search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரபிரதேசம்"

    • 250 கிராம் உருளைக் கிழங்கை யாரோ திருடிவிட்டதாக போலீசாரிடம் விஜய் வர்மா புகாரளித்தார்.
    • விஜய் வர்மா பேசியதை போலீசார் வீடியோ எடுத்துள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் மன்னபுர்வாவில் வசிக்கும் விஜய் வர்மா என்பவர், மது அருந்திவிட்டு சமைத்து சாப்பிடுவதற்காக வைத்திருந்த 250 கிராம் உருளைக் கிழங்கை யாரோ திருடிவிட்டதாக போலீசாருக்கு செல்போன் மூலம் புகாரளித்தார்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் நடந்ததை அவர் கூறியுள்ளார். இதனை போலீசார் வீடியோ எடுத்துள்ளனர்.

    உருளைக்கிழங்கு காணவில்லை என்று போலீசாரிடம் விஜய் வர்மா சீரியசாக பேச, சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், "என்ன மது அருந்தினீர்கள்?" என போலீசார் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

    • 50க்கும் மேற்பட்ட காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
    • 2 மாத சிகிச்சைக்கு பிறகு அக்குழந்தை முழுவதுமாக குணமாகியுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர் பாலத்தில் இருந்து கீழே வீசியுள்ளனர். பாலத்தின் கீழே இருந்த மரத்தில் சிக்கி தவித்த குழந்தையை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    50க்கும் மேற்பட்ட காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

    2 மாத சிகிச்சைக்கு பிறகு அக்குழந்தை முழுவதுமாக குணமாகியுள்ளது. ஜென்மாஷ்டமி அன்று இக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதால் அக்குழந்தைக்கு கிருஷ்ணா என்று மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர்.

    முழுவதுமாக குணமடைந்த பிறகு இக்குழந்தையை குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்களிடம் அக்டோபர் 24 அன்று மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக பேசிய டாக்டர் கலா, "அந்த பெற்றோருக்கு இக்குழந்தை தேவையில்லையெனில் மருத்துவமனையிலோ அல்லது, கோவில், மசூதியிலோ குழந்தையை விட்டு சென்றிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் குழந்தைக்கு அடிபடாமல் இருந்திருக்கும். குழந்தையை விட்டு பிரியும்போது மருத்துவமனையில் உள்ள அனைத்து ஊழியர்களும் தங்களது குழந்தையை பிரிவது போல நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்கள்" என்று தெரிவித்தார்.

    • ஆஞ்சநேய சேவா அறக்கட்டளை அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு உணவளித்து வருகிறார்கள்.
    • அயோத்தியில் உள்ள குரங்குகளை மக்கள் அனுமாராக கருதுகின்றனர்.

    ராமர் கோவில் இருக்கும் அயோத்தியில் குரங்குகளுக்கு தினமும் உணவளிக்க பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி நிதி அளித்தார்.

    ஜகத்குரு ஸ்வாமி ராகவாச்சார்யாஜி மகராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆஞ்சநேய சேவா என்ற அறக்கட்டளை அயோத்தியில் தினமும் ஏராளமான குரங்குகளுக்கு உணவளித்து வருகிறார்கள்.

    இந்த அறக்கட்டளைக்கு நடிகர் அக்ஷய் குமார் 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அயோத்தியில் உள்ள குரங்குகளை மக்கள் அனுமாராக கருதுவதால் அக்ஷய் குமார் நன்கொடை கொடுத்துள்ளார்.

    • தர்மேந்திர சிங் என்ற இளைஞர் குடிக்க தண்ணீர் கேட்டபோது, போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர்.
    • இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட தர்மேந்திர சிங் என்ற இளைஞர் குடிக்க தண்ணீர் கேட்டபோது, போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்ததால் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தர்மேந்திர சிங்கின் சகோதரர், "அக்டோபர் 14 அன்று 2 தரப்பினர் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அந்த சண்டையை தர்மேந்திர சிங் தடுக்க சென்றார். ஆனால் போலீசார் தர்மேந்திர சிங்கை கைது செய்தனர். போலீஸ் லாக்-அப்பில் தர்மேந்திரா தண்ணீர் கேட்டபோது, போதையில் இருந்த போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர். இதனால் எனது சகோதரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆசிட் குடிக்க வைப்பதற்கு முன்பு தர்மேந்திர சிங்கை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    லக்னோவில் போலீஸ் காவலில் மோகித் பாண்டே என்ற நபர் உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் தாக்கியதில் பல வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர்.
    • போலீசார் தாக்கியதற்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கூடியிருந்த வழக்கறிஞர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களை போலீசார் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    வழக்கறிஞர்களை எதற்காக போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர் என்பதற்கான முழு விவரங்கள் தெரியவில்லை.

    முதற்கட்ட தகவலின்படி ஜாமின் மனு தொடர்பாக நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்றத்திற்குள் கூடியுள்ளனர். இதனால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீதிபதி போலீசாரை அழைத்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர் என்று சொல்லப்படுகிறது.

    போலீசார் தாக்கியதில் பல வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர். போலீசார் தாக்கியதற்கு எதிராக வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • இச்சம்பவம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் நடந்துள்ளது.
    • இணையத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு கடைக்கு வெளியே வைத்திருந்த பூந்தொட்டியை பி.எம்.டபிள்யூ. காரில் வந்த பெண் ஒருவர் திருடும் சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    பி.எம்.டபிள்யூ. காரில் இருந்து வெளியே வரும் பெண் ஒருவர் கடைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டியை திருடி காருக்குள் வைக்கிறார். இதனை பார்த்த சிலர் அப்பெண்ணின் காரை வழிமறித்து இதுகுறித்து கேட்டபோது தினமும் ஒரு பூந்தொட்டியை எடுத்து செல்வேன் என்று அவள் கூறியுள்ளார்.

    இந்த பெண் ஏற்கனவே அக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இரண்டு பூந்தொட்டிகளை திருடிச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

    இச்சம்பவம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் நடந்துள்ளது. இணையத்தில் இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    எனினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை போலீசாரிடம் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.

    • எலக்ட்ரிக் ரிக்ஷா கூரையின் மீது அமர்ந்து பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    உத்தரபிரதேசம் முசாபர் நகரில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் எலக்ட்ரிக் ரிக்ஷா கூரையின் மீது உட்கார்ந்த படி பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    ஆபத்தான முறையில் இம்மாதிரி பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து கோரிக்கை வைத்தனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி. போலீசார் தெரிவித்தனர்.

    • இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கம் பணிகளுக்கு பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப் பட்டுள்ளனர்.
    • 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசம்:

    உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சிகந்தராபாத் பகுதியில் உள்ள குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த வீட்டில் 15 பேர் வசித்து வந்ததாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

    சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இளைஞர் ஒருவர் 12 வது மாடியின் பால்கனியில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
    • வேலை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த நபர் தற்கொலை முயன்றதாக சொல்லப்படுகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் 12வது மாடியில் இருந்து ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் 12 வது மாடியின் பால்கனியில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக செயல்பட்டு அவரை காப்பாற்றினர். இதனை எதிர்புற கட்டடத்தில் உள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    வேலை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த நபர் 12 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றதாக சொல்லப்படுகிறது.

    • ஆசிப் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ரீல் படம்பிடித்துக் கொண்டிருந்தார்.
    • வீடியோ எடுக்கும்போது தவறுதலாக மூன்றாவது மாடியில் இருந்து ஆசீப் கீழே விழுந்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஸ்லோ மோஷனில் ரீல்ஸ் எடுக்க முயன்ற 20 வயது இளைஞர் 3 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆசிப் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ரீல்ஸ் வீடியோ படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட கதவை திறக்கும் போது தவறுதலாக மூன்றாவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

    3 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் ஆசிஃப்பிறகு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆசிப்பை அவரது நண்பர்கள் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலத்த காயம் மற்றும் அதிக ரத்தம் வெளியேறியதினால் ஆசீப் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார்.
    • பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார்.

    உத்தரபிரதேசத்தில் ரூ.500 லஞ்சம் கொடுக்க மறுத்ததால், ஒருவரின் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை தபால்காரர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. ஆனால் பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் தபால்காரருக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    மேலும், தபால்காரர் ஒவ்வொரு தபால் கொடுப்பதற்கும் ரூ.100 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவை பொதுவெளியில் வழக்கறிஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவை பொதுவெளியில் வழக்கறிஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் வழக்கறிஞரை கடுமையாக தாக்கினர். பின்னர் போலீசார் இதில் தலையிட்டு சமாதானப்படுத்த முற்பட்டனர்.

    இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    எம்எல்ஏவை அறைந்த வழக்கறிஞர் உள்ளூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அவதேஷ் சிங் என தெரிய வந்துள்ளது.

    இச்சம்பவம் அப்பகுதியில் நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடைமுறையில் மோசடி நடந்துள்ளது ஆகவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று எம்எல்ஏ யோகேஷ் வர்மா கடிதம் எழுதியிருந்தார். ஆனால், திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று கூடுதல் மாவட்ட நீதிபதி சஞ்சய் சிங் தெளிவுபடுத்தியுள்ளார். 

    ×