என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமாஜ்வாடி"
- அராஜகம் மற்றும் குண்டர்கள் அட்டூழியம் சமாஜ்வாடி கட்சியின் டி.என்.ஏ.-வில் வேரூன்றியுள்ளது- ஆதித்யநாத்
- அந்த வார்தைக்கு முழு அர்த்தம் என்ன? என்பதை அறிந்திருக்க வேண்டும்- அகிலேஷ் யாதவ்.
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பேசும்போது "அராஜகம் மற்றும் குண்டர்கள் அட்டூழியம் சமாஜ்வாடி கட்சியின் டி.என்.ஏ.-வில் வேரூன்றியுள்ளது. இது சமூக கட்டமைப்பு கிழித்தெறிந்து, மக்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நீங்கள் குற்றச்சாட்டை கூறுவதற்கு முன், அந்த வார்தைக்கு முழு அர்த்தம் என்ன? என்பதை தெரிந்திருக்க வேண்டும். DNA = Deoxyribonucleic Acid. இது பற்றி உங்களுக்கு தெரிந்தாலும், உங்களால் பேச முடியாது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து சேர்ப்பவர்கள், எவ்வளவு குறைவாக பேசுகிறார்களோ, அவ்வளவு மரியாதையும் அதிகம்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள் மற்றும் தன்னுடைய சுய மரியாதை குறித்து கவலைப்பட்டால் இதை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
- பாஜக கட்சிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் இதுபோன்றுதான் நடக்கும்.- காங்கிரஸ் தலைவர்.
மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எம்.பி.க்கள் ஆதரவுடன் 3-வது முறையாக பிரதமராக ஆட்சி அமைக்க இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் பிரதமர் மோடியை பாராளுமன்றத்திற்கான அக்கூட்டணியின் தலைவராக தேர்வு செய்தனர். இதற்கான கூட்டம் பழைய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையில் அமர்ந்தனர். ஆனால் உத்தர பிரதேசத்தில் இரண்டு எம்.பி.க்களை கொண்டு ராஷ்டிர லோக் தளம் கட்சி தலைவரும் ஜெயந்த் சவுத்ரி எம்.பி.க்களுடன் அமர்ந்திருந்தார். இவர் முன்னாள் பிரதமர் சரண் சிங் சவுத்ரியின் பேரன் ஆவார்.
எம்.பி.க்களுடன் அமர வைத்து ஜெயந்த் சவுத்ரியை அவமதித்துள்ளது என பாஜக மீது காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் விமர்சனம் செய்துள்ளது. அதேவேளையில் இது ஒரு பெரிய விசயம் அல்ல என ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தெரிவித்துள்ளது.
சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய்
இந்த விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய் கூறுகையில் "மேடையில் இடம் வழங்காதது மூலம் சிறந்த விவசாயிகளுக்கான சிறந்த தலைவரின் (சரண் சிங் சவுத்ரி) பேரனை இழிவுப்படுத்துவதாகும். விவசாயிகளை பயங்கரவாதிகள் மற்றும் துரோகிகள் என அழைத்து அதே கட்சிதான் பாஜக.
விவசாயிகள் மற்றும் தன்னுடைய சுய மரியாதை குறித்து கவலைப்பட்டால் இதை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடாது. சமாஜ்வாதி கட்சியில் அவர் மிகப்பெரிய அவரில் மதிக்கப்பட்டார். அவருடைய சுய மரியாதைக்காகவும், விவசாயிகளுக்கு மரியாதை கொடுப்பதற்காகவும் என்டிஏ கூட்டணியில் இருந்து விலக வேண்டும்.
இந்தியா கூட்டணிக்கு வர விரும்பும் ஒவ்வொருவரையும் வரவேற்க தயாராக இருக்கிறோம். அகிலேஷ் யாதவிடம் யாரெல்லாம் செல்கிறார்களோ, அவர்களை இரண்டு கைகளை விரித்து வரவேற்பார்" என்றார்.
உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்
காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் அஜய் ராய் கூறுகையில் "பாஜக கூட்டணி கட்சி தலைவரை அவமதித்துள்ளது. பாஜக கட்சிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் இதுபோன்றுதான் நடக்கும். அவர்களுடைய கட்சியில் இணையும்போது பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். பெரிய மாலை போடுவார்கள். பின்னர் அவமதிப்பார்கள்" என்றார்.
ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ. அனில் குமார்
இதற்கு ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ. அனில் குமார் பதில் அளித்து கூறியதாவது:-
இந்தியா கூட்டணி எப்போது எங்களுக்கு மரியாதை கொடுத்தது? ஒருவர் மேலே அமர்ந்தாலும் கீழே அமர்ந்தாலும் பெரிய விஷயம் இல்லை. பரந்த மனதுடன் அரசியல் செய்ய வேண்டும். சிறிய விஷயங்களைப் பற்றி சிந்திக்கக் கூடாது. எங்கள் கட்சி என்.டி.ஏ.-வின் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாகும். தொடர்ந்து அதனுடன் இருக்கும்.
இவ்வாறு அனில் குமார் தெரிவித்தார்.
- காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவதாக சொல்கிறார்கள்.
- எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் அணுஆயுத குண்டு வைத்திருப்பாக சொல்கிறார்கள்.
பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உங்களை எச்சரிக்க இன்று நான் இங்கே வந்துள்ளேன். அவர்கள் உங்களுடைய வாக்கை பெற்றுக் கொள்வார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அவர்களுக்காக வாக்கு ஜிஹாத் செய்பவர்களுக்கு பரிசுகளை பகிர்ந்து அளிப்பார்கள்.
இந்தமுறை தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொருவரின் சொத்துகளையும் ஆய்வு செய்ய இருப்பதாக சொல்லிக்கொண்டு வருகிறது. பின்னர் அவர்கள் உங்களுடைய சொத்துகளின் ஒரு பகுதியை, அவர்களுடைய வாக்கு வங்கியான, அவர்களுக்காக "வாக்கு ஜிஹாத்" செய்தவர்களுக்கு கொடுப்பார்கள்.
காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் அணுஆயுத குண்டு வைத்திருப்பாக சொல்கிறார்கள். ஆனால், குண்டுகளை பராமரிக்க பாகிஸ்தானிடம் போதுமான பணம் இல்லை என்பதை அவர்கள் உணரவில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஹமிர்பூரில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனால், பா.ஜனதாவின் கன்வார் புஷ்வேந்த்ரா சிங் சண்டல்- சமாஜ்வாடியின் அஜேந்திரா சிங் லோதி ஆகியோருக்கு இடையில்தான் போட்டி நிலவுகிறது.
- 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார்.
- இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு.
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனில் சட்ட விரோதமாக சுரங்கங்களை ஒதுக்கிய வழக்கு தொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் டெல்லி சென்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வாய்ப்பு இல்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அகிலேஷ் யாதவ் இன்று லக்னோவில் பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து வேறு எங்கும் செல்லும் திட்டம் தற்போதை வரை இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
சமாஜ்வாடி கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில தலைவர் ராஜ்பால் காஷியப் கூறுகையில் "அகிலேஷ் யாதவ் பிடிஏ (Picchda- பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர்) ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றார்.
சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி "அகிலேஷ் யாதவ் இன்று எங்கேயும் செல்லமாட்டார். லக்னோவில் நடைபெறும் கட்சி அலுவலக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்" என்றார்.
சம்மன் தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "தேர்தல் வரும்போது நோட்டீஸ் வரும் என்பது எனக்குத் தெரியும். ஏன் இந்த பதட்டம்?. நீங்கள் (பா.ஜனதா) கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான பணிகளை செய்திருந்தால் ஏன் பதட்டம் அடைகிறீர்கள்?" எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக,
உத்தர பிரதேசத்தில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார். இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பொதுப்பணித்துறையினர் சட்ட விரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்த போதும் சட்ட விரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டன.
இதை தொடர்ந்து, சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் 2016-ம் ஆண்டு ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ., 2012-2013 வரையிலான காலக் கட்டத்தில் மாநில சுரங்கத்துறையை அகிலேஷ் யாதவ் கவனித்து வந்தபோது இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது.
அதனை தொடர்ந்து சுரங்க முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.சி. ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.
- பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக உள்ளே எதிர் குரல் கொடுக்கும் நபர்கள் நமக்கு தெரிந்துவிடும்.
- விருந்தை புறக்கணிக்கும்போது அவர்கள் எங்களுக்கும் எதிராக திரும்பவார்கள் என்பது தெரியும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 10 இடங்களுக்கான மாநிலங்களை எம்.பி. தேர்தல் நடைபெற்றது. ஏழு இடங்களில் பா.ஜனதா எளிதாக வெற்றி பெறும். 3 இடங்களில் சமஜ்வாடி கட்சி வெற்றி பெறும். ஆனால் பா.ஜனதா சில எம்.எல்.ஏ.க்களை இழுத்துள்ளதாக தகவல் வெளியானது. நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்த விருந்தை எட்டு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். இதனால் சமாஜ்வாடி கட்சியின் 3-வது வேட்பாளர் வெற்றி பெறுவது சந்தேகமானது.
இந்த நிலையில்தான் இன்று காலை உத்தர பிரதேச மாநில சட்டமன்ற கொறடா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் 3-வது வேட்பாளர்ரை நிறுத்தியது கட்சியில் கலகம் விளைவிப்பவர்களை அடையாளம் காண்பதற்காகத்தான் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "எங்களுடைய 3-வது இடம் பொதுவாக கட்சியில் உள்ள உண்மையானவர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை. இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக உள்ளே எதிர் குரல் கொடுக்கும் நபர்கள் நமக்கு தெரிந்துவிடும். இது எங்களுடைய 3-வது சீட்டின் வெற்றி. கட்சியின் வெற்றி உண்மையில் உள்ளது.
விருந்தை புறக்கணிக்கும்போது அவர்கள் எங்களுக்கும் எதிராக திரும்பவார்கள் என்பது தெரியும். அவர்களுக்கு பல்வேறு பேக்கேஜ் வழங்கப்படும் எனத் தெரிவித்து இருப்பார்கள். கலகம் விளைவித்த அவர்கள் நீக்கப்படுவார்கள்" என்றார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு 252 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சமாஜ்வாடிக்கு 108 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். பா.ஜனதா ஏழு எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். சமாஜ்வாடி 3 பேரை தேர்வு செய்ய முடியும். ஆனால் பா.ஜனதா 8-வது ஒருவரை நிறுத்தியுள்ளதால் போட்டி நிலவுகிறது.
- சமாஜ்வாடி கட்சியில் தேசிய பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர்.
- எம்எல்சி-யாகவும் இருந்த நிலையில், கட்சி உறுப்பினர் பதவி என அனைத்தில் இருந்தும் விலகல்.
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர் கடந்த 13-ந்தேதி தேசிய பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அப்போது தனக்கு எதிராக பாகுபாடு பார்ப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் உத்தர பிரதேச மாநில மேல்சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
அவர் அகிலேஷ் யாதவுக்கு எழுதிய கடிதத்தில் "உங்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கடந்த பிப்ரவரி 12-ந்தேதி உங்களுடன் பேசிய பிறகு, தேசிய பொதுச்செயலாளர் பதவியை 13-ந்தேதி ராஜினாமா செய்தேன். என்னுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் முன்முயற்சி எடுக்கப்படாததால், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு கடிதத்தில் "நான் சமாஜ்வாடி கட்சி சார்பில் மேல்சபைக்கு தேர்வு செய்யப்பட்டேன். இந்த நிலையில கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். மேலும் எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராம்சரித்மனாஸ் மற்றும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், கட்சி சார்பாக யாரும் குரல் கொடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உத்தர பிரதேச மாநிலத்தின் வலுவான கட்சியாக சமாஜ்வாடி திகழ்ந்து வருகிறது.
- பல மாநிலங்களில் சமாஜ்வாடி கட்சி செயல்பட்டு வருவதால் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னணி கட்சியாக சமாஜ்வாடி கட்சி இருந்து வருகிறது. இந்த கட்சி உத்தரகாண்ட், மத்தயி பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் இந்த கட்சி தேசிய கட்சியாக கருதப்படுகிறது. சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ளார்.
சமாஜ்வாடி கட்சிக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் அக்கட்சிக்கு அமைப்புகள் உள்ளன. இந்த நிலையில் கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவின் அறிவுறுத்தலின்படி தலைவர் பதவி உள்பட தமிழ்நாடு பிரிவு கலைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்படடுள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் அலகாபாத் தொகுதியின் எம்பியான ஷியாமா சரண் குப்தா, பாஜகவில் இருந்து இன்று திடீரென விலகி, சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் விலகி உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பாந்தா தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக ஷியாமா சரண் குப்தா போட்டியிட, வாய்ப்பு வழங்கி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #ShyamaCharanGupta #joinedSamajwadi #LokSabhaElections2019 #BJPMP
மத்தியில் பா.ஜனதாவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஜனதா, சரத்யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற மூத்த தலைவர்கள் கூறுகையில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம்.
கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்த திறந்த மனதுடன் இருக்கிறோம். இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சி என்பதால் அந்த கட்சிக்கே பேச்சு நடத்த முன்னுரிமை அளிக்கிறோம் என்றனர். #AssemblyElection #Congress #AkhileshYadav #SamajwadiParty
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்