search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    கோவை அருகே விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    திண்டுக்கல் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் ஆண்டிக்கல். இவரது மகன் பாண்டியன் (19). இவர் கோவை ரத்தினபுரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது நண்பர் ராமச்சந்திரனுடன் (22) மோட்டார் சைக்கிளில் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை- தாளியூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பாண்டியன், ராமச்சந்திரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி பாண்டியன் பரிதாபமாக இறந்தார். ராமச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக டிப்பர் லாரி டிரைவர் காசிமாயனை பிடித்து தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், சிறு குறு தொழிற்சாலைகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க தயக்கம் காட்டுவதால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். #fakecurrency
    கோவை:

    கோவையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் ஒரு கோடியே 18 லட்சம் அளவுக்கு பிடிபட்டுள்ளது, வியாபாரிகள், பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதனால் கோவையில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், சிறு குறு தொழிற்சாலைகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள். குறிப்பாக காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட்டுகளில் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் சில்லரையாக கொடுங்கள் என வியாபாரிகள் கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருக்கும் பொதுமக்கள் அதை மாற்றுவதற்கு சிரமப்படுகின்றனர்.

    பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது பல முறை பார்த்துதான் வாங்குகிறார்கள். இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளநோட்டுகளை ஏஜெண்டுகள் மூலம் புழக்கத்தில் விடுகிறார்களா? என்று தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கள்ளநோட்டுகளை கண்டறியும் எந்திரங்களை பணம் எண்ணும் இடத்தில் பயன்படுத்துவது தற்போது கோவை நகரில் அதிகரித்துள்ளது. 
    கோவை நகைப்பட்டறையில் மதுவில் சயனைடு கலந்து அண்ணன், தம்பி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பால்ராஜ்(35).கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இவரது தம்பி விஜயராஜ்(32). இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெரியகடைவீதியில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். பால்ராஜ்க்கு மது பழக்கம் இருந்ததால் அவரது தம்பி விஜயராஜ் அண்ணன் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

    நேற்று இரவு விஜயராஜ் வேலைபார்க்கும் நகைப்பட்டறைக்கு அவரது அண்ணன் பால்ராஜ் வந்தார். இரவில் அவர்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை நகைப்பட்டறை திறந்து கிடந்த நிலையில் பால்ராஜ் அவரது தம்பி விஜயராஜ் ஆகியோர் பிணமாக கிடப்பதாக பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்த அவர்கள் அருகில் மதுபாட்டிலும் சயனைடும் கிடந்தது. விசாரணையில் அவர்கள் மதுவில் சயனைடு கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சயனைடு குடித்து இறந்ததால் அவர்களது உடல் நீல நிறத்தில் காணப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மனவேதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. #Tamilnews
    வேளாண் படிப்புக்கு இன்று முதல் இணைய தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 17-ந்தேதி ஆகும்.
    வடவள்ளி:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும், 4 தொழில் முறை பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது.

    இதில் உறுப்பு கல்லூரிகளில் 987 இடங்களும், இணைப்பு கல்லூரியில் 2,160 இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 147 இடங்கள் உள்ளன.

    தொழிற்நுட்ப படிப்புகளில் உறுப்பு கல்லூரிகளில் 1262 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 3,422 இடங்கள் நிரப்பப்படுகிறது.

    இந்த கல்வி ஆண்டு முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

    சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான பிரிவில் விண்ணப்பிப்போர் தேவையான சான்றிதழ்களை கொண்டு வந்து சரிபார்க்க வேண்டும்.

    பிளஸ்-2 மதிப்பெண்களை கொண்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர் சேர்க்கை ஆன்-லைன் மூலம் நடைபெறும்.

    அதன்படி இன்று (18-ந்தேதி) முதல் இணைய தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 17-ந்தேதி ஆகும்.

    சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றுகள் சரிபார்ப்பு அடுத்த மாதம் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெறும்.

    தரவரிசை பட்டியல் ஜூன் 22-ந்தேதி வெளியிடப்படுகிறது.

    இதில் 65 சதவீத மாணவர்கள் கோவை வேளாண்மை கல்லூரியிலும், 35 சதவீதம் இணை மற்றும் உறுப்பு கல்லூரிகளிலும் நடைபெறும். இதனிடையே மே 21-ந்தேதி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை குறித்து சந்தேகம் மற்றும் முறைகள் குறித்து கல்லூரி வளாகத்தில் திறந்த வெளி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்க உள்ளனர்.

    இதில் மாணவர்கள் கலந்து கொண்டு விண்ணப்பிக்கும் முறையில் உள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். #Tamilnews
    ×