை ஈட்டியும், இடது முன் கையில் தலை ஓடும், பின் கரங்களில் உடுக்கையும் பாசமும் உள்ளன. பைரவரின் பின்னால் அவரது வாகனமான நாய் திறந்த வாயுடன் காணப்படுகிறது. பைரவரின் கழுத்திலிருந்து தொங்கும் மண்டையோட்டு மாலை அவரது முழங்கால் வரை நீண்டு அமைந்துள்ளது. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகளும், பைரவர் யாகமும் நடைபெறுகிறது.

    இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருச்சியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அளுந்தூர் கிராமம் உள்ளது. நகரப் பேருந்தில் சென்று அளுந்தூர் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பின் அங்கிருந்து உள்ளே 3 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
    சித்தர்களுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். சித்தர்களின் காயத்ரி மந்திரங்களை பார்க்கலாம்.
    அகஸ்தியர் (ஞானம் உண்டாக)

    ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
    பொதிகை சஞ்சராய தீமஹி
    தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்

    கருவூரார் (ஆயுள் தீர்க்கம் பெற)


    ஓம் ராஜமூர்த்யா வித்மஹே
    சௌபாக்ய ரத்நாய தீமஹி
    தன்னோ வாதகாயை கருவூர்சித்த ப்ரசோதயாத்

    காலங்கிநாதர்

    ஓம் வாலை உபாசாய வித்மஹே
    புவனேஸ்வரி சிஷ்யா தீமஹி
    தன்னோ காலங்கிநாத ப்ரசோதயாத்

    திருமூலர் (தியான யோகம் பெற)

    ஓம் ககன சித்ராய வித்மஹே
    பிரம்மசொரூபிணே தீமஹி
    தன்னோ திருமூலராய ப்ரசோதயாத்

    பதஞ்சலி (யோகங்கள் சித்தி அடைய)

    ஓம் சிவதத்வாய வித்மஹே
    யோகாந்தராய தீமஹி
    தன்னோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

    புண்ணாக்கீசர்


    ஓம் ஈசத்வாய ச வித்மஹே
    ரணனாவாய தீமஹி
    தன்னோ முக்தி புண்ணாகீ ப்ரசோதயாத்

    சுந்தரானந்தர் (சகல காரியங்களும் சித்தி பெற)

    ஓம் ஸ்ரீ வல்லபாய வித்மஹே
    ஸ்ரீ மீனாக்ஷி பதிவால் தீமஹி
    தன்னோ சுந்தரானந்த ப்ரசோதயாத்

    போகர்

    ஓம் நவபாஷாவைகராய வித்மஹே
    மன்மதரூபாய தீமஹி
    தன்னோ பிரபஞ்ச சஞ்சார
    சீனபதிர்ஷி ப்ரசோதயாத்

    பைரவர் (அஷ்ட சித்திகளை பெற)

    ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே
    க்ஷத்ர பாலாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்

    ஓம் திகம்பராய வித்மஹே
    தீர்கசிச்நாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்

    ஓம் ஸ்வாநத்வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பைரவஹ் ப்ரசோதயாத்
    நம் வாழ்க்கையில் உடலும், உள்ளமும் சீராக இருக்க, சித்தர்கள் பலரும் பல்வேறு வாழ்வியல் ரகசியங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அதனை இங்கே பார்க்கலாம்.
    காலையில் படுக்கையில் விட்டு எழும் போது, ஆண்கள் வலது கால் பெருவிரல் பூமியில் படும்படி அழுந்தி எழ வேண்டும். அதே போல் பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும். காலையில் எழுந்தவுடன், இரு கைகளையும் உரசி கண்களில் ஒற்றிக்கொள்வது நல்லது. ஏனெனில் கண்கள் நம்முடைய மனதின் வாசல். நம் எண்ணங்கள் கண்களின் வழியாகவே வெளிப்படும். கண்கள் நெருப்பை தரும் சக்தி கொண்டவை.

    நாம் உறங்கும் பொழுது, மனம் மற்றும் எண்ணம் அமைதியடையும். இதுதான் இயற்கை. அப்படி நாம் உறங்கும் வேளையில் நெருப்பு சக்தி, கண்கள் வழியாக வெளியே செல்லாது. ஆகையால் உறங்கி எழுந்ததும் கைகளை உரசும் பொழுது சூடு உண்டாகி, கண்களைத் தொடும் பொழுது, அவை கண் களின் நெருப்பை கிரகித்து நமக்குள்ளேயே வைக்கும். இந்த கண் நெருப்பு மனிதனுக்கு மிகவும் அவசியம். இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு அளிப்பதாக சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    உணவுகளைப் பார்த்துக் கொண்டே சாப்பிடும் பொழுது, கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும். அதனால்தான் சாப்பிடும் வேளையில் புத்தகம் படிப்பது, மற்ற காட்சிகளைப் பார்ப்பது, பேசிக்கொண்டு கவனத்தை சிதறவிடக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். உணவில் இருந்து கவனத்தைச் சிதற விடுவதால், வயிற்றில் செரிமானம் நடப்பதில் பிரச்சினை உண்டாகும்.

    கண்களில் உள்ள நெருப்பின் சக்தி பற்றி, மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்வைப் பார்க்கலாம்.

    குருசேத்திரப் போர் நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் துரியோதனன். போர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக துரியோதனனை அழைத்தாள், அவனது தாய் காந்தாரி.

    ‘நாளை நீ, போருக்குப் புறப்படுவதற்கு முன், காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னைப் பார்க்க வா’ என்று கூறினாள்.

    ஆனால் துரியோதனன் தாயின் முன்பு நிர்வாணமாக எப்படிச் செல்வது என்று நினைத்துக் கொண்டு, இடையில் ஒரு துணியை மட்டும் கட்டிக்கொண்டுச் சென்றான். துரியோதனன் தன் முன்பாக வந்திருப்பதை அறிந்த காந்தாரி பல ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்த தன் கண் கட்டுகளை அவிழ்த்தாள். அதுவரை தேக்கி வைத்திருந்த கண் நெருப்புகள், துரியோதனனின் இடையில் இருந்த துணிப்பகுதியைத் தவிர அனைத்துப் பகுதியிலும் பட்டது. இதனால் அவனது உடல் முழுவதும் இரும்பு போல் ஆகிவிட்டது.

    போருக்கு சென்ற துரியோதனனுடன், பீமன் கதாயுதம் கொண்டு சண்டையிட்டான். பீமன் அடித்த ஒவ்வொரு அடியும், துரியோதனன் மீது விழும் பொழுது, ஏதோ இரும்பு துண்டில் சம்மட்டியால் அடிப்பது போல ‘டங்’ என்ற ஒலி மட்டுமே கேட்டது. குழப்பம் அடைந்த பீமன், இதுபற்றி கிருஷ்ணரிடம் கேட்டான்.

    அதற்கு கிருஷ்ணர், ‘பல வருடம் கண்களைக் கட்டி யிருந்த காந்தாரி, கண்களைத் திறந்து துரியோதனனைப் பார்த்திருக்கிறாள். அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு தான், கவசமாக அவனை காவல் காக்கிறது’ என்றார். கண்களில் இருந்து வெளிப்படும் நெருப்புக்கு அவ்வளவு சக்தியிருக்கிறது என்பதைச் சொல்லும் ஒரு உதாரணக் கதை இது.

    இந்த முறையைத் தான் சித்தர்கள் கொஞ்சம் மாற்றாக சொல்லியிருக்கிறார்கள். ‘உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ண வேண்டும், உணவை பார்த்து உண்ண வேண்டும்.’ கோவில்களில் தரப்படும் பிரசாதங்களை சிலர், கண்களில் ஒற்றி விட்டு சாப்பிடுவதை நாம் பார்த்திருக்கலாம். அது பக்தி மட்டுமல்ல. கண்களின் நெருப்பை கிரகித்துக் கொள்ள முன்னோர்கள் சொன்ன வழிமுறையும் தான்.

    காலைக்கடனை முடித்தவுடன் குளித்து விட வேண்டும். காலை எழுந்தவுடன் குளிப்பதனால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது. வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து, பசியைத் தூண்டுகிறது. பசிக்காமல் உண்பது, நேரம் தவறி உண்பது, அடிக்கடி இறைச்சி உணவுகளை உண்பது, துரித உணவுகளை உண்பது போன்றவை தான், நோய்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன. காலை எழுந்தவுடன் ஆறு, குளங்களில் நீராட வேண்டும் என்று சித்தர்கள் சொல்கிறார்கள். அப்போது மந்திரங்களைச் சொல்லியபடி தண்ணீரில் மூழ்க வேண்டுமாம். ஆறு அல்லது குளங்களில் தொப்புள் பகுதி மூழ்கும் வகையில் நின்று கொண்டு குளிக்க வேண்டும் என்று சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் தொப்புள் பகுதி மூழ்கும்படி நின்று மந்திரங்களை உச்சரித்தால், அது பலிக்கும் என்று சொல்லி வைத்துள்ளனர்.

    இன்றைய வாழ்க்கை முறையில் நாம் ஆறு, குளங்களைத் தேடிச் செல்ல வழியில்லை. அதனால் உணவு முறைகளையாவது அவர்கள் சொல்லி வைத்தபடி பின்பற்றலாம்.

    உணவு சாப்பிடுவதற்கு முன்பாக கை, கால்களை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் கால்களை மடக்கி தரையில் அமர வேண்டும். கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல் மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும். சர்க்கரை நோய் வருவது தவிர்க்கப்படும்.

    பிறகு வலது கையில் நீர் ஊற்றி மூன்று முறை உறிஞ்சி குடிக்க வேண்டும். உள்ளங்கையில் நீர் ஊற்றி உறிஞ்சிக்குடிப்பதால், நம் உடலில் பல அற்புதங்கள் நிகழ்வதாக சித்தர் பெருமக்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.

    அதற்கு கைகளைப் பற்றி நாம் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை, தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்தவுடன், முதன் முதலாக சாப்பிடும் பால் வயிற்றில் பட்டவுடன், வயிறு தன்னுடைய செயலைத் தொடங்குகிறது என்பதை நாம் அறிவோம். பிறந்த குழந்தை கைகளை மூடியபடியே இருக்கும். இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது. மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை என்றும் சொல்கிறது.

    இதனால் தான் அகத்தியர் சொல்லும் போது, ‘எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் ஊற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு, கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடுங்கள்’ என்கிறார்.

    வயிற்று நோய்களைத் தீர்க்க மருந்து சொல்லிய கோரக்கர் போன்ற சித்தர்கள் கூட, உள்ளங்கைகளில் தான் தேன் ஊற்றி, அதில் மருந்துகளை குழைத்து உண்ண சொல்லி இருக்கிறார்கள். கைகளுக்கும் வயிற்றுக்கும் உள்ள பந்தம் அப்படிப்பட்டது.

    நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடையே நீர் அருந்தக்கூடாது. உள்ளங்கையில் நீர் வைத்து உறிஞ்சிக் குடிக்கும் பொழுது, தொண்டை நனையும். பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது. சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது. உணவு அருந்திய அரைமணி நேரம் கழித்த பிறகு தான் நீர் அருந்த வேண்டும். இதனால் நாம் அடையும் பலன், நோய்களைத் தவிர்க்கலாம் என்பது மட்டுமே. அதுதானே இன்றைய வாழ்க்கைக்கு அவசியம்.
    முருகப்பெருமானை பிள்ளையாகப் பெற்று, தன் சொத்துகளை எல்லாம் உதறி முருகனுக்காக தொண்டாற்றியவர் சிவகாமி பரதேசி அம்மையார். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முருகப்பெருமானை பிள்ளையாகப் பெற்று, தன் சொத்துகளை எல்லாம் உதறி முருகனுக்காக தொண்டாற்றியவர் சிவகாமி பரதேசி அம்மையார். அவர் ஒரு சமயம் திருச்செந்தூர் முருகன் கோவில் தேரை வடம் பிடித்து இழுக்க முயற்சித்த போது, அங்கிருந்தவர்கள் தடுத்தனர். எனவே ‘தேர் நகரக்கூடாது’ என்று தன் தனயனான முருகப்பெருமானிடம் வேண்டுகோள் விடுத்து விட்டு, கடற்கரையில் போய் அமர்ந்துகொண்டார்.

    சிவகாமி பரதேசி அம்மையார், தேர் வடத்தை விட்டுச் சென்ற இடத்தில் இருந்து ஒரு அடி கூட தேர் நகரவில்லை. அனைவரும் போராடிப் பார்த்தனர்; எந்த பலனும் கிடைக்கவில்லை. விழா நடத்துபவர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக முருகனின் அடியவர்கள் சிலரிடம் சென்று, ‘தேர் நகராததற்கு என்ன காரணம்?’ என்று கேட்டனர்.

    அவர்கள், சிவகாமி பரதேசி அம்மையாரைப் பற்றியும், அவரை ஒருவர் நிந்தித்தது பற்றியும் கூறினர். மேலும் அந்த அம்மையார், முருகப்பெருமானின் அன்னையாகும் வரம் பெற்றவர் என்றும் எடுத்துரைத்தனர். இதனால் பதறிப்போன விழாக்குழுவினர், உடனடியாக ஓடிச் சென்று கடற்கரையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த சிவகாமி பரதேசி அம்மையாரை அழைத்து வந்தனர். அவர் தேர் வடத்தைப் பிடித்து இழுத்த பிறகே, தேர் அங்கிருந்து நகர்ந்தது.

    இதனால் அவரது புகழ் எட்டுத்திக்கும் பரவியது.

    பண்பொழி வந்த சிவகாமி பரதேசி அம்மையார், அங்கு புது தேரை உருவாக்கினார். வண்டாடும் பொட்டலில் அன்னதான சத்திரம் கட்டினார். அதோடு மட்டுமல்லாமல் கால்நடைகளை பராமரிக்க பசு மண்டபம் அமைத்தார். ராகு- கேது வணங்கிய உச்சிஷ்ட கணபதியை பிரதிஷ்டை செய்தார். அதன் மீது மண்டபம் கட்டி வழிபாட்டுக்கு கொண்டு வந்தார். ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவை, திருமலைக் கோவிலிலும், வண்டாடும் பொட்டலிலும் பத்து தினங்கள் கொண்டாட ஏற்பாடு செய்தார்.

    ஒரு நாள் முருகப்பெருமான், சிவகாமி பரதேசி அம்மையார் கனவில் தோன்றி, ‘தாயே! நாளைக்கு தாங்கள் வில்வண்டியில் புளியரைக்குப் புறப்படுங்கள். அவ்வூரில் உள்ள மிகப்பெரிய வயல்வெளியில் வண்டியை நிறுத்திவிட்டு, காளைகளை அவிழ்த்து விடுங்கள். அந்த காளைகள் ஓரிடத்தில் நின்று மண்ணை கால்களால் கிளறும். அந்த இடத்தில் எனக்கு பாத்தியப்பட்ட சொத்து பட்டயம் இருக்கிறது’ என்று கூறி மறைந்தார்.

    அந்த கனவிற்குப் பிறகு சிவகாமி பரதேசி அம்மையாருக்கு தூக்கம் வரவில்லை. விடிய விடிய விழுத்திருந்தார். மறுநாள் காலை விடிந்ததும் விடியாமலும் வில்வண்டியை கட்டிக்கொண்டார். தன் கணவரையும், இன்னும் சிலரையும் அழைத்துக் கொண்டு புளியரைக்கு சென்றார். அங்கு வயல்வெளியில் வண்டியை நிறுத்தி, காளைகளை அவிழ்த்து விட்டார். அது வெறிபிடித்தது போல் ஓடி, ஓரிடத்தில் நின்று மண்ணைக் கிளறியது.

    சிவகாமி பரதேசி அம்மையாரின் சமாதி

    சிவகாமி பரதேசி அம்மையார் கட்டளைப்படி, உடன் வந்தவர்கள் அந்த இடத்தைத் தோண்டினார்கள். அங்கே 10 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட கல் ஒன்று கிடைத்தது. அதில் வேலும் மயிலும் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்தக் கல்லில் முருகப்பெருமானுக்கு உரிய 160 ஏக்கர் அளவிலான நன்செய் நிலம் மற்றும் தோப்பு துரவுகளுக்கான விவரப் பட்டியல் இருந்தது.

    அந்தச் சொத்துகளை எல்லாம், ராயர் ஒருவர் பயன்படுத்தி வந்தார். ஆனால் திருமலை முருகன் கோவிலுக்கு அவர் எந்த திருப்பணிக்கும் உதவவில்லை.

    தன் மகனுக்கான சொத்துகளை எப்படி மீட்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார், சிவகாமி பரதேசி அம்மையார்.

    சிந்தனையின் ஊடே உறங்கியும் போனார். அப்போது மீண்டும் அவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நீங்கள் நாளை காலை பக்தர்களை திரட்டிக்கொண்டு புளியரைக்குச் செல்லுங்கள். அங்கு நமக்கு சொந்தமான நிலங்களில் ஏர் பிடித்து உழுங்கள். நான் உங்களுக்கு துணையாக வருவேன்’ என்றார்.

    மகனின் ஆணை கிடைத்ததும், மறுநாள் அதிகாலையிலேயே பக்தர்கள் பலரை அழைத்துக் கொண்டு, புளியரைச் சென்று முருகனுக்கு உரிய வயல்வெளியில் ஏர் பிடித்து உழுதார்.

    இதையறிந்த ராயர், தனது ஆட்களை திரட்டிக் கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தான். பின் காளைகளை அவிழ்த்து விட்டு, பக்தர்களை விரட்ட முயன்றான்.

    அப்போது காளைகள் அனைத்தும் ஆவேசம் கொண்டது போல், ராயரையும், அவர் திரட்டி வந்த ஆட்களையும் விரட்டின. இதையடுத்து அவர்கள் பயந்து ஓடி ஒளிந்தனர். பிரச்சினை முடிந்தது என்று பரதேசி அம்மையார் நினைத்தார். ஆனால் ராயர் விடுவதாக இல்லை. நீதிமன்றத்தை நாடினார். ஆனால் முருகப்பெருமானின் அருளால் நீதிமன்றத்திலும், சிவகாமி பரதேசி அம்மையாருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.

    இதையடுத்தும் பல காலம் முருகப்பெருமானுக்கு திருப்பணியாற்றி வந்தார், சிவகாமி பரதேசி அம்மையார். இவர் சமாதி நிலை அடைந்த காலம் மிக விசேஷமானது. முருகப்பெருமான் பிறந்த நன்நாளாம் வைகாசி விசாகத்தன்று, தன் மகனான திருமலை முருகனின் திருவடிகளில் கலந்தார். திருமலைக்குக் கீழாக, முருகன் சன்னிதிக்கு நேராக, வண்டாடும் பொட்டலில் சிவகாமி பரதேசியம்மையாரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இங்கு வைகாசி விசாகத்தன்று குருபூஜை நடக்கிறது.

    பக்தர்கள் பிரதிஷ்டை செய்த சிவகாமி பரதேசி அம்மையார் சிலை

    வண்டாடும் பொட்டலில் தான் தனக்கு சமாதி அமைக்கவேண்டும் என பரதேசிஅம்மையார் உயிரோடு இருக்கும் போதே முடிவு செய்துவிட்டார். திருமலை குமரனின் மூல இடத்தில் புளியமர அடியில் அவர் வீற்றிருப்பது போலவே, தான் சமாதி ஆகும் இடத்திலும் ஒரு புளிய மரத்தினை உருவாக்கினார். அதற்கான கருங்கல் மண்டபம் கட்டி வைத்து விட்டார்.

    அம்மையார் திருப்பணி செய்த 626 படிகளில் ஏறிச் செல்ல, வயதானவர்கள் திணறி வந்தார்கள். எனவே கீழே இருந்தே முருகனை தரிசித்து வந்தனர். இவர்கள் பிரச்சினை தீர 2010-ல் ரூ.5½ கோடி செலவில் இரு வாகனங்கள் சென்று வருகின்ற அளவுக்கு மலை சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த பணி முடிந்து வாகனங்கள் மலை உச்சி வரை செல்கின்றன.

    இந்த திருப்பணி செய்தவர்கள், சிவகாமி பரதேசி அம்மையாரின் சிலை ஒன்றையும் உருவாக்கினர். அந்த சிலை வண்டாடும் பொட்டலில், பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    இவ்விடம் வந்தாலே முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கிறது. மேலும் பெண் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இவ்விடத்தில் வந்து அம்மையை வணங்கி நின்றால், 100 சித்தர் பீடத்துக்கு சென்று தரிசித்த பலன் கிடைப்பதாக ஐதீகம். நாள் பட்ட நோய்கள் எல்லாம் நீங்குகிறது. கஷ்டங்கள் எல்லாம் மறைகிறது. நீண்ட நாள் வழக்கு தீருகிறது. இழந்த பொருள் மீண்டும் கிடைக்கிறது. வீடு கட்டும் யோகம் உருவாகுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக முருகப்பெருமானை போன்ற அழகான குழந்தைப்பேறு கிடைக்கிறது.

    சிவகாமி பரதேசி அம்மையை வணங்கி விட்டு, அருகில் உள்ள ராகு-கேது வழிபட்ட விநாயகரை வணங்க வேண்டும். பின்னர் கோவில் அடிவாரத்தில் உள்ள வல்லப விநாயகரை வணங்கி முருகன் பாதத்தினையும், அதன் அருகே பாறையில் புடைப்பு சிற்பமாக கூப்பிட்ட கையோடு அருள்புரியும் சங்கிலி மாடனையும் வணங்கி மலை மீது ஏறலாம்.

    அமைவிடம்

    நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் வண்டாடும் பொட்டல் உள்ளது. செங்கோட்டையில் 5 கிலோமீட்டரில் வண்டாடும் பொட்டலை அடையலாம். தென்காசி, செங்கோட்டைக்கு ரெயில் வசதி உண்டு. செங்கோட்டையில் அச்சன் கோவில் செல்லும் வழியில் பண்பொழி என்னும் இடத்தில் அம்மை சமாதியும், முருகன் கோவிலும் உள்ளது.
    திருமலை குமரனை, தனது குழந்தையாக எண்ணி, நாள்தோறும், ஏன் நாழிகை தோறும் அவருக்கு தொண்டு செய்து, பல திருப்பணிகளை செய்து நற்பேறு பெற்றவர், சிவகாமி பரதேசியம்மாள்.
    திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அழகுடன் காட்சியளிக்கும் அற்புதமான இடம்தான் ‘பண்பொழி’. இங்குள்ள திருமலை குமரன், மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் அற்புதத் தலைவன். பெரும்பாலுமே தெய்வத்தினை தனது தந்தையாக, தாயாக போற்றி வணங்குவது தான் வழக்கம். ஆனால் திருமலை குமரனை, தனது குழந்தையாக எண்ணி, நாள்தோறும், ஏன் நாழிகை தோறும் அவருக்கு தொண்டு செய்து, பல திருப்பணிகளை செய்து நற்பேறு பெற்றவர், சிவகாமி பரதேசியம்மாள். பண்பொழி மலை அடிவாரத்தில் உள்ள வண்டாடும் பொட்டலில் அடங்கி அருள்தரும் அற்புத பெண் சித்தரான இவரின் அற்புதங்கள் மிகச்சிறப்பானவை. பெண் சாது ஒருவர் அடங்கிய இடத்தில் அருள் தேடினால், அங்கு பல நூறு மடங்கு அருள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

    திருமலை குமரன் திருக்கோவில் சிறப்பாகவும், செல்வச் செழிப்போடும் விளங்குவதற்கு சிவகாமி பரதேசியம்மையார் தான் காரணம் என்றால் மிகையல்ல. பண்பொழி திருமலை முருகனை பற்றி பேசும் போதெல்லாம், சிவகாமி பரதேசியம்மையாரை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. செல்வச் செழிப்பாக பிறந்து வளர்ந்து, அனைத்தையும் துறந்து, முருகப்பெருமானுக்காக பரதேசி வேடம் பூண்டு, அருளாட்சி புரிந்தவர் அந்த பெண் சித்தர்.

    பண்பொழி என்பது மிகவும் விசேஷமான ஊர். இவ்வூரில் தான் அருணகிரிநாதருக்கு பண் (பாடலை) பொழிய ஆசி வழங்கினார், முருகன். எனவே இத்தலம் ‘பண்பொழி’ எனப் பெயர் பெற்றது. இந்நகருக்கு அருகாமையில் உள்ள பெரும் ஊர் ‘அச்சன் புதூர்’. இவ்வூரில் பெரும் நிலக்கிழராக வாழ்ந்து வந்தவர் கங்கை முத்து தேவர். இவர் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பெரும் நிலக்கிழாரான சிவகாமி அம்மையாரை மணந்தார். மேற்குதொடர்ச்சி மலையில் பல நூறு ஏக்கர் நிலங்களை தன்னகத்தே கொண்டவர்கள் இவர்கள். தங்களின் சொத்தை பராமரிக்க பல வேலையாட்களை வைத்திருந்தனர்.

    எல்லா செல்வமும் அவர்களிடம் இருந்தும், குழந்தைச் செல்வம் இல்லை. இதனால் அவர்கள் இருவரும் மன அமைதி இன்றி தவித்தனர். இதையடுத்து அவர்கள் இறை சேவையில் இறங்கினர். பாத யாத்திரிகர்களுக்கு திருப்பணி செய்தனர். அச்சன்புதூர் அருகில் பல கல் மண்ட பங்களை அமைத்து, அதில் வழிபோக்கர்கள் தங்கி செல்ல வழிவகுத்தனர். தெய்வ பக்தி, அடியார் களை அன்புடன் உபசரிப்பது முதலான அறச் செயல்களை கணவரின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக செய்து வந்தார் சிவகாமி பரதேசியம் மையார்.

    நெடுவயல் கிராமத்திலும் அடியார்கள் தங்கி செல்வதற்காக, கல் மண்டபத்தைக் கட்டிவைத்தார்கள். அந்த மண்டபத்தில் தான் ‘வாலர் மஸ்தான்’ எனும் இஸ்லாமியத் துறவி ஒருவர் வந்து தங்கினார். அவர் தவ வலிமையில் சிறந்தவர். சித்து விளையாட்டுகளிலும் வல்லவர். தன் இடத்தைத் தேடி வந்த அந்தத் துறவிக்கு, அன்போடு பணிவிடை செய்து அன்னமிட்டு உபசரித்து வந்தார், சிவகாமி பரதேசிம்மையார்.

    இந்த செயல் உறவுக்காரர்களுக்கு பிடிக்க வில்லை. ‘குழந்தை குட்டி இல்லை. இருக்கிற சொத்துகளை இப்படி வாரி இறைத்தால், இறுதியில் பிச்சைதான் எடுக்கவேண்டும். இருக்கும் சொத்து களை நமக்காவது கொடுத்தால், நம் பிள்ளைக் குட்டிகளாவது நல்லா இருக்கும். அதையும் செய்யாமல் இப்படி பணத்தை வர்றவனுக்கும், போறவனுக்கும் வாரிக் கொடுக்கிறார்களே' என அங்கலாய்த்தனர்.

    அதோடு நில்லாமல், சிவகாமி பரேதசியம் மையார் மீது வீண் பழி சுமத்தி வீட்டோடு உட்கார வைத்து விடவும் முடிவு செய்தனர். அதன்படி சிவகாமி பரதேசியம்மையாரின் கற்பு நெறி வாழ்க்கைக்கு களங்கம் கற்பித்தனர். இதைப் பொறுக்க முடியாத அம்மையார், ‘நான் கற்புநிலை தவறாதவள், களங்கமற்றவள் என்றால், நான் தெருவின் மேலக்கோடியில் திரும்பும் முன், என்னை பழித்து பேசியவரின் வீட்டில் இடி விழட்டும்' என்று சாபமிட்டார். அதன் பின் அங்கிருந்து அவர் கிளம்பினார்.

    அவர் சாபமிட்ட காலம் கோடைகாலம். சுட்டெரிக்கும் வெயில் காலை 9 மணிக்கே வந்து தெருக்களை வறுத்தெடுத்தது. ஆனாலும் அம்மை யின் சபதம் ஏற்று, வருண பகவான் வெகுண்டு எழுந்தான். திடீரென்று மின்னலும், இடியும் தோன்றியது. மறு நொடியே அம்மையாரை பற்றி தவறாக பேசியவர் வீட்டில் இடி விழுந்தது. எனவே அவரைப் பற்றி புறம் பேசியவர்கள், அவரது சக்தியைக் கண்டு அமைதி அடைந்தனர். பலரும் அவரை வணங்கத் தொடங்கினர்.

    ஆனால் சிவகாமி பரதேசியம்மையின் மனமோ அமைதி இன்றி தவித்தது. ‘தனக்கு குழந்தை இல்லாதது தானே பெரும் குறை. இது பற்றி மஸ்தானிடம் கேட்போம்' என கல் மடத்துக்கு கணவருடன் சென்றார்.

    மஸ்தான், ‘தாயே! நீயோ தெய்வப்பிறவி. உனக் கென்று குழந்தைபேறு ஏது? உனக்கு தென்திருமலை அடிவாரத்தில் அகத்தியருக்கே தமிழ் போதித்த முருகக் கடவுளே மகனாய் கிடைப்பான்' என அருளினார்.

    ‘ஐயா! என் குழந்தை எங்கே இருப்பான்? எனக்கு எப்படி கிடைப்பான்?' என சிவகாமி அம்மையார் கேட்டார்.

    ‘கவலைப்படாதே.. பண்பொழி மலை அடிவாரத் தில், நீ செல்லும் இடத்தில் ஒரு பொட்டல் காடு உண்டு. அதன் மேலே வண்டு ஆடிக்கொண் டிருக்கும். அங்குதான் முருகன், குழந்தையாய் உன் கையில் கிடைப்பார்’ என அருளினார்.

    தம்பதியினர் அங்கிருந்து கிளம்பினர். தங்களோடு சிறு குழந்தையில் இருந்து உண்மையாக உழைத்துக் கொண்டிருந்த சங்கிலிமாடன் என்பவரையும் உடன் அழைத்துக்கொண்டு கிளம்பினர்.

    ஒரு குறிப்பிட்ட இடம் வந்தது. அவ்விடம் பெரும் பொட்டல்காடாக இருந்தது. அதில் கரும் வண்டு ஒன்று ரீங்காரமிட்டு வட்டமிட்டது. அதன் அருகே உள்ள குளக்கரையில் முருகன், குழந்தையாக கிடந்தார். அவரின் அழுகுரல் கேட்டு அருகே ஓடிச்சென்று அந்த குழந்தையை தழுவி தன் மார்போடு அணைத்து ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிகழ்வை,

    ‘மகனே யென்றம்மை தானும்
    மார்பொடு சேயைச் சேர்த்து
    முகத்தோடு முகத்தை வைத்து
    முத்தமிட்டணைத்துக் கொண்டு
    மகனே யென்றழைத்தபோது
    மார்க்கண்டன் ஒடுங்கி நெஞ்சம்
    பகவனை சேர்ந்த ணந்த
    பான்மைபோல் இருந்த தைய’

    என அச்சன்புதூர் கவிஞர் சுப்பையா, தனது ‘சிவகாமி அம் மையார் கவிதை வரலாறு' நூலில் நெஞ்சம் நெகிழ குறிப்பிடுகிறார்.

    கோவில் திருக்குளம்

    குழந்தையாக இருந்த முருகப்பெருமான், திருமலை முருகனாய் சிவகாமி அம்மைக்கு காட்சி தந்து, அதன் பின் திரு மலையில் மறைந்தார். முருகன் வண்டாடிய பொட்டலில் கிடை த்த காரணத்தினால், இவ்வூரு க்கு ‘வண்டாடும் பொட்டல்’ என பெயர் விளங்கியது.

    முருகன் மறைந்த திருமலை என்னும் பைம்பொழில் சிறப்பு பெற்ற மலை. அக்காலத்தில் முள்செடிகளும் மூங்கில் புதர்களும் நிறைந்த காட்டுப் பகுதியாக கிடந்தது. அது போதாதென்று கொடிய காட்டு விலங்குகளும் அங்குச் சுற்றித் திரிந்தன. எனவே பகல் நேரத்தில் கூட அங்கே செல்ல மக்கள் அச்சப்பட்டனர். ஆனால் சிவகாமி பரதேசியம்மையார், எதையுமே லட்சியம் செய்யாமல் மலை மீது ஏறினார். மலைக்கு மேல் அருள்பாலித்த திருமலைக்குமார சுவாமியை தரிசித்தார்.

    சிறப்பு மிக்க அந்த தெய்வத்தையே, மகனாக பெற்றதை எண்ணி மகிழ்ந்த சிவகாமி பரதேசியம் மையார், அந்த ஆலயத்திற்கு திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினார். இதற்காக வண்டாடும் பொட்டலில் மடம் அமைத்தார். திருப்பணி தொடங்கியவுடன் பரதேசியம்மையாரின் வடிவமும் மாறியது. காவி உடுத்தினார். கழுத்தில் ருத்ராட்சம் தரித்தார். கரங்களில் வேலாயுதமும் கமண்டலமும் கொண்டு, நெற்றியில் திருநீறும் குங்குமமும் அணிந்து திருமலை குமரனுக்கு சேவையைத் தொடங்கினார்.

    யாத்திரியர்களுக்குத் தினமும் உணவு வழங்கினார். கோடை காலத்தில் நீர் மோர், பானகம் வழங்கினார். தான் தொடங்கிவைத்த திருப்பணிகள் நிலையாக நடைபெற, ஏராளமான நன்செய் நிலங்களையும் மானியமாக்கி வைத்தார். மலையின் மேலே உள்ள வசந்த மண்டபம் திருப்பணி தொடங்கியது. ஏறத்தாழ 500 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையில் பணியை தொடங்கினார். இதற்காக முருகன் அடிமைகளை அழைத்தார். தற்போது போல அப்போது படிகளும் கிடையாது. வாகனங்கள் ஏறிச்செல்ல வழியும் கிடையாது. செல்லும் வழியில் கால் வைக்க மட்டுமே பாறையில் சிறு சிறு குழி இருக்கும். அதன் வழியாகத்தான் பாறைகளை தூக்கிச் செல்ல வேண்டும்.

    சிவகாமி பரதேசி அம்மையார் நினைத்திருந்தால் திருமலையை குடைந்து கூட, முருகப்பெருமான் ஆலயத்தை அமைத்திருக்க முடியும். ஆனால் ‘இது தன் புதல்வன் மலை. இம்மலைக்கு பங்கம் எதுவும் ஏற்படக்கூடாது’ என்பதற்காக, வேறு இடங்களில் இருந்து கற்களைக் கொண்டு வந்தார்.

    மலை உச்சிக்கு தன்னோடு வேலை செய்யும் ஊழியர்களோடு, அம்மையாரும் தலைச்சுமையாக கற்களை தூக்கிச் சென்றார். நடந்து கூட செல்லமுடியாத இடத்தில் பாறைகளை முதுகில் தூக்கி கொண்டு, மேலே கொண்டு சென்றவர் களிடம் இருந்து நழுவி விழும் பாறைகளை தனது தலையால் தடுத்து, பின் தூக்கிச் சென்றும் திருப்பணி செய்தார். அதற்கு அவரது தெய்வ சக்தி ஒத்துழைத்தது. சில நேரங்களில் பாறைகளை கயிறு கட்டி இழுத்த போது, தனது தலைமுடியை சேர்த்துக்கட்டி பாறை களை மேலே இழுத்துச் சென்றுள்ளார். இப்படித்தான், திருமலையில் வசந்த மண்டபம் உள்பட பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

    அதோடு மட்டுமல்லாமல் கோவில் தெப்பக்குளத்தை முழுவதுமாக தூர்வாரி, அதை செம்மைப்படுத்தும் பணியையும் மிக கச்சிதமாக செய்து முடித்தார். தற் போதும் கோயில் மலை உச்சியில் அழ காகக் காட்சி தரும் அந்த தெப்பக்குளம், சிவகாமி பரதேசி அம்மையார் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கிறது.

    அம்மையார் ஒவ்வொரு கடைசி வெள்ளிக்கிழமையிலும், திருச்செந்தூர் செல்வது வழக்கம். அங்கு முருகப் பெருமானை தரிசித்து விட்டு நடைபயண மாகவே பண்பொழிக்கு திரும்ப வந்துவிடுவார்.

    ஒரு நாள் செந்தூரில் ஆடிவரும் முருகப் பெருமானின் தேரை பார்த்தார். அவன் அழகு முகத்தைக் கண்டு ஓடோடி அருகில் சென்றார். தேரின் வடத்தினை பிடித்து இழுத்தார்.

    ‘யார் இது.. பெண் பரதேசி. தூரப்போ' என தடுத்தார் ஒருவர். கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அம்மையார்.

    ‘என் மகன் தேரை நான் வடம்பிடித்து இழுக்கக் கூடாதா? ‘முருகா! நீ என் மகன் தான் என்றால், இந்தத் தேர் நகரக்கூடாது' என ஆணையிட்டு விட்டு, கடற்கரையில் போய் அமர்ந்து கொண்டார்.

    தேர் நகர்ந்ததா?

    திருமலைக்கு முருகன் வந்த கதை


    திருமலையை ‘பிரணவத்தின் மலை’ என்றும் கூறுவார்கள். பிரணவத்தின் வடிவான ‘ஓம்’ என்ற வடிவில் இம்மலை இருப்பதால், இந்தப் பெயர் வந்தது. ‘அகத்தியம்’ என்னும் முதல் தமிழ் இலக்கண நூலை அருளியவர் அகத்தியர். அவருக்கும் தமிழ் போதித்தவர் முருகப்பெருமான். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தான், ஓம் வடிவில் அமைந்த பண்பொழி திரு லையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து அகத்தியர் வணங்கினார் என்று கூறுகிறார்கள். மேலும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக அழகிய பூஞ்சுனை ஒன்றையும் அகத்தியர் அமைத்தார்.

    இந்த பூஞ்சுனையில் ஞாயிறு, திங்கள், அக்கினி ஆகிய மூவர் பெயராலும் மூன்று குழிகளை ஏற்படுத்தினார். இக்குழியில் எப்போதும் நீர் நின்று கொண்டிருக்கும். இந்த குழியில் நீர் குறைந்து விடுமானால் உடனே மழை பொழிந்து குழியும், சுனையும் நிறைந்து விடும் என்பது ஐதீகம். இச்சுனையில் நாள்தோறும் குவளைப்பூ ஒன்று பூக்கும். அப் பூவினைக் கொண்டு, சப்த கன்னியர்கள் முருகனை வழிப்பட்டு வந்திருக்கிறார்கள்.

    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு பூவன் பட்டர் என்பவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நான் அருகில் உள்ள மூங்கில் காட்டு புதரில் புதையுண்டு கிடக்கிறேன். நான் இருக்கும் இடத்தை எறும்புகள் கூட்டம் கூட்டமாக வந்து அடையாளம் காட்டும். என்னை எடுத்து வந்து திருமலையில் பிரதிஷ்டை செய். நான் அனைத்து மக்களுக்கும் காக்கும் தெய்வமாக இருப்பேன்’ என்று கூறினார்.

    அதன்படி மறுநாள் பூவன் பட்டர் மூங்கில் காட்டுக்குள் சென்றார். அங்கு எறும்புகள் அடையாளம் காட்டும் இடத்தில் முருகனை கண்டெடுத்து திருமலையில் பிரதிஷ்டை செய்தார். அது முதல் திருமலை குமரன் காக்கும் தெய்வமாக இருந்து அருள் வழங்கி வருகிறார். 
    திருநெல்வேலி நவ்வலடியில் கடல் தண்ணீரை தனது கையசைவில் விரட்டிய சித்தர், வலுமூர்த்தி வேலாயுத சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.
    திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலூகாவில் அமைந்துள்ள கடற்கரை நகரம் ‘நவ்வலடி’. கடற்கரை சாலையில் உவரிக்கும், வித்தியாபதி நகருக்கும் இடையே அமைந்துள்ள அழகான ஊர். இவ்வூரில் தான் கடல் தண்ணீரை தனது கையசைவில் விரட்டிய சித்தர், வலுமூர்த்தி வேலாயுத சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

    திசையன்விளை அடுத்த இடையன்குடி அருகே உள்ள சிற்றூர் பொத்தகாலன் விளை. இவ்வூரில் நாடாழ்வாருக்கும் - கோசலா பிராட்டியாருக்கும் கி.பி. 1848-ம் ஆண்டு மகனாய் பிறந்தவர் வேலாயுத சுவாமிகள். சிறு வயது முதலே சிவன் மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்தார். அவரது வாய் எப்போதும் சிவ நாமத்தையே உச்சரித்தபடி இருக்கும்.

    தானாகவே ஞானம் பெற்று வல்லமை மிக்கவராக வாழ்ந்த காரணத்தினால், ஊர்க்காரர்கள் அவரை ‘வல்லமையுள்ள வேலாயுதம்’ என்று அழைத்தனர். ஒரு கட்டத்தில் அந்த ஊரில் வேறு ஒரு மதம் பரவியது. ஊர் மக்கள் அனைவரும் பிற மதத்தை தழுவிய காரணத்தால், தனது தாயாருடன் அந்த ஊரை விட்டு வெளியேறினார் வேலாயுதம் சுவாமிகள்.

    குட்டம் என்னும் ஊருக்கு வந்தார். அங்கு சில காலம் வாசம் செய்தார். தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய அங்கிருந்து கிளம்பினார். இப்போது அவர் வந்தது ராதாபுரம் அருகே உயத்தனூர் என்னும் கிராமம். அவ்வூரைச் சேர்ந்த குக்கிராமம் தான் வட்ட விளை. இதன் ஆதி பெயர் பூந்தோட்டம். பெயருக்கு ஏற்றாற்போல, பூத்துக் குலுங்கும் தோட்டங்கள் நிறைந்த ஊராகவே அது விளங்கியது.

    இவ்வூரில் உள்ள நாராயணசாமி கோவிலில் வடநாட்டை சேர்ந்த சுவாமி ஒருவர் தங்கி பணிவிடை செய்து வந்தார். வேலாயுத சுவாமியை கண்ட அவர், ‘வா... வா.. வேலாயுதம். உன்னைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். நீ! இங்கிருந்து மக்களுக்கு சேைவ புரிய வேண்டும்' என தனக்குதெரிந்த சில வித்தைகளை சுவாமிக்கு கற்றுக் கொடுத்தார். சிறிது காலத்திலேயே சுவாமி பல அற்புதங்களை அறிந்து கொண்டார். அதன் மூலம் மக்களுக்கு உதவ ஆரம்பித்தார். எனவே வடநாட்டு சுவாமி, வேலாயுதம் சுவாமியிடம் கோவில் பொறுப்பை கொடுத்து விட்டு தவம் செய்ய புறப்பட்டார்.

    இதையடுத்து வேலாயுத சுவாமிகள், தினந்தோறும் நாராயண சுவாமியையும், பத்ரகாளியம்மனையும் வணங்கி பணிவிடை செய்து வந்தார். பத்ரகாளியின் முன்பு அமர்ந்து கடும் தவம் புரிந்தார். அதன் பயனாக அம்மையுடன் பேசும் வல்லமையை பெற்றார். அன்னை மேலும் பல சக்திகளை அவருக்கு அளித்தார். இதன் மூலம் அங்கு வரும் பக்தர்களுக்கு அருள் தர ஆரம்பித்தார். தன் தாயாரையும் தன்னுடன் வைத்து பேணி பாதுகாத்து வந்தார்.

    வேலாயுத சுவாமிகள் சுற்றியுள்ள ஊர்களான குட்டம், பொத்தக்காலன்விளை, ஆனைக்குடி ஆகிய ஊருக்கு செல்லும் போதெல்லாம், நவ்வலடிக்கும் சென்று வருவார். நவ்வலடி அந்த சமயத்தில் சிற்றூர். இங்கு கொடிக்கால் தொழில் நடந்து கொண்டிருந்தது. சிறு சிறு தோட்டங்களும், தண்ணீர் பாய்க்கும் கிணறுகளும் கொண்ட அந்த ஊரில் ஏராளமான வெற்றிலை பயிரிடும் விவசாயிகள் வாழ்ந்து வந்தனர். இவ்வூரில் உள்ள வெற்றிலை வியாபாரிகள், தாங்கள் பயிரிட்ட வெற்றிலையை விற்பதற்காக, அவற்றை தலைசுமையாக தூக்கிக்கொண்டு ராதாபுரம் செல்வார்கள்.

    அப்போது, வட்டவிளையில் வேலாயுத சுவாமியிடம் தரிசனம் ஆசி பெற்றுவிட்டு தான் வியாபாரத்தை தொடங்குவார்கள். சுவாமியின் ஆசியால், வெற்றிலை விற்பனை நல்லபடியாக நடந்தது. இதனால் அவர்களுக்கு வேலாயுத சுவாமிகளின் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் உதயத்தூரை சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு சுவாமியின் அருள் கிடைத்தது. உதயத்தூர் சாதாரண ஊர் அல்ல. ஆதிசைவம் தோன்றிய இடம் என்று கூறப்படுகிறது. இவ்வூரை பூர்வீகமாக கொண்ட எட்டுவீட்டு பிள்ளைமார்கள், புத்திக்கூர்மையானவர்கள். அவர்கள் கேரளாவுக்கு சென்று அங்குள்ள அரசவையில் அமைச்சராக பணியாற்றியவர்கள். அஷ்ட கர்ம வித்தைகள் என்னும் கேரள மலையாள மாந்திரீகத்தைப் பின்பற்றி வாழ்ந்தனர். பலருக்கும் அதைக் கற்றும் தந்தனர். இதனால் கேரளத்தில் பேரும்புகழுடன் வாழ்ந்தனர்.

    இவர்களின் ஒருவர் தான் சங்கரன் பிள்ளை. மந்திரக் கலைகளில் நிகரற்று விளங்கியவர். ஆனாலும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார். மற்றவர்களுக்கு மந்திர சக்தி மூலம் நல்லது கெட்டது செய்து வந்தாலும் கூட, தன் வாழ்க்கை சாத்தியமில்லாமல் தான் இருந்தது. அவரது துணைவியார் அனந்தம்மாளுக்கு வரிசையாக ஐந்து ஆண் பிள்ளைகள் பிறந்தனர். அனைவரும் சிறிது காலத்திலேயே இறந்து விட்டனர்.

    வட்டவிளையில் உள்ள நாராயண சுவாமி


    இதனால் மனமுடைந்த அனந்தம்மாள், வலுமூர்த்தி வேலாயுத சுவாமிகளைப் பற்றி அறிந்து அவரிடம் போய் நின்றார். அவரைப் பார்த்ததுமே அனந்தம்மாளின் கண்களில் கண்ணீர் கொட்டியது.

    அதைக் கண்ட வேலாயுத சுவாமிகள், ‘ஏனம்மா அழுகிறாய்?. என்ன வேணும் சொல்லு?' எனக் கேட்டு அவரைத் தேற்றினார்.

    அனந்தம்மாள் குழந்தைகள் தங்காத துயரத்தைச் சொல்லி கண்ணீர் விட்டார்.

    வேலாயுத சுவாமிகள், “தாயே உன் கணவர் பாவத்தொழில் செய்து வருகிறார். அவர் செய்யும் மாந்திரீகத்தால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அவரை என்னிடம் அழைத்து வா. ‘இனிமேல் மாந்திரீகம் எதுவும் செய்யமாட்டேன்’ என்று என் பிரம்பின் மேல் உன் கணவர் சத்தியம் செய்து தரவேண்டும். மாந்திரீகம் செய்ய அவர் பயன்படுத்தும் ஏடுகளை எனது முன்னால் எரிக்க வேண்டும். இப்படி செய்தால் தான் உனக்கு குழந்தைகள் தங்கும்” என்றார்.

    ‘சரி.. சாமி..' என அனந்தம்மாள் கிளம்பினார். கேரளா சென்று தன் கணவரிடம் விவரத்தைக் கூறினார்.

    முதலில் மறுத்த சங்கரன் பிள்ளை, பிறகு ‘சரி..’ என்று தலையசைத்தார். அதற்கும் காரணம் இருந்தது. ‘அந்த சாமியார் என்ன.. என்னை விட சக்தி படைத்தவரா? அதையும் தான் பார்த்து விடுவோமே’ என்ற எண்ணம் சங்கரன் பிள்ளை மனதில் இருந்தது.

    மனைவியுடன் வட்டவிளை வந்த சங்கரன் பிள்ளை, நாராயண சுவாமி கோவில் முன்பு இருந்த வேலாயுத சுவாமியைப் பார்த்தவுடன் அவரது மனதில் இருந்த எண்ணம் மறைந்து போயிற்று. ஏனெனில் வேலாயுத சுவாமிகள் அவ்வளவு எளிமையாக இருந்தார். தீர்க்கமான கண்கள், யாரையும் வசீகரிக்கக் கூடிய தோற்றம், இனிமையான குரல் அனைத்து சங்கரன் பிள்ளையைக் கவர்ந்தது.

    மறுநிமிடம் அவரை அறியாமலேயே சுவாமி முன்பு மண்டியிட்டார். சுவாமியின் பிரம்பின் மீது கை வைத்து, ‘இனிமேல் மாந்திரீகம் செய்ய மாட்டேன்' என சத்தியம் செய்து, மாந்திரீக ஏட்டை எரித்து சாம்பலாக்கினார்.

    சங்கரன் பிள்ளைக்கு திருநாமமிட்டார் சுவாமி.

    ‘எப்பா.. ஐந்து பிள்ளைகள் போச்சுன்னு கவலை படாதே. உனக்கு ஆறு பிள்ளைகள் பிறப்பார்கள். பல நகர் தாண்டி தலைநகர் செல்வார்கள். கொடி கட்டி வாழ்வார்கள்’ என்று வாக்களித்தார்.

    காலங்கள் கடந்தது.

    சங்கரன் பிள்ளை- அனந்தம்மாள் தம்பதிகளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு நாராயணன், பிச்சையா, கருப்பசாமி, பரமசிவம், சுந்தரம், கல்யாண சுந்தரம் என பெயரிட்டு மகிழ்ந்தனர்.

    நவ்வலடியில் உள்ள வேலாயுத சுவாமி பீடம்

    குழந்தைகள் அனைவரும் வளர்ந்ததும், பிழைப்பை தேடி தலைநகர் சென்னைக்கு சென்றனர். அவர்களின் கடுமையான உழைப்பால், மிகப்பெரிய செல்வந்தர்கள் ஆனார்கள். சென்னையில் மிகவும் பிரபலமான மூன்று தியேட்டர்களின் அதிபர்களாக மாறினார்கள்.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு வேலாயுத சுவாமிகளின் புகழ் பரவத் தொடங்கியது.

    தினமும் நாராயண சுவாமி கோவில் முன்பு, வேலாயுத சுவாமிகள் பிரம்போடு அமர்ந்து விடுவார். அவரை தேடி வரும் மக்களுக்கு நாமம் கொடுப்பார். நோய்வாய் பட்டவர்களுக்கு குணம் அளிப்பார். வழி தவறி செல்பவர்களுக்கு ஞானம் உபதேசிப்பார்.

    தனது வயதான தாயாரை கண்ணின் இமைபோல காத்து வந்தார். ஒரு காலகட்டத்தில் அன்னையார் தவறி விட்டார். அவரை வட்டவிளையில் உள்ள ஒரு விளையில் அடக்கம் செய்து, கல்லறை கட்டினார். பின் தாயாரையும் வணங்க ஆரம்பித்தார். சுவாமி வணங்கிய தாயார் கல்லறையுடன் சேர்ந்த விளை, தற்போதும் ‘சுவாமி விளை’ என அழைக்கப்படுகிறது.

    வட்டவிளையைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் முன்னோர்கள் பிழைப்புக்காக மலையாள நாடு சென்றனர். அங்கு வேலை கிடைக்காமல் தவித்தனர். துன்பங்களின் காரணமாக, வேறு வழியின்றி ஒரு மந்திரவாதியிடம் பணியில் சேர்ந்தனர். அந்த மந்திரவாதி தீமைகளை மட்டுமே செய்பவன். தீய சக்திகளைப் பயன்படுத்தி, அந்தப் பகுதி மக்களை துன்புறுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

    ஒரு கட்டத்தில் மந்திரவாதி செய்யும் அட்டகாசத்தைப் பொறுக்க முடியாத தங்கவேலின் முன்னோர்கள், அனைவரும் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். மந்திரவாதிக்கு தெரிந்தால் அழித்து விடுவான் என்பதால் இரவு வேளையில் கிளம்பி விட்டனர். இதை அறிந்து கொண்ட மந்திரவாதி, தன் ரகசியம் தெரிந்தவர்கள் உயிரோடு இருக்கக் கூடாது என்று நினைத்து, அவர்களை அழிப்பதற்காக 21 வாதைகளை (பேய்களை) அனுப்பிவைத்தான்.

    மந்திரவாதியிடம் கற்ற சில வித்தைகளைக் கொண்டு, பேய்களை கட்டுப்படுத்த நினைத்தனர். ஆனாலும் அவர்களில் இருவரை பேய்கள் பலி வாங்கியது. மற்றவர்கள் வட்டவிளைக்கு தப்பி வந்தனர். அங்கு நாராயணசாமி கோவிலில் இருந்த வேலாயுத சுவாமியின் காலடியில் போய் விழுந்தனர்.

    அவரிடம் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பற்றி எடுத்துரைத்தனர். அதற்குள் 21 வாதைகளும் அங்கு வந்து விட்டன. அவர்கள் மீது அவை ஆவேசமாக வந்தபோது, வேலாயுத சுவாமிகள், கையில் பிரம்புடன் வீறு கொண்டு எழுந்தார்.

    அந்த வாதைகள் சுவாமியிடம் அடிபணிந்ததா?
    திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெரியநாயகம் பிள்ளை - பொன்னம்மாள் தம்பதிகளுக்கு ஆறுமுக சுவாமி மகனாக பிறந்தார்.
    திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெரியநாயகம் பிள்ளை- பொன்னம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லை. மகப்பேறு வேண்டி பல்வேறு புண்ணிய நதிகளில் நீராடினர். இறுதியில் திருச்செந்தூர் கடலில் நீராடி முருகப்பெருமானைத் துதித்து நின்றனர். முருகனின் அருளால், அவர்களுக்கு கொல்லம் ஆண்டு 959 (கி.பி.1784) சித்ரா பவுர்ணமியில், சுவாதி நட்சத்திரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆறுமுகம் என பெயர் வைத்தனர்.

    இளம் வயதில் நன்றாக கல்வி கற்ற ஆறுமுகம், அதன் பயனாக சீவநல்லூரில் கிராம அதிகாரியாக பணி அமர்த்தப்பட்டார். அவரது நிர்வாகப் பணியால், சீவநல்லூருக்கு பல நன்மைகளைச் செய்தார். இவருக்கு புளியரையைச் சேர்ந்த ஆரியவடிவு என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தனர்.

    இல்லறத்தினையும், அரசுப் பணியையும் இருகண்களாக தொடர்ந்தார். இந்த தம்பதியருக்கு பொன்னம்மாள், உலகம்மாள் என இரு குழந்தைகளும் பிறந்தன. இந்த நேரத்தில்தான் நாம் இந்த உலகில் பிறந்தது, குழந்தைகளை வளர்ப்பதற்கும், வரி வசூலிக்கவும் மட்டுமா? என ஆறுமுகம் மனதில் கேள்வி பிறந்தது.

    கயிலாசம் என்பவர் ஆறுமுகத்திடம் தண்டல்காரராகப் பணியாற்றியவர். இட்ட வேலையை முகம் கோணாது செய்யும் சிவ பக்தர். ஒரு நாள் மாலை நேரம். இருவரும் சீவநல்லூரில் இருந்து செங்கோட்டைக்கு கிளம்பினர். சற்று தொலைவு வந்ததும், ‘ஐயா! வயிறு சரியில்லை. அதோ அந்தத் தோப்புக்குள் சென்று விட்டு வந்துவிடுகிறேன்’ என கிளம்பினார் கயிலாசம்.

    நீண்ட நேரம் அவரை எதிர்பார்த்திருந்தார் ஆறுமுகம். ஆனால் அவர் வரவில்லை. எனவே தோப்புக்குள் சென்றார். அங்கே ஒரு பள்ளத்தில் கயிலாசம் பத்மாசனம் இட்டு, அந்தரத்தில் மிதந்தபடி தவமேற்றிக் கொண்டிருந்தார். முதலில் அதிர்ந்த ஆறுமுகம், அதன் பின் அவர் அருகில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். இறுதியில் தவத்தில் இருந்து எழுந்த கயிலாசத்தை வணங்கி நின்றார்.

    அதிர்ந்தே போய்விட்டார் கயிலாசம். ‘சுவாமி! என்னை வணங்காதீர்கள்’ என்றார்.

    ஆனால் ஆறுமுகம், ‘சுவாமி! எனக்கு தாங்கள் உபதேசிக்க வேண்டும்’ என்று வேண்டினார். அவரது தீர்க்கமாக வேண்டுதலை மறுக்க முடியாத கயிலாசம், ஆறுமுகத்தின் காதில் ரகசியமாக சிலவற்றை ஓதினார்.

    அன்று முதல் ஆறுமுகத்தின் வாழ்க்கை முறையே மாறிப் போய் விட்டது. அப்போது அவருக்கு வயது 35. பந்தம் பாசம் அனைத்தையும் தூக்கி எறிந்தார். கால் போன போக்கில் நடந்தார். குற்றால மலைக்கு சென்றார். மலை மீது நடந்து செண்பகாதேவி அருவிக்கு சென்றார். அனைத்தையும் துறந்த துறவிகள் கூடும் இடமான குகையில் ஆறுமுகமும் தங்கினார்.

    அன்று சித்ரா பவுர்ணமி. அன்னையின் அருளைப் பெற தவத்தில் ஈடுபட்டனர், அங்கிருந்த துறவிகள். இதனால் குகைக்கு உள்ளே செல்ல ஆறுமுக சுவாமிக்கு இடமில்லை. எனவே குகை வாயிலில் அமர்ந்து தவம் புரிந்தார். நள்ளிரவு.. சலசலத்து ஓடும் அருவி நீர் சப்தம்.. அருவி தூறல் ஆறுமுக சுவாமியின் மீது விழுந்தது. அதை உணரும் நிலையில் அவர் இல்லை. அப்போது ஒரு புலி அவர் மீது பாய்ந்தது. அப்படியே தன் வாயில் கவ்வி இழுத்துச் சென்றது.

    ஆறுமுக சுவாமி தன்னுணர்வு வந்து எழுந்த போது, அவர் பரதேசி புடை என்னும் குகையில் இருந்தார். ‘என்ன நடந்தது?’ என்று ஆறுமுக சுவாமி உணரும் முன்பாக, அங்கே அன்னை அவருக்கு திருக்காட்சி கொடுத்தாள். அடுத்த கணமே அவருள் ஞானத்தின் பேரொளி எழுந்தது.

    அதன் பின் ஆறுமுக சுவாமி, வீட்டுக்கு திரும்பினார். அவரது செயல், நடவடிக்கை எல்லாமே வீட்டில் இருந்தவர்களுக்கு புதிராகவே இருந்தது.

    சகோதரர்கள் இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று அறை ஒன்றில் கால் விலங்கிட்டு அடைத்தனர். சித்த புருஷரான ஆறுமுக சுவாமிகளின் மனம் நோக ஆரம்பித்தது. தவ வலிமையால் கால் விலங்குகளை அறுத்தெறிய செய்தார். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்தனர்.

    இவர் நமது குடும்பத்துக்காக வாழ்பவர் அல்ல. இந்த உலகம் வளம்பெறுவதற்காக பிறந்த மகான் என்பதை குடும்பத்தார் உணர்ந்தனர்.

    ஆறுமுக சுவாமிகளின் மகத்துவம் எங்கும் பரவியது. பல்வேறு ஊர்களில் இருந்தும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் ஓடிவந்தனர். கடைவீதியில் நடந்துவரும் போது, வியாபாரிகள் கடையை விட்டு கீழே இறங்கி கைகட்டி நிற்பார்கள். சுவாமிகள் ஏதாவது ஒரு கடையின் கல்லாப் பெட்டியில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து யாருக்காவது கொடுப்பார். அன்று அந்தக் கடையில் வியாபாரம் அமோகம்தான்!. எனவே ‘சுவாமிகள் இன்று நமது கடைக்கு வர மாட்டாரா?’ என வியாபாரிகள் காத்துக் கிடந்தனர்.

    பெரும்பாலும் யாரிடமும் சுவாமிகள் பேசுவதில்லை. பேசினாலும் மழலைச் சொல்லில் தான் பேசுவார். கந்தல் துணிதான் கட்டியிருப்பார். எப்போதும் பாம்புகளுடன்தான் விளையாடுவார். ‘டேய் சங்கரா’ என்று அழைப்பார். எங்கிருந்தெல்லாமோ பாம்புகள் வந்து, அவர் மேனியில் ஊர்ந்து விளையாடும். யாரேனும் வந்தால், ‘டேய் பாவிகள் வந்தாச்சு, கிளம்புங்க!’ என்பாராம். அவை மறைந்துவிடும்.

    ஆறுமுக சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் போதெல்லாம், பல நாட்கள் அங்கேயே தங்கி விடுவார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையின் அடிவார ஊருக்கு சுவாமிகள் சென்றுள்ளார். அங்குள்ள மக்கள் சுவாமிகளை வணங்கி நின்றனர். ‘சுவாமி மூன்று வருடங்களாக மழை பொய்த்து விட்டது. நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும்' என வேண்டி நின்றனர். சிறிது நேரம் யோசித்த சுவாமிகள் அங்குள்ள சுனைக்குச் சென்றார். அங்கிருந்த சேற்றை எடுத்து உடல் முழுதும் பூசிக்கொண்டார். பாறையில் அமர்ந்து தியானம் செய்தார். சுட்டெரித்தது வெயில். பாறையும் தகதகவென கொதித்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்த மேகக் கூட்டம், சுவாமிகளின் உடலில் பூசிய சேறு கரைந்து ஓடும் வரை மழையாய் கொட்டித் தீர்த்தது. பொதுமக்கள் மகிழ்ந்து சுவாமியை கொண்டாடினர்.

    மதுரையில் செல்வந்தர் ஒருவரின் மகனுக்கு திருமணம். அன்றிரவு அவன் பாம்பு தீண்டி இறந்தான். மிகுந்த துக்கத்துடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று உடலை சிதையில் வைத்தனர். அப்போது அந்த வழியாக வந்த சுவாமிகளிடம், அன்பர் ஒருவர் இந்த விஷயத்தை கூறினார். மறுநிமிடம் சுவாமிகள், சடலத்தின் மீது எச்சிலை உமிழ்ந்து, ‘சீ போ.. எழுந்திரு’ என்று சொல்லி விட்டுச் சென்றார். சிதையில் இருந்து அவரது மகன் எழுந்தான். அனைவரும் ஆனந்தக் கூத்தாடினர். சுவாமியை தேடினர். ஆனால் அவரை எங்கும் காணமுடியவில்லை. அதன்பிறகு செங்கோட்டைக்கு வந்து சுவாமிகளை வணங்கி, மூட்டை நிறைய நாணயங்களை சமர்ப்பித்தார் மதுரை செல்வந்தர்.



    சுவாமிகளோ, ‘நீ ஆட்கொல்லியுடன் அல்லவா வந்திருக்கிறாய். நில்லாதே போ’ என்றார்.

    இதனால் செல்வந்தருக்கு வருத்தம் உண்டானது. தன்னுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். உடனே சுவாமிகள், ‘சரி.. நீயே இந்த நாணயங்களை தெருக்களில் எறிந்துவிட்டுப் போ’ என்றார். செல்வந்தரும் மறு பேச்சின்றி அப்படியே செய்தாராம். தெருக்களில் எறிந்த காசுகள் ஏழை மக்களுக்கு போய் சேர்ந்தது.

    சுவாமிகள் நூறு வயதை எட்டியதும் (கி.பி.1884), தாம் வந்த பணி நிறைந்துவிட்டதை உணர்ந்து, சமாதிக்கு தயாரானார். ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பவுர்ணமி நாளில், தான் எப்போதும் அமரும் நாற்காலியில் அமர்ந்தவாறே, சமாதி நிலையை அடைந்தார்.

    அவருடைய சமாதி தங்கள் இடத்தில் அமைய வேண்டும் என்று பலரும் போட்டியிட்டனர். இறுதியில் திருவுளச்சீட்டு போட்டு பார்த்தனர். குண்டாற்றங்கரைத் தோப்பு என்று முடிவானது. அதன் படி சுவாமிகளின் சமாதி அமைக்கப்பட்டு, சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. தற்போது இந்த கோவில் பச்சைபசேல் என வயற்காட்டுக்கு நடுவே, குண்டாற்றங்கரையில் உள்ளது. சுவாமிகள் சமாதியாகி 134 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் இவரை நாடி வரும் பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது.

    தற்போதும் பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து வேண்டிய வரத்தினை பெற்று செல்கிறார்கள். குறிப்பாக குழந்தைப் பேறு வேண்டி இங்கு வந்து அன்னதானத்தில் கலந்துகொள்கிறார்கள். நாள் பட்ட நோய்கள் தீரவும் சுவாமி அருளுகிறார். நாகதோஷம் இருப்பவர்களும், இந்த ஒடுக்கத்தில் ஆறுமுக சுவாமியை வணங்கி நலம் பெறுகிறார்கள்.
     
    மூதாட்டிக்கு அருளிய சித்தர் :

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டி ஒருவர், சுவாமிகளை வணங்கி தன் வறுமை குறித்து கூறினார். உடனே அவர் ‘நீ கடைக்குச் சென்று பொருள் வாங்கு. பொருட்களுக்குத் தேவையான பணம் உன் வீட்டில் இருக்கும்’ என்றார்.

    அதன்படியே வாங்கிய பொருளுக்கு வீட்டில் நாலணா இருந்தது. தொடர்ந்து மூதாட்டி வாழ்க்கை சராசரியாக போய்க் கொண்டிருந்தது. ஆசை யாரை விட்டது. மூதாட்டி சுவாமிகளிடம் சென்று, ‘சுவாமி இப்படி தினந்தோறும் நாலணா தருவதற்கு பதில், ஒரு மாதத்துக்குத் தேவையானதை மொத்தமாக அருளுங்களேன’ என்றாள்.

    மவுனமாக எழுந்து சென்ற சுவாமிகள், சிறிது மண்ணை அள்ளினார். அது தங்கமாக மாறி மின்னியது. அதை எடுத்து வந்து மூதாட்டியிடம் காட்டினார் ‘பார்த்தாயா! அவ்வளவும் தங்கம். இது போதுமா?’ என்றார்.

    மூதாட்டி பேசாமல் நின்றாள். பிறகு சுவாமிகள், ‘இது ஆட்கொல்லி. இதை நீ வைத்திருந்தால் உன் உறவினர்களே உன்னைக் கொன்றுவிடுவார்கள். பேசாமல் கிடைப்பதை வைத்து நிம்மதியாக வாழு’ என கூறினார். அவர் அறிவுரையில் எவ்வளவு அர்த்தம் உள்ளது என்பதை மூதாட்டி மட்டுமல்ல, அங்கு இருந்த அனைவரும் உணர்ந்தனர்.

    பிடிசோற்றால் குழந்தைப் பேறு :
     
    ஆறுமுக சுவாமியிடம் குழந்தைப் பேறு கேட்டு வருபவர்கள் பலர். சுவாமி தான் சாப்பிடும் சாப்பாட்டில் ஒரு பிடியை அவர்களுக்குக் கொடுப்பார். அதை சாப்பிட்டவர்கள் குழந்தைப் பேறு பெற்றனர். ஒரு பெண் மட்டும் அறுவறுப்பு காரணமாக, பிடிசோற்றை எடுத்துக்கொண்டு போய் கழுநீர்ப் பானையில் போட்டார். இவருக்கு குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. எனவே மீண்டும் சுவாமியிடம் வந்து குழந்தைப் பேறு வேண்டி நின்றார்.

    அப்போது சுவாமிகள், ‘அதற்கு ஏன் இங்கு வந்தாய்? உன் வீட்டு கழுநீர் பானையிடம் கேள்’ என்றாராம். அந்த பெண் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, மீண்டும் பிடி சோற்றை வாங்கி குழந்தைப் பேறு பெற்றார்.

    இரண்டு மணி நேரம் விழுந்த நீர் :

    சேத்தூர் ஜமீனைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்ய விரும்பினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார் ஆறுமுக சுவாமி. ஜமீன்தார் உடனிருக்க அபிஷேகம் தொடங்கியது. 107 குடம் நீரால் அபிஷேகம் செய்து, 108-வது குடத்து நீரை அபிஷேகம் செய்யத் தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரம் அந்தக் குடத்தில் இருந்து தண்ணீர் விழுந்துகொண்டே இருந்தது. குடத்தைக் கையில் பிடித்தவர்களுக்கு கை வலி ஏற்பட்டு சுவாமிகளிடம் கெஞ்சினர். சுவாமிகள் ‘தண்ணீர் போதும்’ என்றவுடன் குடத்தில் இருந்து வரும் நீர் நின்றது.

    அமைவிடம் :

    திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் செங்கோட்டை நுழைவு வாயில் இடது புறம் உள்ள குறுகிய ரோட்டில் சென்றால், இந்த ஆலயத்தை தரிசிக்கலாம். செங்கோட்டைக்கு கேரளா மற்றும் தமிழகத்தில் பல பகுதியில் இருந்து பஸ் வசதி உண்டு. தென்காசி- புனலூர் ரெயில்பாதையில் செங்கோட்டை ரெயில் நிலையம் உள்ளது. அங்கிருந்தும் ஆட்டோவில் கோவிலை அடையலாம். 
    மானூரில் ஆவணி மூலத்திருவிழாவை முன்னிட்டு கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் ஜோதி மயமாக காட்சி கொடுக்கும் வைபவம் நாளை நடக்கிறது.
    திருவளரும் கீரனூரில் பிறந்த கருவூர் சித்தர், தனது முன்வினை பயனால் தவம் செய்து எண் வகை சித்திகளும், சிவத்தல யாத்திரை பேறும் பெற்றிருந்தார். அதோடு அவர் எந்த சிவத்தலத்திலும் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் தோன்றி காட்சியளிக்கும் பேறும் பெற்று விளங்கினார். ஆனால் கருவூர் சித்தர் ஒவ்வொரு சிவத்தலமாக சென்று இறைவனை நேரில் அழைத்து நேரில் கண்டு வழிபட்டு வந்தார்.

    ஒரு நாள் கருவூர் சித்தர் பெருமை வாய்ந்த திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் முன்பு வந்து சுவாமி நெல்லையப்பரை அழைத்தார். அப்போது சுவாமி நெல்லையப்பரிடம் இருந்து பதில் வராததால் கோபம் அடைந்த சித்தர், ஈசன் இங்கு இல்லை. இவ்விடத்தில் எருக்கும் குறுக்கும் எழுக என சாபமிட்டு அருகில் உள்ள சிவத்தலமான மானூர் (மானையம்பதி) செல்ல முற்பட்டார்.

    இதனை அறிந்த நெல்லையப்பர் ஒரு சிவத்தொண்டராக வந்து சித்தரை தடுத்து அழைத்தார். சித்தர், அந்த சிவத்தொண்டரை பார்த்து, நீ யாரென்று கேட்க, தான் தொண்டருக்கெல்லாம் தொண்டர் என்று கூறி பணிந்தார். சற்றே கோபம் தணிந்த சித்தர், இறைவனை மானூர் வந்து தனக்கு காட்சியளித்து சாப விமோசனம் பெறச் சொல் என்று சிவத்தொண்டரிடம் கூறிவிட்டு மானூருக்கு புறப்பட்டார். தற்போது அந்த இடத்தில் தொண்டர் நயினார் கோவில் உள்ளது.

    எனவே மறுநாள் காலை சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்மனும் மானூர் செல்லும் பொருட்டு, ராமையன்பட்டி வந்து, அங்கு சந்திரசேகரராகவும், பவானி அம்மனாகவும் மாறி மானூர் வருகின்றனர். இதற்கிடையே சித்தருக்கு இறைவன் காட்சி கொடுக்க போவதை அறிந்த மன்னர் பாண்டியராஜன், அகத்தியர், குங்குலிய நாயனார், சண்டிகேசுவரர், தாமிரபரணி அம்மன் ஆகியோர் சேர்ந்து தாங்களும் அந்த திருக்காட்சியை காண விரும்பி இறைவனோடு மானூர் வருகிறார்கள்.

    மானூரில் கருவூர் சித்தருக்கு இறைவன் ஜோதி மயமாக காட்சி தந்து அருளுகிறார். இதனால் சினம் தணிந்த கருவூர் சித்தரை அழைத்துக் கொண்டு இறைவன் உள்ளிட்ட யாவரும் நெல்லை நோக்கி வரும் வழியில் ராமையன்பட்டி வந்ததும் சந்திரசேகரரும், பவானி அம்மனும் மீண்டும் நெல்லையப்பர், காந்திமதி அம்மனாக மாறியதோடு குதிரையில் நெல்லை வருகிறார்கள்.

    இறைவன் தொண்டராக வந்து சித்தரை தடுத்த இடம் வந்ததும், ஈசன் இங்கு உளன். எருக்கும், குறுக்கும் அறுக என்று சாப விமோசனம் வழங்குகிறார் கருவூர் சித்தர். மேலும் ஆண்டுதோறும் வரும் ஆவணி மூலத்திருநாளன்று அடியேனுக்கு இறைவன் காட்சி கொடுக்க வேண்டும் என்றும், அக்காட்சியை கண்டு வழிபடுவோருக்கு முக்தி கிடைக்க இறைவன் அருள்புரிய வேண்டும் என்றும் இறைவனை கருவூர் சித்தர் வேண்டுகிறார். நெல்லையப்பரும் அவ்வாறே அருள்கிறார். இதுவே ஆவணி மூலத்திருவிழாவின் வரலாறு ஆகும்.

    நெல்லையப்பர் கோவில் விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆவணி மூலத்திருவிழாவாகும். இந்த விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) காலை நெல்லையில் இருந்து கருவூர் சித்தர் மானூர் வந்தடைகிறார். சுவாமி சந்திரசேகரர், பவானி அம்மன், மன்னர் பாண்டியராஜன், அகத்தியர், சண்டிகேசுவரர், குங்கிலிய நாயனார், தாமிரபரணி அம்மன் ஆகிய மூர்த்திகளின் வீதிஉலா நிகழ்ச்சி நெல்லையில் நடக்கிறது.

    அதன் பின்னர் மேற்கண்ட மூர்த்திகள், மானூர் புறப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை மானூர் வந்து சேர்கிறார்கள். அங்கு மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் வைத்து கருவூர் சித்தருக்கு இறைவன் ஜோதி வடிவாக காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. பின்னர் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடக்கிறது. இந்நிகழ்ச்சியே ஆவணி மூலத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவை முன்னிட்டு மானூரில் ராட்டினங்கள், மிட்டாய் கடைகள், வளையல், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது. 
    தென்காசி அருகே உள்ள மாறந்தையில் தங்கியிருந்து பல அற்புதங்களைச் செய்து வந்த, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தரைப் பற்றி பார்த்து வருகிறோம்.
    தென்காசி அருகே உள்ள மாறந்தையில் தங்கியிருந்து பல அற்புதங்களைச் செய்து வந்த, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தரைப் பற்றி பார்த்து வருகிறோம். அவருக்கு கழுத்தில் ஏற்பட்ட நோயைப் பற்றியும், அந்த நோய் தீர பலரும் அவரை மருத்துவரிடம் அழைத்தும் வராது பற்றியும் பார்த்தோம். எதற்காக அவர் மருத்துவரிடம் செல்லவில்லை... அறிந்து கொள்வோம் வாருங்கள்...

    மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தருக்கு ஏற்பட்ட நோய் தீர, அவரை சீடர்கள் பலரும் மருத்துவரிடம் செல்ல அழைத்தனர். அதற்கு சித்தர் சிரித்தபடியே, ‘பிறவி கடன் இது. நான் அனுபவித்தே தீரவேண்டும். அதுவும் இந்த ஜென்மத்திலேயே இந்த வலியை தாங்கியாக வேண்டும்' என நோயின் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டார். இறுதியில் அவரது தவ வலிமையின் மூலமாகவே, அவரது கண்ட மாலை நோய் குணமானது.

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ளது முறப்பநாடு. இங்கு குமாரசுவாமி பிள்ளை என்ற புலவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஸ்ரீசெட்டி சித்தரின் பாட்டுத் திறனில் அலாதிப் பிரியம். சித்தரின் பாடும் திறன் பற்றி, ஒரு முறை முறப்பநாட்டில் உள்ள திருவாவடுதுறை கிளை மடத்து தம்பிரான் சுவாமியிடம் புலவர் கூறினார். தம்பிரானும் ஆவலுடன், ஸ்ரீசெட்டி சித்தரைச் சந்தித்து பேசினார்.

    திருமுருககிருபானந்த வாரியார் திருநெல்வேலி வந்தால், ஸ்ரீசெட்டி சித்தரை சந்திக்காமல் செல்ல மாட்டார். மேலும் தான் பேசும் அனைத்து கூட்டங்களிலும் சித்தரைப் பற்றி புகழ்ந்து கூறுவார். காலங்கள் செல்லச் செல்ல சுவாமிகளின் புகழ் உலகெங்கும் பரவியது. அதே நேரத்தில் பக்தர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், சித்தர் தன்னுடைய உடலை விட்டு இறைவனடி சேர நாள் குறித்து வைத்திருந்தார்.

    மாறந்தையில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைத்து வர, தன்னோடு இருந்த சீடர்களிடம் கூறினார். ஸ்ரீசெட்டி சித்தர் அழைத்ததால், மாறந்தையைச் சேர்ந்த பலரும் தங்களது வேலைகளை அப்படியே போட்டு விட்டு ஓடோடி வந்தனர். சித்தர் அவர்களை நோக்கி, ‘இன்றோடு என் சரீரம் முடியப் போகிறது. எனவே தான் உங்களை அழைத்தேன்' எனக் கூறி அனைவருக்கும் விபூதி வழங்கினார். அனைவரும் கதறி அழுதனர்.

    ‘பொழுது சாயும் வேளை வரை பொறுங்கள்' என கூறிய சித்தர், அப்படியே படுத்துவிட்டார்.

    சித்தரின் தலைப்பாகம் மட்டும் சிறிது சாய்ந்த வண்ணம், சரீரம் பத்மாசனத்தில் இருந்த நிலையில் உயிர் உடம்பை விட்டுப் பிரிந்து இருந்தது. அவரது ஜீவன் சிவனுடன் ஐக்கியமாகி விட்டது. வைத்தியர்கள் சித்தரின் கை நாடியை பிடித்துப் பார்த்தபோது எல்லாம் முடிந்து விட்டது. சித்தரின் திருமேனியை நாற்காலியில் வைத்து, சிவநாமத்தைச் சொல்லிக் கொண்டே புதூர் மடத்தை விட்டு ஊர்வலமாக கிளம்பினர்.

    மாறந்தை ஊரின் மேற்கோடியில் உள்ள காளி கோவிலுக்கு அருகில் இருக்கும் நந்தவனத்தில் சித்தரை வைத்தனர். இரவோடு இரவாக சுவாமிகளின் திருமேனியைச் சமாதியில் எழுந்தருளச் செய்தனர். ஸ்ரீசெட்டி சித்தர் சமாதி, 1918-ம் வருடம் அக்டோபர் மாதம் 5-ந் தேதி ஹஸ்த நட்சத்திரத்தில் நடந்தது. சித்தர் ஜீவ சமாதி அடைந்த பின்னர், மண்டல பூஜையும் நடத்தி சிவலிங்க பிரதிஷ்டை செய்தனர். சமாதி இடத்தில் கற்கோவில் கட்டினர். நந்தவனத்தில் புதிய கிணறு வெட்டப்பட்டது.

    ஸ்ரீசெட்டி சித்தர் சமாதி அடைந்த பிறகும் கூட பல அற்புதங்களை நிகழ்த்தினார். அது தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    தூத்துக்குடியில் இருந்து சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் குழு ஒன்று, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர் சமாதிக்கு வந்தது. அங்கு அவர்கள் தியானம் செய்து விட்டு அருகில் இருந்த பக்தர்களிடம் ‘ஸ்ரீசெட்டி சித்தர், இதுவரை உங்களுக்கு காட்சி அளித்திருக்க மாட்டார். இனி உங்களுக்கு சர்ப்பமாக காட்சியளிப்பார்' என்று கூறிச் சென்றனர். அதே போல் மூன்று நாள் மூலஸ்தானத்தில் சர்ப்பம் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.

    ஸ்ரீசெட்டி சித்தர் சன்னிதி


    தனக்கு குருபூஜை எப்படி நடக்க வேண்டும் என்பதை ஸ்ரீசெட்டி சித்தரே ஒவ்வொரு ஆண்டும் தீர்மானிப்பார். குரு பூஜைக்கு முன்பாக பக்தர்கள் கனவில் தோன்றி, திரைப்படம் போல தனது ஆலயத்தில் நடைபெற உள்ள பூஜையை காட்டியருள்வார். அதன்படியே கமிட்டியுடன் பக்தர்கள் கலந்து பேசி, குரு பூஜையை செய்து முடிப்பார்கள். சித்தர் சமாதியை வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், ஏவல் பிரச்சினைகள் நீங்கும். பேய், காத்து கருப்பு போன்றவைகள் அகலும். கெட்ட கனவுகள் வருவது நின்று போகும்.

    ஒரு முறை ஆலங்குளத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், மது போதையில் சித்தரின் ஜீவ சமாதி இடத்தில் படுத்திருந்தார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘மது அருந்தாதே. உனக்கு மதுவின் நினைப்பு வரும்போதெல்லாம், உன்னுடைய குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிரு’ என்றார். சித்தர் சொன்னபடியே நடந்ததால், அந்த பக்தர் மது போதையில் இருந்து மீண்டார்.

    கொல்லிமலை சித்தர் என்ற பெயரில் போலி சாமியார் ஒருவர் கோவிலுக்கு வந்தார். அனைவரும் அவர் தோற்றத்தைக் கண்டு கோவிலில் தங்க அனுமதித்தனர். ஆனால் பக்தர்கள் கனவில் சுவாமி தோன்றி, ‘அவன் போலி. அவனை தங்க வைக்காதீர்கள்' என கூறினார். மறுநாள் பக்தர்கள் அவரை கவனித்த போது அவரின் போலித்தனம் தெரிந்தது. அவர் மக்களை ஏமாற்றி பணம் பறித்தார். குடிப்பழக்கம் கொண்டவர் எனவும் தெரியவந்தது. மக்கள் அவரை திரும்பி அனுப்பி வைத்தனர்.

    ஸ்ரீ செட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைந்த இடமானது, புதன் கிரகத்தின் ஆட்சிக்கு உட்பட்டது என்று சொல்லப்படுகிறது. எனவே இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், கல்வி கேள்விகளில் சிறப்புடன் விளங்குவர். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஞான தேடல் உள்ளவர்களுக்கு ஞானத்தை அளிக்கும், ஞானதபோவனமாக விளங்குகிறது, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர் ஆலயம். எவ்வித தோஷம், பிரச்சினைகள் இருந்தாலும் சித்தரின் சன்னிதியை அடைந்தால் நிச்சயம் சரியாகி விடும். பக்தர்களின் தேவைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தக்க இடத்திற்கு அனுப்பியோ சுவாமிகள் சரிசெய்கிறார். ஜாதி மத பேதம் பார்க்காதவர், எவ்வுயிருக்கும் தீங்கு செய்ய நினையாதவர்கள், யாராக இருந்தாலும் அவர்கள் சித்தருக்கு மிகவும் பிடித்த அடியார்கள் ஆவர். அவர்களை சித்தர் ஒரு குழந்தையை போல பாதுகாக்கிறார்.

    சுடர் விட்டு எரிந்த விளக்கு


    ஸ்ரீசெட்டி சித்தர் காலமான பிறகு சுமார் 21 ஆண்டுகள், சரியான பராமரிப்பு இன்றி அவரது ஜீவ சமாதி புதர் மண்டிக் கிடந்தது. வருடந்தோறும் குருபூஜையை மட்டும் விடாமல் மக்கள் செய்து வந்தனர். அதன்பின் பல அற்புதங்கள் நிகழ்ந்த காரணத்தினால் கோவில் தினசரி பூஜைக்கு வந்தது.

    ஆரம்ப கால கட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த இரு நண்பர்கள் கோவிலைத் திறந்து பூஜை செய்ய ஆர்வம் காட்டினர். அவர்கள் இலுப்பெண்ணையில் தீபம் ஏற்றுவார்கள். காலையில் ஏற்றினால் மாலையில் அணைந்து விடும். அதற்குள் எண்ணெய் ஊற்ற வேண்டும். எனவே தினமும் காலை மாலை பூஜை செய்து எண்ணெய் ஊற்றி வந்தனர்.

    இந்நிலையில் இருவரும் சதுரகிரி மலைக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கி விட்டனர். அங்கு அவர்கள் இருக்கும் போதெல்லாம் ஊர் நினைப்புதான். ‘எப்படி விளக்கு எரிகிறதோ, அணையாமல் எரிய வேண்டுமே’ என மனதுக்குள் வேண்டி நின்றனர். ஊருக்கு திரும்பி வந்து பார்த்த போது, விளக்கு அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. ஆச்சரியப்பட்டவர்கள், ஸ்ரீசெட்டி சுவாமியின் அருளை எண்ணி வியந்து நின்றனர். இதை கேள்விபட்ட பலரும் சித்தரை தரிசிக்க கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். 
    மேலூர் அருகே உள்ள 18 சித்தர்கள் கோவில் திருவிழாவுக்கு வாழைப்பழ தார்களை பக்தர்கள் பாரம்பரிய வழக்கப்படி தலைச்சுமையாக கொண்டு சென்றனர்.
    கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து அளிப்பார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்பவர்களே சித்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    அதனால் தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள் கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சாமி தரிசனம் செய்வதாக கூறப்படுகிறது. இவ்வாறு பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாங்குளம் மீனாட்சிபுரத்தில் மலை அடிவாரத்தில் 18 சித்தர்கள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இங்கு பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் ஆண்டுதோறும் வழிபாடு செய்து வருகிறார்கள்.

    அதாவது, கோவிலில் இருந்து மலைப்பாதை, ஒற்றையடிப்பாதை வழியாக பாதயாத்திரையாக மேலூருக்கு வந்து சித்தர்களுக்கு படைத்து வழிபட வாழைப்பழ தார்களை வாங்கிச்செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக நேற்று ஏராளமான பக்தர்கள் மேலூருக்கு பாதயாத்திரையாக வந்து வாழைப்பழ தார்களை வாங்கி தலைச்சுமையாக கல்லம்பட்டி, அரிட்டாபட்டி, செட்டியார்பட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம் வழியாக மலை அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    இந்த வாழைப்பழங்கள் சித்தர்களுக்கு இன்று நடைபெறும் திருவிழாவில் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு வாழைப்பழ பிரசாதம் வழங்கப்படுகிறது. திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் திரளாக கலந்துகொள்கிறார்கள். 
    ×