search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரபிரதேசம்"

    • பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவை பொதுவெளியில் வழக்கறிஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவை பொதுவெளியில் வழக்கறிஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் வழக்கறிஞரை கடுமையாக தாக்கினர். பின்னர் போலீசார் இதில் தலையிட்டு சமாதானப்படுத்த முற்பட்டனர்.

    இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    எம்எல்ஏவை அறைந்த வழக்கறிஞர் உள்ளூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அவதேஷ் சிங் என தெரிய வந்துள்ளது.

    இச்சம்பவம் அப்பகுதியில் நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடைமுறையில் மோசடி நடந்துள்ளது ஆகவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று எம்எல்ஏ யோகேஷ் வர்மா கடிதம் எழுதியிருந்தார். ஆனால், திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று கூடுதல் மாவட்ட நீதிபதி சஞ்சய் சிங் தெளிவுபடுத்தியுள்ளார். 

    • மாவட்ட ஆட்சியருக்கு BISLERI தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக BILSERI பாட்டிலை வழங்கிய உதவியாளர்
    • போலி தயாரிப்புகள் எனக்கூறி சுமார் 2,600 BILSERI பாட்டில்கள் புல்டோசர் கொண்டு அழிப்பு

    உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்ட ஆட்சியருக்கு BISLERI தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக போலியான BILSERI பாட்டிலை அவரது உதவியாளர் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாக்பத் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது..

    இதனையடுத்து, போலி தயாரிப்புகள் எனக்கூறி சுமார் 2,600 BILSERI பாட்டில்கள் புல்டோசர் கொண்டு அளித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • ஹத்ராஸ் கூட்ட நெரிசல் வழக்கின் எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை.
    • குற்றப்பத்திரிகையில் போலே பாபா பெயர் இடம் பெறாததற்கு மாயாவதி கடும் கண்டனம்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உடைபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கின் எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் தொடர்பாக 3200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதில் 2 பெண்கள் உட்பட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சாமியார் போலே பாபா பெயர் இதில் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றப்பத்திரிகையில் போலே பாபா பெயர் இடம் பெறாததற்கு உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர், " தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சிக்கந்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

    • சாலைகள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
    • சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களா கனமழை பெய்து வருகிறது. இதனால் கோண்டா, லக்கிம்பூர் கெரி, சீதாபூர், பரூகாபாத், பஹ்ரைச், பாரபங்கி, புடான், பல்லியா, அசம்கர், கோரக்பூர், அயோத்தி, வாரணாசி, பிரயாக்ராஜ் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நகர சாலைகள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

    இந்நிலையில் கோண்டா மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை டயாலிசிஸ் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக அவரது கணவர் முயற்சி செய்தார்.

    ஆனால் இதற்காக கோண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அவர் நாடிய போது, அவரது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலி வசதி செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அவர் தனது மனைவியை வெள்ளம் சூழ்ந்த சாலையில் கையில் ஏந்தியவாறு தூக்கி சென்றுள்ளார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது கணவர் ஆஸ்பத்திரிக்கு கையில் தூக்கி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

    • குழந்தைகள் பாம்பை பார்த்ததும் அலறி அடித்து ஓடியுள்ளார்.
    • குழந்தைகளின் அலறலை கேட்ட வளர்ப்பு நாய் ஜென்னி உடனடியாக அங்கு ஓடிவந்தது.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிவ கணேஷ் காலனியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்திற்குள் ராஜ நாகம் ஒன்று நுழைந்துள்ளது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பாம்பை பார்த்ததும் அலறி அடித்து ஓடியுள்ளார்.

    குழந்தைகளின் அலறலை கேட்ட பிட்புல் வகையை சேர்ந்த வளர்ப்பு நாய் ஜென்னி உடனடியாக அங்கு ஓடிவந்து ராஜநாகத்தை கடித்து கொன்றது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    • மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
    • இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் இதே போன்ற உத்தரவை யோகி அரசு வெளியிட்டிருந்தது.

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர் மற்றும் முகவரிகளை பலகைகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் இந்த விதி அமல்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.

    இன்று நடைபெற்ற மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த உத்தரவை அமல்படுத்துவதை மேற்பார்வையிட, இமாச்சல பிரதேச சட்டசபை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா, அமைச்சர்கள் விக்ரமாதித்ய சிங் மற்றும் அனிருத் சிங் ஆகியோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தெரிவித்தார்.

    இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் இதே போன்ற உத்தரவை யோகி அரசு வெளியிட்டிருந்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி லூப் லைன் வழியாக சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.

    செப்டம்பர் 9ம் தேதி கான்பூர்-காஸ்கஞ்ச் வழித்தடத்தில் பயணித்த காளிந்தி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இருந்து கேஸ் சிலிண்டருடன் மோதியது. இதைத் தொடர்ந்து பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதால், ரெயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

    இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்டவாளம் அருகே எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் மற்றும் தீப்பெட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 3ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மான்ட்ஃபோர்ட் பள்ளியில், 3ஆம் வகுப்பு படிக்கும் மான்வி சிங் என்ற 9 வயது சிறுமி பள்ளியின் விளையாட்டு மைதானத்தில், தனது சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த சிறுமியை ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரம் காவல்துறையினர் கவனத்திற்கு சென்றும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்

    சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    • சூதாட்டத்திற்கு அடிமையான கணவர் தனது மனைவியை அடமானம் வைத்து சூதாடியுள்ளார்.
    • தனது மனைவியை அவரின் நண்பர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்த அவரது கணவர் அனுமதித்துள்ளார்.

    மகாபாரத புராணத்தில் பாண்டவர்களின் மூத்தவரான தருமன் சூதாட்டத்தில் தனது மனைவி திரவுபதியை அடமானம் வைத்து தோல்வியடைவார். பின்னர் துச்சாதனன் திரவுபதியின் சேலையை உருவ கிருஷ்ணர் சேலை கொடுப்பார்.

    இந்த புராண கதை தற்போது உத்தரபிரதேசத்தில் நிஜ கதையாக நடந்துள்ளது. ராம்பூர் நகரில் சூதாட்டத்திற்கு அடிமையான கணவர் தனது மனைவியை அடமானம் வைத்து சூதாடிய கொடூர நிகழ்வு நடைபெற்றுள்ளது.

    சூதாட்டத்தில் தோல்வி அடைந்ததால் தனது மனைவியை அவரின் நண்பர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்த அவரது கணவர் அனுமதித்துள்ளார்.

    இந்த கொடுமையை தடுத்த போராடிய மனைவியின் விரலை உடைத்து கணவன் சித்ரவதை செய்துள்ளார்.

    இது தொடர்பாக மனைவி புகார் கொடுத்ததை அடுத்து வழக்குப் பதிந்துள்ள போலீசார் தப்பியோடிய கணவரையும் அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர்.

    மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான கணவர் இதுவரை 7 ஏக்கர் நிலம், நகைகள் என அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.

    • குழந்தை திருடன் எனக் கூறி அவ்னிஷ் குமார் என்பவரை கிராம மக்கள் துரத்தியுள்ளனர்.
    • அவ்னிஷ் குமார் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் தன்னை துரத்திய கிராம மக்களின் அடியில் இருந்து தப்பிக்க பாலத்தில் ஏறிய அவ்னிஷ் குமார்(31) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    குழந்தை திருடன் எனக் கூறி கிராம மக்கள் அவரை துரத்தியதால், பாலத்தில் ஏறி சுமார் 8 மணி நேரமாக அங்கும் இங்குமாக ஓடி போக்கு காட்டி வந்துள்ளார். அவரை மீட்பதற்காக போலீசார் பாலத்தில் ஏறியதும் அங்கிருந்து குதித்துள்ளார்.

    உடனே அவரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

    • அஸ்வினி குமார் என்ற இளைஞருக்கு வாட்சப்பில் வேலைவாய்ப்பு குறித்து ஒரு செய்தி வந்துள்ளது.
    • தந்தையின் ஆதார் அட்டை உள்ளிட்ட பல ஆவணங்களையும் யாரென்றே தெரியாத நபருக்கு அவர் அனுப்பியுள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞர் ஒருவர் சுமார் ரூ. 250 கோடி மதிப்புள்ள ஜிஎஸ்டி இ-வே பில்லிங் பரிவர்த்தனைகள் தொடர்பான பெரும் மோசடியில் சிக்கியுள்ளார்.

    ஜிஎஸ்டி அதிகாரிகள் அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று அவரது பெயரை பயன்படுத்தி ரூ.250 கோடிக்கு மோசடி நடந்துள்ளதை அவரிடம் தெரிவித்த பின்பு தான் அவருக்கே அந்த விஷயம் தெரிய வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்வினி குமார் என்ற இளைஞருக்கு வாட்சப்பில் வேலைவாய்ப்பு குறித்து ஒரு செய்தி வந்துள்ளது. வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது வீட்டு மின் கட்டணம், தந்தையின் ஆதார் அட்டை உள்ளிட்ட கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் யாரென்றே தெரியாத நபருக்கு அவர் அனுப்பியுள்ளார்.

    வேலைக்கு விண்ணப்பிக்க ரூ.1,750 பணத்தையும் அவர் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அவரது தகவல்களை தவறாக பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கி ஒரு நிறுவனத்தை தொடங்கி சுமார் ரூ.250 கோடி இ-வே பில்லிங் மோசடி நடந்துள்ளது.

    இந்த வழக்கை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க ஜிஎஸ்டி துறை உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக எஸ்.பி. ஆதித்யா பன்சால் தெரிவித்துள்ளார்.

    ×